Search This Blog

Wednesday, December 29, 2010

காந்திபுரம்

படத்தின் பெயரை பார்த்து இது மொக்கை படம் என நல்லாவே தெரியும். நான் இது ஒரு தேசிய கதையை மையமாக வைத்து எடுக்க பட்டு இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.

ஆனால், பார்க்கணும் ஆசை. ஏன் என்றால் இது போல படங்கள் பார்த்தால் தான் பொறுமை வருகிறது.

இது தமிழ்ப்படம் கிடையாது,தெலுங்கு டப்பிங்க் படம்.அதுவும் ஜூனியர் என் டி ஆர் ஹீரோவா நடிச்ச படம். இந்த படத்தை தமிழ் படம் போல் விளம்பரம் செய்து தயரிப்பாளர் கல்லா கட்டி உள்ளார். சரி கதைக்கு போவோம். 

மும்பைல மிக கொடுரமான தாதாவை தட்டிக்கேட்கும் அர்ஜுன் ( இதுக்கு ஒரு பிளாஷ் பேக்  வேற ) ஒரு கட்டத்துல தாதா ஆக்க படுகிறார் . தான் மனைவி இடம் கொடுத்த    சத்தியம், வாக்கு ஆகியவை நிறைவேற்றுவதர்கக   அங்கே நடந்த விபத்தில்  இறந்து போன மாதிரி சீன் கிரியேட் பண்ணி தமிழ்நாடு வந்துஸ் அமைதியின் சொருபமாக செட்டில் ஆகிறார். இங்கே  2 தங்கச்சிங்க,2 பேரும் லவ் பண்றாங்க.அந்த பசங்களின் தந்தை மற்றும் கண்டிப்பானவராக நாசர்.. தங்கைகளின் காதல் கை  சேர்ந்ததா   என்பதே இந்த காந்திபுரம்..

அர்ஜுன்: 

வழக்கம் போல எதிரிகளை பந்தாடுகிறார்.  தெலுகு படத்தை பார்த்தால் காதுல பூ வைத்து கொண்டு தான் பார்க்கணும் என் நண்பன் சொல்லுவான். இந்த படத்தில் சண்டை கட்சியை பார்த்து எனக்கு ஒரே சிரிப்பு..

பாடல்கள் :

கேட்கவும் முடியல, பார்க்கவும் முடியல..

ஜூனியர் என் டி ஆர்:

இவருக்கு சண்டை காட்சி ரொம்ப நல்ல வருது. ஆளும் ஸ்மார்ட் தான் . தமிழ் டுப்பிங் குடுத்த ஆளை தேடி பிடிச்சு உதைக்கணும்..


காந்திபுரம் - தில் இருந்தா பாருங்க..

No comments:

Post a Comment