உலகின் பெருகிவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மணலில் இருந்து மின்சக்தி
பிறந்திருக்கிறது. அதைவிட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டுபிடித்திருப்பவர்
ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரைகளில் எளிதாகக் கிடைக்கும் மணல்தான்
இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கானியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப்
பிரித்து மின்சக்தியைத்
தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான்ஸ்ட்
என்பவர் கண்டுபிடித்திருந்தார். ஆனால் அதைத் தயாரிக்க பிளாட்டினம் போன்ற
விலையுர்ந்த, எளிதில்
கிடைக்காத பொருள்கள் தேவைபட்டதால் அது பிரபலம் ஆகவில்லை. இப்போது அதே
முறையில் அதிகச் செலவில்லாமல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை
பத்து ஆண்டுகள்
கடின ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார் ஆர்.கே. ஸ்ரீதர்.
நெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென்னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல்
என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையில் மேற்படிப்பையும்
முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை
கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலைகழகத்தில் விண்வெளி
தொழில் நுட்பத் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது நாஸாவின் பல
திட்டங்களுக்கு ஆலோசகர். நாஸாவின் செவ்வாய் பயணத்திட்டத்துக்கான மின்
சக்தியை, ஃப்யூல் செல் முறையில்
உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய்ச்சி காலத்தில்
அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப்
பொறுப்பில் திறம்படப் பணியாற்றியவர்.
‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில்
மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது
ஆராய்ச்சியைத் தொடர சோதனை உற்பத்திக்கு மிகப் பெரிய முதலீடு
தேவைப்பட்டது. ஆராய்ச்சியின் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர்
என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத்
தந்து
ஸ்ரீதரின் தலைமையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த
கெலினர்தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன்ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து
தொடங்கியது. உற்பத்தித் தொடங்கியதும்
தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோலா, பாங்க் ஆப்
அமெரிக்கா, வால்மார்ட்... போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து
இத்திட்டத்துக்கு உதவி இருக்கின்றன.
பிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணைத்து கறுப்பு
வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM
BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது
ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத்தைத் தரும். இதுபோல பல
செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக்
கொள்ளலாம். அதற்கு ‘புளும்சர்வர்’என்று பெயரிட்டு இருக்கிறார்.
ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு
சின்னத் தொழிற்சாலைக்குப் போதும்.
மின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்ற
தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது" என்று சொல்லும் ஸ்ரீதரை
ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை
நாளைய உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில்
ஒருவராகப் பட்டியல் இட்டிருக்கிறது .
ரமணன்
No comments:
Post a Comment