Search This Blog

Tuesday, October 20, 2015

உணர்ச்சியும் கட்டுப்பாடும்!


யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாக வேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிப வயசு மாணவர்கள் - கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் - ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான். ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்தச் சிரமத்தை சமாளித்தே தீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப்போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப்போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர்வரை பரவிக் கெடுத்துவிடும்.

‘‘தெறிக்க விடலாமா?’’ ‘வேதாளம்’


தீபாவளி ரேஸில் களமிறங்கும் படங்களில் அஜித்தின் 56வது படமான ‘வேதாளம்’ பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இதோ டிரெய்லர்....

* அஜித் ‘வேதாளம்’ படத்தை ஒப்புக்கொண்ட பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லையாம். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்து படம் வெளியே வந்த பிறகுதான் அடுத்ததைப் பற்றிச் சிந்திப்பாராம்.

* பல பெயர்களுக்குப்பின் தேர்ந்தெடுத்த ‘வேதாளம்’ என்ற பெயரும் நெகடிவ்வாக உள்ளதே என அஜித் காதுக்குப் போக ‘இனி மாற்ற முடியாது. வேண்டும் என்றால் சப்-டைட்டில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்றாராம் தல.
* படத்தில் அஜித்தின் இரண்டு கெட்-அப்பில் ஒன்று மொட்டைத் தலையுடனும் இன்னொன்று யூத் தாம். மொட்டைத் தலை அஜித் ஃபோர்ஷன் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது.

* ‘வேதாளம்’ படத்துக்காக 20 ரௌடிகளுடன் அஜித் மோதும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சி சாலிகிராமம் மோகன்-செந்தில் ஸ்டூடியோவில் முடிந்ததும் ஒவ்வொருவரிடமும் அடிபட்டதா என்று அக்கறையோடு விசாரித்து எல்லோரையும் நெகிழவைத்தார் அஜித்.

* சென்னை மருத்துவமனையில் வில்லன் ‘ராகுல் தேவ்’வுடன் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

* பின்னி மில்லில் ஒரு சண்டைக் காட்சி 10 நாட்களும் அஜித், லட்சுமி மேனன், சூரி காம்பினேஷனில் ஒரு காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஒரு சண்டைக் காட்சி 15 நாட்களும், சென்னை சாலிகிராமத்தில் செட் போட்டு ஒரு சண்டைக் காட்சி ஒரு வாரமும் எடுக்கப்பட்டது. படம் ஃபுல் ஆக்ஷன்.

* அஜித் தங்கையாக வரும் லட்சுமிமேனனை எதிரிகள் கடத்த அஜித் எப்படி மீட்கிறார் என்பது த்ரில்லர் காட்சியாக இருக்குமாம். அப்போது மெயின் வில்லன்களாக கபிர்துகன் சிங், ராகுல்தேவ் அஜித்துடன் மோதும் சண்டைக் காட்சிகள் அனல்பறக்குமாம்.

* அஜித் சமீபகாலப் படங்களான ‘பில்லா-2’, ‘மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற படங்களில் தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் நடித்ததில்லை. எனவே இப்படத்தில் ஆக்ஷன் அதிகம் என்பதால் சில காட்சிகளில் கண்கலங்கி நடித்தாராம். தாய்மார்களை அதிகம் கவரும் படம் இது.

* ‘வீரம்’ படத்தில் நடிக்கும்போதே ‘வேதாளம்’ படத்தின் கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கி விட்டாராம் இயக்குநர் சிவா.

* ‘வேதாளம்’ ஷூட்டிங்கின்போது மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாம் கலைத்துவிட்டு 15 நிமிடங்களுக்கு முன்னரே இயக்குநர் சிவாவுடன் அடுத்த சீன் பற்றி விவாதிப்பாராம் தல.

* இத்தாலி, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் ஸ்ருதி ஹாசனோடு டூயட் பாடி வந்துள்ளார் தல. ஸ்ருதிஹாசனுக்கு வழக்கறிஞர் வேடம். கதையோடு ஒட்டிய காமெடியை அஜித் விரும்புவார். அதனால் சூரி கால் டாக்ஸி டிரைவராக அஜித்துடன் படம் முழுக்க வருகிறார். தம்பி ராமய்யா ஒரு வித்தியாசமான வாய் பேச முடியாத வேடத்தில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், பாலா என காமெடி பட்டாளமும் நடித்துள்ளனர்.

* அனிருத் அஜித்துக்காக தீம் மியூசிக் போட்டுள்ளார். இது இளைஞர்களின் வரவேற்பைப் பெறுமாம்.

* ஷூட்டிங்கின்போது ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவரின் நடிப்பையும் பார்த்து என்கரேஜ் செய்து பாராட்டியுள்ளார் தல.

* இத்தாலியில் மிலன் நகரில் ஷூட்டிங் நடந்தபோது காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ருதிஹாசனுக்கு அஜித், வேளா வேளைக்கு மருந்து, மாத்திரை தந்து உதவியதில் நெகிழ்ந்து போனாராம் ஸ்ருதி.

* இதனால் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டபோது, ‘யாரைப் பற்றியும் ஏதும் பேசி மற்றவர் மனம் புண்படும் படி பேச வேண்டாம்’ என்று படப் பிடிப்பு குழுவினருக்கு உத்தரவிட்டாராம் அஜித்.

* சமீபத்தில் ‘வேதாளம்’ டீசர் வெளியாக, சமூக வலைத்தளங்களில் செம அதிரடி. ‘தெறிக்க விடலாமா’ என்று தல பேசும் வசனம்தான் செம ஹாட், செம ஷார்ப்.

* லட்சுமி மேனன் தீபாவளி அன்று கேரளாவில் தன் பள்ளித் தோழிகளுக்கு ‘வேதாளம்’ படம் பார்க்க டிக்கெட்டும், ட்ரீட்டும் தருவதாகச் சொல்லியுள்ளாராம்.

* இதற்கிடையில் 25 ஏழைக் குழந்தைகளின் கண் மருத்துவத்துக்கு ஒரு தொகையை உதவியாகத் தந்துவிட்டு ‘வெளியே தெரிய வேண்டாம்’ என் கண்டிஷன் போட்டுள்ளார் அஜித். அதான் தல.

Sunday, October 18, 2015

கேட்ஜெட்ஸ்:

இன்டெக்ஸ் அக்வா டிரெண்ட் (Intex Aqua Trend)

டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல் 293 PPI
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 1.3GHz Quad-Core MediaTek MT6735
ரேம் – 2 GB
பேட்டரி – 3000 mAh
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB வரை
எடை – 152 கிராம்
சிம் 1 & சிம் 2 – 4G மைக்ரோ சிம்

பிளஸ்:
டூயல் 4G சிம் வசதி, இயங்குதளம்.

மைனஸ்:
கேமரா, தரம்.

விலை: ரூ.9,700.


பாஸ் சவுண்ட் லிங்க் ஹெட்போன் Bose SoundLink Around-Ear Wireless II


இதனை ப்ளூ-டூத் ஹெட்போனாகவும், சாதாரண வயர் ஹெட்போனாகவும் பயன்படுத்தலாம்.

149 கிராம் எடையுள்ள இந்த ஹெட்போனை ப்ளூ-டூத் மூலம் 9 மீட்டர் வரை பயன்படுத்தலாம்.

சுமார் 15 மணி நேரம் வரை சார்ஜில் இந்த ஹெட்போனை பயன்படுத்தலாம். முழுமையாக சார்ஜாக 3 மணி நேரம் ஆகும். 15 நிமிடம் சார்ஜ் செய்தால், 2 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

இந்த ஹெட்போன் 3.5 மி.மீ ஸ்டீரியோ கேபிளை கொண்டுள்ளது. ஒரு USB சார்ஜிங் கேபிள் மற்றும் ஒரு ‘Carrying Case’ இதில் அடங்கும்.

பிளஸ்:
வசதியாக அணியலாம், அருமையான செயல்பாடு,
சிறப்பான ப்ளூ-டூத் தொழில்நுட்பம், பேட்டரி.

மைனஸ்:

விலை, சுமாரான பிளாஸ்டிக் தரம்.
விலை: ரூ.21,150.

கோ ப்ரோ ஹீரோ+ Wi-Fi ஆக்‌ஷன் கேமரா GoPro Hero+ Wi-Fi Action Camera

இந்த கோ ப்ரோ ஹீரோ+கேமரா Wi-Fi மற்றும் ப்ளூ-டூத் இணைப்பைக் கொண்டுள்ளது.

1080p full HD வீடியோக்களை ரெக்கார்ட் செய்யும் திறனைக் கொண்டுள்ள இந்த கேமரா, 60fps 8 மெகா பிக்ஸல் 3264x2448 படங்களை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

கிளாஸ் 10 64 GB மைக்ரோ SD கார்டுகள் வரை இந்த கேமராவில் பயன்படுத்தலாம். இதன் மொத்த எடை 123 கிராம்.

கரடுமுரடான சூழ்நிலை, வெவ்வேறு தட்பவெப்பங்களில் செயல்படும் இந்த கேமரா 40 மீட்டர் வரை நீரால் பாதிப்படையாத ‘Water proof’ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

1160mAh பேட்டரியைக் கொண்டு செயல்படுகிறது இந்த கேமரா.

விலை: ரூ.13,250.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P690 (Micromax Canvas Tab P690)
Flipkart - http://bit.ly/1MvlHNv

டிஸ்ப்ளே – 8 இன்ச் 1280x800 பிக்ஸல் 160 PPI
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 1.3GHz Quad-Core Intel Atom Z335G
ரேம் – 1 GB
பேட்டரி – 4000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB வரை
சிம் 1 – 3G மைக்ரோ சிம்.

பிளஸ்:
விலை, செயல்பாடு, டிசைன்.

மைனஸ்:
கேமரா, பேட்டரி.

விலை: ரூ.8,595.
செ.கிஸோர் பிரசாத் கிரண்

ஃப்ளிப்கார்ட், அமேசான்...பிசினஸ் மேஜிக்!

ஆடித் தள்ளுபடியும், தீபாவளி விற்பனையும்தான் ரீடெயில் நிறுவனங்களின் மிகப் பெரிய விற்பனை உத்திகள். அதேமாதிரி ஆன்லைன் நிறுவனங்களுக்கு அக்டோபர் மாதம்தான் ஹைலைட்டான விற்பனை மாதம்.  கல்லா கட்ட சென்ற ஆண்டு தீபாவளிக்கு முன் உருவாக்கப்பட்டவைதான் அமேசானின் ஃபெஸ்டிவ் சேல், ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே முதலியவை.

இவற்றின் சீசன் 2 விற்பனையை இந்த ஆண்டும் ஆரம்பித்தன அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள். அதோடு இந்த வருடம் ஸ்நாப்டீல் நிறுவனமும் அக்டோபர் 13-ம் தேதியை குறிவைத்து களத்தில் குதித்தது.


சென்ற வருடம் இணைய தளங்களில் மிகப் பெரும் ஆஃபர் முதன் முதலாக அறிவிக்கப் பட்டதால் விற்பனை பின்னியெடுத்தது. பல பொருட்கள் ஸ்டாக் இல்லை. ஆர்டர் செய்தவர்களுக்குப் பொருட்கள் வருவதில் தாமதம் ஆனது. பலருக்கு  ஆர்டர் செய்யாத பொருட்கள் வந்து சேர்ந்தது. இப்படி பல சொதப்பல்கள் அரங்கேறி, சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்களே இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு போனது.

கடந்த ஆண்டு நடந்த தவறுகள் எதுவும் இந்த வருடம் இருக்காது. அனைத்து பிரச்னைகளையும் சரி செய்துவிட்டோம் என்றுதான் களமிறங்கின ஆன்லைன் நிறுவனங்கள். அதோடு இணையதள வேகம் குறித்த கவலை வேண்டாம் என்றும் சொல்லப்பட்டன. மொபைலில் 2ஜி வேகம் இருந்தாலே ஆப்ஸ் மூலம் ஆஃபரை அள்ளிக் குவிக்கலாம் என்றன.

ஆப் ஒன்லி ஆஃபர் ஏன்? 

கடந்த ஆண்டு இணையதளத்தில் ஆஃபர் ஆசை காட்டிய ஆன்லைன் நிறுவனங்கள், இந்தமுறை ஆஃபர் இன் ஆப் ஒன்லி என்று சொல்லிவிட்டது. இந்த ஆப் ஒன்லி விற்பனை அறிவிப்புக்குப் பின்னால் மிகப் பெரிய விற்பனை உத்தியை ஆன்லைன் நிறுவனங்கள் வைத்துள்ளன. ஒரு நபர் ஆப்ஸை டவுன்லோட் செய்துவிட்டால், அவர்களை மீண்டும் தொடர்பு கொள்வது எளிது என்பது  ஆன்லைன் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதல் செளகரியம். டிஜிட்டல் மார்க்கெட்டிங் உத்திகளில் முதன்மையான இந்த உத்தியை இந்த நிறுவனங்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளன.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் மூலமாகத்தான் இணையச் சேவையைப் பெறுகின்றனர் என்ற ஆய்வையும் இந்த நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளன.

ஆஃபர்கள் எப்படி?

இந்த ஆண்டு நடந்த விற்பனையில் எந்தெந்த நிறுவனங்கள் என்ன மாதிரியான ஆஃபர்களை வழங்கின என்று பார்ப்போம். முதலில் .ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேவை எடுத்துக் கொள்வோம்.

வித்தியாசம் காட்டாத ஃப்ளிப்கார்ட்!

ஃப்ளிப்கார்ட்டை பொறுத்தவரையில், ஆப் ஒன்லி ஆஃபர்கள் என்பதில் தெளிவாக இருந்தது. அதோடு 5 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவில்தான் ஆஃபர் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது. ஃபேஷன், ஹோம் அப்ளையன்ஸ், மொபைல் என அனைத்துப் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு நாள் ஆஃபர் வழங்கியது. இதனால் எல்லா நாட்களிலும் பொருட்களை வாங்க போட்டி போடாமல், நமக்கு தேவையான பொருள் என்றைக்கு விற்பனை என்பதை அறிந்து அந்த நாளில் மட்டும் ஆர்டர் போட இது வசதியாக இருந்தது.

ஆனால், விலை விஷயத்தில் ஃப்ளிப்கார்ட்  பெரிய  ஆஃபர்களையெல்லாம் வழங்கவில்லை. சாதாரணமாக ஃப்ளிப்கார்ட்டில் நாம் வாங்கும்போது என்ன விலை இருக்குமோ, அதே விலையில்தான் ஆஃபர்களை வழங்கியது.

 அதேபோல் இணையதளத்தில் உள்ள அசல் விலை - ஆஃபர் விலைக்கு இடையேயான வேறுபாட்டுக்கும், ஆப்ஸில் இதே விலைகளுக்கு இடையேயான வேறுபாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்தது.

சமூக வலைதளங்களிலும் ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை சுமார்தான் என்ற விமர்சனமே வைக்கப்பட்டது.

ஜஸ்ட் பாஸ் அமேசான்!

ஃப்ளிப்கார்ட்டைப் போல அல்லாமல், அமேசான் வேறு விதமான உத்திகளோடு களமிறங்கியது. ஆஃபர்கள் ஆப்ஸில் 15 நிமிடங்களுக்குமுன் கிடைக்கும் என்றும், அதன்பின் அதே ஆஃபர் இணைய தளங்களில் கிடைக்கும் என்றும் ஆஃபர் வழங்குவதில் புது  நியூட்ராலிட்டியைக் கடைப்பிடித்தது. ஆனால், ஃப்ளிப்கார்ட்டை போலவே விலைகளில் பெரிய அதிரடிக் குறைப்பு இல்லை.  பல பொருட்கள் ஸ்டாக் இல்லை. பெரிய பிராண்டுகளுக்கு ஆஃபர் குறைவாகவும், சிறு பிராண்டுகள் அதிக ஆஃபருடனும் வழங்கப் பட்டன.

அமேசான் ஆஃபர்களில் எலெக்ட்ரானிக் பொருட்கள் தவிர, மற்ற பொருட்களுக்குப் பெரிய ஆஃபர்கள் இல்லை. இருப்பினும், அமேசான் ஆஃபர்கள் ஏறக்குறைய சரியாகவே இருக்கின்றன என்கிற எண்ணத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்திவிட்டது.

விலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வில்லை. சில பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலும் அமேசானின் விற்பனை மக்களுக்கு திருப்தியை தந்துள்ளது. ஆஃபர் விற்பனையில் அமேசான் ஜஸ்ட் பாஸ் ஆனது.

மந்தமான ஸ்நாப்டீல்!

அமேசான், ஃப்ளிப்கார்ட் இரண்டு நிறுவனங்களும் 13-ம் தேதி விற்பனையைத் துவங்கும் என்பதால், சற்று முன்னெச்சரிக்கையாக 12-ம் தேதியே விற்பனையைத் துவங்கியது ஸ்நாப்டீல். அறிவிப்புகளின்போதே ஆஃபர் என்று சொல்லி, எலெக்ட்ரானிக் பொருட்களை ஆஃபரில் விற்க துவங்கியது.

 ஆனாலும் ஃப்ளிப்கார்ட், அமேசானின் விளம்பரங்களுக் குமுன் ஸ்நாப் டீலின் ஆஃபர்கள் சற்று மந்தமாக இருந்தது. மிகப் பெரிய உத்திகள் ஏதுமின்றி இருந்தாலும் குறைவான விலைதான் என்று சிலர் வாங்கிவிட்டார்கள்.

இன்னும் சிலரோ அடுத்து அமேசான், ஃப்ளிப்கார்ட்டை பார்ப்போம் என்று காத்திருந்தது ஸ்நாப்டீலுக்குச் சற்றுப் பின்னடைவுதான்.

ஆக மொத்தத்தில் மூன்று நிறுவனங்களும் சில பிளஸ், மைனஸ்களைக் கொண்டிருந்தா லும், சென்ற ஆண்டில் சில பல அதிரடி ஆஃபர்கள் என்று அறிவித்து அனைவரையும் கணினியில் கட்டி போட்டுவிட்ட மாதிரி இந்த வருடம் செய்யத் தவறிவிட்டன.

இந்த ஆஃபர்கள் சுமார் ரகம் என்பதால் பெரிய நகரங்களில் ரீடெயில் கடைகளில் இனி நிறைய கூட்டத்தை எதிர்பார்க்கலாம் என்ற கருத்து வலுத்திருக்கிறது.

ஆன்லைன் நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பதிலடி தருகிற மாதிரி பெரிய ரீடெயில் நிறுவனங்களும் முன்னணி நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. ஆன்லைன் ஆஃபரில் திருப்தி அடையாத வாடிக்கையாளர்களை கடைகளுக்கு இழுக்கும் முயற்சிகளை ரீடெயில் நிறுவனங்கள் இனி எடுக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை!

ச.ஸ்ரீராம்வங்கிகள் தொடர் விடுமுறையை சமாளிக்க 5 வழிகள்!

இந்த வாரம் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 5 நாட்கள் வங்கி  விடுமுறை ஆகும். ஆயுத பூஜை, மொஹரம், சனி, ஞாயிறு என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக இருக்கும். இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள் தவிப்பார்கள் என்கிற செய்தி வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. வங்கிகளின் இந்த தொடர் விடுமுறையைச் சமாளிக்க, பின்பற்ற வேண்டிய 5  விஷயங்கள் இதோ... 

 

1. இது பண்டிகைக் காலம் என்பதால், துணிமணிகள் எடுக்க அதிகப் பணம் தேவைப்படும். மேலும், விஜயதசமியில் குழந்தை களை பள்ளியில் சேர்க்கவும் பணம் அதிகம் தேவைப்படும். எனவே, தேவைப்படும் பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.

2. வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் ஏடிஎம்களில்  பணம் தீர்ந்து போக வாய்ப்புண்டு. எனவே, முன்கூட்டியே பணத்தை எடுத்துவைப்பது நல்லது.

3. நீங்கள் மற்றவர்களுக்கு தரவேண்டிய அல்லது வாங்க வேண்டிய காசோலைகள் இந்த தேதிக்குள் இருந்தால், அதனை வாங்குவதையும், தருவதையும் தவிர்த்துவிடுங்கள்.

4. உங்களது இசிஎஸ் (ECS) தேதி இந்த நாட்களுக்குள் இருந்தால், வங்கிகள் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்காது. விடுமுறை முடிந்த மறுநாளே உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதனை சமாளிக்க போதிய பணத்தை உங்கள் கணக்கில் வைத்திருக் கிறீர்களா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்.

5. வங்கி அல்லாமல் தனியாக பிறரிடம் வாங்கிய கடனுக்கான தொகையையோ அல்லது வட்டியையோ இந்த தேதிகளில் நீங்கள் செலுத்த வேண்டி இருந்தால், அதனை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ச.ஸ்ரீராம்

Saturday, October 10, 2015

ஆங்கிலத்தில் தனி ஒருவன்!


ஹாலிவுட் இயக்குநர் ராபர்ட் செமகிஸ் ஏற்கெனவே ‘ரொமான் ஸிங் தி ஸ்டோன்’, ‘பேக் தி ப்யூச்சர்’ பாகம்-1, 2, 3, ‘ஃபைட்’ போன்ற பல குறிப்பிடத்தகுந்த படங்களை இயக்கியவர். தற்போது அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக, தற்காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனைச் சம்பவத்தை 3டி எபெஃக்ட்டில் உருவாக்கியுள்ள படம் ‘தி வாக்’ (The Walk).

1974ம் ஆண்டு நியுயார்க் நகரில் வேர்ல்ட் டிரேட் சென்டரின் இரட்டை கட்டடங்கள் (Twin Towers) இடையில் 1,350 அடி உயரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி, ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு, நடந்து சென்றார் பிரென்ச் நாட்டைச் சேர்ந்த பிலிப் பெடிட் (Philippe Petit). அந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாதனை நிகழ்த்திய பிலிப் எழுதிய Reach the Clouds புத்தகத்தை அடிப்படையாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. இதில் பிலிப்பாக நடித்துள்ளார் ஜோசப் கோல்டன். பென் கிங்ஸ்லே அவரது குருவாகவும், சேர் லோட் லே போன் அவரது தோழியாகவும் நடித்துள்ளனர். 

ஒரு தனி மனிதனின் தைரியம் மற்றும் விடா முயற்சி என்பதைவிட, குறிப்பிட்ட ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, தணியாத தாகத்துடன் தனியொருவன் தொடர்ந்து முயன்று வெல்வதுதான் படத்தின் கரு! இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட தனி ஒருவனின் சாதனைப் படம். முக்கியமாக இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.

-பொன்ஜி

விளையாட்டு


உடம்பை பலமாக வைத்துக் கொள்வதற்காகவும், மனம் உற்சாகமாக இருப்பதற்காகவும் நீங்கள் யாவரும் விளையாட வேண்டியது அவசியம். நான் சொல்லாமலே, உங்களுக்காகவே விளையாட்டில் இஷ்டமும், ஈடுபாடும் இருக்கத்தான் செய்யும். இங்கேதான் ஜாக்கிரதை தேவை. உங்கள் படிப்புக்குச் சிறிதுகூட இடையூறு இல்லாதபடியும், பிறருக்கு எந்தவிதத்திலும் இம்சை ஏற்படாதபடியும் உங்களுடைய விளையாட்டு ஆசையை அளவுக்குள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு என்றால் மற்றவரை ஜயித்தாக வேண்டும் என்ற ஆர்வமும், விடாமுயற்சியும் ஏற்படவே செய்யும். ஆகையினால் அதில் போட்டியும் தவிர்க்க முடியாத அம்சமாகிவிடுகிறது. அதனால் தவறில்லை. ஆனால் இது காரணமாக, ஜயிக்கிறவர்களிடம் பொறாமை எண்ணம் ஏற்பட இடம் தரக்கூடாது. விளையாட்டுப் போட்டி சண்டையாகவும், விரோதமாகவும் ஆகிவிடக் கூடாது. நம்மை ஜயிக்கிறவனை நமக்கு உதாரணமாகக் கொண்டு சிநேகம் பாராட்ட வேண்டுமேயன்றி விரோதியாகக் கருதலாகாது.

தோனி - ‘புகழ்’ உதிர்காலம்


தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஆட்டங்களில் தோற்று டி-20 தொடரை இழந்தது. அடுத்த ஆறு மாதங்களில் தோனி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத நிலையில் மேலும் பல ஒருநாள் ஆட்டங்களையும் இந்தியா இழக்கும். இரண்டு தலைவர்களைக் கொண்டுள்ளது இந்திய அணித் தலைமையின் அதிகாரச் சமநிலையைக் குலைக்கிறது. 

தோனி ஆதரிக்கும் ஜடேஜா, மோஹித், ராயுடு, புவனேஷ்வர் போன்றோருக்கு கோலியின் அணியில் இடமிருக்காது. கோலி கொண்டாடும் உமேஷ் யாதவ், அமித் மிஷ்ரா, ரஹானே போன்றோரை தோனி ஏற்பதில்லை. அணி வீரர்களுக்குள் குழப்பமும் பிரிவினையும் தோன்றுகிறது.

தோனிக்குத் தோல்வியைத் தவிர்ப்பது முதல் நோக்கம் என்றால் கோலி வெற்றி பெறுவதை பிரதானமாய் நினைக்கிறார். தோனி ஒரே அணியுடன் தொடர்ந்து ஆட்டங்களை இழப்பதைப் பொருட்படுத்தமாட்டார். வீரர்கள் தன்னம்பிக்கை குலையாமல் இருப்பதே அணி வெற்றியைவிட அவருக்கு முக்கியம். கோலி எவ்வளவு வீரர்களை மாற்றினாலும் பரவாயில்லை, வெற்றி பெறுவதே முக்கியம் என நினைப்பவர். இரு வேறுபட்ட தேர்வுகள், இரு மாறுபட்ட அணுகுமுறைகள் வீரர்களைக் குழப்புகின்றன.

தோனியின் மட்டையாட்டம் சரிந்து வருவதால் அவர் ஆறாவது எண்ணில் ஆல்ரவுண்டரை பயன்படுத்த தயங்குகிறார். தனது சரிவுக்கு ஈடுகட்ட ஒரு முழுநேர மட்டையாளனை 6ல் இறக்க விரும்புகிறார். தனது மட்டையாட்டம் சார்ந்த பாதுகாப்பின்மை உணர்வால் அவர் இப்போதெல்லாம் தடுத்தாடுவதையே அதிகம் விரும்புகிறார். குறைவான ஸ்டிரைக் ரேட்டில் இருபது முப்பது ஓட்டங்களில் அவர் ஆட்டமிழப்பதால் 6 ஆம் எண்ணில் வரும் மட்டையாளர் மட்டும் பிற ஆல்ரவுண்டர்கள் மீது நெருக்கடி அதிகமாகிறது.

முன்பு தோனி எந்த நிலையிலும் நிதானமாய் இருப்பார். தோல்விகள் அவரை அச்சுறுத்தாது. ஆனால் இப்போது வாரியத்தில் அவருக்கு ஸ்ரீனிவாசனை போல் காட்பாதர் ஆதரவு இல்லை. அணியும் முழுக்க அவர் கட்டுப்பாட்டில் இல்லை. ஒவ்வொரு முறை கோலி தலைமையில் அணி வெல்லும்போதும் தோனி மீதான அழுத்தம் இரட்டிப்பாகிறது. ஒப்பீடுகள் உருவாகின்றன. அடுத்து வரும் ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியப் பயணத்தில் உள்ள தொடர்களுடன் தோனியின் கவுன்டவுன் தொடங்குகிறது. ஒவ்வொரு தோல்வியும் அவரை அதிகத் தனிமையிலும் குழப்பத்திலும் நெருக்கடியிலும் ஆழ்த்தும்.

இப்போதைக்கு இப்பிரச்னைக்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. முதல் தீர்வு, டெஸ்ட் அணிக்கு சம்பந்தமில்லாத முழுக்க புதிதான 11 பேரை கொண்ட அணியை உருவாக்கி தோனி தலைமை தாங்குவது. அதை ஒரு சவாலாய் தோனி எடுத்துக்கொள்ள வேண்டும். புது அணி என்பதால் ஒப்பீடும் இருக்காது. வீரர்களும் சுறுசுறுப்பாய் ஆடுவார்கள். ஆனால் இதற்கு வீரர்கள் ஒப்ப மாட்டார்கள். வணிகரீதி யாகவும் புது அணி அதிக விளம்பரங்களைப் பெற்றுத் தராது.

இரண்டாவது தீர்வு நடைமுறை சாத்தியமுள்ளது. தோனி பதவி விலகுவது. ஆனால் அவர் அதை அடுத்த டி-20 உலகக்கோப்பை வரை செய்யமாட்டார். நம் தேர்வாளர்களும் நட்சத்திர வீரர்களைப் பதவி நீக்க மாட்டார்கள்.

இந்த டி-20 தொடர் மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் டி-20 ஆட்டம் சொதப்பலாக உள்ளது. பிற நாட்டு அணிகள் டி-20க்கு புது இளம் வீரர்களை அறிமுகப்படுத்தும்போது இந்தியா அநேகமாய் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான அதே அணியைத்தான் இதற்கும் களமிறக்குகிறது. டி-20 ஆட்டத்துக்குப் புதுமையான மனநிலையும் துணிச்சலும் தயக்கமின்றி அடித்தாடும் அணுகுமுறையும் வேண்டும். அவ்விதத்தில் அனுபவம் என்பது டி-20யில் ஒரு பாரமாக மாறுகிறது.

அனுபவமிக்கவர்கள் அதிகமாய் யோசித்து திட்டமிட்டு ஆடுகையில் சரளம் இல்லாமல் ஆகும். இதே அணியில் மாயங்க் அகர்வால், சாம்ஸன், கேதார் ஜாதவ், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, உமேஷ் யாதவ், மிஷ்ரா, நமன் ஓஜா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஆடினால் இன்னும் செயலூக்கமும் ஆவேசமும் தோன்றும்.

இந்திய அணி தேர்வாளர்களின் பிற்போக்கான, பழமையான அணுகுமுறைதான் நமது டி-20 சொதப்பல்களுக்குப் பிரதான காரணம். பிற அணிகளைப் போல் நாமும் டி-20க்கு ஒரு தனி அணித் தலைவரை நியமிப்பது நிச்சயம் பலன் தரும். ரோஹித் ஷர்மா டி-20 தலைவர் பதவிக்கு ஏற்றவர்.

ஆர்.அபிலாஷ்

Wednesday, October 07, 2015

சைக்கிளிங்

சைக்கிள் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்...
 

 சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பாக, மிதமான உணவையும் குடிநீரையும் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் அதிகமானால், வேகமாக சைக்கிள் ஓட்டும்போது வாந்தி வரவும் வாய்ப்பு உண்டு.

 முதலில் மெதுவாகத் தொடங்கி,  மிதமாக, வேகமாக, மிக வேகமாக என படிப்படியாகத்தான் சைக்கிளின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். சராசரியாக, மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்தில்  ஓட்டுவது சிறந்தது.

 காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் பயிற்சி செய்வது சிறந்தது. ஏனெனில், நண்பகல் நேரத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது, அதிக வெப்பநிலை காரணமாக,  உடல் எளிதில் சோர்வடைந்துவிடும்.

 இதயத் துடிப்பை அதிகப்படுத்தி, இதயத்தை வலுப்படுத்தவும், எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்கவும், தசைகளை வலிமைப்படுத்தவும் சைக்கிளிங் உதவுகிறது.

 கையுறைகள் அணிந்து சைக்கிள் ஓட்டுவதால், மேல் உடலின் அனைத்து எடையையும் உள்ளங்கையி்ல் சமன் செய்ய உதவும். தளர்வான உடைகள், தரமான காலணிகளை  அணிந்துகொண்டு சைக்கிள் பயிற்சி செய்ய வேண்டும்.

 போக்குவரத்து நெரிசல் குறைவான, இயற்கைச் சூழல்கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதன் மூலம் விபத்துகள் மற்றும் உடல்  மாசு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

 ஓய்வு நேரங்களில் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ளலாம். இன் மூலம் புதிய இடங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசிக்கும் வாய்ப்பும் அனுபவமும் கிடைக்கும்.

 சிறு வயது முதலே சைக்கிளிங் செய்வதால், உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கும் திறன், சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கிறது.

 முன் பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், கால் தசைகள் கூடுதல் பலம் பெறும். தினமும்  ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுவதால், கை, கால் தசைகள் உறுதி  பெறும்.

 உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும். உடல் வெப்பத்தையும் வியர்வையையும் வெளியேற்ற சைக்கிள் பயிற்சி உதவுகிறது.

 நம்மால் முடிந்த அளவிலான தூரத்துக்குச் செல்ல எப்போதும் சைக்கிளையே பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.
 

மிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..?

‘டெங்கு’ காய்ச்சல் பீதி, நாடெங்கிலும் பரவிவருகிறது. இதன் தாக்கம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அதைப் பற்றிய புரிதல் அவசியம். படியுங்கள்... தெளியுங்கள்!

 

 வைரஸ் காய்ச்சலான டெங்கு, `ஏயிடிஸ் எஜிப்டி' (Aedes aegypti) என்கிற கொசுக்களினால் பரவக் கூடியது. ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. இந்தக் கொசுக்கள், பகல் நேரங்களில் கடிக்கக் கூடியவை. கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும் இந்தக் கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டைகளை இடக்கூடியவை.

 நோயின் ஆரம்ப கட்டத்தில் அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்பகுதியில் வலி ஏற்படுதல், எலும்பை முறிக்கும் அளவுக்கு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், காய்ச்சல் குறைந்த பிறகும் தோல் தடித்து சிவப்படைதல் போன்றவை ஏற்படும். முறையான சிகிச்சை இன்றி அடுத்தகட்டம் போகிறபோது, கல்லீரல் அழற்சி, சுவாசக் கோளாறு, மூளையில் ரத்தக் கசிவு, மூளை நரம்பு செயலிழத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.

 பொதுவாக ஒரு மனிதனின் மைக்ரோ லிட்டர் ரத்த அளவில், 1,50,000 - 4,50,000 வரை தட்டணுக்கள் (Platelete Transfusion) இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைந்துவிடுகிறது. விளைவாக பல் ஈறுகள், மூக்கு, வயிறு, குடல் இவற்றில் ரத்தக் கசிவு உண்டாகிறது. இன்னும் 10,000 மைக்ரோலிட்டராக  குறைகிறபோது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தட்டணுக்களை உட்செலுத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது.

 நல்ல ஓய்வு, உடலின் நீர் இழப்பை சரிசெய்யும் உணவு, காய்ச்சலுக்கு தகுந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்... இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

 பப்பாளி இலைச் சாறு, டெங்கு காய்ச்சலின் வீரியத்தைக் குறைக்கும். நம் பாரம்பர்ய நாட்டுவைத்திய முறையில், நிலவேம்பு, மலைவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு எல்லாம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்று கூறியுள்ளார்கள்.

‘மைக்ரோ’ மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்து, ‘கேரிகா பப்பாயா’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட பப்பாளியின் இலைச் சாற்றில் இருந்து ‘கேரிபில்’ எனும் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளது.

நமக்கிருக்கிறது நம் பாட்டன் சொன்ன வைத்தியம்... பப்பாளி இலைச் சாறு!.


நவராத்திரி

ரம்பமாகிவிட்டது கொண்டாட்ட சீஸன். விநாயகர் சதுர்த்தியை அடுத்து, நவராத்திரி இதோ வந்துகொண்டே இருக்கிறது. அதை எவ்விதம் வரவேற்கலாம், அதற்கான வழிபாடுகள் எப்படி இருக்க வேண்டும்?``புரட்டாசி மாதம் 26 (அக்டோபர் 13) அன்று துவங்குகிறது சாரதா நவராத்திரி. அமாவாசைக்குப் பிறகு வருகிற இந்த 9 நாட்களைத்தான் சாரதா நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நவராத்திரி என்றால் (நவ=புதுமை, ராத்ரம் = அறிவு) புதுமையான அறிவைப் பெறுகின்ற ஒன்பது நாட்கள் என்கிறது சாஸ்திரம். இந்த 9 நாட்களில் நாம் அம்பிகையை வழிபட்டு வந்தால், தீமைகள் விலக்கப்பட்டு, நன்மைகள் நம்மை வந்தடையும்.

இந்த ஒன்பது நாட்களையும் மூன்று கட்டங்களாகப் பிரித்து வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்கையை ‘ஓம் துர்காயை நமஹ’ என்கிற மந்திரத்து டனும்; அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை ‘ஓம் லக்ஷ்ம்யை நமஹ’ என்கிற மந்திரத் துடனும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை ‘ஓம் ஸ்ரஸ்வத்யை நமஹ’ என் கிற மந்திரத்துடனும், 108 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். எட்டாவது நாளான துர்காஷ்டமி அன்று, ‘ஓம் சாமுண்டாயைநமஹ’ என்று 27 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்த படிக்கட்டுகளை அமைத்து, கொலு வைத்து மாலை 4.30 முதல் 9 மணி வரை வழிபாடு செய்யலாம். ஊதுபத்தி ஏற்றி தீபம் காட்டி, நைவேத்தியம் படைத்து, கற்பூரம் காட்டி பூஜையை முடிக்க வேண்டும். திருமணமான பெண்கள், கன்னிகளுக்கு உங்களால் முடிந்தவற்றை தானமாக வழங்க வேண்டும். வருகிறவர்களுக்கு குங்குமம் கொடுத்தால்கூட போதுமானதே! ஒன்பது நாட்களும் இருவேளை உணவில் அரிசியைத் துறந்து, டிபன் உணவுகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள், உணவுப்பொருட்கள் அல்லது உணவுகளை இல்லாதவர்களுக்கு மனதார தானம் செய்யலாம்.

ஒன்பதாவது நாளான சரஸ்வதி பூஜையன்று, ‘யா தேவி ஸர்வ பூதேஷூ’என்று தொடங்கும் மந்திரத்தை 9 முறை சொல்லி வழிபட வேண்டும். அன்று பூஜையில் வைத்த பொருட்களை 10-வது நாளான விஜயதசமி அன்று எடுத்துப் பயன் படுத்தி பூஜையை முடிக்க வேண்டும்’’.

யுமி ஃபேர் (Umi Fair)_ஐடியா பேட் _பேனாசோனிக் எலுகா ஐகான்

டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல் 295 PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1GHz Quad-Core MediaTek MT6735.
ரேம் – 1 ஜிபி
பேட்டரி – 2000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 ஜிபி
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 ஜிபி வரை.
எடை – 120 கிராம்.
சிம் 1 & சிம் 2 – 3ஜி மைக்ரோ சிம்.
இதில் ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர் உள்ளது.
பிளஸ்: விலை, ஃபிங்கர் ஃபிரின்ட் ஸ்கேனர், டெக்னாலஜி
மைனஸ்: பேட்டரி, டிசைன்.
விலை: ரூ 6,500


லெனோவோ ஐடியா பேட் Y700-17ISK: (Lenovo IdeaPAd Y700-17ISK)

இது ஒரு பிரத்யேகமான கேமிங் லேப்டாப்.
டிஸ்ப்ளே – 17 இன்ச் முழு HD 1920*1080 டிஸ்ப்ளே.
பிராசஸர் – இன்டெல் Quad-கோர் i7-6700HQ (2.6GHz). டர்போ மோட் – 3.5GHz.
கிராபிக்ஸ் பிராசஸர் – NVIDIA GTX 960M + 4 ஜிபி GDDR5.
ரேம் – 16 ஜிபி DDR4.
இயங்குதளம் – விண்டோஸ் 10
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 1 டிபி 5400RPM + 128 ஜிபி Solid State Drive.
எடை – 3.5 கிலோ கிராம்.
பிளஸ்: தொழில்நுட்பம்
மைனஸ்: எடை
விலை:  ரூ 1,25,000.

பேனாசோனிக் எலுகா ஐகான் (Panasonic Eluga Icon)

Flipkart: http://bit.ly/1KX6QLC

Amazon: http://amzn.to/1jF0ucU

டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 720x1280 பிக்ஸல் 267 PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo-Core MediaTek MT6752.
ரேம் – 2 ஜிபி.
பேட்டரி – 3500 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி வரை.
எடை – 147 கிராம்.
சிம் 1 - 4ஜி மைக்ரோ சிம்.
சிம் 2 - 3ஜி மைக்ரோ சிம்.
பிளஸ்:  செயல்பாடு  4ஜி வசதி  டிசைன்
மைனஸ்:  கேமரா  இயங்குதளம்
விலை: ரூ 12,199.


யூ ஜூஸ் (Yu Jyuice)

இது ஒரு போர்ட்டபுள் பவர் பேங்க் சார்ஜர்.

5000mAh மற்றும் 10000mAh என இரண்டு மாடல்களில்  விற்கப்படுகிறது.

அலுமினியம் அலாய் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் இந்த பவர் பேங்கின் அகலம் 8 மி.மீ.

5000mAh பவர் பேங்க் ஒரு USB 2.0 போர்ட் மற்றும் ஒரு மைக்ரோ USB போர்ட்டை கொண்டுள்ளது.

இந்த இரண்டு மாடல்களும் 5V/2.4A மின்சக்தியை வெளியிடுகின்றன.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு LED லைட் இதில் உள்ளது. இதன் சார்ஜ் 30 சதவிகிதத்துக்கு கீழ் இருக்கும் போது இது சிவப்பாகவும் 30-70% இருக்கும்போது மஞ்சள்  நிறத்தில் எரியும். 70 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்போது பச்சை நிறத்தில் எரியும்.

விலை: 5000mAh - ரூ 699; 10000mAh : ரூ 1,099.

செ.கிஸோர் பிரசாத் கிரண்