சர்வதேச அளவில், அதிவேக வளரும் நகரங்களின் பட்டியலில், இந்திய நகரங்களான சென்னை,பெங்களூரு மற்றும் ஆமதாபாத் இடம்பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் எல்லாதுறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் நகரங்களின் பட்டியலை, போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ஆசிய கண்டத்தில் உள்ள நகரங்களே அதிக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் சீனாவில் உள்ள 4 நகரங்களும் இடம்பெற்றுள்ளன , செங்டு, சோன்கிங், சுஜோ மற்றும் நான்ஜிங் நகரங்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் ஒவ்வொரு நகரங்களின் வளர்ச்சி குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நகரங்களின் வளர்ச்சி குறித்து காண்போம், முதலில் சென்னை நகரத்தின் வளர்ச்சி : சென்னை நகரத்தில், மிகக்குறுகிய காலத்தில், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆசியாவின் டெட்ராய்ட் என்று குறிப்பிடும் அளவிற்கு சென்னை உயர்நது வருவதாகவும், இதுமட்டுமல்லாது, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன்ஸ் உபகரணங்கள் தயாரிப்பு, சாப்ட்வேர் சேவைகள் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பு பிரிவிலும் சென்னை முன்னிலை வகிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு :
இந்தியாவின் சிலிக்கான்வேலி என்ற புனைப்பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பெங்களூரு நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு ஐடி நிறுவனங்களின் இந்திய தலைமையகமாக உள்ளதாகவும், தேசிய அளவில் எப்எம்சிஜி சந்தையில், நான்காவது பெரிய நகரமாக இது விளங்குவதாகவும், பல மில்லியனர்களை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், இந்திய அளவில் வெகுவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், வேலையில்லாதோருக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும், பெரும் தொழிலதிபர்களுக்கு, முதலீடு செய்ய ஏற்ற இடமாக பெங்களூரு திகழ்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தின் வர்த்தக தலைமையகமாக விளங்கும் ஆமதாபாத் நகரம், தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ற நகரமாகவும், நகரத்தின் வளர்ச்சி , பிரமிக்கத்தக்க வகையில் உள்ளதாகவும், முன்னணி கெமிக்கல்ஸ் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனங்கள் மிகுந்துள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் தலைமையகங்களை ஆமதாபாத்தில் அமைக்க முன்வருவதாகவும், தகவல்தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், சர்வதேச அளவில் சிறந்த மெட்ரோபாலிடன் நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங், டோக்கியோ, சியோல், ஷாங்காய், சிங்கப்பூர், பீஜிங், டில்லி, சிட்னி, டொரண்டோ, மும்பை, மெக்சிகோ நகரங்கள் கணக்கில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment