செல்போன் உலகில் நோக்கியாவுக்கு என்று நல்ல மவுசு உண்டு. இன்றும்கூட செல்போன் பேட்டரிகள் என்றால் நோக்கியாதான்.
ஆனால், நோக்கியா நிறுவனம் சமீப காலத்தில் போட்டி
நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல்
திணறியது. ஸ்மார்ட்போன் சந்தையை கோட்டைவிட்ட நோக்கியாவை மைக்ரோசாஃப்ட்
நிறுவனம் வாங்கியது. வாங்கியவுடன் Nokia lumia 2025 tablet pc என்ற
டேப்லெட் ஒன்றை வெளியிட்டது. இதுவே நோக்கியாவின் முதல் டேப்லெட் ஆகும்.
இந்த
டேப்லெட், விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதோடு, வாடிக்கையாளர்களின்
கவனத்தைக் கவரும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருந்தது.
நோக்கியா லுமியா 1320 என்ற பெயர் கொண்ட பேப்லெட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பேப்லெட், 6 இன்ச் நீளம் கொண்ட டிஸ்பிளே உடையது.
மேலும், திரையில் கீறல்கள் (scratch) அதிகம் விழாமல்
இருக்க, கொரில்லா கிளாஸ் (Gorilla Glass Technology) பொருத்தப்பட்டு
உள்ளது. அற்புதமாக, விரைவாக செயல்படுத்தக்கூடிய திறன்மிக்க 1.7 GHz
dual-core Qualcomm Snapdragon 400 processor,, 1ஜிபி ரேம், படங்கள்
மற்றும் வீடியோக்கள் துல்லியமான தரத்துடன் எடுக்க 5 மெகா பிக்ஸல் கேமராவும்
உள்ளது. இதில் 8ஜிபிக்கு இன்டர்நெட் மெமரியும், 32ஜிபிக்கு மெமரி கார்டு
ஆப்ஷனும் உள்ளது.
இந்த பேப்லெட் வாங்கும் நபர்கள் கிளவுட் ஸ்டோரேஜ் மூலம்
7ஜிபி-க்கு ஆன்லைனில் தங்களது தகவல்களை சேமித்துகொள்ளலாம். இதன் மொத்த எடை
220 கிராம். எப்போதும்போல இதன் பேட்டரி சிறப்பானதாகவே
வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் விலை ரூபாய் 20,900. 2014 புத்தாண்டில் இந்த பேப்லெட் பிசி விற்பனைக்கு கிடைக்குமாம்!
No comments:
Post a Comment