இன்றைய
டிரெண்டில், ஸ்மார்ட் போன் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்றாகிவிட்டது!
இதில் ஸ்மார்ட்போன்களில் 'ஏ ஸ்டார்’ அந்தஸ்துகொண்ட ஆப்பிள் நிறுவனத்தின்
ஐ-போன்களை, 'ஐ.ஓ.எஸ்.’ எனும் ஆபரேட்டிங் சிஸ்டம் இயக்குகிறது. சாம்சங்,
சோனி, எல்.ஜி, மோட்டரோலா தொடங்கி 23 நிறுவனங்களின் செல்போன்களை இயக்கும்
ஆண்ட்ராய்ட் மென்பொருள்தான் சுமார் 100 கோடி மொபைல் போன்களை இயக்குகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் தனது புதிய 'ஐ.ஓ.எஸ்-7’ என்ற
மென்பொருளை வெளியிட்டு இருக்கிறது. 'இது ஆண்ட்ராய்டின் 'அட்ட காப்பி''
என்கிறார்கள் ஆண்ட்ராய்ட் ரசிகர்கள். அவர்களின் கோபத்தில் கொஞ்சம்
உண்மையும் இருக்கிறது.
சார்லஸ்
தமிழுக்கு முக்கியத்துவம்!
இனி, ஐ-போன்களில் நேரடியாக தமிழிலேயே டைப்
செய்துகொள்ளும் வசதியை அளித்திருக்கிறது ஐ.ஓ.எஸ்-7 அப்டேட். ஆண்ட்ராய்டில்,
இன்னும் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை!
கன்ட்ரோல் சென்டர்!
செல்போனை 'ஏரோப்ளேன் மோடு’க்கு மாற்றும் விசை, வை-ஃபை,
ப்ளுடூத், திரையின் ஒளி அளவைக் கட்டுப்படுத்தும் அம்சங்களை இனி தேடி
அலையவேண்டியது இல்லை. கன்ட்ரோல் சென்டரிலேயே அவற்றைப் புகுத்திவிட்டது
ஆப்பிள். தொடு திரையை கீழிருந்து மேலாக நகர்த்தினால் இந்தக் கன்ட்ரோல்
சென்டர் திரை வரும். அதே போல் தொடு திரையை மேலிருந்து கீழாகத் தள்ளினால்,
புதிய மெயில், மிஸ்டு கால் மற்றும் பிற வசதிகளைக் காணலாம். இந்த வசதிகள் பல
காலமாக ஆண்ட்ராய்டில் இருப்பதுதான்.
போட்டோ கேலரி!
ஐ-போனில் நீங்கள் க்ளிக்கும் படங்கள் தேதி வாரியாக,
இடம்வாரியாக தானாகவே போட்டோ கேலரியில் பதிவாகும். இதனால் போட்டோக்களை
போனில் தேடி எடுப்பது எளிது.
ஏர் ட்ராப்!
ஐ-போனில் புகைப்படங்களை ப்ளுடூத் மூலம் அனுப்ப
முடியாது. ஆனால், ஐ-போன் டு ஐ-போன் படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப,
ஏர் ட்ராப் வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ஏர் ட்ராப் வசதி ஐ-போன்
4ஷி மற்றும் ஐ-போன் 5 போன்ற மாடல்களில்தான் கிடைக்கும்.
ஸ்வைப்!
முன்பு ஐ-போனில் ஸ்வைப் செய்யவேண்டிய இடத்தில்
அழுத்தினால் மட்டுமே போனை இயக்க முடியும். ஆனால், இப்போது ஆண்ட்ராய்ட் போன்
போல எந்த இடத்தில் ஸ்வைப் செய்தாலும் திரை திறக்கும் வகையில் செட்டிங்ஸ்
மாற்றி இருக்கிறார்கள்.
உண்மையிலேயே ஐ.ஓ.எஸ்-7 மிகவும் வேகமாக இயங்குகிறது.
ஆனால், ஆண்ட்ராய்ட்டின் பல வசதி களை இதில் கொண்டுவந்திருப்பதைத் தாண்டி
அசரடிக்கும் விஷயங்கள் இல்லை. அதேநேரம் ஆண்ட்ராய்ட் வசதிகளும் இந்த
ஐ.ஓ.எஸ்.7-ல் முழுமையாக வரவில்லை. ஆண்ட்ராய்டில் நமக்குத் தேவையான
அப்ளிகேஷன்களை கஸ்டமைஸ் செய்துகொள்ள முடியும். உதாரணத்துக்கு, கூகுள்
க்ரோம் தேவைஇல்லை என்றால் மொஸில்லா ப்ரவுசரை வைத்துக்கொள்ளலாம். ஆனால்,
ஐ.ஓ.எஸ். 7-ல் ஆப்பிளின் சஃபாரியைத் தவிர வேறு ப்ரவுசரை வைக்க முடியாது.
அதே போல் ஆண்ட்ராய்ட் போனில் ஹோம் ஸ்கிரீனை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப
வடிவமைத்துக்கொள்ளலாம். ஆனால், ஆப்பிளில் அப்படிச் செய்ய முடியாது.
ஆக, நல்ல பேரும் இல்லாமல் கெட்டப் பேரும் இல்லாமல்
தப்பித்து இருக்கிறது ஐ.ஓ.எஸ்-7. ஆனால், இனி ஆப்பிள் போன் 'ஒஸ்தி போன்’
என்று ஜம்பம் அடிக்க முடியாது. ஏனெனில், 5,000 ரூபாய் மொபைலில் இருக்கும்
வசதிகள்தான் ஆப்பிளின் சமீபத்திய அப்டேட்டிலும் இடம் பிடித்திருக்கின்றன!
|
Search This Blog
Friday, October 04, 2013
iOS 7 Vs ஆண்ட்ராயிட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment