இரண்டு மிக பெரும் மொக்கை படத்தை பார்த்தது இல்லாமல் தென்மேற்குப் பருவக்காற்று அப்படி தான் இருக்கும் என முடிவு செய்து பார்த்தேன். ஆனால், என் நினைப்பு அனைத்தையும் பொய்யாகிய அருமையான திரைகாவியம் தென்மேற்குப் பருவக்காற்று. கிராமத்தில் நடக்கும் ஆட்டு திருட்டை பற்றி தான் கதை. அதனுடன் காதல், கோபம் செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்து இருந்தது இந்த தென்மேற்குப் பருவக்காற்று.
கதை :
ஆட்டுக் கொட்டாயை மேய்த்துவரும் வாலிபனுக்கும், ஆட்டுக்கிடாக்களை ராவோடு ராவாக திருடும் குடும்பத்துப் பெண்ணுக்குமான காதல் தான் இந்த தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் கதை.
படம் முழுவதும் தேனி மாவட்டத்தில் நடை பெறுகிறது.. அதை படமிக்க விதம் மிக அருமை. படத்தை ஆரம்பிக்கையில் டைட்டில் சாங் அந்த பாட்டுக்கு தேவையான புகை படம் என நிமிர்த்து உட்கார வைத்து விடுகிறார்கள்..
முதல் இருபது நிமிடம் எந்த திசையில் கதை செல்கிறது என நம்மால் யுகிய முடியவில்லை. ஆனால், அது கூட ரொம்ப நன்றாகவே, மற்றும் காத பத்திரத்தின் தன்மையை அறிந்து அனைவரும் இயல்பாகவே நடித்து உள்ளனர்..
வெயில் படத்தை போலவே இரவில் காட்சி ஆரம்பம். ஆடி திருடும் கும்பல் ஒன்று இரவு நேரங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு பல்வேறு ஆடுகளைத் திருடிக்கொண்டிருக்கிறது. ஒரு சமயம் அவர்கள் திருடுகையில், நம் நாயகன் அந்த குடத்தில் ஒருவனை பிடித்து விடுகிறான்.. கடைசியல் பார்த்தால் அவள் தான் நாயகி.. பார்த்ததும் காதல்.. இதனை தெரிந்த அண்ணன்கள் என்ன செய்தார்கள் என்பதை மிக அழகாக சொல்லி உள்ளார் படத்தின் இயக்குனர்..
நடிகர், நடிகைகள் :
சரண்யா : ஒரு கிராமத்தின் தாயின் குணத்தை அப்படியே பிரதிபலித்து உள்ளார்.
கதாநாயன் பெயர் தெரிய வில்லை. ஆனால், நிறைவாக செய்து உள்ளார். நாயகி, பேராண்மை படத்தில் நடித்தவர் என்று நினைக்குறேன். முதல் படத்தின் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட நடிப்பு கனகச்சிதம் .ரேணிகுண்டாவில் “ வந்தவர் இதிலும் நகைச்சுவையில் கலக்கி உள்ளார். அவரின் டயலாக் டெலிவரி மிக அருமை. சில இடங்களில் தற்பொழுது இருக்கு விலைவாசி மற்றும் அரசியல் நையாண்டி அனைத்தும் இதில் அடங்கும். நாயகியின் அண்ணன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தவர். அவரும் மிரட்டி இருக்கிறார்.
இதற்க்கு எல்லாம் மேல் நாயகனின் முறை பெண்ணாக வரும் பொண்ணு நடிப்பு சூப்பர். இயல்பான, அதுவும் தன்னம்பிகையின் உடன் அவள் பேசும் வசனமும் மிக மிக நல்லா வந்து உள்ளது படத்தில்.. இன்னும் என் மனதில் நிற்கிறது.
படத்தின் பலவீனம் எது என்றால் வாய் அசைப்பு ஏற்ற வசனம் வராதது.. மற்றும் முதல் இருபது நிமிடம் . மற்ற அனைத்தும் நலமே..
எனக்கு பிடித்தவை :
குடிக்கிற தண்ணி ஒரு ருபாய், ஒண்ணுக்கு போறதுக்கும் ஒரு ரூபாயா ?
பெண்களிடம் கண்ணை பார்த்து பேச கூடாது ..
தன்னை வேண்டாம் என்று சொன்ன ஹீரோவிடம் வந்து அவனின் முறை பெண்
வருடைய புகைப்படத்தைக் கொடுத்து “இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா..” என்றும் அதனை சுற்றி அவள் கூறும் வசனம் உங்கள் அம்மா ரூபாய் 50,000 கேட்டார்கள்.. கடன் வங்கி கல்யாணம் பண்ணலாம்.. எனக்கு கட்டு வேலை எல்லாம் தெரியும்.. நாம் சீக்கிரமே அதனை அடைத்து சந்தோசமாக இருக்கலாம் என்று கூறும் இடம்..
டிஸ்கி :
இது சரண்யாவின் நூறவது படம்..
இது சரண்யாவின் நூறவது படம்..
தென்மேற்குப் பருவக்காற்று - கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரை படம்
No comments:
Post a Comment