கடந்த ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையான தங்கம், இன்று
மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தது ஒருபக்கம் இருந்தாலும், இந்திய
ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுவருவதால் நம் நாட்டில் தங்கத்தின்
விலை இப்படி தாறுமாறாக உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று 10 கிராம் தங்கம் 34,500 ரூபாய்க்கு புதிய
உச்சத்தைத் தொட்டது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதியன்று
32,975 ரூபாய்க்கு வர்த்தகமானதே இதுவரையில் தங்கம் கண்ட உச்சபட்ச விலையாக
இருந்தது. இப்போது அந்த விலையைத் தாண்டிச் சென்றுவிட்டதைப் பார்த்து
குடும்பத் தலைவிகள் கவலையில் மூழ்கி இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை
ஒரு அவுன்ஸுக்கு 1,350 டாலர் என்கிற அளவிலேயே வர்த்தகமானது. அமெரிக்கப்
பொருளாதாரம் சீர்பட ஆரம்பித்த தால் தங்கத்திற்கான மவுசு கொஞ்சம் குறைய
ஆரம்பித்தது.
இப்போது சர்வதேச நிலைமை கொஞ்சம் மாறியதால் தங்கம் விலை மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கிறது.
சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உலக
நாடுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அமெரிக்கா, சிரியா மீது தாக்குதல்
நடத்த திட்டமிட்டு வருவதால் பாதுகாப்பு முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய
ஆர்வம் காட்டி வருகின்றனர் முதலீட்டாளர்கள்.மேலும், இந்தியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு
வரலாறு காணாத வகையில் 68.75 ரூபாய்க்கு ஆகஸ்ட் 28-ம் தேதி சரிந்தது. இவை
அனைத்தும் தற்போது தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு காரணங்களாகும்.தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமான அதே காரணங்கள்தான் வெள்ளியின்
விலைக்கும் காரணமாக அமையும். 10 கிராம் வெள்ளி 60,000 ரூபாய் வரை செல்ல
வாய்ப்புள்ளது. சர்வதேச சிக்கல்களும், ரூபாயின் மதிப்பும்
வில்லன்களாக மாறி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையை ஏற்றிவிட்டது என்று
சொல்வதே சரி!
No comments:
Post a Comment