புலி வருது புலி வருது சொல்லி கொண்டு இருந்த எந்திரன் படம் இதோ நேற்று உலகம் முழுவதும் வெளி ஆகி விட்டது. சங்கரின் இயக்கத்தில் மிக பெரும் பொருட்செலவில் வந்துள்ள திரை படம் தான் எந்திரன்.
கதை
இயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. புதியமனிதா பூமிக்கு வா என எஸ்.பீ.பி அழைக்க படம் ஆரம்பிக்கிறது. பத்தாண்டுகளாக பாடுபட்டு ஒரு ரோபோவை கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு.
விஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ தயாரிக்கிறார். அவருடைய குரு அதை போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார் அவருடைய குரு .வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை வைக்கிறார் வசிகரனின் குரு. அது சிட்டி போன்ற ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், மற்றும் தமிழன் பெருமைபடியான இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.
ரஜினி
ரொம்ப காலத்திற்கு பிறகு, பில்-டப் இல்லாமல் ரஜினி அறிமுகம். ஆங்காங்கே பழைய ரஜினி போல் நடக்கிறார். பேசுகிறார். ஆடு போல் கத்துவது எல்லாம் அமர்க்களம்.சும்மா கிடச்ச பந்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார். தன்னை முழுமையாக சங்கரிடம் ஒப்படைத்து அவர் சொன்ன விதத்தில் நடித்து வெளுத்து வாங்குறார்.
அந்த ரோபோ ரஜினிதான் அசத்தல். எதை பேசினாலும் அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செயல்படுகிற காட்சிகளும் சூப்பர். ஆனால், இதெல்லாம் தூக்கி சாப்பிடுகிறார் வில்லன் ரஜினி. அந்த காட்சி பார்க்கும் போது எனக்கு மூன்று முகம் படத்தில் அந்த போலீஸ் ரஜினி தான் ஞாபகம் வந்தது .
என்ன தான் இவளோ பண்ணினாலும் மாஸ்க் போடப்பட்டு, கிராபிக்ஸ் செய்யப்பட்டு ரஜினி வேகமாக நடனம் ஆடுவதாகவும், பறந்து சுற்றி சுழண்டு சண்டை போடுவதாகவும் காட்டியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், ரஜினியை இத்தனை வருஷம் தொடர்ந்து பார்த்துவருவதால், நாம் பார்ப்பது ரஜினி இல்லை என்று தெரிந்து, அவருடைய வயது நினைவுக்கு வந்து, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
ஐஸ்
ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் நடனம் அருமை. எல்லா இடத்திலும் அலட்டி கொள்ளாமல் ஸ்கோர் செய்கிறார்.
ஷங்கர்
தன்னுடைய கனவு திரைப்படம் என்று பார்த்து பார்த்து வேலை செய்த உழைப்பு நிச்சயம் தெரிகிறது.ரஜினி என்னுடைய பத்து வருட கனவு சொல்லும் பொது சங்கர் தான் தெரிகிறார். சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜினி உடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான்.ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும். அந்த பிரசவக் காட்சி 3 இடியட்ஸ் பார்த்து சுட்டது ஏனோ!
ரஹ்மான்
பாடல்களில் ஏற்கெனெவே ஹிட். பின்னணி இசையும் அருமை.
ஒளிப்பதிவு :
ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கண்களை விட்டு அகல ரொம்ப நேரம் ஆகிறது . பாடல்காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது. ரஜினியை அழகாக கட்டி உள்ளார்.
கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது என்று சொல்ல தான் ஆசை. ஆனால் இதை நியூ படத்தில் பார்த்தது போல் இருக்கிறது. என்னக்கு நியூ படத்தின் கலை இயக்குனர் யார் என்று தெரிய வில்லை.
ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கண்களை விட்டு அகல ரொம்ப நேரம் ஆகிறது . பாடல்காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது. ரஜினியை அழகாக கட்டி உள்ளார்.
கலை :
சாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது என்று சொல்ல தான் ஆசை. ஆனால் இதை நியூ படத்தில் பார்த்தது போல் இருக்கிறது. என்னக்கு நியூ படத்தின் கலை இயக்குனர் யார் என்று தெரிய வில்லை.
வசனம் :
காதல் வந்துவிட்டால் நட்டு கழன்று விடுவதாக கடைசியில் காட்டி இருப்பது மிகவும் யதார்த்தம். அதே போல், கடவுள் இருக்கிறாரா என்பதை மிக அழகா சொல்லி இருக்கும் இடம் அருமை.
சங்கர் படத்தில் கடைசியில் பாஸ்ட் பீட் சாங் வரும். இதிலும் அதே போல் நூறு ரஜினி மற்றும் ஐஸ்வர்யா வைத்து நன்றாக எடுத்து உள்ளார்கள்.
என் பார்வை :
என்னடா சங்கர் வழக்கமான சமுக பிரச்சனையை விட்டுட்டாரு யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த கிளைமாக்ஸ் ல வரும் வசனம் மிக பிடித்து இருந்தது. போட்டி, பொறமை இருந்ததை மிக இயல்பாக சிட்டி வெளிபடுத்துவது நன்றாக உள்ளது.
எனக்கு இரண்டாம் பாதியை விட முதல் பாதியே ரொம்ப பிடித்தது. முதல் பாதியில் வசனம் ரொம்ப ஸ்ட்ராங். இரண்டாம் பாதி கிராபிக்ஸ் மேளா, எனக்கு லேசாக சலிப்பு தட்டியது.ஆனால், மீண்டும் ஒரு முறை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசமம்.கண்டிப்பா தமிழ் சினிமாக்கு இது புதுசு.
இந்த படம் சுமார் பத்து வருடத்திற்கு முன்பு வந்து இருந்தால் உலக அளவில் மிக பிரமாதமாக பேச பட்டு இருக்கும். ஆனால் சங்கர் ரஜினி என்னும் மாயை மூலம் தான் சொல்ல வந்ததை பிரமாண்டம் என்னும் கடலில் விழுந்து முழ்காமல் கரை சேர்ந்து உள்ளார்.
என்னமோ போங்க, ரஜினி படம் என்றால் அதிர வைக்கும் சண்டையும், அந்த ஸ்டைலும் தான். இந்த படத்தில் இவை அனைத்தும் மிஸ்ஸிங். ஆனால், ரஜினி என்ற நல்ல நடிகனை உலகத்திற்கு எடுத்து காட்டிய படம் தான் இந்த எந்திரன்.
எத்தனை பிரமாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்பதல்ல, எப்படி ஒரு விசயத்தை சொல்கிறார்கள் என்பதில் இருக்கிறது படத்தின் வெற்றி.
எந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...
(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை, ( அண்ணன் லோஷன் சொன்னது )
(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை, ( அண்ணன் லோஷன் சொன்னது )
நல்ல சிந்தனை
ReplyDeleteஇன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html
Kalakurenga!!!!!!!!!!!!
ReplyDeleteIf they take as normal rajini story..it ll be hit TN...but it ll fail north...so only they did like this da...
ReplyDelete