"இந்தியாவின் தோல்விக்கு ஒட்டுமொத்தக் காரணம் டோனிதான்.
அவருடைய 'மிடாஸ் டச்’ வியூகங்கள் இப்போது பழசாகிவிட்டன!'' என்று
சகட்டுமேனிக்கு வாட்டி எடுக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றிகரமாக மன்னிக்கவும்
தோல்விகரமாக மூன்றாவது முறையாக 20/20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அரை
இறுதியை எட்ட முடியாமல் வெளியேறி இருக்கிறது 'உலக சாம்பியன்’ இந்தியா.
இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன், வேறு எந்த
இந்திய கேப்டனைவிடவும் செம டோஸ் வாங்கும் நேரம் இது. பிரச்னை டோனியிடம்
மட்டும் தான் இருக்கிறதா என்ன?
ஷேவாக் நீக்கம்!
அதிரடியாகக் கோப்பை வெல்வார்கள்; அல்லது மரண அடி வாங்கி முதல் சுற்றோடு
வெளியேறுவார்கள். இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் இந்திய அணியின் ஸ்டைல்.
ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆச்சர்யமாக, ஒரே ஒரு தோல்வியால் அரை
இறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறி இருக்கிறது இந்திய அணி.
'அரை இறுதி இடத்தை உறுதிசெய்யும் மிக முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
போட்டியில், வீரேந்திர ஷேவாக்குக்கு அணியில் இடம் அளிக்கப்படாததுதான் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோனதற்குக் காரணம்’ என்கிறார் கள் வாழ்க்கையில் ஒரு 20/20 போட்டியில்கூட விளையாடிஇருக்காத சில முன்னாள் பிளேயர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் தட்டுத் தடுமாறி
எடுத்த ஸ்கோர் 140. அதை 15 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா எட்டும் அளவுக்கு
இந்தியப் பந்து வீச்சாளர்களும் சொதப்பினார் கள். அந்தப் போட்டியின்
தோல்விக்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சொதப்பியதுதான் காரணமே தவிர,
ஷேவாக் அணியில் இல்லாதது இல்லை. உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய ஐந்து
போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடிய ஷேவாக், அந்தப் போட்டிகளில்
மொத்தமாகக் குவித்த ரன்கள் வெறும் 54. பின்னர் எப்படி ஷேவாக்கின் நீக்கம்
இந்திய அணியைப் பாதித்ததாகச் சொல்ல முடியும்?
சீனியர் வீரர்களின் அடாவடி!
பௌலர்கள் எங்கே?
கேப்டன் பதவியில் டோனி தொடரலாமா?
'ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியைத்தான் பின்பற்றுவதாகக் கூறுகிறார் டோனி. ''போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்பவெப்ப சூழல் இவற்றைப் பொறுத்துதான் அணியினரைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை!'' என்கிறார் அவர். பிட்ச்சின் தன்மை, தட்பவெப்ப சூழல் தாண்டியும் சில சுழல்களில் சிக்கித் தவிக்கும் அணி யைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது இப்போதைக்கு இந்த டோனியால் மட்டுமே இயலும்!
No comments:
Post a Comment