பெண்
என்பவள், அன்பின் வடிவம். ஆனால், இந்த உலகில் அவளுக்கு இழைக்கப்படும்
கொடுமைகளுக்கு அளவே இல்லை! இதையும் ஒரு பாடல் மூலமாகவே எடுத்துச் சொல்லி,
இதுவரையிலும் 27 கோடிக்கும் அதிகமானோரை ஈர்த்திருக்கிறார் ரிஹான்னா. இவர்,
பெண் பாப் பாடகிகள் வரிசையில், முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் உலகப்
பிரபலம். தானே நடித்து, இவர் பாடும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில்
வரவேற்பு அதிகரித்து வருகிறது. 2003-ல் தன்னுடைய இசைப் பயணத்தை ஆரம்பித்த
ரிஹான்னா, இதுவரை விருதுகளை வெல்வதிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்!
'பில்போர்ட்' (Billboard) இசைப்பத்திரிகை அறிவித்த 100
சிறந்த பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ரிஹான்னாவுக்கு,
உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள். இதுவரையில், 7 கிராமி விருதுகள், 8
அமெரிக்க இசை விருதுகள், 22 பில்போர்ட் விருதுகள், 2 பிரிட் விருதுகள்
எனக் குவித்திருக்கிறார். இந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் 'ஐகான்'
(Icon) இசை விருதும் கிடைத்துள்ளது. இவருடைய ஆல்பங்கள், இது வரையிலும் 3
கோடிக்கு மேல் விற்றுத் தீர்ந்துள்ளன.
துடிப்பாகவும் இளமையாகவும் இருக்கும் 26 வயது ரிஹான்னா,
பாடிய Man Down என்ற பாடல்தான், யூடியூப் மூலமாக 27 கோடிக்கும் அதிகமானோரை
தொட்டிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று
அனைவருடனும் துள்ளித்திரிந்து அன்பை வெளிப்படுத்தி வாழ்பவள் அந்தப் பெண்.
அவளை ஓர் ஆண் வல்லுறவுக்கு இரையாக்க, அவனை பழி வாங்குகிறாள். இதில்
தத்ரூபமாக நடித்துப் பாடியிருப்பார் ரிஹான்னா.
மென்மையான பெண்களை, தவறான ஆண்கள் எப்படி
ஆக்ரோஷமானவர்களாக மாற்றுகிறார்கள் என்பதை, நுணுக்கமான காட்சிகளால் நடித்து,
பாடி அதிர்வலைகளைக் கூட்டியிருக்கும் ரிஹான்னாவுக்கு சல்யூட் வைக்கலாம்.
இந்தப் பாடலை நீங்களும் பார்க்க...
No comments:
Post a Comment