Search This Blog

Tuesday, June 30, 2015

விஜய் டி.வி.யிலிருந்து விலகலா?

 
தமது பேச்சுத் திறமையால் உலக முழுவதும் தமக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் டி.டி. என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா, சின்னத்திரை சிறு வேடங்களில் நடித்து ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சி மூலமாக இந்த உயரத்தை எட்டியவர். தற்போது விஜய் டி.வி.க்கும் இவருக்குமான உறவுக்கு முற்றுப்புள்ளி வந்திருக்கிறது. விஜய் டி.வி. நிர்வாகம் டி.டியை கழற்றி விட்டதா? அல்லது அவரே கழன்று கொண்டாரா? எதுதான் உண்மை? 
 
டி.டி. ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் என்றால் அவர் பேசுவதுதான் அதிகம். வந்திருக்கும் வி.ஐ.பி. பேசுவது வெகு குறைவு. சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் விழாவில் கோபிநாத்துடன் சேர்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஒரு கட்டத்தில் அவர் என்ன பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை. இதனை அப்படியே மேடையில் போட்டு உடைத்தார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.  

சௌந்தர்யா ரஜினிகாந்த் சார்பாக விருது வாங்க மேடை ஏறிய கே.எஸ்.ரவிக்குமாரிடம், டி.டி. பேச்சு கொடுக்க, “மைக் இருந்தால் பேசுவது சத்தமாக கேட்கும். ஆனால் மைக் இருந்தாலும் கத்துவது டி.டியாக மட்டுமே இருக்க முடியும்” என விஜய் டி.வியில் அதிகாரிகள் முன்னிலையில் டி.டி. பற்றி கடுப்பாகப் பேசினார். இதனால் டி.டி மீதுள்ள எண்ணம் மாறியது. உடனே அதிகாரிகள் அவரை அழைத்து கண்டிக்க தமது டுவிட்டரில் இனி நான் தேவையில்லாமல் பேச மாட்டேன் என மன்னிப்பு கேட்டார் டி.டி.
 
மேலும் சமீபத்தில் பேட்டிக்காக வந்த வி.ஐ.பி. ஒருவரைக் கேள்வி கேட்டு சரமாரியாகப் போட்டுத் தாக்க அவர் விஜய் டி.வி. நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் தெரிவித்தாராம். இதனால் விஜய் டி.வி நிர்வாகத்தின் குட்புக்கில் இடம்பிடித்த டி.டி. நிலை மாறியது. டி.டி.யின் கணவர் ஸ்ரீகாந்தும் விஜய் டி.வி.யுடன் இணக்கமாக நடந்துகொள்ள அறிவுறுத்தினாராம். விஜய் டி.வி. நிர்வாகம் சமீபமாக தனக்கு போதிய ஒத் துழைப்பு அளிக்காத காரணத்தால், நாம் கழன்று கொள்வது பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என முடிவுக்கு வந்து அவராக வெளியேறியதாகவும் சொல்கிறார்கள்.  

தற்போது கர்ப்பமாக இருக்கும் டி.டி. வீட்டில் ஓய்வெடுத்தபடியே நகைக்கடை மற்றும் அழகு நிலைய விளம்பரங்களில் தோன்றினால் போதும். எதற்கு தேவையற்ற பிரச்னை என்று நினைப்பதாகவும் சொல்கிறார்கள். இப்போதைக்கு டி.டி.யின் பேச்சு மழைக்கு ஒரு விடுமுறை! 
 
 

மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது!


மூன்று வயஸாவது பெரியவனாக இருப்பவனுக்குத்தான் பூமியில் விழுந்து நமஸ்காரம், மற்றவர்களுக்கு வேறே தினுஸில் ‘விஷ்’ பண்ணுவது என்பார்கள். முன்னேயே சொன்னாற்போல, விநயம் ரொம்பக் குறைந்து வருகிற இந்நாளில் நமஸ்காரப் பழக்கத்தை எவ்வளவு வ்ருத்தி செய்து கொடுத்தாலும் நல்லதுதான் என்பதால் குறைந்த பக்ஷம் மூன்று வயஸு ஜாஸ்தி இருக்கணும் என்பதைப் பார்க்கலாம். நம்மைவிடப் பெரியவர்களாக உள்ள எல்லாருக்குமே நமஸ்காரம் பண்ணிவிடலாமென்று தோன்றுகிறது.

கண்டிப்பான சாஸ்த்ர விதிப்படியேகூட நம்மைவிட வயஸில் சின்னவர்களாகவுள்ள சில பேருக்கும் நமஸ்காரம் பண்ண வேண்டுமென்று இருக்கிறது. உதாரணமாக, மன்னி வயஸில் சின்னவளாகவே இருந்தாலுங்கூட ஸ்தானத்தால் தாயார் மாதிரி என்பதால் நமஸ்காரம் பண்ணவேண்டும். அதே மாதிரிதான் குரு பத்னியும் ஒருவேளை நம்மைவிட வயஸு குறைவானாலும் நமஸ்கரிக்கணும். பொதுவாகவே கூட, நம்மைவிட வயஸில் பெரிய எவருடைய பத்னியும் அவரில் பாதி என்பதாலும், தம்பதி ஸமேதர்களாக நம்ஸ்கரிப்பது விசேஷம் என்பதாலும் அந்த ஸ்த்ரீகளுடைய வயஸைப் பார்க்காமல் விழுந்து நமஸ்கரிக்கணும்.

வித்யையில் பெரியவர், குணத்தில் பெரியவர், அநுபூதிமானாக இருப்பவர், பக்த ச்ரேஷ்டர்கள், ஞானிகள், ஸந்நி யாஸிகள், ஆத்ம ஸம்பந்தமான, தர்ம ஸம்பந்தமான ஸ்தாபனங்களில் ஆசார்ய ஸ்தானத்தி லுள்ளவர்கள் அதாவது பணம், பதவி, அந்தஸ்துகளால் இல்லாமல் வேறே விதங்களில் பெரியவர்களாக உள்ள எல்லோருக்குமே இந்த மூன்று வருஷ வித்யாஸம் கிடையாது. நம்மைவிட வயஸில் சின்ன வர்களானாலும் நமஸ்கரிக்கணும். குரு புத்ரனையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளணும்.

நிறைய பேரின் காலில் போய் விழ விழ அஹங்காரம் குறைந்து கொண்டே வரும் என்பதுதான் பொதுக் கொள்கை.

Tuesday, June 23, 2015

ஆனந்த ஸ்வரூபம்!


மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக் கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம்தான்.

மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள்தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூர ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது.

மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக் காமல், வெளியே ஆனந்தத் தைத் தேடித்துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.

ஷியோமி எம்ஐ LED

ஷியோமி எம்ஐ LED:(Xiaomi Mi LED)


இது ஒரு USB லைட்.

லேப்டாப்பின் USB போர்டு அல்லது பவர் பேங்க் மூலம் இதைப் பயன்படுத்தலாம்.

நைட் லைட், லேப்டாப் லைட், இரவு நேரங்களில் புக் லைட் என இதன் பயன்கள் ஏராளம்.

நீலம் மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

பிளஸ்: விலை.  தரம்.

மைனஸ்: இரண்டு கலர்களில்தான் கிடைக்கும்.

விலை: ரூ.199

சாம்சங் கேலக்ஸி டேப் இ: (Samsung Galaxy Tab E)


டிஸ்ப்ளே – 9.60 இன்ச்.

பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.

முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.

பிராசஸர் – 1.3 GHz Quad Core.

ரேம் – 1.5 GB.

பேட்டரி – 5000 mAh.

இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4

இன்டர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.

SD கார்டு – 128 GB வரை.

பிளஸ்:  பேட்டரி, டிசைன்.

மைனஸ்:  சிம் கார்டு வசதி இல்லை.

விலை: ரூ.14,500

ஜப்ரா ஸ்போர்ட் பல்ஸ்: (Jabra Sport Pulse)



பிட்னெஸ் ப்ளூ-டூத் ஹெட் போன்.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor) கொண்டுள்ளது.

Dolby Audio தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

பிளஸ்: துல்லியமான இதயத் துடிப்பு சென்ஸார்,  டிசைன்.

மைனஸ்:  விலை.

விலை: ரூ.15,990

பியோ எக்ஸ்3 செகண்ட் ஜெனரேஷன் (Fiio X3 Second Generation):

எளிதில் தூக்கி செல்லக்கூடிய ஆடியோ பிளேயர்.

இன்டர்னல் ஸ்டோரேஜ் கிடையாது. 128GB வரை SD கார்டு பயன்படுத்தலாம்.

2600 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.

2 இன்ச் டிஸ்ப்ளே.

பிளஸ்:  டிசைன் மற்றும் தரம்.

ஏறக்குறைய எல்லா ஃபார்மேட்களும் சப்போர்ட் ஆகின்றன.

மைனஸ்:  விலை.  பேட்டரி.

விலை: ரூ.14,999

நிக்கான் 1 வி3 கேமரா (Nikon 1 V3):


1 இன்ச் CMOS சென்ஸார்.

18.4 மெகா பிக்ஸல்.

Burst மோடில் வேகமாகச் செயல்படக்கூடிய தொழில்நுட்பம்.

WiFi வசதி.

பிளஸ்:  வேகமான செயல்பாடு.
கச்சிதமான பரிமாணங்கள்.

மைனஸ்:  விலை, குறைந்த வெளிச்சத்தில் சுமாராகவே செயல்படுகிறது.

விலை: ரூ.43,950

ஸ்மார்ட் பாக்கெட் ஆப்: (Smart Pocket App)
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, லாயல்டி கார்டு ஆகிய வற்றின் விவரங்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும்.

Balance மற்றும் பாயின்ட்ஸ்களை இந்த ஆப்ஸ் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
பிராண்டட் பொருட்களின் ஆஃபர் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்களில் இந்த அப்ளிகேஷன் இலவசமாகவே கிடைக்கிறது.

பிளஸ்:  எளிய டிசைன்.

மைனஸ்:  பாதுகாப்பின்மை.
செ.கிஸோர் பிரசாத் கிரண்

Monday, June 08, 2015

ஐ.பி.எல் துளிகள்

சூப்பர் ஓவர் மேட்ச்
 
போட்டியின்போது மோதிய இரு அணிகளும் சமமாக ஸ்கோர் எடுத்திருந்தால், வெற்றி பெற்ற அணியை முடிவு செய்ய, ஒவ்வோர் அணிக்கும் தலா ஓர் ஓவர் பாட்டிங் மற்றும் பௌலிங் செய்ய அனுமதிக்கப்படும். அந்த ஓவரின் இறுதியில் அதிக ஸ்கோர் பெற்ற அணி அந்த மேட்சில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்படி வெற்றியைத் தீர்மானிக்க அனுமதிக்கப்படும் ஓவரை ‘சூப்பர் ஓவர்’ என்பார்கள். இத்தகைய நிகழ்வு எப்போதாவது ஒரு முறைதான் நடக்கும். IPL T20 மேட்ச் 18ன் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதியபோது, இரு அணிகளும் 191 ரன்களை எடுத்து மேட்ச் டை (tie) ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் அனுமதிக்கப்பட்டு கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி மேட்சை வென்றது.


இந்திய கேப்டனின் இளம் வாரிசு
 
இந்திய அணியின் சமீபத்திய ஆஸ்திரேலியா டூரின்போது இந்திய கேப்டன் தோனிக்கு ஜிவா (ZIVA) என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்தியா சென்று குழந்தையைப் பார்த்து வர அனுமதி கிடைத்தும் அதை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய அணி ஒரு முறைகூட வெற்றியை இழக்காமல், அரை இறுதி ஆட்டம் வரை வருவதற்கு உறு துணையாக இருந்தார் தோனி. அவரின் பொறுப்பான செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தற்போது பெங்களூர் அணியை, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிகொண்டபோது, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது மகளை அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு ஆசையோடு அழைத்து வந்த காட்சி மனதுக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது.
 
விபத்துக்குப் பின் விளையாடியவர்
 
25 நவம்பர் 2014 அன்று ஃபில் ஹ்யூஸ் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர், சிட்னியில் நடந்த ஷெஃப்ஃபீல்ட் ஷீல்ட் மேட்சில் சீன் அப்போட் என்ற அதே நாட்டு வீரர் வீசிய பௌன்சர் பந்தை எதிர்கொண்டார். தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். பந்து வீசிய சீன் அப்பாட் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு, மனநல ஆலோசனை பெற்றுவந்தார் நீண்ட நாட்களுக்குப் பின் அவர் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் அணிக்காகப் பந்து வீசினார். 
 
பரிசுத் தொகையை விட அதிக சம்பளம்
 
PLT20 8 வது போட்டி தொடரின் இறுதியில் வெற்றி பெறும் அணி மொத்தத்துக்கும் சேர்ந்து பரிசுத் தொகை 15 கோடி. ஆனால் டெல்லி டேர் டெவில்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங்குக்குக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை மட்டும் 16 கோடியாகும். இதுவரை நடந்த மேட்ச்களில் தொடர்ந்து குறைந்த ரன்களில் அவர் அவுட் ஆகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. 
 
 

தள்ளாடும் இன்ஜினியரிங்!

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப்பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக்கொண்டிருப்பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது தங்கள் வாரிசுகள் பி.இ. படித்து ஒரு நல்ல வேலையில் சேரவேண்டும் என்பது பல தமிழ்க் குடும்பங்களின் கனவு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் தரும் தகவல்கள் பி.இ. படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் இல்லையோ என்ற அச்சத்தை எழுப்புகிறது.

கடந்த சில ஆண்டுகளைவிட இந்தாண்டில் +2வில் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். பள்ளிகள் பெருமிதத்திலும் பெற்றோர்களும் சந்தோஷத்தில் பத்திரிகைகளுக்குப் பேட்டிகள் கொடுத்தனர். தமிழகமே பெருமைப்பட்டது. 

ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு வந்திருக்கும் விண்ணப்பங்கள் பெருமளவில் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட இருபது சதவிகிதம் குறைவு. 2014ஆம் ஆண்டே அதற்கு முந்தைய ஆண்டைவிட பத்து சதவிகிதம் குறைந்திருந்தது. கடந்தாண்டு விற்பனையான விண்ணப்பங்கள் 2 லட்சத்து 12 ஆயிரம். மனுச் செய்தவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம். நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்கள் 1 லட்சம். இந்த ஆண்டு (2015) விண்ணப்பங்கள் விற்பனை 1 லட்சத்து 90 ஆயிரமாகக் குறைந்தது. மனுச் செய்திருப்பவர்கள் 1 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே. மனுச்செய்தவர்களில் பலர் கலந்தாய்வில் பங்கேற்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கலந்தாய்வுக்குப் பின் காலியாக இருக்கப் போகும் இன்ஜினியரிங் சீட்டுகள் 1 லட்சத்து 20 ஆயிரமாக இருக்கலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. 

பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லூரி வளாகங்களைப் பிரம்மாண்டமாக உருவாக்கி பல லட்சங்களில் நன்கொடை பெற்று சீட்டுகளை ஒதுக்கிய கல்லூரிகள் இன்று அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்திலேயே மாணவர்களைச் சேர்க்கத் தயாராகக் காத்திருக்கின்றன. ஆனால், மாணவர்கள் சேருவதில்லை

ஏன் இந்த நிலைமை?

நல்ல மதிப்பெண்கள் இருந்து, கலந்தாய்வில் அரசுகோட்டாவில் இடம் கிடைத்தாலும், மாணவர்கள் கணிப்பில் அந்தக் கல்லூரி, நல்ல கல்லூரி இல்லையென்றால் அதில் சேர விரும்புவதில்லை. பொறியியல் கல்வியில் உயர்ந்த தரம், கேம்பஸ் தேர்வில் பங்கேற்க வரும் நல்ல நிறுவனங்கள் போன்றவற்றினால் மட்டுமே ஒரு பொறியியல் கல்லூரியின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 

அதனால்தான் நல்ல மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் கூட, நன்கொடை கொடுத்து நிர்வாக கோட்டாவில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். படிப்புக்குப் பின் நல்ல வேலை என்பதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்களின் கட்-ஆஃப் மார்க்குக்கு கலந்தாய்வில் முதல் தரமான கல்லூரிகளில் அரசுகோட்டாவில் இடம் கிடைக்காது என்பதை கணித்தபின் கலந்தாய்வில் பங்கேற்பது அவசியமில்லை என விட்டு விடுகின்றனர். 

அதாவது எப்படியாவது பி.இ. படித்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்து நல்ல தரமான கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்புள்ள கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் பொறியியல் படிப்பே வேண்டாம் என மாணவர்கள் ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களின் தகுதி, உள்கட்டுமானம், இதர வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் தரப்பட்டியலும் இடப்பட்டிருக்கிறது. ஆனால், மாணவர்கள் இதைத் தவிர பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் இருப்பவை 30 கல்லூரிகளே. இதற்கு அடுத்த கட்டமாக இரண்டாம் நிலையில் 15 கல்லூரிகள். இவற்றில் சேரத்தான் மாணவர்கள் விரும்புகிறார்கள். 

கடந்த மூன்று ஆண்டுகளில் அக்கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைத்த வேலைவாய்ப்பை வைத்து இப்பட்டியலை உருவாக்கி இருக்கிறார்கள். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் சமூக, நட்பு ஊடகங்கள் வழியாக இந்தப் பட்டியல் பகிரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தின் கல்விச்சூழலில் ஏற்பட்டிருக்கும் மற்றொரு மாற்றம் அகில இந்திய அளவில் நடைபெறும் பொறியியல் கல்வி நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைப்போல பெருமளவில் பிரகாசிக்கவில்லை என்பதுதான். பிளஸ் டூவுக்குப்பின், தமிழகத்துக்கு வெளியே அகில இந்திய அளவில் பொறியியல் படிக்க வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள பல நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. அதில் அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க JEE என்ற நுழைவுத்தேர்வு மிக முக்கியமானது. 13 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வில் தேறிய 1.5 லட்சம் பேர் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு முன்னேறியிருக்கிறார்கள்.  

இந்தத் தேர்வில் தேர்வுபெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் நான்காயிரம் மட்டுமே. ஆந்திரத்தில் 32 ஆயிரம், கர்நாடகத்தில் இதைவிட அதிகம். 

தமிழ்நாட்டில் ஐந்துவிதமான சிலபஸ்கள் இருக்கின்றன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தது, தன்னாட்சிப் பெற்றவை, அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னாட்சிப் பெற்றவை, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் என பலவகைக் கல்லூரிகள் வெவ்வேறு சிலபஸ்களுடன் இயங்குகின்றன. இதனால் தரம் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இந்த வேறுபாடுகளைக் களைய மத்திய அரசின் கல்வித்துறை முயற்சிகள் எடுத்து NPTEL(National Programme on Technology Enhanced learning) என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் பல கல்லூரிகள் அந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் பல கல்லூரிகளுக்கு இந்தத் திட் டம் பற்றித் தெரியுமா என்பதே சந்தேகமாயிருக்கிறது.  

மேலும் பல கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள் இல்லை. வேறு வேலை கிடைக்காததால் ஆசிரியரானவர்களே அதிகம். இவர்கள் பள்ளிகளில் இறுதித்தேர்வுக்கு மாணவர்களைத் தயாரிப்பது போலவே கல்லூரியிலும் செய்கிறார்கள். அதனால் நமது மாணவர்கள் தேர்வுகளில் பாசானாலும் நிறுவனம் எதிர்நோக்கும் திறன்கள் இல்லாமல், வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அதைப் பார்க்கும் கிராமப்புற இளைஞர்கள் பி.இ.யைப் படிக்கத் தயங்குகிறார்கள்.”

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகள் 552.
ஆண்டுக்கு சராசரியாக வெளிவரும் பொறியாளர்கள் 1.7 லட்சம்.
காம்ப்ஸ் இண்டர்வியூவில் வேலை பெறுபவர்கள் 32 ஆயிரம் பேர்கள்.
வேலையில்லாமல் காத்திருப்போர் 68 ஆயிரம் பேர்கள்.



ஜீவசக்தி


லோக வாழ்க்கை என்பது நன்றாக நடப்பதற்கு அறிவுத் துறைகள் என்றே - அதாவது ஆத்ம ஸம்பந்தமில்லாமல் இருக்கப்பட்டவையாகவே - இருக்கிறவையும் தேவைப்படத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கு நேரே ப்ரயோஜனப்படுவதாகத் தெரியாவிட்டாலும் அல்லது மனஸுக்கு ஒரு நிறைவைக் கொடுத்து, அதனால் ஸந்தோஷம் ஏற்படுத்துவதாகவும் அநேகத் துறைகள் இருக்கின்றன- ஸங்கீதம், சில்ப - சித்ரம், சரித்ரம், பாஷா சாஸ்திரம் இப்படி அநேகம். திருட்டும், சூதாட்டமும் மாதிரியில்லாமல், தனிப்பட நல்லது, கெட்டது என்று இல்லாமல் நாம் எப்படி ப்ரயோஜனப்படுத் திக்கொள்கிறோமோ அதனாலேயே நல்லதோ கெட்டதோ விளைவிப்பதாகவுள்ள ஸயன்ஸ் ஸப்ஜெக்ட்கள் தற்போது தினந்தோறும் பெருகி வருகின்றன. இன்றைய வாழ்க்கைக்கு - பௌதிகமாக, மெடீரியலாக த்ருப்தி தருகிற வாழ்க்கை மட்டுமில்லை, அறிவுக்கும் மனஸுக்கும் ஸந்தோஷம் தந்து வாழ்க்கையையே உத்ஸாகப் படுத்துகிறவற்றையும் சேர்த்தே சொல்கிறேன், அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு - இந்த வித்யைகள் எல்லாமே வேண்டித்தான் இருக்கின்றன. நாகரிக ஸமுதாயங்கள் ஏற்பட்ட நாளிலிருந்தே அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது.

நம் தேசத்தில் இந்த அறிவு வித்யைகளைக் கற்பிக்கிறவர்களும் உத்தம ஹ்ருதயமுள்ள யோக்யர்களாக, நல்ல சீலமுள்ள வர்களாக இருந்து வந்தார்கள். திருட்டு, சூதாட்டம் மாதிரியான கெடுதலான வித்யைகளைக் கற்றுக் கொடுக்கிறவர்களைத் தவிர, மற்ற ஆசாரியர்கள், ஆசிரியர்களெல்லாம் நல்ல morals-ம் அதாவது நன்னெறியும், அத்தனை நெறிக்கும் ஆதாரமான தெய்வபக்தியும் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள். அதனால், அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள், பக்தி விச்வாஸம் வைக்க வேண்டிய குருமார் களாகவே அவர்களுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பலதுறை பாடத்தால் மூளை வளர்ச்சி பெறுகிறதோ? பாடமான நீதிபோதனை, பக்தி போதனை முதலியவற்றுக்கு ஜீவசக்தி ஊட்டிய அவர்களுடைய வாழ்க்கை உதாரணத்தாலும், பெர்ஸனல் ரேடியேஷனாலும் ஹ்ருதய வளர்ச்சியும் பெற்றார்கள்.

அடல் பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்திய சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன் யோஜனா. இந்தத் திட்டம் ஜூன் 1, 2015-ல் இருந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும், எப்படி பணம் வசூலிக்கப்படும், யார் இதை நிர்வகிப்பார்கள், எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்கும்.
 
‘‘இந்தத் திட்டத்தின் நோக்கமே அமைப்பு சாராத (Unorganised) துறையில் வேலை செய்பவர்கள், ஓய்வுக்காலத்துக்குப் பின், அதாவது 60 வயதுக்குப்பின் மாதம் ரூ.1,000 - 5,000 வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதுதான். அதற்காக அரசு தன் சார்பாக ஒரு சிறு தொகையைச் செலுத்தும்.

யார் இணையலாம்? 

18  வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 31, 2015-க்குள் இணைபவர்களுக்கு அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவிகிதம், இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும். 

பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படு வார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்றாலும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது. அதேபோல், வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.

ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறையில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார் களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப் படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக்கொள்ளும்.

எப்படி இணைவது?

எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, முகவரி சான்று, புகைப்பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO) வழங்கும். அந்த ‘ப்ரான் எண்’ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதாரமாக இருக்கும்.

யார், எவ்வளவு தொகை செலுத்தலாம்? 

நாம் விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக்குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் கேட்பார்கள். குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஒருவர் பென்ஷனாக பெற நினைக்கும் தொகையைக் குறிப்பிடலாம். பென்ஷனாக பெற நினைக்கும் தொகைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். (பார்க்க அட்டவணை!)

முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இணைந்தவுடன், இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கு சாட்சியாக ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அதுதான் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். அதேபோல் ஒவ்வொரு தவணை செலுத்தும்போதும் உங்களுக்கு ரசீதோ அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பப்படும்.

எப்படி பணம் செலுத்துவது?

ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தபின் மாதாமாதம் செலுத்த வேண்டிய தொகையை ஆட்டோடெபிட் மூலம் செலுத்தலாம்.  நம் வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து வரவு வைக்கப்படும். நம் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, அது நம் ‘ப்ரான்’ கணக்கில்   வரவு வைக்கப் பட்டதும் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


எப்போது பணம் எடுக்கப்படும்?

நாம் முதல் முறையாக அடல் திட்டத்தில் இணையும்போது எந்த தேதியில் பணம் செலுத்து கிறோமோ, அந்த தேதிதான் நம் அடுத்தடுத்த  மாதத்தின் கெடு தேதி. உதாரணமாக, ஜூன் மாதம் 8-ம் தேதி முதல் தவணை செலுத்தி இருந்தால், அடுத்தடுத்த மாதம் 8-ம் தேதி அன்று தவணைக்கான பணம் எடுக்கப்படும்.

தொகையை அதிகரிக்கலாமா?

வருடத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் தொகையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். ஒவ்வொரு ஆண்டின் ஏப்ரல் மாதம் மட்டும் இந்த வசதி மூலம் நாம் மாதாமாதம் செலுத்தும் பென்ஷன் தொகையை அதிகரித்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும்.

 பணம் கட்டாவிட்டால்..? 

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின் சரியாக பணம் கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப் படும். ரூ.1 முதல் 100-க்கு ஒரு மாதத்துக்கு 1 ரூபாயும், ரூ.101 முதல் 500 வரை ஒரு மாதத்துக்கு 2 ரூபாயும், ரூ.501 முதல் 1,000 வரை ஒரு மாதத்துக்கு 5 ரூபாயும், ரூ.1001-க்கு மேல் ஒரு மாதத்துக்கு 10 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால், நம் சேமிப்புக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும். தொடர்ந்து 24 மாதங்கள் பணம் செலுத்தவில்லை என்றால் சேமிப்புக் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டு, திட்டத்திலிருந்து நீக்கப்  படுவார்கள்.

யார் நிர்வகிக்கிறார்கள்?

இந்தத் திட்டத்தை வருங்கால வைப்பு நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) என்கிற அரசு அமைப்பு நிர்வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதியில் 85%  அரசுப் பத்திரங்கள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யப் படும். மீதமுள்ள 15% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

என்ன உறுதி?

நாம் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு  கூடுதல் தொகை கிடைத்தால், அந்த தொகை திட்டத்தில் முதலீடு செய்தவருக்கே  வழங்கப்படும். ஒருவேளை உறுதி செய்யப்பட்ட தொகையைவிட குறைந்த அளவே வருமானம் ஈட்டி இருந்தால், அதை அரசாங்கம் சரிகட்டும்.

எப்போது க்ளெய்ம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தில் இணைந்தவர் 60 வயதுக்குப் பிறகு இறந்துவிட்டால், அவரது இறப்புச் சான்று, இந்தத் திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார்  அட்டை விவரங்கள், நாமினியின் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை திட்டத்தை நிர்வகிக்கும் வங்கிக் கிளையில் சமர்பித்தால், வங்கி அந்த ஆவணங்களின் நகலை பிஎஃப்ஆர்டிஏவுக்கு அனுப்பும். பிஎஃப்ஆர்டிஏ  சான்றிதழ்களை சரிபார்த்து பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும். ஒருவேளை 60 வயதுக்குமுன் இறந்தால் அல்லது உயிர் போகக்கூடிய நோய் காரணமாக பணத்தைத் திட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என்றால், திட்டத்தில் இணைந்தவர் எவ்வளவு தொகை செலுத்தினாரோ அந்த தொகையும், அரசு தன் சார்பாக வழங்கிய தொகை மட்டும்தான் வழங்கும்.

60 வயதுக்குப் பின் இறந்தால்...?

இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒருவர் 60 வயது முடித்து எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகளுக்கும் அவர் கோரி இருந்தபடி பென்ஷன் தொகை கிடைக்கும்.

அவருக்குப்பின் அவர் சொல்லும் நாமினி, அதாவது முதல் நாமினி, இறக்கும் வரை அதே அளவு தொகை ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். முதல் நாமினியும் இறந்துவிட்டால், அவர் நாமினியாக நியமித்தவருக்கு, அதாவது இரண்டாவது நாமினிக்கு உறுதி செய்திருந்த மொத்த தொகையும்  (Lumpsum) வழங்கப்படும்.

உதாரணமாக, சேகர் என்பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்து மாதம் ரூ.577 செலுத்தி வருகிறார். அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000 செலுத்தி வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந்து மாதம் ரூ.5,000 கிடைக்கும். சேகர் தன் 71-வது வயதில் இறந்துவிடுகிறார். ஆக சேகருக்கு  61 - 71 வயது வரை 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 கிடைத்திருக்கும்.

சேகர் இந்தத் திட்டத்தில் இணையும்போது நாமினியாக தனது மனைவி கமலாவைக் குறிப்பிட்டிருக்கிறார்.  (நாமினி கணவன் /மனைவி யாகத்தான் இருக்க வேண்டும்) எனவே, சேகர் இறந்தபின், கமலா உயிரோடு இருக்கும் வரை மாதம் ரூ. 5,000 கிடைக்கும். கமலா தனது நாமினியாக தன் மகன் ரமேஷை நியமித்திருப்பார். கமலா இறந்த பிறகு, ரமேஷுக்கு மொத்தத் தொகையான 8.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
 
நாமினியை மாற்றிக் கொள்ளலாமா?

இந்தத் திட்டத்தில் இணைபவர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது கட்டாயம் நாமினியை குறிப்பிட வேண்டும். ஒருவேளை, நாமினி இறந்துவிட்டால், எந்த வங்கிக் கிளையில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்பட்டு வருகிறதோ, அந்த வங்கியில் சென்று புதிதாக வேறு ஒரு நாமினியை நியமித்துக் கொள்ளலாம்.

வேறு வங்கிக் கிளைக்கு மாற்றலாமா?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தபின், ஒருவர் எந்த வங்கிக் கிளைக்கு வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், க்ளெய்ம் சமயத்தில் ஒருவரின் ‘ப்ரான் கணக்கு’ எங்கு நிர்வகிக்கப்படுகிறதோ, அங்குதான் க்ளெய்ம் கிடைக்கும்.

தரப்பட்ட தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், திட்டத்தில் இணைந்தவர் செலுத்திய தொகை மட்டும் திரும்ப வழங்கப்பட்டு திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அரசு தன் சார்பாக வழங்கிய தொகை கிடைக்காது'' என்றார் கணேசன்.

மு.சா.கெளதமன்
 
 
 

டீவி 2 (teewe 2)

ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்களில் உள்ள வீடியோக்களை டிவிகளில் ப்ளே செய்ய HDMI கேபிள்கள்தான் பெரும்பாலான நேரங்களில் பயன்படுகின்றன. ஆனால், அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் HDMI போர்டுகள் இருப்பதில்லை. இந்த சிரமத்தை போக்கவே ‘Streaming’ கருவிகளை பயன்படுத்துகிறோம். வெளிநாட்டில் தயாரான பல்வேறு ‘Streaming’ கருவிகள் இருந்தாலும், போன்/லேப்டாப்பின் ‘Local Storage’ ஃபைல்களை பயன்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்து வருகின்றன. அந்த சிரமங்களை இந்திய தயாரிப்பான டீவி 2 கருவி தற்போது சரிசெய்துள்ளது.


டிசைன்!

டீவி 1 கருவிக்கும் டீவி 2 கருவிக்கும் டிசைனில் பல வித்தியாசங்களை காணலாம். டீவி 1 சற்று பருமனாக இருக்கும். ஆனால் டீவி 2, டீவி 1-ன் 70% அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லியதாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள டீவி 2, கூகுள் நிறுவனத்தின் ‘Chromecast’ கருவியைவிட அளவில் சிறியது என்பது சிறப்பம்சம். பென்-டிரைவ் போல காட்சியளிக்கும் இந்த கருவி உயர் ரக பிளாஸ்டிக்கைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு!

டீவி 2 டாங்குளை டிவியின் HDMI போர்டில் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவிக்கு தேவையான மின்சாரத்தை அதில் அமைந்துள்ள micro USB போர்டு மூலம் தரவேண்டும். டீவி 2  டாங்குளை டிவியில் இணைத்த பிறகு, டீவி அப்ளிகேஷனை தேவையான கேட்ஜெட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின்பு டீவி 2 மற்றும் கேட்ஜெட்டை ஒரு WiFi நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும். ஒரு ஆண்ட்ராய்ட் போனை பயன்படுத்தினால் டீவி 2-வை பயன்படுத்துவது மிக சுலபம்.


சேவைகள்!

டீவி 2-வை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் சுலபமாக பயன்படுத்தலாம். மேலும், லேப்டாப்புடனும் பயன்படுத்தலாம். யூடியூப் வீடியோ, முகநூல் போட்டோக்கள், மியூசிக், வீடியோ, திரைப்படங்கள் டவுன்லோடு ஆகிய அனைத்து சேவைகளையும் டீவி 2 வாடிக்கையாளர்களுக்கு தருகிறது. மேலும், ஒரே டீவி டாங்குலுடன் பல கேட்ஜெட்டுகளை இணைத்து எந்தவித சிரமமுமின்றி பயன்படுத்தலாம்.

டீவி க்ரோம் எக்ஸ்டன்ஷன்! (Teewe Chrome Extension)

டீவி 2-வின் மற்றொரு சிறப்பம்சம் இது. வாடிக்கையாளர்கள் தங்களது கூகுள் க்ரோம் ப்ரௌஸரில் ‘Teewe Chrome Extension’-யை டவுன்லோடு செய்துகொள்ளலாம். இதை பயன்படுத்தி ப்ரௌஸரில் உள்ள அனைத்தையும் ‘Screen Mirror’ என்ற சேவை மூலம் டிவியில் பார்க்கலாம்.

விலை:  ஆன்லைனில் விற்கப்படும் இந்த கேட்ஜெட்டின் விலை ரூபாய் 2,399.

பிளஸ்:  சேவைகள்   டிசைன்.

மைனஸ்:  கேம்ஸ் விளையாட பயன்படுத்த முடியாது.

Sunday, May 31, 2015

யூ யுபோரியா (Yu Yuphoria)

‘யூ’ என்பது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஒரு பிரீமியம் பிராண்ட் இமேஜ்ஜை உருவாக்க யூ ஸ்மார்ட் போன் துணை நிறுவனத்தைத் தொடங்கியது. யூ நிறுவனத்தின் முதல் கேட்ஜெட் ‘யுரேகா’. குறைந்த விலையில் அதிகத் தொழில்நுட்பம் என்ற யுக்தியில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் போன், பல எல்லைகளைத் தொட்டது. இதன் தொடர்ச்சியாக யூ நிறுவனம், தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான  ‘யுபோரியா’-வை சமீபத்தில் வெளியிட்டது.

டிசைன்!

யுபோரியா ஸ்மார்ட் போன் பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஓரங்கள் முழுவதும் மெட்டலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட் போனை கவர்ச்சியாகக் காட்சியளிக்க உதவுகிறது. பின்புற கேமராவைச் சுற்றி ஒரு பெரிய உலோக வளையம் அமைந்துள்ளது. இதுவும் போனின் டிசைனுக்குப் புதுமையைத் தருகிறது. யுபோரியா ‘Buffed Steel’ மற்றும் ‘Champagne Gold’ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் பரிமாணங்கள் 142.4x73x9.35 மி.மீ. எடை 143 கிராம்.

கேமரா!

யுபோரியா, 8MP பின்புற கேமராவையும் 5MP முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. பின்புற கேமரா சூரியவெளிச்சத்தில் கச்சிதமான படங்களை எடுக்கும் திறனைப் பெற்றுள்ளது. முன்புற கேமரா தனது 4P லென்ஸ்களைக் கொண்டு சிறப்பான செல்ஃபிகளை எடுக்க உதவுகிறது. ஆனால், பின்புற கேமரா மூலம் எடுக்கப்படும் 720P வீடியோ சுமாராகவே இருக்கிறது.

டிஸ்ப்ளே!
யுபோரியா, 5 இன்ச் 720*1280 பிக்சல்ஸ் 294 PPI 16.7M டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட் போனில் இதுபோன்ற அதிக தொழில்நுட்ப டிஸ்ப்ளேக்கள் கிடைப்பதில்லை. மேலும், டிஸ்ப்ளேவின் பாதுகாப்புக்காக ‘Corning Gorilla Glass 3’-யும் இதில் அமைந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே மிருதுவாக இருக்கிறது. ஆனால், வெளிச்சத்தில் பயன்படுத்த இந்த டிஸ்ப்ளே சுமாராகவே உள்ளது.


தொழில்நுட்பம்!

யுபோரியா, Qualcomm’s 1.2GHz quad-core Snapdragon 410 SoC பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. மேலும், பிரத்யேகமான Adreno 306 கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் மெமரியை 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் ஒரு சிம் மட்டும் 4G LTE வசதியைக் கொண்டுள்ளது
.
பேட்டரி!

யுபோரியா, 2230mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. அதிகப் பயன்பாட்டில் சுமார் 7.5 மணி நேரம் வரை உழைக்கும் இந்த பேட்டரி, வாடிக்கையாளர்களின் ஒருநாள் பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கும்.

இயங்குதளம்!

இந்த போனின் சிறப்பம்சம், அதன் இயங்குதளம்தான். யுரேகா ஸ்மார்ட் போனை போலவே, யுபோரியா ஸ்மார்ட் போனிலும் ‘Cyanogen’ இயங்குதளமே பயன்படுத்தப்பட்டுள்ளது. Cyanogen இயங்குதளம் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. யூபோரியாவில் அமைந்துள்ள ‘Cyanogen OS 12’ இயங்குதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப பல ஆப்ஷன்களை மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி எந்த இயங்குதளத்திலும் கிடையாது.
யூ யுபோரியாவின் இந்திய விலை ரூபாய் 6,999.

பிளஸ்:  டிசைன்  ரேம்,  விலை

மைனஸ்:  பின்புற கேமரா,  சுமாரான செயல்பாடு.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மின்சாரம் தரும் சூரியத் தகடுகள்!

மனித வரலாற்றில் அரிய கண்டுபிடிப்புகளின் வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறுவது மின்சாரம். இந்த மின்சாரத்தை மனிதன் ஆரம்பத்தில் தண்ணீரிலிருந்து, நெருப்பில் இருந்து உருவாக் கினான். ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பது தடைபட்டது. நிலக்கரி, பெட்ரோல் தட்டுப்பாடு வந்தபோது மின்சார உற்பத்தி குறைந்தது.


எனவே, மின்சாரம் தயாரிக்க அள்ள அள்ளக் குறையாத சக்தி ஒன்று மனிதனுக்கு தேவைப்பட்டது. அதுதான் சூரிய சக்தி. 1897-ம் ஆண்டு பிரான்க் ஷூமேன் என்பவர் (Frank Shuman) சூரிய வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கக்கூடிய நோக்கில் ஆராய்ச்சியைத் துவங்கினார். 1908-ல் சோலார் மின் நிலையங்களை உருவாக்கி மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்று ஒரு அமைப்பை வடிவமைத்துக் காட்டினார். பின்னர் 1912-ல் எகிப்தில் முதல் சோலார் மின் நிலையத்தை நிறுவி சூரிய சக்தியில் மின்சாரத்தை தயாரிக்க முடியும் என்பதை  நிரூபித்தார்.

சோலார் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்ட பின்பு, ஒவ்வொரு சாதனத்திலும் சோலார் பலகையைப் பொருத்துவதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தால் அந்த சாதனத்தை இயங்க வைக்க முடியும் என்று நிரூபித்தனர். உதாரணமாக, சோலார் தகடு பொருத்தப்பட்ட தெரு விளக்குகள், சூரிய ஒளியால் இயங்கும் மின்விசிறி என புதுமைகள் அரங்கேறின.


இதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, விமானத்தில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டு உலகம் முழுவதையும் சுற்றிய சோலார் இம்பல்ஸ் விமானத்தையும் வெற்றிகரமாக இயக்கியுள்ளனர். ஆறுகளை சோலார் தகடுகளால் மூடி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குஜராத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு தராத வகையில் சோலார் மின் உற்பத்தி உள்ளது. வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை அரசிடம் இருந்து எதிர்பார்க்காமலும், நாட்டின் எரிபொருள் வளத்தைக் குறைக்காமலும் இருக்கும் விதத்தில் உள்ள சூரிய மின்சாரமே எதிர்கால மின்தேவைக்கு  ஆதாரம்!

ச.ஸ்ரீராம்

Saturday, May 30, 2015

ஐ.பி.எல் கோப்பை முயற்சிக்கு மகுடம்!

 
"காத்து காத்து எதிர்பார்த்த கஸ்தூரி மாம்பழத்தை காகம் கொத்திப் போய்விட்டதே” என்றொரு பழமொழி மலையாளத்தில் உண்டு. இவ்வருட ஐ.பி.எல்லின் மிகச் சிறந்த அணி இறுதிப் போட்டியில் தடுமாறி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை மும்பைக்கு தாரை வார்த்தபோது சென்னை அணி ரசிகர்களுக்கு இந்த பழமொழிதான் ஞாபகம் வந்திருக்கும். மும்பையை விட பல மடங்கு முதிர்ச்சியும் கூர்மையும் கொண்ட அணி சென்னை. நிச்சயம் இறுதிப் போட்டியை வென்றிருக்க வேண்டும். ஆனால் மோசமான திட்டமிடல் மற்றும் எதிர்மறை அணுகு முறையால் தோற்றது. ‘மும்பை இந்தியன்ஸ்’ விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது என்பதையும் மறுப்பதற்கில்லை.
 கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் ஆடுதளத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது ஆட்டத்தை பார்த்த ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தெரிந்தது. ஆனால் சென்னை அணி மட்டும் போன காங்கிரஸ் அரசாங்கம் போல் தன் தவறுகளை திருத்திக் கொள்ள மறுத்தது. இறுதி ஏழு ஓவர்களில் கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 15 ஓட்டங்கள் விதம் அடிக்க வேண்டி வந்தது. ஆனால் 8 விக்கெட்டுகள் இருந்தன. புலியின் முதுகில் அமர்ந்து கொண்டே அதிலிருந்து தப்பிப்பது போல் அந்நிலையில் இருந்து வெல்வது கிட்டத்தட்ட அசாத்தியமானது.

சென்னை அணிக்கு குறிப்பிடும்படியான பலவீனங்கள் ஏதும் இல்லை. இறுதி ஆட்டத்தில் 202 ஓட்டங்களை மும்பை அடிக்கவிட்டதால் மட்டும் நாம் சென்னையின் பந்து வீச்சில் ஓட்டைகளை தேடுவது நியாயமல்ல. இதே பந்து வீச்சுதான் இத்தொடரில் பல ஆட்டங்களைச் சென்னை வெல்ல காரணமாய் அமைந்தது. அஷ்வின், பிராவோ, நெஹ்ரா, ஜடேஜா ஆகியோர் இதுவரையிலும் சிறப்பாகவே வீசி வந்தனர்.

சென்னையின் பந்து வீச்சு எம்.ஏ சிதம்பரம் மைதானத்தின் மந்தமான ஆடுதளத்துக்கு மிக மிக தோதானது. பந்து ஓரளவுக்கு சுழன்ற ராஞ்சியில் நடந்த பங்களூருவுக்கு எதிரான தகுதி ஆட்டத்திலும் சென்னை அணியினர் நன்றாக பந்து வீசினர். ஆனால் இறுதிப் போட்டிக்கான ஈடன் கார்டன் ஆடுதளம் சற்று குழப்பமானது. ஏற்றத்தாழ்வாய், கொஞ்சம் மெத்தனமாய், வேகவீச்சுக்கு தோதாய் வித்தியாசமாய் அமைந்தது. இத்தளத்துக்கு ஏற்றபடி சென்னையினரால் போதுமானபடி தம்மை தகவமைக்க இயலவில்லை. ரோஹித், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் ஆறாவது கியரில் தம் ஆட்டத்தை பறக்க விடும் போது ஆடுதளம் பற்றியோ பந்து வீச்சு திட்டங்கள் பற்றியோ யோசிக்க யாருக்குத்தான் நேர மிருக்கும்?

ஆனால் மட்டையாடும் போது இன்னும் தெளிவான அணுகு முறை இருந்திருக்க வேண்டும். முதல் ஆறு ஓவர்கள் ஆக்ரோஷமாய் ஆடியிருக்க வேண்டும். ஆனால் சென்னை மந்தமாய் மட்டையாடி விக்கெட்டுகளை பாதுகாக்க முனைந்தது. சென்னை மட்டையினரின் மெத்தனமான, எதிர்மறையான மட்டையாட்டம் மலிங்கா மக்ளீகன், வினய் போன்ற மும்பை வேகவீச்சாளர்களை நிதானமாய் தம் தேவைக்கேற்றபடி வீச அனுமதித்தது. வீச்சாளர்களை எந்தவித நெருக்கடிக்கும் அவர்கள் ஆளாக்கவில்லை. இதற்கு தொடக்க மட்டையாளர் மெக்கெல்லம் இல்லாததும், மற்றொரு மட்டையாளர் ஸ்மித் சுமாரான ஆட்டநிலையில் இருந்ததும், புதிதாய் வந்த ஹஸ்ஸிக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணம்.

பலரும் விமர்சிப்பது போல் சென்னை அணி நெருக்கடியில் ஆட முடியாது choke ஆகிவிட்டதாய் நாம் கருத வேண்டியதில்லை. டி20 ஆட்டத்தில் பூநாகம் தீண்டிக் கூட அரசன் சாகக்கூடும். அடுத்த ஐ.பி.எல் தொடரில் இதே சென்னை அணி மீண்டும் கோப்பையை வெல்லக்கூடும். அதற்கான அத்தனை தகுதிகளும் இவ்வணிக்கு உள்ளது.

இத்தொடரில் சோபித்ததன் மூலம் ஹர்பஜன் சிங் இந்திய டெஸ்ட் அணியில் தன் இடத்தை மீட்டுள்ளார். அவர் கடந்த ஒரு வருடமாகவே மிகச் சிறப்பாய் பந்து வீசித்தான் வருகிறார். 2000 தொடக்கத்தில் நாம் பார்த்த சரவெடி ஹர்பஜன் இவர் அல்லவென்றாலும், இப்போதும் ஹர்பஜனால் தன் அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டு ஜெயிக்க வைக்க முடியும். ஆனால் தோனி மாற்றப்படாத அணியுடன் எப்போதும் ஆட விரும்புவதால் ஹர்பஜன் புறக்கணிக்கப்பட்டார். இப்போது டெஸ்ட் ஆட்ட அணித்தலைவராய் கோலி நியமிக்கப்பட்டு விட்ட நிலையில் புது மாற்றங்கள் பலவற்றை எதிர்பார்க்கலாம். தோனி முதலாவதாய் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாய் ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஜடேஜாவின் ஆட்டம் மிகவும் ஏமாற்றமளித்தது. இங்கிலாந்தில் முதல் டெஸ்டை அவர் வெல்ல உதவினாலும் ஆண்டர்ஸனுடனான அவரது சர்ச்சை அணியின் கவனத்தை குலைத்து தொடர் தோல்வியை நோக்கி தள்ளியது. ஜடேஜா இதுவரை தோனி தமக்கு அளித்த மட்டற்ற ஆதரவை இனி கோலியின் தலைமையின் கீழ் எதிர்பார்க்க இயலாது.

இந்த ஐ.பி.எல் தொடரில் உமேஷ் யாதவ், நெஹ்ரா, அரவிந்த், ஹர்ஷல் படேல், பியுஷ் சாவ்லா, ஹர்பஜன், தாஹிர், அனிருத், சந்தீப் ஷர்மா, பிரேட் ஹோக், அங்கீத் ஷர்மா, புவனேஷ்வர் குமார், பிராவோ ஆகியோர் சிறப்பாய் பந்து வீசினர். இப்பட்டியலில் அதிகமான இந்தியர்கள் இடம்பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். ஆம் இவ்வருட ஐ.பி.எல்லில் இந்திய வீச்சாளர்கள் மிக முக்கிய பங்காற்றினர்.

ஆனால் மட்டையாட்டத்தில் நம்மவர்கள் அது போல் சோபிக்கவில்லை. ரோஹித் ஷர்மா, சிரேயாஸ் ஐயர் போன்ற மிகச்சிலர் மட்டுமே தொடர்ந்து நன்றாய் மட்டையாடினர். மற்ற படி எ.பி.டிவில்லியர்ஸ், கெய்ல், பொலார்ட், மெக்கல்லம், வார்னர் போன்றோர்தான் இவ்வருட மட்டையாட்ட நட்சத்திரங்கள்.

ஹர்திக் பாண்டியா எனும் பரோடா மாநில ஆல் ரவுண்டர் இம்முறை மும்பை அணிக்காய் களமிறங்கி சிறப்பாய் பந்து வீசவும் மட்டையாடவும் செய்தார். வேகவீச்சு ஆல் ரவுண்டர்கள் இந்தியாவில் மிக மிக அரிது என்பதால் எதிர்காலத்தில் பாண்டியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளித்து இந்திய அணியில் இடமளிப்பது இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த உலகக் கோப்பையில் நாம் கலக்குவதற்கு அவசியம்.

ஜீவன்= ஹிருதயம் + மூளை


வித்யை என்பது ‘ஏதோ ஒரு துறையில் அறிவு’ என்றே ஆகிறது. அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதற்கும் ‘ஸிஸ்டமாடிக்’காக ஒரு ‘முறை’ ஏற்படுத்திச் சொல்லிக் கொடுத்தால் அது வித்யா போதனையாகி விடுகிறது. அப்படிப் போதிப்பவர் குரு ஆகிவிடுகிறார். ஆனால் இது ஒரு ஜீவனை மூளை என்பதன் எல்லைக்குள் மட்டும் கொண்டு வந்து பின்னப்படுத்தி, குரு என்ற ஸ்தானத்தையும் ரொம்பக் குறைத்துவிடுகிற கார்யந்தான். 

அறிவு வளர்ச்சி என்ற ஒன்றை மட்டும் கவனித்து, எந்தத் துறையில் அறிவை வழங்குவதும் வித்யா போதனை என்னும்போது ஜீவனுடைய ஹ்ருதயத்தை ஒதுக்கிவிட்டதாக ஆகிறது. மூளை - ஹ்ருதயம் இரண்டும் சேர்ந்தே ஜீவன். ஒரு ஜீவன் உண்மையான ஜீவனாக வாழவும், ஜீவனே தேவனாகக் கூட உசரவும் மூளையைவிட ஹ்ருதய அபிவ்ருத்திதான் முக்யமானது. அதனால்தான் மூளைக்கு மாத்திரம் சரக்கு ஏற்றி அதை வ்ருத்தி செய்வதை ‘ஜீவனை பின்னப் படுத்துவது’ என்றது. ஜீவனை புத்திசாலியாக மாத்திரமில்லாமல் குண சாலியாகவும் ஆக்க வேண்டியதே நிஜகுருவின் கடமை. அப்படியில்லாமல் புத்திசாலியாய் மட்டுமே பண்ணும்போது குருவின் ஸ்தானத்தை ரொம்பவும் குறைத்து, குறுக்கி, இறக்கிவிடுவதாக ஆகிவிடுகிறது.

பகவத் ஸ்ருஷ்டியில் மநுஷ்ய மூளை என்பது ஒரு அற்புதமான கருவியாக இருப்பதைக் கவனித்து - அதை மாத்திரமே கவனித்து - வெறும் அறிவை மட்டுமே சார்ந்து ஒரு ஆர்ட்டாக, ஸயன்ஸாக ஸிஸ்டம் செய்யப்பட்ட எதையும் ‘வித்யை’ என்று வைத்து விட்டார்கள். அதன் போதகர் ‘குரு’ என்றும் சொல்லிவிட்டார்கள். ஆனால் இதுவே நம் பூர்விகர்களின் பூர்ணமான அபிப்ராயம் என்று நினைத்து விடக்கூடாது.

Wednesday, May 27, 2015

ஷியோமி எம்ஐ பேண்ட்(Xiaomi Mi Band)

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ‘ஹெல்த்’ சம்பந்தமான கேட்ஜெட்டுகள் ஏராளமாக வெளிவர தொடங்கியுள்ளன. அந்தவகையில் ஷியோமி நிறுவனம் ‘ஷியோமி எம்ஐ பேண்ட்’ என்னும் கேட்ஜெட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த பேண்டின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


டிசைன்!

இந்த பேண்ட் இரண்டு பாகங்களைக் கொண்டது. ஒன்று, பேண்ட். மற்றொன்று, ப்ளூ-டூத் கேப்சூல் (Bluetooth Capsule). இந்த கேட்ஜெட்டில் எந்த ஒரு ஸ்க்ரீனும் கிடையாது. ப்ளூ-டூத் கேப்சூலில் மட்டும் மூன்று எல்இடி   லைட்டுகள் உள்ளன. சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு என நான்கு வண்ணங்களில் ஒன்றை இந்த எல்இடி லைட்டாக செட் செய்துகொள்ளலாம். இந்த பேண்ட் தூசி மற்றும் மழையில் தாங்கும் தன்மையைப் பெற்றுள்ளது. இதனை அணியும்போது தோல் பிரச்னைகள் வராது என்று ஷியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது. ப்ளூ-டூத் கேப்சூல் அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது.


பயன்கள்!

ஷியோமி எம்ஐ பேண்ட் நமது தூக்கத்தின் அளவை வகைப்படுத்திக் காண்பிக்கும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் மற்றும் எவ்வளவு கலோரி செலவாகிறது என தெளிவாகக் கணக்கிட்டுக் காண்பிக்கிறது. இதைத் தவிர, இந்த பேண்ட் பக்கத்தில் இருக்கும்போது, அதோடு இணைக்கப்படுள்ள ஸ்மார்ட் போனை பாஸ்வேர்டு இல்லாமல் ஓப்பன் செய்யலாம்.  அலாரம் மற்றும் போன் கால்களுக்கு இந்த கேட்ஜெட் வைப்ரேட் ஆகும்.

பயன்படுத்தும் முறை!

இந்த பேண்ட்-ஐ பயன்படுத்த கண்டிப்பாக ஸ்மார்ட் போனில் ‘Mi Fit’ அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்துக்கு கிடைக்கிறது. மற்றும் ப்ளூ-டூத் 4.0 ஸ்மார்ட் போனில் இருக்க வேண்டும். இந்த கேட்ஜெட்டை ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும், ஐஓஎஸ் 7.0 மற்றும் அதற்குமேல் உள்ள வெர்ஷன்களிலும் மட்டுமே பயன்படுத்த முடியும்.


பேட்டரி!

இது 41mAh ‘Lithium Polymer’ பேட்டரியைக் கொண்டது. 8 மி.மீ அடர்த்தி உள்ள இந்த பேட்டரி 30 நாட்கள் வரை உழைக்கக்கூடும்.

அளவு!

இந்த பேண்ட் 36 மி.மீ நீளமும் 14 மி.மீ அகலமும் 9 மி.மீ அடர்த்தியும் கொண்டது. 5 கிராம் அளவுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ள இந்த கேட்ஜெட், ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. பேண்டின் அளவை வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப 157 மி.மீ முதல் 205 மி.மீ வரை அட்ஜஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


விலை!

இந்த பேண்ட் 999 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.

பிளஸ்: விலை, சிறந்த தொழில்நுட்பம், பேட்டரி

மைனஸ்: ஸ்க்ரீன் கிடையாது, குறைந்த சேவைகள்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

மின் விசிறிகள்!

ஆதிகாலத்து மனிதன் இயற்கையிலிருந்து பிரிக்க முடியாதபடிஇயைந்து வாழ்ந்தான். மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் பதுங்கி இருந்த அவனுக்கு வெக்கையோ, வியர்வையோ ஒரு பிரச்னையாக இருந்ததில்லை.
பிற்பாடு நாகரிகமடைந்த மனிதன் கற்களைக் கொண்டு வீடு கட்டி வசிக்க ஆரம்பித்தான். ஜன்னல்கள் வைக்கப்பட்டாலும் வீட்டுக்குள் காற்று வருவது குறைந்துபோனது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று மனிதன் யோசித்தபோது உருவானதுதான் மின் விசிறிகள்!


17-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காற்று மற்றும் வெற்றிடம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஆரம்பிக்க துவங்கின. 1727-ம் ஆண்டு கிரிஸ்டோபர் ரென் என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மோட்டார் மூலம் இயங்கும் அமைப்பை நிறுவினார். பின்னர் பல மாறுதல்களுடன் பல இடங்களில் இந்த அமைப்பு பொருத்தப்பட்டது.

1882-ம் ஆண்டு நியூ ஆர்லண்ட்சை சேர்ந்த ஸ்க்யூலயர் ஸ்காட்ஸ் வீலர் என்பவர் மின்சாரம் மூலம் இயங்கும் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இது க்ராக்கர் & குர்டிஸ் நிறுவனத்தால் முதல் முதலில் சந்தைப்படுத்தப்பட்டது. 1920-களில் பெரிய தொழிற் சாலைகளில் உள்ளே உள்ள காற்றை வெளியேற்றி, வெளியே உள்ள இயற்கை காற்றை உள்ளே இழுக்கும் விதத்திலான மின் விசிறிகள் பயன்பாட்டுக்கு வந்தன.


1970-களுக்குப் பிறகு உலகம் முழுக்க வீடுகளில் மின் விசிறிகள் பயன்படுத்துவது அதிகரித்தது. ஆறு இறக்கைகள் கொண்ட மின் விசிறி, நான்கு இறக்கைகள் கொண்ட மின் விசிறி ஆகிய வற்றை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்தது. இன்று சூரிய ஒளியில் இயங்கும் மின் விசிறி வரை இந்த கண்டுபிடிப்பு காலத்தின் தேவைக்கேற்ப வளர்ந்து வருகிறது.

கோடை காலத்தில் இன்று வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதலில் நாம் செய்யும் செயல் மின் விசிறியை ஓடவிடுவதுதான். அறையின் வெப்பத்தைத் தணிக்க இப்போது ஏசி மெஷின்கள் பயன்படுத்தப்பட்டாலும், அது அதிக  விலையுள்ள சாதனமாகவே உள்ளது. இன்றும் சாதாரண மக்கள் கொசுக்கடியில் இருந்தும் வெக்கையிலிருந்தும் தப்பித்து நிம்மதியாக தூங்குவதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பவை மின் விசிறிகள்!

ச.ஸ்ரீராம்

Tuesday, May 19, 2015

உலகை மாற்றிய புதுமைகள்! - செயற்கைக்கோள்

மனிதர்களால் செல்ல முடியாத இடத்தில் என்ன இருக்கும் என்ற ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதுமே இருந்து வந்தது. இதனை பற்றிய தேடல்களும் அதிகமாக மனிதனுக்கு இருந்துவந்தது.

இதற்கான ஆராய்ச்சி 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேகமெடுத்தன. 1903-ம் ஆண்டு கான்ஸ்டனின் சையோகோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky) முதன்முதலில் பூமியில் இருந்து 8 கி.மீ தொலைவில் வட்டமடித்து அங்குள்ள தகவல்களைப் பதிவு  செய்தார். ஆனால், அதன் மூலம் பெரிய அளவிலான தகவல்களைப் பெறமுடிய வில்லை. அதேசமயத்தில் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றன.

1957-ம் ஆண்டு சோவியத் யூனியன் விண்வெளிக்கு ராக்கெட் மூலம் ஸ்புட்னிக் 1 எனும் செயற்கைக்கோளை வெற்றிகரமாக அனுப்பியது.

ஸ்புட்னிக் 1 விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அடுத்த மாதமே ஸ்புட்னிக்-2 லைக்கா என்ற நாயுடன் விண்வெளிக்கு பாய்ந்தது. அதுதான் ஒரு உயிரினத்தோடு விண்வெளிக்கு சென்ற முதல் விண்கலம். இந்த விண்கலன்கள் வானில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களில் உயிர்்கள் வாழ்கின்றனவா, தட்பவெட்ப நிலை எப்படி உள்ளது என்பது போன்ற பல விவரங்களைத் தந்தன.


பிற்பாடு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி சாதனை படைத்தன. மனிதர் களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என்பதை இந்த செயற்கைக்கோள்கள் நிரூபித்தன. விண்வெளியில் ஒரு நிலையத்தை அமைத்து, அங்கு ஆறு மாதம் தங்கிப் பணிபுரியும் அளவுக்கு செயற்கைக்கோள்கள் வளர்ந்து விட்டன.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உலா வரத் தொடங்கியபின்புதான் புயல் கொடுமைகளில் இருந்து காத்துக்கொள்ளும் வழிபிறந்தது. பூமியின் வளங்களை ஆராய்ந்தறிய முடிந்தது. தகவல் தொடர்பு பல மடங்கு வளர்ந்தது. உலகமே ஒரு கிராமமாக மாறியது.

இன்றைக்கு பூமிக்கு ஏற்படப் போகும் சிறு பாதிப்பையும் முன்கூட்டியே அறிவிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கும் இந்த செயற்கைக்கோள்கள் உலகை மாற்றிய புதுமைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்!

ஹுவாய் ஹானர் 4C(Huawei Honor 4C)

சமீபகாலமாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்களின் மார்க்கெட் பலத்த போட்டியுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் ஷியோமி, லெனோவோ, அசூஸ்,மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய ஹேன்ட் செட்களைக் குறுகிய காலத்தில் வெளியிட்டு, தங்களது மார்க்கெட்டை தக்கவைத்து வருகின்றன. ஹுவாய் நிறுவனமும் இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில், ஹுவாய் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான ‘ஹுவாய் ஹானர் 4C’ என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.


1. டிசைன்!

இந்த ஸ்மார்ட் போன் ஐரோப்பிய டிசைனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகக் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட் போன் வெள்ளை மட்டும் கறுப்பு என இரண்டு நிறங்களில் வருகின்றன. கறுப்பு நிற மாடலைவிட வெள்ளை நிற மாடலே பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்த எளிதாக இருக்கும். ஆனால், சராசரி பட்ஜெட் ஸ்மார்ட் போன்களைவிட இதன்  எடை அதிகம். (162 கிராம்)


2. டிஸ்ப்ளே!

இந்த ஸ்மார்ட் போன் 5 இன்ச் 720 x 1280 pixels (~294 ppi pixel density) 16M IPS LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பிரகாசமாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. ஆனால், சூரிய ஒளியில் பயன்படுத்தும்போது இந்த டிஸ்ப்ளே சற்று சுமாராகவே இருக்கிறது.

3. தொழில்நுட்பம்!

இந்த ஸ்மார்ட் போன் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமான ‘Kirin’ பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இந்த 64-பிட் 1.2GHz HiSilicon Kirin 620 பிராசஸர் மொத்தம் எட்டு Cortex-A53 கோர்களைக் கொண்டு செயல்படுகிறது. 2GB ரேமைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனின் இன்டர்னல் மெமரி 8GB. மேலும், இதை 32 GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.


4. இயங்குதளம்!

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் கிட்-கேட் 4.4.2 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. இதில் ஹுவாய் நிறுவனத்தின் பிரத்யேகமாக EMUI 3.0 டிசைன் மாற்றங்களும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும்.

5. கேமரா!

இந்த ஸ்மார்ட் போன் 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இதில் சோனி நிறுவனத்தின் CMOS சென்ஸார் அடங்கும். Led பிளாஷ் வசதியைக் கொண்டுள்ள இந்த கேமராவில் எடுக்கப்படும் படங்கள் நன்றாக இருக்கின்றன. மேலும், 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவும் இந்த ஸ்மார்ட் போனில் அடங்கும். 2550 mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம் வசதிகளைக் கொண்டுள்ளது.


6. விலை! 

Flipkart.com இணையதளத்தில்  ரூபாய் 8,999 என்ற விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

பிளஸ்:
இயங்குதளம்
பேட்டரி

மைனஸ்:
தொழில்நுட்பம்
டிசைன்

செ.கிஸோர் பிரசாத் கிரண்

கின்னஸ் 60

உலகின் மிக வித்தியாசமான, விறுவிறுப்பான, வியக்கவைக்கும் சாதனைகளை ஆவணப்படுத்தும் கின்னஸ் புத்தகத்துக்கு இது 60-வது ஆண்டு.
‘கின்னஸ்’ என்கிற வார்த்தைக்கு ‘அயர்லாந்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சிறந்த இறக்குமதி’ என்று பொருள். அயர்லாந்தைச் சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்தான், கின்னஸ். அதன் செயல் இயக்குநர், ஹியூ பீவர் (Hugh beaver) நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார். அங்கே, பறவைகளைச் சுடும் போட்டி நடந்தது. பீவர் எவ்வளவு சிறப்பாகச் சுட்டும், ஒரு குறிப்பிட்ட பறவையை வீழ்த்த முடியவில்லை. ‘இந்தப் பறவைதான் ஐரோப்பாவிலேயே வேகமான பறவை போல!’ என்றார்.


நண்பர்களோ, ‘இல்லை’ என்று மறுத்தார்கள். ஏதாவது புத்தகத்தில் தேடலாம் என்றால், ஒன்றுமே சிக்கவில்லை. பிரிட்டன்  கலைக்களஞ்சியங்கள், செய்தித்தாள்கள் என்று பலவற்றுக்கும் தகவல்களைத் தேடித்தரும் மெக்வைட்டர் (Mcwhirter) சகோதரர்களை அழைத்தார், ஹியூ பீவர். ‘உலகம் முழுக்க இருக்கும் சாதனைகளைத் தொகுத்துத் தர வேண்டும்’ என்றார்.

கிடைத்த தகவல்களை, 7 இன்ச் அகலம், 10 இன்ச் நீளத்தில் பச்சை மஞ்சள் வண்ணப் புத்தகமாக அச்சிட்டு, 1955-ம் ஆண்டு மதுக்கூடங்களில் மட்டும் இலவசமாகக் கொடுத்தார்கள். 198 பக்கங்கள் கொண்டிருந்த அந்தப் புத்தகம் ஹிட் ஆனது. அன்று தொடங்கி, சாதனைகளைச் சொல்வதில் சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது கின்னஸ் புத்தகம். இன்று, உலகம் முழுக்க மிக அதிகமாக விற்கும் காப்பிரைட் செய்யப்பட்ட அச்சுப் புத்தகம், கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்தான்.

 

இந்த 60-வது இதழை, 3D Augmented reality முறையில் வெளியிட்டுள்ளது. உருவங்கள், சாதனை நிகழ்ச்சிகள் கண்களுக்கு அருகில் வரும். கேம் பிரியர்களுக்கான தனிப் பிரதிகளும் உண்டு.

60 வருடங்கள் ஆனதை ஒட்டி, சிறந்த 60 கின்னஸ் ஐகான்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. உசைன் போல்ட், எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறிய பெண்மணி ஜாங்கோ தைபே, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இதில் இடம்பெற்று உள்ளனர்.

தற்போது செல்ஃபியில் செய்யப்பட்ட சாதனைகளும் இடம்பெற்று உள்ளன.
ஒரே வருடத்தில் மிக அதிகமாக அச்சிடப்பட்ட வண்ண கெட்டி அட்டைப் புத்தகம் என்கிற சாதனையும் கின்னஸ் புத்தகத்துக்கே. 2000-ம் வருடம், ஒரே பதிப்பில் 24 லட்சத்து 2 ஆயிரம் பிரதிகள் விற்றன.


இந்தியாவைச் சேர்ந்த பலரின் சுவாரஸ்யமான கின்னஸ் சாதனைகள்... ராகேஷ் குமார் என்பவர் தன்னுடைய காதுகளால் தூக்கிய எடையின் அளவு, 82.60 கிலோ. ராம் சிங் சவுஹான் என்பவரின் மீசைதான், உலகிலேயே மிகவும் நீளமானது. மீசையின் நீளம், 4.29 மீட்டர். சௌடாம்பிகா பள்ளிகளின் 2,955 மாணவர்கள் இணைந்து, காந்தியடிகள் போல வேடமிட்டு கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். தீபக் சர்மா பஜகைன், என்பவர் 113 மணி நேரம் 15 நிமிடங்களில் 17 புத்தகங்களை வாசித்தது கின்னஸ் சாதனை. ‘உலகின் மிகப் பெரிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொடி’ என்ற சாதனை, தமிழகத்தின் வசம் உள்ளது.
பூ.கொ.சரவணன்

கியாஸ் சிலிண்டர் விபத்து 50 லட்சம் வரை இழப்பீடு!

‘கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்து ஏற்பட்டால், பாதிக்கப் பட்டவர்/குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் மூலமாக நிவாரணம் பெற முடியும்’ என்பது உங்களுக்குத் தெரியுமா?


ஒருவர் எரிவாயு இணைப்பைப் பெற்றாலே, இந்த இன்ஷூரன்ஸ் தானாகவே அவருக்கு வந்துவிடும். கியாஸ் சிலிண்டர் வெடித்து உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதன் மூலமாக இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.
தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரை, மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரை, உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரை உண்டு. எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம் வரை வழங்கப்படும். எப்படியாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு மொத்தத்தில் 50 லட்சம் வரையே இழப்பீடு.

இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்து நடந்தால், உடனடியாக கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துப்பூர்வ புகார் கொடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் குழு வந்து ஆய்வு செய்யும்வரை விபத்துக்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை பெற வேண்டும். காயங்களுக்குச் சிகிச்சை எடுத்திருந்தால், மருத்துவ/மருந்து ரசீதுகளைப் பத்திரப்படுத்த வேண்டும். உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனமே ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும்.

இந்த இன்ஷூரன்ஸ் பலன்களை ஒருவர் அனுபவிக்க வேண்டுமானால், பின்பற்றவேண்டிய மிகமுக்கியமான விதிமுறைகள் சில உள்ளன.

பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. உங்கள் பெயரில் வாங்கிய கியாஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தியிருக்க வேண்டும்.

விதிகளைப் பின்பற்றுவோம்... இன்ஷூரன்ஸ் பாதுகாப்பை உறுதிபடுத்துவோம்!

சா.வடிவரசு

அறியப்படாத படிப்புகள்


பெட்ரோலியம் இன்ஜினீயரிங்

ப்ளஸ் டூ-வில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள், பி.டெக்., பெட்ரோலியம் இன்ஜினீயரிங் படிக்கலாம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டட், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் போன்ற பெரிய நிறுவனங்களில் கெமிக்கல் இன்ஜினீயர், பிளாக் அனலிஸ்ட் போன்ற பணி வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டு பெட்ரோலிய நிறுவனங்களிலும் வேலை பார்க்கலாம். 10,000 முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். சாராசரியாக மாதம் 50,000 சம்பாதிக்க வைக்கும் துறை இது.

உணவுத் தொழில்நுட்பம்

ப்ளஸ் டூ-வில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி.எஸ்ஸி., ஃபுட் டெக்னாலஜி, பி.டெக்., ஃபுட் டெக்னாலஜி படிக்கலாம். இந்தத் துறையில் உணவுப் பாதுகாப்பு, பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் என பல வேலைகள் உண்டு. தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன்  உணவுப் பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும் செல்லலாம். மாதம் குறைந்தது 20,000 ரூபாய் முதல் சம்பாதிக்கலாம்.


கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்)
அரசு, தனியார் நிறுவனங் களில் அட்வைஸர், மேலாண்மை என உயர் பொறுப்புகளுக்குத் தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி! பி.காம், எம்.காம் படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ்,  புரொஃபஷனல் தேர்வுகள் எழுதலாம். ப்ளஸ் டூ முடித்தவர்கள்கூட ஃபவுண்டேஷன் தேர்வுகள் எழுத முடியும். இவர்கள் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (Institute of company secretaries of india) நடத்தும் தேர்வில் பாஸாக வேண்டும். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே 30,000 ரூபாய் முதல் சம்பளம் இருக்கும். சி. ஏ போல்தான் இந்த படிப்பும்.  இதற்கென இருக்கும் தனியார்  இன்ஸ்டிட்யூட்களில் படிக்க முடியும்.  இதைத் தவிர, எம்.காம் முடித்துவிட்டு கார்ப்பரேட் செக்ரட்டரி கோர்ஸ் படிப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கிறது.
மருத்துவம்

மருத்துவர், செவிலியர் மட்டுமல்ல..., லேப் டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எக்கோ டெக்னாலஜி என இதில் பல நவீன தொழில்நுட்பப் பிரிவுகள் உள்ளன. எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வேலைவாய்ப்புகள் உண்டு. குறைந்தது 10,000 ஆயிரம் முதல் சம்பளம் இருக்கும். வெளிநாடுகளில் இதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்தது 50,000 முதல் சம்பளம் கிடைக்கும்.

ஜியாலஜிக்கல் சயின்ஸ்

ப்ளஸ் டூ-வில் அறிவியல் பிரிவுகள் படித்தவர்கள், பி.எஸ்ஸி., எம்.டெக். ஜியாலஜிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குறிப்பிட்ட பெரிய பல்கலைக்கழகங்களில் மட்டுமே வழங்கப்படும் இந்தப் படிப்பு. கடல், மலை, நிலம், பூகம்பம், நிலக்கரி போன்ற ஆராய்ச்சி, ஓர் இடத்தை பற்றிய டேட்டா சேகரிப்பது போன்றவை பணி இயல்பு. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டு. சென்ட்ரல் கவர்ன்மென்ட் வாட்டர் போர்டு மற்றும் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா என மத்திய அரசு பணிகளில்கூட இடம் உண்டு.

Tuesday, May 12, 2015

கேட்ஜெட்: மைக்ரோமேக்ஸ் 50K2330UHD 4K TV

இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் தனக்கெனப் பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சமீபத்தில் ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான 4K டிவியை வெளியிட்டுள்ளது.


டிசைன்!

மைக்ரோமேக்ஸ் 4K டிவி கவர்ச்சிகரமான டிசைனைக் கொண்டுள்ளது. இந்த டிவி முழுவதும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் ஓரங்கள் கோல்டு ஃபினிஷ்  செய்யப்பட்டுள்ளது. இதனால் இதன் தோற்றம் மேலும் அழகு பெறுகிறது. இந்த டிவியின் இரண்டு ஸ்டாண்டுகள் பயன்படுத்த சற்று கஷ்டமாகவே இருக்கிறது.

டிஸ்ப்ளே!

இந்த டிவி 49 இன்ச் 4K 3840x2160 டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இரண்டு HDMI போர்டு, ஒரு Ethernet, VGA, RCA போர்டுகள், SD கார்டு ஸ்லாட், மூன்று USB போர்டுகள் ஆகியவை இந்த டிவியில் அடங்கும். 720p மற்றும் 1080p வீடியோக்கள் சிறப்பாக இந்த டிவியில் இயங்குகிறது. HD சேனல்களும் இந்த டிஸ்ப்ளேவில் கச்சிதமாகக் காட்சியளிக்கிறது.

தொழில்நுட்பம்!

மைக்ரோமேக்ஸ் 4k டிவி இன்டர்நெட்டுடன் இணைத்துக் கொள்ளலாம். இதற்காக Ethernet போர்டு ஒன்று டிவியில் உள்ளது. மேலும், WiFi மூலமும் இணைத்துக் கொள்ளலாம். இந்த டிவி dual-core CPU கொண்டு இயங்குகிறது. 1GB ரேமும் இதில் அடங்கும். 2.5 GB இன்டர்னல் மெமரியை கொண்டுள்ள இந்த டிவி, 32GB வரை SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

இயங்குதளம்!

மைக்ரோமேக்ஸ் 4k டிவி ஆண்ட்ராய்ட் 4.4 கிட்-கேட் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகிறது. பல தேவையான ஆப்ஸ்கள் இந்த டிவியில் அடங்கும். அதைத் தவிர, மற்ற ஆப்ஸ்களை ‘Google Play Store’யிலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். இந்த டிவியை ரிமோட்டால் மட்டுமன்றி, ஸ்மார்ட் போன்/டேப்லெட் ஆகியவற்றாலும் இயக்கலாம். USB அல்லது செட்-ஆப் பாக்ஸ் பயன்படுத்தும்போது இந்த டிவி சற்று மெதுவாகச் செயல்படுகிறது.

ரிமோட்!

மைக்ரோமேக்ஸ் 4K டிவி எளிமையான RF ரிமோட்டைக் கொண்டு இயங்குகிறது. ஒரு பட்டனை பிரஸ் செய்தால், ஸ்க்ரீனில் மவுஸ் கர்ஸர் ஒன்று தோன்றும். இதை ‘motion control’ மூலம் இயக்கலாம். மேலும், இந்த ரிமோட்டில் மைக்ரோபோன் ஒன்று இருக்கிறது. இதை skype கால்களுக்குப் பயன்படுத்தலாம்.

விலை!

சுமாரான ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ள இந்த மைக்ரோமேக்ஸ் 4K டிவியின் இந்திய விலை      49,990 ரூபாய்.

பிளஸ்: டிசைன், டிஸ்ப்ளே, இயங்குதளம், விலை.

மைனஸ்: மெதுவான start-up டைம், ஸ்டாண்ட்
செ.கிஸோர் பிரசாத் கிரண்

பிரதம மந்திரி இன்ஷீரன்ஸ் திட்டம்... என்ன சாதகம்?

பிரதமர் நரேந்திர மோடி, மே 9-ம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கும் நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும்,?

 யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?

‘‘இந்தத் திட்டங்களில் இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள எல்லோரும்   விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளிகளும்  விண்ணப்பிக்கலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் கவரேஜ் தொகை 2 லட்சம் ரூபாயாகும்.

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தில் (PMSBY)  இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.
அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர்  18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர், தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச்  சலுகை, திட்டம் தொடங்கப்படுகிற   2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும்.

 ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் இணையலாம். அல்லது ஒரே ஒரு திட்டத்தில்கூட சேரலாம்.  தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.

எப்போது சேரலாம்?

2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால்  அனைத்து தரப்பு வயதினரும் எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றி இந்தத் திட்டங்களில்  இணையலாம். மே 2015-க்குப் பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டங்களில்  இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டியிருக்கும்.

பொதுவாக,  இன்ஷூரன்ஸ் பாலிசிகளில்  45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் தர வேண்டியிருக்கும். ஆனால், இந்த அரசு திட்டத்தில் 2015 மே மாதத்துக்குள்  இணைபவர்கள் எந்த வயதினராக இருந்தாலும்,  எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் தரத் தேவையில்லை.

 என்ன வேண்டும்?

இந்தத் திட்டத்தில் இணைய வங்கி சேமிப்புக் கணக்கு அவசியம் வேண்டும். மற்றவகையான வங்கிக் கணக்கை வைத்து இந்த  இன்ஷூரன்ஸ் திட்டங்களில்  இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இரண்டாவதாக விண்ணப்பித்தால், அந்த மனு நிராகரிக்கப்படும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன.  சில வங்கிகள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.

 விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்? 

இந்தத் திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.

 பிரீமியம் செலுத்துதல்! 

பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் (விபத்து காப்பீடு)ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு (ஆயுள் காப்பீடு)ஆண்டுக்கு 330 ரூபாய் பிரீமியமாக வசூலிக்கப்படும். இந்த பிரீமியம் க்ளெய்ம் தொகை வழங்கப்படுவதைப் பொறுத்து மாற வாய்ப்புள்ளது. அசாதாரண சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருந்தால், மூன்று வருடம் வரை பிரீமியம் உயர வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 


இந்த இரண்டு திட்டங்களுக் கும் ஆட்டோ டெபிட் என்கிற முறையில் வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத் திலேயே ஆட்டோ டெபிட் செய்ய சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான்.

மே 31, 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்பிக்கும் போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம்.

ஆனால்  ஜுன் 1, 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்கு களின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்ட பின் வங்கி, ரசீதை வழங்கும்.

இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம். பிரீமியம் செலுத்திய ரசீதே இன்ஷூரன்ஸ் பாலிசியின் சான்றிதழாக கருதப்படும்.

 ரெனீவல் செய்வது!

நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்கள் கேட்கப் பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.

 யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய் திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.

எவ்வளவு க்ளெய்ம்? 
 
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வருகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்த காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.

ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸ் திட்டத்தின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும். இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். அதாவது, நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கிதான் மாஸ்டர் பாலிசி ஹோல்டராக கருதப்படும்.

விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர் உங்களுக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும். நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும்.  வங்கிக்கு உங்கள் முகவரி தெரியும் என்பதால், தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.

சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமை யாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட்மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் (மேற்கூறியது போல) சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஓட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.

எப்போது காலாவதி?

கணக்கில் போதுமான பணம் இல்லாமல், இந்த திட்டத்துக்கான  பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்ய இயலவில்லை என்றால் பாலிசி காலாவதியாகும்.

நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும். தவிர, வயது வரம்பு கடந்தவுடன் திட்டம் காலாவதியாகிவிடும்'' என்றார் இந்திரா பத்மினி.

பொதுவாக, ஆக்ஸிடென்ட் பாலிசியை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மிக குறைந்த பட்சமாக 50 - 150 ரூபாய்    வரை (பாலிசிதாரரின் பணிச் சூழலை பொறுத்து) பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு 6 ருபாய் பிரீமியத்துக்கு  ரூ.1  லட்சம் கவரேஜ் வழங்குகிறது.

பொதுவாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு 18 வயதுள்ள ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கவரேஜ்க்கு 103 ரூபாய் பிரீமியமாக செலுத்த வேண்டும், ஆனால், இதற்கு காத்திருப்புக் காலம் இருக்கும். ஜீவன் ஜோதி திட்டத்தில் ஒரு லட்சத்துக்கு

165 ரூபாய் செலுத்தினாலும் காத்திருப்புக் காலம் கிடையாது.  அனைத்து வயது வரம்பினருக்கும் ஒரேமாதிரியான பிரீமியமே வசூலிக்கப்படுகின்றன.
மேலும், மெடிக்கல் டெஸ்ட் கிடையாது. ஏதாவது நோய் பாதிப்பு இருந்தாலும் பிரீமியம் அதிகரிக்காது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வேறு எந்த நிறுவனத்திலும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது. இந்தத் திட்டத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு பாலிசி கிடைப்பது சிறப்பான விஷயம்.  குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்த இரு திட்டங்களிலும் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்!

மு.சா.கெளதமன்





 

லெனோவோ யோகா 3 ப்ரோ (Lenovo Yoga 3 Pro)

லேப்டாப்பை டேப்லெட்டாகவும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இன்றைய டெக் உலகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் லெனோவோ நிறுவனம் தனது புதிய லேப்டாப்பான ‘லெனோவோ யோகா 3 ப்ரோ’ லேப்டாப்பை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டது.

டிசைன்!

பார்ப்பதற்கு மெல்லியதாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கும் இந்த லேப்டாப் 800 மெட்டல் பீஸ்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘யோகா’ என்ற பெயருக்கு ஏற்றதுபோல இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளேவை எந்த ஆங்கிளிலும் வைத்துப் பயன்படுத்தலாம். இந்த அல்ட்ரா புக்கின் ஸ்பீக்கர்கள் அடியில் அமைந்துள்ளதால், டேப்லெட்டாக பயன்படுத்தும்போது ஸ்பீக்கரின் ஒலி சற்று குறைவாக இருக்கிறது.


வசதிகள்!

USB 2.0 போர்டு, Micro-HDMI வீடியோ அவுட் போர்டு, 3.5mm ஹெட் செட் போர்டு ஆகியவற்றை கொண்டுள்ள இந்த அல்ட்ரா புக், USB 3.0 போர்டுகளையும் கொண்டுள்ளது. மேலும் USB 2.0 போர்டை கொண்டு சார்ஜ் செய்யும் இந்த அல்ட்ரா புக்கின் சார்ஜரை மற்ற ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்களை சார்ஜ் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கீ-போர்டு!

இந்த அல்ட்ரா புக்கின் கீபோர்டு கறுப்பு ரப்பர் பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மட்டுமல்ல, பயன்படுத்துவதற்கும் இந்த கீ போர்டு சுமாராகத்தான் இருக்கும். அனைத்து விஷயங்க ளிலும் கவனம் செலுத்திய லெனோவோ நிறுவனம், கீ போர்டில் மட்டும் தனது கவனத்தைத் தவறவிட்டுள்ளது.

டிராக் பேட்!

இந்த லேப்டாப்பின் டிராக் பேட் சாதாரணப் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்கும்.‘Matte texture’ கொண்டுள்ளதால் இந்த டிராக் பேட் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.


தொழில்நுட்பம்!

இந்த லேப்டாப் Intel Core M-5Y70 பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது. இரண்டு கோர்களை கொண்டுள்ள இந்த பிராசஸரோடு Intel HD Graphics 5300 GPU கிராபிக்ஸ் பிராசஸரும் அடங்கும். இந்த லேப்டாப்பின் பிராசஸர் 1.1GHz முதல் 2.6GHz வரை இயங்கும் திறனைக் கொண்டுள்ளது. 8GB ரேம்மை கொண்டுள்ள லேப்டாப் 256GB Solid-state டிரைவ்வைக் கொண்டுள்ளது. இதில் 197.34 GB வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மேலும், இந்த லேப்டாப்பின் 3200x1800 பிக்ஸல் ஸ்க்ரீன் தெளிவான மற்றும் சிறப்பான காட்சியளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

பேட்டரி!

லெனோவோ யோகா 3 ப்ரோ அல்ட்ரா புக் 5,410 mAh பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. இந்த பேட்டரி சாதாரண பயன்பாட்டுக்கு 6-8 மணி நேரம் வரை தாங்கும். அதிகமாக பயன்படுத்தும்போது சுமாராக 3.5 மணி நேரம் வரை தாங்கும்.


இயங்குதளம்!

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 8.1 ப்ரோ இயங்குதளத்தில் இயங்கும் இந்த லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் பிரத்யேகமான பல சாஃப்ட்வேர்களோடு வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான விண்டோஸ் ஆப்ஸ்களும் இந்த லேப்டாப்பில் அடங்கும்.

விலை:

இந்த அல்ட்ரா புக்கின் இந்திய விலை சுமார் ரூ. 1,14,990.

பிளஸ்:

எடை, டிசைன், பேட்டரி, பல்வேறு ஆங்கிளில் பயன்படும் டிஸ்ப்ளே

மைனஸ்:

கீ போர்டு. விலை, தொழில்நுட்பம்
செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஆன்லைன் ஷாப்பிங்

ரு பொருளை வாங்க வேண்டும் எனில், சந்தைகளில் அலைந்து திரிய வேண்டிய சூழலே முன்பு இருந்தது. பிறகு,  ஒவ்வொரு தெரு விலும் கடைகள் வரத் தொடங்கின. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கிற மாதிரி சூப்பர் மார்க்கெட்டுகள் வந்தன.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களின் விளைவாக கடைக்குப் போய் பொருட்களை வாங்காமல், கடைகளையே வீட்டுக்குக் கொண்டு வந்தது ஆன்லைன் ஷாப்பிங்.


இந்த ஆன்லைன் ஷாப்பிங் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. 1979-ம் ஆண்டு மைக்கேல் ஆல்ட்ரிச் என்பவர் ஆன்லைன் வர்த்தகத்தை கண்டறிந்தார். வீடியோடெக்ஸ் என்ற முறையில் டிவியுடன் இணைக்கப்பட்டுள்ள சிறிய கணினி அமைப்பு மூலம் பொருட்களை விற்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

1990-ம் ஆண்டு இணையம் (WWW, அதாவது World wide web) உருவான பின் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளரத் தொடங்கியது. 1994-ம் ஆண்டு இன்டர்நெட் ஷாப்பிங் நெட்வொர்க் எனும் நிறுவனம் முதலில் பாதுகாப்பான ஆன்லைன் வர்த்த கத்தை துவங்கியது. பின்னர் அமேசான் 1995-லும்,  உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனம் 2003-லும் தொடங்கியது. இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ என்ற பெயரில் ஒரே நாளில் நாடு முழுக்க பிரபலமானது.

இன்றைக்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் ஷாப்பிங்கை மக்களுக்கு நன்கு பழக்கப்படுத்திவிட்டன. என்ன வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடுகிற அளவுக்கு நிலைமை மாறி இருக்கிறது. பொருட்கள் மட்டுமல்ல, மதிய உணவைக்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்யும்  அளவுக்கு மாற்றங்கள் வந்திருக்கின்றன.

இருந்த இடத்தில் இருந்தபடி பொருட்களை வாங்க உதவும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் உண்மை யிலேயே ஆச்சரியம் தருபவைதான்!
ச.ஸ்ரீராம்