இந்த வருடத்தில் ஆர்யா நடித்து வரும் மூன்றாவது படம். இந்த வருடத்தில் இரண்டு ஹிட் அடித்த ஒரே நடிகர் .ஒளிப்பதிவாளர் கே.மணிகண்டன் ( மறைந்த ஜீவாவின் சிஷ்யர் ) இயக்கத்தில் வரும் படம் சிக்கு புக்கு...
ஷ்ரேயா,ஆர்யா இருவரும் லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். (ஆர்யாவின் பூர்வீக வீடு கடனில் மூழ்கப்போவதை தடுக்க இந்தியா கிளம்புகிறார். ஸ்ரேயா.. தன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு கிளம்புகிறார்). இருவரும் பெங்களூர் வந்து சேர்கிறார்கள். ஸ்ட்ரைக் காரணமாய் ப்ளைட்டுகள் இல்லாமல் போக.. யிலில் அடுத்தவர் பெயரில் பயணம் செய்யும் போது டிடிஆரிடம் மாட்டிக்கொண்டு பாதிவழியில் இறக்கி விடப்பட..அடுத்து அடுத்து அவர்கள் ரூட் மாறி சென்று காதல் வேற பண்ணி நம்மளை வெறுப்பு ஏற்றுகிறார்கள்.. அப் பயணத்தின் இடையே பயணம் செல்லும் வழியில் ஆர்யா தனது தந்தையின் டைரியை படித்துக்கொண்டே வருகிறார்.
அதில் ஆரியாவின் அப்பா ஆர்யா (இரண்டு வேடம் ) அந்த ஊரில் உள்ள தமிழ் வாத்தியாரின் பெண்ணை காதலிக்க,அவளுடன் ஊரை விட்டு போக முடிவு செய்து காத்திருக்கும் போது அவள் வராமல் போக..ஆர்யா போலீஸ் ட்ரைனிங்கில் போய் சேர்ந்து விடுகிறார். அங்கே அறிமுகமாகும் நண்பன் அவனின் அத்தை பெண் மேல் காதலாகியிருக்க, தான் காதலிக்கும் பெண்ணும், அவன் அத்தை பெண்ணும் ஒருத்தியே என்று தெரிந்து அவனுக்காக காதலியை விட்டுக்கொடுத்து லண்டனில் போய் செட்டில் ஆகிறார் ஆர்யா . இது படத்தின் நடுவில் வரும் கிளை கதை. இந்த இரண்டு கதையும் படத்தின் கூடவே வருவது தான் சிறப்பு. மத்தப்படி சொல்லி கொள்வது போல் ஒன்றும் இல்லை இந்த படத்தில்..
ஆர்யா
ஆர்யாவின் கெட்டப்பும் நடிப்பும் நன்றாக இருக்கிறது .
ஸ்ரேயா
ஆர்யாவுடன் பழகும் காட்சிகளில்,காதல் காட்சிகளில் எல்லாம் செயற்கையான நடிப்பு .
ப்ரீத்திகா
படத்துல பாக்குற மாதரி இருக்கிற ஒரே ஆள் இந்த பொண்ணு தான். பிளாஷ் பாசக் ல வரும் காட்சியில் அலட்டி கொள்ளாத நடிப்பு .
பிடித்த வசனங்கள் :
காதலிக்கறவங்க யோசிக்கறது கிடையாது,யோசிக்கறவங்க காதலிக்கறது கிடையாது.
டீச்சர்,ஷாஜகான் மும்தாஜ் இறந்ததும் தாஜ்மகால் கட்டுனாரு,பக்கத்து வீட்டு முத்து அவரோட மனைவி இறந்ததும் அவளோட தங்கையை கட்டுனாரு.2 பேருல யார் புத்திசாலி?
அப்பா சேர்த்து வாய்த்த பணத்தை கரைக்கறவன்தான் உண்மையான பையன் .
எல்லாருக்கும் ஒவ்வொரு வயசுல ஒவ்வொரு விஷயங்கள் மிகவும் பிடிக்கும் . எனக்கு எப்பவும் அவளை மட்டும் தான் பிடிக்கும்.
ஒரு ஆம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா பிரச்சனை அவனுக்கு மட்டும்தான்,ஒரு பொம்பளை வீட்டை விட்டுப்போயிட்டா அவ குடும்பத்துக்கே பிரச்சனை.
இந்த உலகத்துலயே கஷ்டமான விஷயம் பிடிச்சவங்களை பிரிவது தான் சந்தோஷமான விஷயம் பிரிஞ்சவங்க சேர்றதுதான்.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
தங்கள் பார்வையும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
ReplyDeleteshajahan married mumtaj, after killing her husband.
ReplyDelete