'இந்தியன் பேட்மிட்டன் லீக்..!’ கிரிக்கெட்டுக்கு I.P.L. போல இப்போது பேட்மிட்டன் போட்டிகளுக்கு I.B.L.
ஐந்து கோடி ரூபாய் பரிசுத் தொகைகொண்ட இந்திய பேட்
மிட்டன் லீக்தான், இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அடுத்து அதிகப்படியான
வருமானம் அள்ளவிருக்கும் விளையாட்டு வணிகம்!
'லீக்’ என்றாலே சர்ச்சைகள் இருக்கவேண்டும் என்ற
விதிப்படி, ஏலம் நடந்த அன்றே சர்ச்சைகளுடன் துவங்கியிருக்கிறது I.B.L.
சென்னைக்கு அணி இல்லை!
I.B.L. போட்டிகளில் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத்,
புனே, மும்பை, லக்னோ என மொத்தம் ஆறு அணிகள். அந்த ஆறு அணிகளில் பெரும்பாலான
அணிகளின் உரிமையாளர்கள் பேட்மிட்டனுக்கோ அல்லது விளையாட்டுத் துறைக்கோ
எந்தச் சம்பந்தமும் இல்லாத ரியல் எஸ்டேட்
நிறுவன முதலாளி கள். மும்பை அணியை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
மேலாளரும், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கச் செயலாளருமான சாமுண்டேஷ்வரநாத்
வாங்கியிருக்கிறார். ஆனால், இவருக்குப் பின்னால் நின்று அணி யில் கோடிகளை
முதலீடு செய்திருப்பவர்கள் கவாஸ்கரும் நாகார்ஜுனாவும். சஹாரா நிறுவனம்,
லக்னோ அணியை வாங்கியிருக்கிறது. மற்ற அணிகள் அனைத்துமே ரியல் எஸ்டேட்
முதலாளிகள் வசம்.
சீன வீரர்கள் வருவார்களா?
72 லட்சம் ரூபாய்க்கு சாய்னா நேவாலை ஹைதராபாத் அணி
ஏலத்தில் எடுக்க, ஆண் கள் பிரிவில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான 'லீ
சாங் வெய்’-ஐ மும்பை அணி 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது. இந்தி
யன் பேட்மிட்டன் லீக்கில் அதிகத் தொகைக்கு ஏலம் போனவர் லீ சாங். சாய்னா
நேவாலுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை சிந்து 47
லட்சம் ரூபாய்க் கும், பிரகாஷ் காஷ்யப் 45 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில்
எடுக்கப்பட்டனர். ஆனால், நான்கு முறை இந்திய சாம்பியன் பட்டம் வென்ற
சேத்தன் ஆனந்த்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐகான் பிளேயர்களாக
இருந்த ஜுவாலா கட்டாவுக்கும் அஷ்வினி பொன்னாப்பாவுக்கு 30 லட்ச ரூபாய்
நிர்ணயத் தொகையாக இருந்தது. கடைசி நேரத்தில் இரட் டையர் போட்டிகள் இல்லை
என்று முடிவு செய்யப்பட்டதால், ஜுவாலா கட்டா மற்றும் அஷ்வினி
பொன்னாப்பாவின் நிர்ணய விலை 15 லட்ச ரூபாயாகக் குறைக்கப்பட, விரக்தி
அடைந்துவிட்டார்கள்.பிறகு ஜுவாலாவை 17 லட்ச ரூபாய்க்கு டெல்லியும்,
அஷ்வினியை 15 லட்ச ரூபாய்க்கும் லக்னோவும் ஏலம் எடுத்தன.
பொதுவாக, பேட்மிட்டன் விளையாட்டில் சீன வீரர்கள்தான்
டாப். ஆனால், இந்தியாவில் I.B.L. நடைபெறும் நேரம் சீனாவில் தேசியப்
போட்டிகள் நடைபெறவிருக்கிறது என்று காரணம் சொல்லி, சீன வீரர்கள் எவரையும்
விளையாட அனுமதிக்கவில்லை, சீன பேட்மிட்டன் நிர்வாகம். பேச்சுவார்த்தைகள்
அவர்களை அழைத்து வருமா என்பது, இப்போதைக்கு சஸ்பென்ஸ்!
மாற்றப்படும் விதிகள்!
பேட்மிட்டன் போட்டியின் சுவாரஸ்யமே விறுவிறு திகுதிகு ரிலே ரேஸ் புள்ளித்
துரத்தல்கள்தான். ஆனால், அந்த கெடுபிடி விதிகளை வணிக லாபத்துக்காக ஏகமாக
மாற்றியமைத்துஇருக்கிறார்கள். I.P.L.. கிரிக்கெட்டில் 'ஸ்ட்ரட்டர்ஜி
பிரேக்’ என இடைவேளைவிட்டு மறை முகமாக விளம்பரங்களை அதிக அளவில் ஒளி
பரப்புவார்கள். இப்போது I.B.L. போட்டிகளிலும் ஒவ்வொரு செட்டுக்கும்
இடையில் இருமுறை ஒரு நிமிட விளம்பர இடைவேளைகளைப் புகுத்தியிருக்கிறார்கள்.
பேட்மிட்டன் போட்டியில் ஒரு செட்டைக் கைப்பற்ற, முதல் ஆளாக 21 புள்ளிகளை
ஜெயிக்க வேண்டும். அதேசமயம் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே இரண்டு
புள்ளிகளேனும் வித்தியாசம் இருக்க வேண்டும். அதாவது, 21 புள்ளிகளை ஒருவர்
எட்டும்போது, மற்றவர் 19 புள்ளிகளுக்கு மேல் ஸ்கோர் செய்திருக்கக் கூடாது.
ஆனால், I.B.L. போட்டிகளில் ஒரு புள்ளி வித்தியாசம் இருந்தாலே
வெற்றிபெறலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு முதல் இரண்டு செட்கள்
மட்டுமே 21 புள்ளிகளைக்கொண்டதாக இருக்கும். மூன்றாவது செட்டுக்குப் போட்டி
சென்றால், 11 புள்ளிகள் எடுத்தாலே வெற்றி தான். அந்த மூன்றாவது செட்டிலும்
ஒரு நிமிட விளம்பர இடைவேளை உண்டு. இப்படி ஒரு செட் டுக்கு நடுவில்
இடைவேளைகள் இருப்பது பிளேயர்களின் கவனத்தைச் சிதைக்கும் என இப்போதே
எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது!
எந்த விளையாட்டாக இருந்தாலும் அதை விளம்பரப்படுத்த சினிமா பிரபலங்கள் தேவை
என்ற விதிக்கேற்ப, அமீர் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரை I.B.L.-ன்
விளம்பரத் தூதுவர்களாக நியமித்திருக்கிறார் கள். சானியா மிர்சா, டெல்லி
அணிக்கான விளம்பரத் தூதர்.
தாக்குப்பிடிக்குமா I.B.L.?
இந்தியாவில் I.B.L. போட்டிகள் நடைபெறுவதால்
வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் கிடைக்கும், ஜூனியர் வீரர்கள், சர்வதேசவீரர்
களுடன் அதிகப் போட்டிகளில் விளையாடி, அவர்களின் பலம் பலவீனங்களைத்
தெரிந்துகொள்வார்கள், நிறைய இளம்வீரர் களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்
என்று I.B.L. நிர்வாகிகள் இப்போட்டித் தொடரின் ப்ளஸ்களை அடுக்குகிறார்கள்.
ஆனால், முன்னாள் வீரர்களின் பார்வையோ வேறு மாதிரி இருக்கிறது.
''கிரிக்கெட்டைப் போல பேட்மிட்டன் குழுப் போட்டி அல்ல;
இது தனிநபர் போட்டி. மி.ஙி.லி. போட்டிகளின்போது விளையாடி காயம் அடைந் தால்
அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் நாட்டுக் காக விளையாட முடியாது. மேலும்,
பேட்மிட்டன் என்ன விளையாட்டு என்றே தெரியாதவர்கள்தான் அணியின்
உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இதை முழுக்கவே
வணிகமாகத்தான் பார்ப்பார்கள். அணி தோல்வியடைந்தால் முக்கிய பிளேயர்களின்
மீது பிரஷர் அதிகரிக்கும். அது வீரர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும்.
பேட்மிட்டன் லீக் போட்டிகளுக்கு செலவழிக்கும் பணத்தை வீரர்களின்
வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு செலவழித்தால், சாய்னாவைப் போல இன்னும் பல
வீரர்கள் நாட்டுக்குக் கிடைப்பார்கள்!'' என்றார்.
நட்சத்திர பிளேயர்கள் இல்லையென்றால், எவ்வளவு பெரிய
விளையாட்டும் சரிவைச் சந்திக்கும் என்பதுதான் இந்தியாவின் நிதர்சனம்.
தன்ராஜ் பிள்ளை, திலீப் டிர்க்கி போன்ற வீரர்களை இழந்தபோது ஹாக்கியை
ரசிகர்கள் மறந்துவிட்டார்கள். லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஃபார்ம்
இழந்தபோது டென்னிஸும் இந்தியாவில் களையிழந்தது. இப்போது சாய்னா நேவால்,
சிந்து, காஷ்யப் போன்றவர்களால் இந்தியாவில் பேட்மிட்டன் எழுச்சி
கண்டுள்ளது. அவர்கள்தான் அந்த விளையாட்டின் முகங்கள். அவர்களைக்
காயப்படுத்தினால் அந்த விளையாட்டு தனது ரசிகர்களை இழந்துவிடும் என்பதை இந்த
'பிசினஸ் புலி’கள் புரிந்துகொள்வது நலம்!
சார்லஸ்
No comments:
Post a Comment