உயிரோடு இருப்பவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை, தபால்தலைகளை வெளியிடுவதில்லை
ஆனால், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோது, 1980ல் அவருடைய தபால்தலையை
வெளியிட்டது. அடுத்ததாக, சச்சின்
டெண்டுல்கருக்கு அந்தக் கௌரவம் கிடைத்துள்ளது. 1989ல் இருந்த சச்சின்
மற்றும் இன்றைய சச்சின் என இரண்டு விதமான புகைப்படங்களுடன் தபால் தலைகள்
வெளியிடப்பட்டுள்ளன. இந்தத்
தபால்தலையின் விலை ரூ.20. சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நிறைய
விழாக்களில் கலந்து கொண்டு தன் அனுபவங்களையும் அறிவுரைகளையும் கூறி
வருகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய
திட்டம் இருக்க வேண்டும். எதிர்காலம் குறித்து கனவு காண வேண்டும். அதை
அடைவதற்கான முயற்சிகள் இருக்க வேண்டும். 10 வயதில், அடுத்த 20 முதல் 25
ஆண்டுகளில் என்ன நடக்கும்
என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு ஒரு திட்டம் இருந்தது. அதுபோல
நீங்களும் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படுங்கள்" என்கிறார் லிட்டில்
மாஸ்டர்.
No comments:
Post a Comment