ஹரியானா மாநிலத்தின் சோன்பேட் மாவட்டத்தில் சுஷில் குமாருக்கு மல்யுத்த
அகாடமி அமைக்க 5 ஏக்கர் நிலமும், விஜேந்தர் சிங் குத்துச்சண்டை அகாடமி
அமைக்க 3 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளன
. 33 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும் இந்த நிலத்துக்கு ஆண்டுக்கு 35
ஆயிரம் ரூபாயை வாடகையாகச் செலுத்த வேண்டும். அகாடமியில் ஹரியானாவைச்
சேர்ந்தவர்கள் 50 சதவீதம் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையும்
விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், அடுத்த உலக செஸ் சாம்பியன்ஷிப்
போட்டியில் விளையாடும் மற்றொரு வீரரைத் தீர்மானிக்கும் கேன்டி டேட் செஸ்
தொடரில்
பங்கேற்க உள்ளார். ரஷ்யாவில் மார்ச் மாதம் இப்போட்டி நடக்கவுள்ளது. 8 பேர்
கலந்து கொள்கிறார்கள். சென்ற மாதம் நடந்த ஜூரிச் போட்டியில் மிக மோசமாக ஆடி
5வது இடத்தைப் பிடித்தார் ஆனந்த். அதனால் கேண்டிடேட்ஸ்
போட்டியில் ஜெயித்து கார்ல்சனுடன் இன்னொரு முறை உலக சாம்பியன்ஷிப்
போட்டியில் ஆனந்த் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களுக்கே
மிகக் குறைவாகத்தான்
உள்ளது.
ஃபிஃபாவின் தங்கக் கால்பந்து விருதை 4 முறை வென்ற மெஸ்ஸியை, பிரான்ஸைச்
சேர்ந்த பாரிஸ் செயின்ட்-ஜெர்மென் கிளப் அணி ஒப்பந்தம் செய்ய முயற்சி
செய்வதாகச் செய்திகள் வெளியாகின. மெஸ்ஸி, இப்போது பார்சிலோனா
கிளப் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியும் லியோனல்
மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
அதனால், அவர்
விற்பனைக்கு அல்ல என்று தெரிவித்துள்ளது. பார்சிலோனா அணிக்காக இந்த
சீசனில் மட் டும் 36 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார். அவர் ஆடிய 20
ஆட்டங்களில் 16ல் பார்சிலோனா அணி வெற்றி
பெற்றுள்ளது. 2004 முதல் பார்சிலோனா அணிக்காக 400 ஆட்டங்களில்
விளையாடியிருக்கிறார், 26 வயது மெஸ்ஸி. 331 கோல்களை அடித்துள்ளார்.
பார்சிலோனாவுடனான ஒப்பந்தம் 2018 வரை உள்ளது.
36 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று ஒரு வழியாக கிராண்ட் ஸ்லாம்
பட்டத்தை வென்றிருக்கிறார் 28 வயது வாவ்ரிங்கா. சமீபத்தில் நடந்து முடிந்த
சென்னை ஓபன் போட்டியையும் இவர்தான் வென்றார்.வாவ்ரிங்காவிடம் இறுதிப் போட்டியில் தோற்ற நடால் இதுவரை, டென்னிஸின் மூலம்
405 கோடி ரூபாயைச் சம்பாதித்திருக்கிறார்.வாவ்ரிங்காவின் வருமானம், ரூ. 55
கோடி. தரவரிசைப் பட்டியலிலும்
எட்டிலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.
2012 ஒலிம்பிக் போட்டியில் லியாண்டர் பெயசுடன் இணைந்து விளையாட மறுத்ததால்
மகேஷ்பூபதிக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் தடை விதித்தது. இந்த வருடம்
ஓய்வு பெறுகிறார் மகேஷ் பூபதி. மூத்த வீரரான மகேஷ்பூபதி இந்த ஆண்டுடன் டென்னிஸில் இருந்து விடைபெற
இருக்கிறார். அவரை வழியனுப்பும் விதமாக டேவிஸ் கோப்பை போட்டியில் ஒரு
ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு அளித்து, அவரை கௌரவிக்க
வேண்டும் என்பது என் விருப்பம்" என்கிறார் ஆனந்த் அமிர்தராஜ்.
No comments:
Post a Comment