ஆப் லாக் அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆண்ட்ராய்டு தொழில் நுட்பம்கொண்ட ஸ்மார்ட் போன்களை
சிறப்பாகப் பயன்படுத்த பல ஆப்ஸ்கள் உள்ளன. இணையதளத்தில் உலாவ, கோப்புகளைச்
சேகரித்து வைக்க, புகைப்படம் எடுக்க என பலவிதமான செயல்பாடுகளுக்கும்
ஆப்ஸ்கள் நிறைய உதவுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆப்ஸை இப்போது பார்ப்போம்.
ஆப் லாக்! (App Lock)
இந்த அப்ளிகேஷன் மொபைல் போன்களில் உள்ள எஸ்.எம்.எஸ்
(குறுஞ்செய்தி), கான்டக்ட்ஸ் (மொபைல் எண்கள்), ஜீ-மெயில், ஃபேஸ்புக், கேலரி
(புகைப்படக் கோப்பு), மெயில்கள் (தனிப்பட்டவை மற்றும் அலுவலகம்
சார்ந்தவையாககூட இருக்கலாம்!) போன்ற ஸ்மார்ட்போன் உரிமையாளரின் தனிப்பட்ட
விஷயங்களை மற்ற யாரும் தெரிந்துகொள்ளாதபடி பாதுகாக்கப் பயன்படுகிறது.
இந்த அப்ளிகேஷன் மூலம் ஒருவர் மொபைல் போனில் தனக்கு
மட்டுமே தெரியவேண்டும் என்கிற விஷயங்களை பாஸ்வேர்டு போட்டு பாதுகாத்து
வைத்துக் கொள்ளலாம். தங்களுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்டு
மற்றவர்களுக்குத் தெரியாதபட்சத்தில் மொபைல் போனில் இருக்கும் தகவல்களுக்கு
எந்தவொரு பாதிப்பும் இருக்காது. இதனால் நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள்
பார்த்துவிடுவார்களோ என்று பயப்படத் தேவையில்லை.
அதுபோல, வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை
எடுத்து விளையாடும்போது செட்டிங்ஸ்களை மாற்றிவிடுவார்களோ என்கிற பயமும்
வேண்டாம். இந்த அப்ளிகேஷன்கள் பல பெயர்களில் கிடைக்கின்றன. அவற்றில் சில,
ஃபாஸ்ட் ஆப் லாக் (Fast App lock), ஆப் லாக் மாஸ்டர் (Applock Master).
ஹைலைட்:
இந்த அப்ளிகேஷனை உலகம் முழுக்க 30 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
24 மொழிகளில் இந்த அப்ளிகேஷன் சப்போர்ட் செய்கிறது.
No comments:
Post a Comment