பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் 25 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுவருகிறது விருதுநகர் மாவட்டம். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு என்ற கூட்டு முயற்சியில் விளையும் வெற்றி இது.
கோடை விடுமுறை விடப்பட்டாலும் விளையாட்டும், பொழுதுபோக்கும் தியாகம் செய்யப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான வகுப்புகள் மே மாதமே துவக்கப்படுகின்றன. பள்ளி துவங்கியவுடன் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இருந்தால் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்தி, பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இரவு உணவு:
கிராமப்புற பள்ளிகளில் இரவு நேரங்களிலும் பாடம் நடத்தப்படுகிறது. சில பள்ளிகளில் நன்கொடை வசூலித்து மாலை நேர சிற்றுண்டி, சில பள்ளிகளில் இரவு உணவும் வழங்கப்படுகிறது.நூற்றுக்கு நூறு என்ற லட்சியத்தோடு தேர்வறையில் நுழையும் மாணவர்களின் நம்பிக்கை தேர்வு முடிவுகளில் எதிரொலித்து கொண்டே இருக்கிறது. தன்னலம் கருதா ஆசிரியர்களும், ஆர்வமுள்ள மாணவர்களும், ஒருங்கிணைக்கும் அதிகாரிகளின் திட்டமிடுதலுமே சாதனை வெற்றிக்கு காரணம்.
டேய்... 100 சதவீதம்-னு சொல்லியே பாவம் பசங்கள விளையாட விடாம உயிர எடுக்குறானுங்க டா..!! சின்ன வயசுல விளையாடாம பள்ளிக்கூடத்திலேயே அவனுங்கள வச்சிருந்து கெடுத்துக்கிட்டிருக்காங்க..!! நம்மளோட கல்வி முறை இப்போ சுயநலமா இருக்கத்தான் கற்றுத் தருது... உண்மையான நட்போ, உறவோ இப்போ குறைவாத்தான் இருக்கு :-(
ReplyDeleteஆமா நீ நாம படிக்கும் போது விளையாடி உங்க அப்பா உன்னை திட்டியது மற்றும் நீ வீட்ல எதாவது solluvangalanu பயந்து விளையாடி சென்றது என்னலாம் இப்போ என்னக்கு ஞாபகம் வருது.. என்ன தான் இருத்தலும் 25 வருஷம் என்பது கொஞ்சம் சந்தோஷமான விஷயம்.
ReplyDelete