Search This Blog

Friday, December 03, 2010

இன்ஷுரன்ஸ் சில அடிப்படைத் தகவல்கள்!

ன்றைய நிலையில் நம் ஒவ்வொருவருக்கும் காப்பீடு என்பது முக்கியம். அதிலும் குடும்பத்தின் வருமானம் ஈட்டும்நபர் என்றால், அதிஅவசியமானது. ஆனால், நூற்றுக்கணக்கில் குவிந்துகிடக்கும் காப்பீட்டுத் திட்டங்களில் எது அவசியம்?

''பொதுவாக ஒருவர்ஆயுள், விபத்து, ஆரோக்கியக் காப்பீடு என மூன்று விதமான காப்பீடுகள் எடுப்பது சிறந்தது. வாகனம் வைத்திருப்பவர்கள் கூடுதலாக மோட்டார் பாலிசியும் எடுத்துக்கொள்வது நலம்!''

ஆயுள் காப்பீடு! 

 ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப்போல் 10 மடங்குத் தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒருவரின் மாதச் சம்பளம் 20 ஆயிரம் என்றால், அவரின் ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 40 ஆயிரம். அவர் 24 லட்சம் தொகைக்கு பாலிசி எடுப்பதுதான் சரியாக இருக்கும்!
 குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பிளான்கள் சிறந்தது!

விபத்துக் காப்பீடு! 

 பர்சனல் ஆக்சிடென்ட் பாலிசி என்கிற தனி நபர் பாலிசியை அனைவரும் எடுப்பது அவசியம். இது விபத்து எதிலாவது சிக்கி உயிர் இழந்தால், இழப்பீடு வழங்குவதாக இருக்கும். இந்த பாலிசியில் 1 லட்சம்  கவரேஜுக்கு 100-தான் பிரீமியம்!

மெடிக்ளைம்! 

 விபத்து அல்லது உடல் நலப் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்ந்து எடுக்கும் சிகிச்சைக்கான செலவைத் திரும்பப் பெறச் செய்யும் பாலிசி. மெடிக்ளைம் பாலிசியில் கவரேஜ் இரு பிரிவுகளாக இருக்கின்றன. முதல் பிரிவு, மருத்துவக் காப்பீடு. இதில், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தங்கி எடுத்துக்கொள்ளும் சிகிச்சை மற்றும் அதனை ஒட்டிய செலவுகள் அடங்கும். இரண்டாவது பிரிவு, கிரிட்டிக்கல் இல்னெஸ் என்கிற தீவிர நோய் பாதிப்புக்கான (புற்றுநோய், சிறுநீரகச் செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை) செலவுகள் அடங்கும். இந்த இரண்டுக்கும் தனித் தனியாக பிரீமியம் கட்ட வேண்டி வரும்!

பாலிசி எப்படி எடுப்பது? 

 உங்கள் சுற்றுப்புறத்திலேயே நிச்சயம் ஏராளமான இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்கள் இருப்பார்கள். அவர்களைத் தொடர்புகொள்ளலாம். அல்லது அருகில் உள்ள காப்பீடு நிறுவனங்களின் கிளையை அணுகினால் போதும்!

தேவையான ஆவணங்கள்! 

 லைஃப் இன்ஷூரன்ஸ், விபத்து, மெடிக்ளைம் பாலிசி எடுக்க - வயதுக்கான ஆதாரம் (பள்ளி, கல்லூரிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவை), அதிக தொகைக்கு பாலிசி எடுக்கும்போது, புகைப்படம் மற்றும் வருமானத்துக்கான ஆதாரம் தேவைப்படும்.

 மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க ஆர்.சி புத்தகத்தின் நகல், அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம்!


3 comments:

 1. தகவலுக்கு நன்றி சகோதரா

  எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நனைவோமா ?

  ReplyDelete
 2. தகவலுக்க நன்றி சகோதரம்...

  தங்கள் வேட் வெரிபிகேசனை எடுத்தால் கருத்திட இலகுவாயிருக்கும் என நினைக்கிறேன்...

  ReplyDelete
 3. very good, super
  செய்தித்தாளை திறந்தாலே பைக் மீது கார் மோதி இருவர் பலி, சுற்றுலாச் சென்ற வேன், லாரி மீது மோதி ஐந்து பேர் பலி... என்கிற செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கிவிட்டன. இப்படி திடீரென ஏற்படும் விபத்துக்களால் மனிதர்கள் சந்திக்கும் துயரங்களும், பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்களும் ஏராளம். இதற்கு ஒரே தீர்வு, தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி எடுப்பதே
  பொதுவாக சாலை, ரயில் மற்றும் விமான விபத்துகளைத்தான் நாம் விபத்து என்கிறோம். ஆனால், இந்த பாலிசிகளில் விபத்து என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நமக்குத் தெரியாமல் நமக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் அனைத்துமே விபத்துகள்தான்
  காப்பீடு செய்துகொண்டவருக்கு உலகில் எங்கு விபத்து நடந்தாலும், க்ளைம் கிடைக்கும். விபத்தினால் உயிர் இழக்கும்பட்சத்தில் பாலிசி தொகை முழுவதும் வாரிசுதாரருக்கு கிடைக்கும் ,
  விபத்தினால் ஒருவர் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகி வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், எடுத்திருக்கும் பாலிசி தொகை முழுவதும் அவருக்குக் கிடைக்கும்.
  பாலிசி எடுக்கவேண்டுமா அருகில் உள்ள காப்பீடு அலுவலகத்திற்கு செல்லவும்
  மேலும் விபரங்களுக்கும் சந்தேகங்ளுக்கும் தொடரபுகொள்ளவும். NAGARAJ 9840047520 nagarajvlic@gmail.com
  .iam insurance advisor, i recomend this policy for my policy holders and all male females. iam planning to conduct INSURANCE INFORMATION AND AWARENESS CAMPAIGN. any one intrested pls call me.
  NAGARAJ, CHENNAI 9840047520,
  email nagarajvlic@gmail.com

  ReplyDelete