Search This Blog

Friday, November 02, 2012

டிவிஎஸ் - நம்ம ஊரு கம்பெனி

தமிழகத்தின் கடைக்கோடி கிராமமாக இருந்தாலும், அங்கே நிச்சயம் டிவிஎஸ் வாகனத்தைப் பார்க்க முடியும். டிவிஎஸ் - எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்துவிட்ட மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் நிறுவனம். 1978-ம் ஆண்டு மொபெட் தயாரிப்பைத் துவங்குவதற்காக தமிழக-கர்நாடக எல்லையான ஓசூரில் டிவிஎஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. முதல் மொபெட்டாக 1980-ம் ஆண்டு வெளிவந்த 'டிவிஎஸ்-50’ இந்தியா முழுக்க சூப்பர் ஹிட்! மொபெட்டைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டது டிவிஎஸ்.

வெளிநாட்டு பைக் தயாரிப்பாளரான ஜப்பானின் சுஸ¨கி நிறுவனத்துடன் இணைந்து, 1982-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பைத் துவக்கத் தயாரான இந்தியாவின் முதல் நிறுவனம் டிவிஎஸ். 1984-ம் ஆண்டு முதல் டிவிஎஸ் - சுஸ¨கி கூட்டணியில் பைக்குகள் வலம் வரத் துவங்கின. முதல் பைக்காக டிவிஎஸ்-சுஸ¨கி 'இந்த் - சுஸ¨கி’ அறிமுகப்படுத்தப்பட்டது. சுஸ¨கி சாமுராய், சுஸ¨கி ஷோகன், சுஸ¨கி ஃபியரோ என இந்தியா முழுவதும் டிவிஎஸ் சுஸ¨கி கூட்டணியில் வெளிவந்த பைக்குகள் சக்கைப் போடு போட்டன.
 

1991-ம் ஆண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 100 சிசி ஸ்கூட்டரெட், ஸ்கூட்டியை விற்பனைக்குக் கொண்டு வந்தது டிவிஎஸ். சுஸ¨கியுடனான 19 ஆண்டு பார்ட்னர்ஷிப், 2001-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. சுஸ¨கி பிரிவுக்குப் பிறகு 2001-ம் ஆண்டு 125 சிசி திறன் கொண்ட டிவிஎஸ் விக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு 'கிங்’ எனும் ஆட்டோ மூலம் 3 வீலர் மார்க்கெட்டில் நுழைந்தது டிவிஎஸ்.

தற்போது ஓசூர், மைசூர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் இந்தோனேஷியா என நான்கு இடங்களில் தொழிற்சாலை அமைத்து, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 15 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது டிவிஎஸ். ஹீரோ, பஜாஜ், ஹோண்டா நிறுவனங்களை அடுத்து, மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது டிவிஎஸ். ஸ்கூட்டி, வீகோ, ஸ்டார், மேக்ஸ் 4-ஆர், ஜைவ், ஃப்ளேம், ஃபீனிக்ஸ், அப்பாச்சி என மொத்தம் எட்டு மோட்டார் சைக்கிள்களையும், அதில் பல்வேறு மாடல் மற்றும் வேரியன்ட்டுகளையும் விற்பனை செய்து வருகிறது.

 


இந்தியாவிலேயே முதன்முறையாக விடி-ஐ இன்ஜினுடன் 2004-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சென்ட்ரா, இரட்டை ஸ்பார்க் பிளக்குடன் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ளேம், 2010-ம் ஆண்டு ஆட்டோ கிளட்ச் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஜைவ் ஆகிய மூன்று மோட்டார் சைக்கிள்களுமே, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கர்களாக ஆயின!

அதிக மைலேஜ் தரும் என விளம்பரப்படுத்தப்பட்ட 100 சிசி சென்ட்ரா பைக் மைலேஜில் சொதப்பியது. பஜாஜ் உடனான ட்வின் ஸ்பார்க் பிளக் பஞ்சாயத்தில், கோர்ட்டு வாசல் ஏறியதில் கிடைத்த நெகட்டிவ் இமேஜால் ஃப்ளேமும் அடி வாங்கியது. ஆட்டோ கிளட்ச் தொழில்நுட்பத்துடன் வெளிவந்த ஜைவ், மைலேஜ் குறைவாகத் தந்தது. இதுவே டிவிஎஸ் சந்தித்த தோல்விக்கான காரணங்கள்!


100 - 125 சிசி பைக்குகள்தான் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டின் இதயம். ஆனால், இந்த செக்மென்ட்டில் ஸ்டார் சிட்டியைத் தவிர டிவிஎஸ்-ஸுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பைக்குமே இல்லை. இப்போது ஃபீனிக்ஸ் மூலம் இந்த வெற்றிடத்தை நிரப்பக் களம் இறங்கியுள்ளது டிவிஎஸ். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ஐந்து மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர இது திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு பைக் என்பதுதான் இப்போது டிவிஎஸ்-ஸின் திட்டம்!

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் டிவிஎஸ் விக்டர் பைக்கை புதுப் பொலிவுடன், புதிய இன்ஜினுடன் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது டிவிஎஸ். இது தவிர, இந்த ஆண்டு இறுதியில் ஒரு ஸ்கூட்டரும், அடுத்த ஆண்டு மத்தியில் மற்றும் ஒரு ஸ்டைலான ஸ்கூட்டரையும், 100 - 125 சிசி பிரிவில் மற்றொரு பைக்கையும் கொண்டு வரப் போகிறது.

ஃபீனிக்ஸோடு சேர்த்து புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் இந்த நான்கு மோட்டார் சைக்கிள்களும், டிவிஎஸ் ஷோ ரூம்களுக்கு விற்பனைக்கு வரும்போது ஹோண்டா, பஜாஜ், ஹீரோ நிறுவனங்களோடு இன்னும் பலமாக டிவிஎஸ் போட்டி போடும்! இது தவிர, தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி பேசி வருகிறது டிவிஎஸ். பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்தால், இந்திய மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் டிவிஎஸ் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கலாம்!

- சார்லஸ்

விகடன்  



3 comments:

  1. விற்பனையில் இன்றும் சக்கைப்போடு போடுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நான் டிவிஎஸ் குரூப் நிறுவனத்தில் வேலை பார்ப்பதில் பெருமை கொள்கிறேன்.
      இப்பதிவில் நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். நன்றி.

      Delete
  2. Apache rtr 160. fi very very good top speed 157

    ReplyDelete