வில்சனின் பண்ணைக்கு அம்மாவுடன் வந்தார் மேரி. குழந்தைகளின் ஆரவாரக் குரல்
கேட்டு, வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே அறை முழுவதும் சிறியதும்
பெரியதுமாகப் புத்தகங்கள் இறைந்து கிடந்தன.
வண்ண பென்சில்கள் கொட்டிக் கிடந்தன. மேரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
ஓடிச்சென்று ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார்.
மேரி, உனக்குப் படிக்கத் தெரியாது. புத்தகத்தைக் கீழே வை" என்றாள் ஒரு பெண். ஒரு நொடி அதிர்ந்து போனார் மேரி. ஆமாம். அவள் சொல்வது உண்மைதான். ஆனால்
எனக்கு மட்டும் ஏன் படிக்கத் தெரியவில்லை? கண்ணீர் பெருகியது. இதயமே
நொறுங்கியது போல ஒரு வலி.நானும் ஒருநாள் உன்னைப் போல படிப்பேன்" என்றபடி அம்மாவிடம் ஓடினார். தான் ஏன் படிக்கவில்லை என்று கேட்டார்.நாம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். நம்மை இத்தனை ஆண்டுகள் அடிமைகளாகத் தான்
அமெரிக்கர்கள் நடத்தினார்கள். ஒரு அடிமைக்கு எதுக்குப் படிப்பு என்பது
அவர்கள் எண்ணம்" என்றார் மேரியின் அம்மா.படிப்பு இல்லாததால்தான் நாம் கஷ்டத்தில் வாழ்கிறோம். படிப்பு
இருப்பதால்தான் அமெரிக்கர்கள் நம்மை அடக்கியாள்கிறார்கள். நான் படிக்கணும்.
நாம் எல்லோருமே
படிக்கணும். வாழ்க்கையில் முன்னேறணும்" என்ற மேரியை, வியப்புடன்
பார்த்தார் அம்மா.சில நாள்களில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பத்து வயதுக்குப் பிறகே
படிக்க ஆரம்பித்தார் மேரி. அவருடைய ஆர்வமும் உழைப்பும் விரைவாகக்
கற்றுக்கொள்ள வழி வகுத்தன.
மேரியைப் பார்த்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலரும் படிக்க வந்தனர்.
கல்லூரிப் படிப்பை முடித்தார். ஆசிரியராகப் பணியாற்றினார். ஆப்பிரிக்க
அமெரிக்கப் பெண்களுக்கு
என்று தனியாக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். சிறந்த கல்வியாளராக விளங்கினார்.
எழுத்தாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பொறுப்புகளைத் திறம்படச்
செய்தார். 4 அமெரிக்க அதிபர்களிடம் வேலை செய்தார். தானும் உயர்ந்து
ஆப்பிரிக்க
அமெரிக்கர்களையும் உயர்த்தினார் மேரி மெக்லியோட் பெத்யூன். ஜூலை 10,
மேரியின் பிறந்தநாள்.
No comments:
Post a Comment