தற்போதைய பரபரப்பான தொழில்நுட்ப உலகத்தில் எந்த
நேரத்திலும் அலுவலக வேலைகளைச் செய்ய நேரலாம். ஆனால், எல்லா சமயத்திலும்
டெஸ்க் டாப், லேப்டாப் போன்றவைகளை உடன் வைத்துக்கொண்டே இருக்க முடியாது.
இவற்றுக்கு மாற்றாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட் போனை
வைத்து அனைத்து விஷயங்களையும் செய்யும்விதமாக சில அப்ளிகேஷன்கள்
இருக்கின்றன. அந்த அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...
கூகுள் டாக்ஸ் (Google Docs)
இந்த ஆப்ஸைக் கொண்டு Spread sheet-களை பிரவுஸ்
செய்யலாம். மேலும், எடிட்டும் செய்யலாம். இதுபோன்ற பல ஆபீஸ் ஆப்ஸ்கள்
இருந்தாலும், இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளையும் சிறந்த
சேவையையும் அளிக்கிறது. கிராப்ஸ், சார்ட்ஸ், டேபிள்கள் போன்ற அனைத்தையும்
இந்த குயிக் ஆபீஸ் ஆப்ஸ் மூலம் எளிதாக உங்கள் ஆபீஸ் பைல்களில்
பொருத்திக்கொள்ளலாம்.
கூகுள் டிரைவ் (Google Drive)

கேம் ஸ்கேனர் (Cam Scanner)
இதுதான் தற்போதைய டிரென்டிங் ஆப்ஸ். உங்கள் ஸ்மார்ட்
போன் கேமராவை ஒரு ஸ்கேனர் போல செயல்படுத்தும் தன்மை உடையது. ஒரு பேப்பரை
ஸ்மார்ட் போன் கேமரா மூலம் போட்டோ எடுத்தால், இந்த ஆப்ஸ் அந்த பேப்பரை
ஸ்கேன் செய்ததுபோல எடிட் செய்து விடும். இது தவிர, வேறு பல
சிறப்பம்சங்களும் இந்த ஆப்ஸில் அடங்கும்.
எவர் நோட் (Ever Note)

ஸ்கொயர் ரெஜிஸ்டர் (Square Register)
இது ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்த பிரத்யேகமான
அப்ளிகேஷனாகும். இதற்கு ஒரு ஏடிஎம் கார்டு ‘Dongle’யை உங்களது ஸ்மார்ட்
போனுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் ஏடிஎம் கார்டுகளை ஸ்வைப்
செய்துகொள்ளலாம். அல்லது சாதாரணமாக இ-பேங்கிங் முறையிலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.
க்ளவ்டு பிரின்ட் (Cloud Print)
இதுதான் ஆண்ட்ராய்டு உலகத்தின் புதுவரவு. இந்த ஆப்ஸை
வைத்துக் கொண்டு உங்கள் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட்டில் உள்ள ஃபைல்களை
உடனுக்குடன் பிரின்ட் செய்துவிடலாம். இதற்கு உங்களது பிரின்டர் ஒரு
‘e-printer’ஆக இருக்க வேண்டும்.
குயிக் புக்ஸ் (Quick Books)
இது பிரத்யேகமான ஒரு பிசினஸ் அப்ளிகேஷன். இதை குயிக்
புக்ஸ் டெஸ்க் டாப் வெர்ஷனோடு ஸ்மார்ட் போன் / டேப்லெட் களுக்கு இலவசமாகப்
பெறலாம். இந்தப் புதுமையான பிசினஸ் ஆப்ஸ் உங்களது நிதிக் கணக்குகளையும்
வரவு, செலவுகளையும் கையாள கட்சிதமாக உதவும்.
லோக்கஸ் (Locqus)
இது உங்களது ஊழியர்களுக்கான ஒரு அப்ளிகேஷன். அதாவது,
எந்த ஊழியருக்கு என்ன வேலை, பொதுவான, மீட்டிங் போன்றவற்றை இந்த
அப்ளிகேஷனில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும், எந்த நேரத்திலும் ஓர்
ஊழியர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதையும் ‘Geolocator’ மூலம் இந்த
அப்ளிகேஷன் சொல்லிவிடும்.
No comments:
Post a Comment