Search This Blog

Wednesday, February 29, 2012

எனது இந்தியா! ( உப்புக் கடத்தல் ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
சுங்கத் தடுப்பு வேலி எனப் பெயரிட்டப்பட்ட இந்த நீண்ட வேலி இந்தியாவை இரண்டாகப் பிரிக்கத் தொடங்கியது. இதனால், உப்பு, சர்க்கரை, தானியங்கள், எண்ணெய் என எந்தப் பொருளைக் கொண்டுசென்றாலும், அது அரசின் கண்காணிப்பு வளையத்துக்குள் இருந்தது. இந்தச் சாவடிகளில் வரிவசூல் செய்யப்பட்டது. அதை மீறுபவர்களை, கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தது அரசு.இந்தச் சூழ்நிலையில் 1867-ல் சுங்கத்துறையின் ஆணையராகப் பொறுப்பு ஏற்றார் ஆலன் ஆக்டோ​வியன் ஹியூம். இவர்தான், பின்னாளில் காங்கிரஸ் இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தவர்.  சுங்கத் தடுப்பு வேலி உருவாக்குவதற்கும் பராமரிப்புக்கும் எவ்வளவு  செலவாகிறது என்று,  ஹியூம் ஆராய்ந்தார்.  வருமானத்தில் பாதி, பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது என்பதைக் கண்டு பிடித்தார்.தடுப்புச் சுவருக்குப் பதில் உயரமாக வளரும் முட்கள் கொண்ட இலந்தைச் செடிகளை நட உத்தரவிட்டார். எட்டு அடி உயரமும் நான்கு அடி அடர்த்தியுமாக இந்தச் செடிகள் வளர்க்கப்பட்டன. இலந்தை விளையாத இடங்களில் கடுமையான முட்செடிகள் வளர்க்கப் பட்டன. அதுவும் விளையாத இடங்களில் காட்டு முட்களால் பெரியவேலி அமைக்கப்பட்டது. விஷம் உள்ள பாம்புகளும் தேள்களும் நிரம்பிய அந்த வேலியைக் கடந்து செல்வது கடினம்.
 
ஒரு மைலுக்கு ஒரு காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. முள் வேலியை இரவு பகலாக 14,000 வீரர்கள் கண்காணித்தனர். தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதை உள்ளுர்வாசிகள் எதிர்க்கக் கூடாது என்பதற்காக, ஆளுக்கு ஒரு கிலோ உப்பு இலவசமாகக் கொண்டுபோக அனுமதி அளிக்கப்பட்டது. 1,727 சோதனைச் சாவடிகள், 136 உயர் அதிகாரிகள், 2,499 உதவி அதிகாரிகள், 11,288 காவல் வீரர்கள்கொண்ட இந்த மாபெரும் முள் வேலியின் வழியாக 1869-70ம் ஆண்டில் கிடைத்த உப்பு வரி 12 லட்ச ரூபாய். இத்துடன் ஒரு மில்லியன் பணம் சர்க்கரை மற்றும் இதர பொருட்களின் வரியாக வசூலிக்கப்பட்டது.தடுப்பு வேலிக் காவல் பணிக்கு வேலைக்கு வர நிறையப் பேர் தயங்கினர். நாடோடி மக்களுடன் சண்டையிட வேண்டும் என்ற பயம் இருந்தது. அதற்காகவே, மற்ற எந்த வேலையைவிடவும் இரண்டு மடங்கு சம்பளம், சோதனைச் சாவடிக் காவல் பணிக்கு வழங்கப்பட்டது. அதாவது, ஒரு ஆளின் மாதச் சம்பளம் 5 ரூபாய். அது ஒரு விவசாயி ஆறு மாத காலம் ஈட்டும் வருவாயைவிடவும் அதிகம். ஒரு  அதிகாரியின் கண்காணிப்பில் 10 முதல் 40 சுங்கச் சாவடிகள் இருந்தன.அதிகாரிகள் தங்குவதற்கு, சுங்கச் சாவடி அருகிலேயே கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இவ்வளவு கடுமையான முள்வேலியைத் தாண்டியும் பஞ்சார் இன மக்கள் உப்பைக் கடத்தினார்கள். உப்பைக் கடத்தும் ஒரு குழு, வேலியின் ஒரு பக்கம் நின்று அதை வானில் தூக்கி வீசி எறிவார்கள். மற்றொரு குழு மறு பக்கம் அதைச் சேகரித்துக்கொள்வார்கள். இதுபோல, தேனீக்களை மொத்தமாக ஒரு குடுவையில் பிடித்து வந்து சோதனைச் சாவடியில் திறந்து விட்டு, அந்தச் சூழலை பயன்படுத்தி உப்பைக் கடத்துவதும் வழக்கம். சில அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்துள்ளனர். முள்வேலியின் வழியே லஞ்சமும், அதிகாரத் துஷ்பிரயோகமும், வன்முறையும் அதிகரிக்கத் தொடங்கியது.பீகாரில் அமைக்கப்பட்ட முள்வேலியைக் கடந்து உப்பைக் கடத்த முயன்ற 112 பேர் கொண்ட ஒரு குழுவை, காவலர்கள் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் ஆயுதங்களால் தாக்கி காவலர்களைக் கொன்றுவிட்டு உப்பைக் கடத்திய சம்பவம் நடந்திருக்கிறது.நாடோடி மக்களைப் பகைத்துக்கொள்ள முடியாது என்று, 800-க்கும் மேற்பட்ட காவல் வீரர்கள் வேலையில் இருந்து விலகினர். 115 காவல் வீரர்கள் சண்டையில் இறந்து போயினர். 276 பேர் உப்பு கடத்த உதவினார்கள் என பணிநீக்கம் செய்யப்பட்டனர். 30 பேர் வேலையை விட்டு ஓடிப்போயினர். 23 பேரை லாயக்கு அற்றவர்கள் என்று கம்பெனியே விலக்கியது. சோதனைச் சாவடிகளில் உப்புக் கடத்தியவர்கள் என்று 1873-ல் பிடிபட்டவர்கள் எண்ணிக்கை 3,271. அதுவே 1877-ம் ஆண்டில் 6,077.
 
 
காவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை கிடையாது. தொடர்ச்சியாக இரண்டு பகல் - ஓர் இரவு என ஒருவர் வேலை செய்ய வேண்டும் என்பதே நடைமுறை. இப்படி ஒரு பட்டாளமே சேர்ந்துகொண்டு ஒடுக்கும் அளவுக்கு உப்பில் இருந்து வருவாய் கிடைத்தது.நிலத்துக்கு வரி விதிப்பதன் மூலம், இந்திய நிலப்பிரபுகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் எதிர்ப்புக் குரல் லண்டன் வரை ஓங்கி ஒலித்தது. ஆனால், உப்புக்கு வரி விதிப்பதை எதிர்த்த சாமான்ய மக்களின் குரல் இங்கிலாந்தை எட்டவே இல்லை. மாறாக, அடுத்தடுத்து வந்த கவர்னர்கள் உப்பு மூலம் வருமானத்தைப் பெருக்குவது எப்படி என்பதிலேயே கவனமாக இருந்தனர். கடத்தி வந்து பிடிபட்ட உப்பை, சோதனைச் சாவடி ஊழியர்கள் தாங்களாகவே குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கியதுடன், தங்களுக்குள் ஓர் உடன்பாடு செய்துகொண்டு கையூட்டு பெறுவதை வழக்கம் ஆக்கினர். இதனால், இந்த முள் வேலியின் இறுக்கம் தளர ஆரம்பித்தது. அது போலவே, முள் வேலியின் பராமரிப்புச் செலவு அதிகமாகி வருகிறது, ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று கம்பெனி அறிவுறுத்திய காரணத்தால், 4,000 ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.1872-ல் பதவிக்கு வந்த மாயோ பிரபு, உப்பு வணிகம் குறித்து அன்றைய உள்நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பொதுத் தீர்வு காண முடியும் என்று அறிவித்தார். அதன் பிறகு, பதவிக்கு வந்த நார்த் புருக் பிரபு, 'இந்த முள் வேலியால் நிறையப் பொருள் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, உப்பு மீதான வரியை நீக்கிவிடலாம்" என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.1876-ல் உருவான வங்காளப் பஞ்ச காலத்தில்கூட உப்பு மீதான வரி முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. அதோடு, வங்காளத்துக்கு தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு இந்த முள் வேலி தடையாக இருக்கிறது என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படியும்கூட, உப்பு மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க பிரிட்டிஷ் அரசு விரும்பவில்லை.லிட்டன் பிரபு முயற்சியால் உப்புக்கு விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், அதற்கான வரியும் ஒழுங்கு செய்யப்பட்டது. 1880-ல்தான், சோதனைச் சாவடிகள் மூடப்பட்டன. 1882-ல் ரிப்பன் பிரபு இந்தியா முழுவதும் ஒரு மூட்டை இரண்டு ரூபாய் என விலை நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும், இந்திய எல்லைப் பகுதிகளில் உப்புக்கு வரி விதிக்கப்பட்டே வந்தது.இந்த உப்பு வரியால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி, பிரேம்சந்த் ஒரு கதை எழுதி இருக்கிறார். 'நமக் கா தாரோகா' என்ற அந்தக் கதையில் பணக்கார உப்பு வியாபாரியின் வண்டிகளை சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யும் உப்பு இன்ஸ்பெக்டர், எப்படி வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு அதே முதலாளியின் கீழே ஊழியராக வேலைக்குப் போகிறார் என்பது விவரிக்கப்பட்டு இருக்கிறது.உப்பு எளிய மக்களின் அன்றாடத் தேவை. அன்றாட உணவுப் பொருட்கள் உள்ளுரில் மக்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடும். ஆனால், உப்பு வெளியில் இருந்துதான் வாங்கப்பட வேண்டும். அதற்கு உப்பு வியாபாரிகள் மட்டுமே ஒரே வழி. அந்த வழியை ஏகபோகமாக்கி காலனிய அரசு பணம் சம்பாதிக்கத் தொடங்கியதும், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டனர். உப்பு இல்லாமல் உணவே இல்லை என்ற காரணத்தால், உப்பைப் பெறுவதற்காக அவர்கள் அதிக விலை கொடுக்க முன்வந்தனர். மக்களின் அடிப்படைத் தேவையைக் காட்டி ஏமாற்றிப் பணம் சம்பாதித்தது பிரிட்டிஷ் அரசு.
 
உப்பு மீதான தடை இல்லாத வணிகத்துக்கு மாற்றாக, 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தியர்​களால் தயாரிக்கப்படும் உப்புக்கு ஆங்கிலேய அரசு மீண்டும் வரி விதித்தது. உப்பை அரசாங்க நிறுவனத்திடம் மட்டுமே விற்க வேண்டும் என்று உப்பு காய்ச்சுபவர்களை ஒடுக்கியது.அதை விலக்கிக்கொள்ளுமாறு காந்திஜி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். அது நிராகரிக்க ப்பட்டது. உப்பின் வரலாற்றை அறிந்திருந்த காந்தி, அது எளிய மக்களின் ஆதாரப் பிரச்னை. அதை உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்று சத்தியா க்கிரக முறையில் எதிர்க்க முடிவெடுத்தார். மார்ச் 12, 1930 அன்று 78 சத்தியாக்கிரகிகளுடன் அகம​தாபாத்தில் இருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி, 240 மைல் நடைப் பயணத்தைத் தொடங்கினார். அப்போது, காந்தியின் வயது 61.24 நாட்கள் நடைப்பயணத்தின் முடிவில், தண்டி கடற்கரையில் கடல்நீரைக் காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் அரசின் சட்டத்தை மீறினார் காந்தி. தன்னைப் போலவே மற்றவர்களையும் உப்புக் காய்ச்சும் பணிக்கு ஆணையிட்டார். தடுக்க முயன்ற போலீஸ்காரர் லத்தியால் தாக்கியதில் ஒரு சத்தியாக்கிரகிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. அந்த ரத்த வேகம் இந்தியா முழுவதும் பரவியது. அன்று, காந்தியின் கைப்பிடியில் இருந்தது வெறும் உப்பு அல்ல, அது இந்திய மக்களின் நம்பிக்கை. இந்தியாவெங்கும் உப்பு சத்தியாக்​கிரக த்தால் பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடை க்கப்பட்டனர். இதைச் சமாளிக்க வழி தெரியாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் உப்பு மீதான வரியை நீக்கிக் கொண்டது.உப்பு சத்தியாக்கிரகம் என்பது அறப்போர் மட்டும் அல்ல. அது ஒரு மகத்தான வரலாற்றுப் பாடம். இந்திய மக்களை உப்பின் பெயரால் ஏமாற்றி வந்த வெள்ளை அரசுக்கு விடப்பட்ட இறுதி எச்சரிக்கை. எளிய மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதற்கு எதிரான மக்கள் எழுச்சி. அதிகார அரசியலை எதிர்க்கும் ஆயுதமாக உப்பைக்கூட பயன்படுத்த காந்தியால் முடிந்திருக்கிறது. மகத்தான மனிதர்களே மகத்தான வழிகளை உருவாக்கிக் காட்டுகிறார்கள் என்பதையே காந்தி நிரூபித்து இருக்கிறார்.உப்பு பரிமாற்றத்தைத் தடுக்க அமைக்கப்பட்ட முள்வேலியை பற்றித் தேடித் திரிந்து உலகுக்கு அடையாளம் காட்டிய ராய் மார்க்ஸ்ஹாம், முள் வேலியைக் காண்பதற்காக இந்தியா முழுவதும் அலைந்திருக்கிறார். லண்டன் ஆவணக் காப்பகத்தில் உள்ள ரிக்கார்டுகளை நாட்கணக்கில் வாசித்து இருக்கிறார். நாடோடி போல நுரையீரலில் புழுதி படியத் தேடியும் முள்வேலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய சாலைகள் உருவானதும், ரயில் பாதைகளின் வரவும் சுங்கவேலியை அடையாளம் அற்றதாக ஆக்கிவிட்டது.உத்தரப் பிரதேசத்தின் எடவா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தூர்ந்துபோன முள்வேலியின் ஒரு பகுதியை அவருக்கு அடையாளம் காட்டியிருக்கிறான் ஒரு திருடன். அது ஒன்றுதான் உப்புக்காக அமைக்க ப்பட்ட முள்வேலியின் சான்று. இந்தச் சான்றுடன் தனது உப்பு வரி குறித்த ஆய்வைத் தொகுத்து, பிரிட்டிஷ் அரசு இந்தியாவை எப்படி எல்லாம் சுரண்டியது எனப் பல சான்றுகளுடன் விவரித்து எழுதியிருக்கிறார்.உப்பு வணிகத்தில் என்றோ காலனிய அரசு மேற்கொண்ட அதே தந்திரங்களைத்தான் இன்றைய பெரும் வணிக நிறுவனங்கள் அயோடின் கலந்த உப்பு என்ற பெயரில் அதிக விலை வைத்து ஏகபோகம் செய்து வருகின்றன. எக்னாமிக் டைம்ஸ் நாளிதழில் ஒரு புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஒரு கிலோ உப்பு தயாரிக்க இன்று ஆகும் செலவு ரூ 1.40. அதன் பேக்கிங் செலவு 50 பைசா. போக்குவரத்துக் கட்டணம் 90 பைசா. உள்ளுர் வரிகள் 30 பைசா. இதர செலவுகள் 40 பைசா என்றால், விற்க வேண்டிய விலை ரூ 3.50. ஆனால், விற்கும் விலையோ ரூ 11 முதல் 13 வரை. ஒரு கிலோ உப்பு வழியாகக் குறைந்தபட்சம் 9 ரூபாய் சம்பாதிக்கின்றன பெரும் நிறுவனங்கள்.
 
வரலாறு சுட்டிக்காட்டும் எளிய உண்மை, உப்பின் பெயரால் இந்திய மக்கள் இன்றும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதுதான்!
 
விகடன் 

Tuesday, February 28, 2012

அருள் மழை ----------- 43

ஸ்ரீ பெரியவா சரணம்
.
மணக்கால்  நாராயண சாஸ்திரிகள் பாலசுப்ரமணியம் --- மஸ்கட்

எங்கள் தகப்பனார் ஸ்ரீ மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரி யாக ஸ்ரீ பெரியவாள் கைங்கர்யம் செய்து கொண்டு தன்னை விஜய தசமி அன்று ஸ்ரீ பெரியவா ஸ்ரீ சரணம் அடைந்து  கைங்கர்யம் செய்து கொண்டு இருக்கிறார். ்.

ஒரு சமயம் சுமார் 48 வருஷம் முன்பு வியாச பூஜா முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம் ஸ்ரீ பெரியவா இந்த முறை நவராத்திரி பூஜைக்கு  உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார்.  எங்கள்  தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் ஸ்ரீ பெரியவா    நவராத்திரி பூஜைக்கு  உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார்.  இதே போல மூன்று முறை  சொல்லிவிட்டு ஸ்ரீ பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி)  இடம் ஸ்ரீ பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார்.  எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா நீ ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான்  உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.  

அப்பா ஸ்ரீ பெரியவாளிடம்  ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி 'அப்படியா' என்று கேட்டாராம்.  ஸ்ரீ பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை   பெண் குழந்தை பிறந்தது.  குழந்தைக்கு ஸ்ரீ பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்துகொள்ளும் பாக்கியம் ஸ்ரீ பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா

இது போல அந்த மகான் நடத்திகொண்டிருக்கும் அற்புத லீலைகள் பல,

இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது 

ரிலையன்ஸ் கே.ஜி.6 பின்னணி?

ரிலையன்ஸ் நிறுவனம்தான் சர்ச்சைகளை உருவாக்குகிறதா அல்லது சர்ச்சைகள்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறதா என்கிற கேள்விக்கு பதிலே கிடையாது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சர்ச்சை இயற்கை எரிவாயு வடிவத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

இந்த சர்ச்சையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், கடந்த சில ஆண்டுகளில் நடந்த முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா - கோதாவரி 6-வது படுகையில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் க்யூபிக் மீட்டர் (எம்.எம்.எஸ்.சி.எம்.டி.) இயற்கை எரிவாயு எடுப்பதற்கான உரிமையை மத்திய அரசிடமிருந்து பெற்றது ரிலையன்ஸ் நிறுவனம்.இப்பகுதியில் மொத்தம் 31 கிணறுகள் தோண்டலாம்.   ஆனால், இதுவரை 22 கிணறுகளை மட்டுமே தோண்டி இருக்கிறது. அவற்றுள், 18 கிணறுகளில் இருந்துதான் இயற்கை எரிவாயு எடுக்கப்படுகிறது.ஆரம்பத்தில் இந்த கிணறுகளிலிருந்து 70 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை எடுத்தது. ஆனால், இன்றைக்கு வெறும் 37 எம்.எம்.எஸ்.சி.எம்.டி. இயற்கை எரிவாயுவை மட்டுமே எடுக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் இது 22 எம்.எம்.எஸ்.சி.எம்.டி.யாக குறையலாம் என்கிறது ரிலையன்ஸ்.எந்த நிறுவனமாக இருந்தாலும் காலம் செல்லச் செல்ல உற்பத்தியை அதிகரிப்பதே வழக்கம். ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டே போகிறதே, என்ன காரணம்? எரிவாயு கிடைக்கவில்லையா அல்லது அதை எடுக்க ரிலையன்ஸுக்கு மனசில்லையா? இந்த கேள்வியை பலரும் கேட்கத் தொடங்கியதே சர்ச்சையின்   ஆரம்பம்.  

''இயற்கை எரிவாயு உற்பத்தி குறைந்தது மிகவும் சீரியஸான பிரச்னை. இதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்'' என்று சமீபத்தில் எச்சரித்திருக்கிறார் பெட்ரோலியத்  துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் காரணங்களால் எதிர்பார்த்த அளவுக்கு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியவில்லை என்கிறது ரிலையன்ஸ். எல்லா கிணறுகளையும் தோண்டாமல் உற்பத்தி குறைவதாகச் சொல்வது சரியில்லை என்கிறது மத்திய அரசு.இயற்கை எரிவாயுவிற்கு தற்போது தரப்படும் விலை (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் (MMBTU) 4.2 டாலர். 'இந்த விலை எங்களுக்குப் போதாது’ என்று மத்திய அரசிடம் கேட்டது ரிலையன்ஸ். ஆனால், 2014-ம் ஆண்டு வரைக்கும் விலையை உயர்த்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி ரிலையன்ஸின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு உற்பத்தியை மேலும் குறைத்திருக்கிறது ரிலையன்ஸ்.

இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

'தற்போது  உலகச் சந்தையில் மூன்று முதல் நான்கு டாலருக்கு மேல் ஒரு எம்.எம்.பி.டி.யூ. இயற்கை எரிவாயு விற்கப்படுகிறது. ஆனால், ரிலையன்ஸுக்கு கிடைக்கும் தொகையோ 4.2 டாலர். தற்போதைய நிலையிலே மார்க்கெட் விலையைவிட அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தும், இன்னும் அதிக விலை வேண்டும் என்று சொல்லி ரிலையன்ஸ் உற்பத்தியைக் குறைக்கக்கூட செய்யலாம்.இயற்கை எரிவாயுவை  சரியாக பயன்படுத்தினால் மின்தட்டுப்பாடு உள்பட பல பிரச்னைகளுக்கு நம்மால் எளிதாக தீர்வுகாண முடியும். மத்திய அரசு இது தொடர்பாக கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவது நாட்டுக்கு நல்லது.

அருள் மழை ----------- 44

சக்தி விகடன் பொறுப்பாசிரியர் திரு. ரவி பிரகாஷ் கூறுகிறார்…..


நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காககலவையில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்குசமஷ்டி உபநயனம்செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு..........அவர் சொன்னார்

எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

Monday, February 27, 2012

அருள் மழை ----------- 42


*நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான எண்ணம்.
*அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல் போய்விடும். சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி.
*எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம். வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும். இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.
*நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம். கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை நம்மால் உணரமுடிகிறது.
*எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல, நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும். அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரமலேசாகி விடும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

Sunday, February 26, 2012

பவர்கட்: பசுமை வீடுகள்தான் தீர்வு!


பவர்கட், தண்ணீர் பஞ்சம் என பல பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வாக மாறி இருக்கின்றன பசுமை வீடுகள். பசுமை வீடுகளா.. அப்படி என்றால்? அதனால் என்ன பயன்? சாதாரண வீடுகளுக்கும் பசுமை வீடுகளுக்கும் என்ன வித்தியாசம்?

இயற்கை வீடு!

''இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல், அதே நேரத்தில் அதிலிருந்து கிடைக்கக்கூடிய சூரிய வெளிச்சம், மழை நீர் மற்றும் காற்று போன்ற விஷயங்களை அதிகமாகப் பயன்படுத்திக் கட்டப்படும் வீடுகளே பசுமை வீடுகள். சாதாரண வீடுகளைக் காட்டிலும், பசுமை வீடு கட்ட கொஞ்சம் அதிகம் செலவாகும்.  ஆனால், ஓரிரு வருடங்களில் வீடு கட்ட ஆன அதிக செலவை நம்மால் திரும்ப எடுத்துவிட முடியும்'' .

நோ பவர் கட்!

'சூரிய வெளிச்சம், காற்று என இயற்கை நமக்கு அள்ளித் தருவதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஃபேன், ஏ.சி. லைட்னு தேவையில்லாமல் மின்சக்தியை வீணடிக்கிறோம். இப்படி இல்லாமல் சூரிய வெளிச்சம் வீடு முழுக்க கிடைக்கிற மாதிரி வீடுகளைக் கட்ட வேண்டும். வீடு கட்டும்போது எல்லா பக்கமும் சுவர்களால் அடைக்காமல் அதிகமான ஜன்னல்களுடன் அமைக்க வேண்டும். ஒவ்வொரு செங்கல்லுக்கும் நடுவில் இடைவெளி விட்டு கட்டுவதன் மூலம் வீடு குளுகுளுவென்று இருக்கும்.  வெளிச்சமும் வீடு முழுக்க பரவும். இதனால் பகல் நேரங்களில் விளக்கோ, ஃபேனோ மற்றும் ஏ.சி.யோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

தண்ணீர் பஞ்சமிருக்காது!

இன்றைக்கு தண்ணீருக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாயை செலவழிக்கிறோம். பசுமை வீடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய மழைநீரை மாடியில் ஒரு தொட்டி கட்டி சேமித்து வைத்து, அதை சுத்தப்படுத்தி குடிக்கவும்,  நம் வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

கரன்ட் பில் ரூ.௭௦

இந்தியா முழுக்க பல பசுமைக் கட்டடங்கள் இருந்தாலும், இரண்டே இரண்டு வீடுகளை மட்டும் பசுமை வீடுகளாக அறிவித்து, சான்றிதழ் அளித்திருக்கிறது ஹைதராபாத்தில் உள்ள 'இந்தியன் கிரீன் கவுன்சில்’. அந்த வீடுகளில் ஒன்று சென்னை, மடிப்பாக்கத்தில் இருக்கிறது.

தீபா 
இ.என்.த்ரீ கன்சல்டன்ட் 

விகடன் 

வாட்டத்தில் மின் வாரியம்


இன்னமும் மூன்று மாதத்தில் நிலைமை சரியாகும்" என்று சென்ற மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா சொன்னார். ஆனால், இப்போது மின்சாரத் தட்டுப்பாடு ஜூன், ஜூலையில் நிலைமை ஓரளவு சீரடையும். 2013ல் தமிழ்நாடு முற்றிலும் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறும்" என்று சொல்லிவிட்டார். ஆக, தொடருது ஷாக்... என்னதான் கோளாறு? எங்கேதான் கோளாறு? தமிழ்நாட்டின் மின் உற்பத்தியின் நிறுவுதிறன் 10,300 மெகாவாட். ஆனால் உற்பத்தி ஆவதோ சுமார் 8000 மெகாவாட்தான். நமது தமிழகத்தின் தேவை 10,500 மெகா வாட்டிலிருந்து, 11,500 மெகாவாட் வரை போகும். கோடையின்போது, தேவை இன்னமும் ஆயிரம் மெகாவாட் உயர்ந்து 12,500 வரை கூட போகும். எனவே, நமது தினசரி பற்றாக்குறை 3000 முதல் 4000 மெகாவாட் வரை. இதை எப்படி ஈடு செய்கிறார்கள். காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம், வெளி மாநில மின்வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கும் மின்சாரம், இதர மின் கட்டுப்பாட்டு முறைகளாலும் இந்தப் பற்றாக்குறை ஈடுகட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் கிடையாது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கலாம் என்றால் நிதி நெருக்கடி காரணமாக, பல நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் பாக்கி வைத் திருப்பதால் வேண்டிய இடத்தில் மின்சாரம் வாங்க முடிய வில்லை. தவிர, தினசரி தேவை எகிறிக்கொண்டே போக... விளைவு பவர்கட்.
2008ல் தொடங்கப்பட்ட திட்டங்களான வல்லூர் மற்றும் வடசென்னை விஸ்தரிப்பு மின் நிலையங்கள் 2011ல் செயல்பட்டிருக்க வேண்டும். சரியான முனைப்பு காட்டாததால் உற்பத்தி தள்ளிப்போகிறது. வரும் ஜூனில் சுமார் 1000 மெகாவாட் இந்த இரு மின் நிலையங்களிலிருந்து எதிர் பார்க்கலாம்.  ஏப்ரல் 10 முதல் காற்றாலை மின்சாரம் 1000 மெகாவாட் கிடைக்கக்கூடும். இதற்குள் கூடங்குளம் இயங்கும் வாய்ப்பு கிடைத்தால் கூடுதலாக 800 மெகாவாட் கிடைக்கும். தமிழகத்தின் தற்போதைய மோசமான மின் நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக, கூடங்குளத்தை இயக்க, தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.ஏப்ரல், மே, ஜூனில் மேற்கண்ட வகையில் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், நீர் மின்சாரம் மிகக் குறைந்த அளவே கிடைக்கும் என்பது மற்றொரு கவலை. நான்கு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் அனல் மின்சாரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக முழு அளவில் உற்பத்தி ஆகவில்லை. புதிய மின் நிலையங்களில், திட்டமிட்டபடி உற்பத்தியை முழு அளவில் உறுதி செய்ய, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு அவசியம். முதல்வரே நேரிடையாக விஸிட் செய்து வேகப்படுத்தலாம். பவர்கட்டை சீரமைக்கும் விதமாக உயர் அழுத்த மின் சந்தாதாரர்களுக்கு ‘பவர் விடுமுறை’ விடுவதுகூட பிரச்னையைக் குறைக்காது. ஏனென்றால் இரண்டுகோடி சந்தாதாரர்களில் சுமார் 5000 பேர்தான் உயர் அழுத்த மின் பயன்பாட்டாளர்கள்.
‘கோமா’ நிலையில் இருக்கிறது மின்வாரியம். வரவு 23000 கோடி என்றால், செலவு 33000 கோடி. பற்றாக்குறை 10000 கோடி. செலவில் 20000 கோடி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே போகிறது. இது தவிர இலவச மின்சாரத்தால் வருடத்துக்கு 10000 கோடிக்கு மேல் இழப்பு.அரசாங்கம் சில கசப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக யாரும் எதிர்க்கக் கூடாது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் தவிர வேறு எந்த மாநிலமும் இலவச மின்சாரம் கொடுப்பதில்லை. மின் உற்பத்தியை அதிகரித்து, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கினால், கட்டணம் உயர்ந்தால்கூட எதிர்ப்பு இருக்காது. விவசாயத்துக்கு தனி டிரான்ஸ்பார்மர், லைன் என்று குஜராத் பாணியில் செய்யலாம். மின் இழப்பை (line loss) குறைத்தால் உற்பத்தி கணிசமாகக் கூடும். தவிர மின்வாரியம் பற்றிய முழு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அரசின் சிரமங்களைப் புரிந்துகொண்டு மக்கள் ஒத்துழைக்க வசதியாக இருக்கும்.
‘கருத்துக் களம்’ ஆசிரியர்  தங்க துரை.  
தி.மு.க. வின் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பொதுச்செயலாளர் ரத்தின சபாபதி.

Saturday, February 25, 2012

எனது இந்தியா! (உப்பு வேலி ) - எஸ். ராமகிருஷ்ணன்....


பெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா? 4,000 கி.மீ நீளமும் 12 அடி உயரமும் கொண்டது அந்த வேலி.  வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது.  The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான 'சுங்க வேலி' எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்று.இந்தியாவை ஆண்ட வெள்ளை அரசின் கொடுங்கோன்மைக்கு சாட்சியாக உள்ள இந்த மாபெரும் சுங்க வேலியைப் பற்றி, 2001-ம்   ராய் மார்க்ஸ்ஹாம் ஆராய்ந்து எழுதும் வரை, இந்திய வரலாற்றியல் அறிஞர்களுக்கேகூட காந்தி ஏன் உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார் என்பதற்கு இன்று வரை எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த ஒரு புத்தகம் காந்தியின் செயல்பாட்டுக்குப் பின்னுள்ள வரலாற்றுக் காரணத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது.பிரிட்டிஷ்காரர்களால் இந்தியா எந்த அளவுக்குச் சுரண்டப்பட்டது என்பதற்கு, இந்த நூல் மறுக்க முடியாத சாட்சி. ஒரிசாவில் தொடங்கி இமயமலை வரை நீண்டு சென்ற இந்த முள் தடுப்பு வேலி எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா?இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு உப்பு கொண்டு செல்லப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட தடுப்பு வேலிதான் இது. இப்படி, வேலி அமைத்து உப்பு வணிகத்தை தடுக்கக் காரணம், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி... உப்புக்கு விதித்திருந்த வரி.

வங்காளத்தைத் தனது பிடியில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, உப்புக்கு வரி விதித்தால், கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டது. சந்திரகுப்தர் காலத்திலேயே உப்புக்கு வரி விதிப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது. கௌடில் யரின் அர்த்தசாஸ்திரம், உப்புக்குத் தனி வரி விதிக்க வேண்டும் என்பதையும், உப்பு வணிகத்தைக் கண்காணிக்கத் தனி அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது.   தமிழகத்தில் உப்பின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் தொ.பரமசிவன், 'உப்பு விற்பவர்களை சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொரு ளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள் என்கிறார்.

அதுபோலவே, சென்னை ராஜதானியின் உப்பு கமிஷன் ஆண்டு அறிக்கை வாசிக்கையில்,மொகலாயர்கள் காலத்தில் உப்புக்கு வரி விதிக்கும் முறை இருந்தது தெரிய வருகிறது. ஆனால், அந்த வரி மிகச் சொற்பமானது. ஒரு மூட்டை உப்புக்கு இந்து வணிகராக இருந்தால் 5 சதவீதம் வரியும், இஸ்லாமியராக இருந்தால் 2.5 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.756-ல் நவாப்பை தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்ட காலனிய அரசு, உப்பு மீதான தங்களது ஏகபோக உரிமையைக் கைப்பற்ற முயற்சித்தது. குறிப் பாக, பிளாசி யுத்தத்துக்குப் பிறகு, வங்காளத்தில் உள்ள மொத்த உப்பு வணிகத்தையும் கிழக்கிந்தியக் கம்பெனி தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுத்தது. இந்தியாவின் மையப் பகுதியான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள், இமயமலை சார்ந்த நிலவெளி ஆகிய அனைத்துப் பகுதிகளும் தங்களது உப்புத் தேவைக்கு, தென்பகுதி கடலோரங்களையே நம்பி இருந்தன.  இந்தியாவில் உப்பு அதிகம் விளைவது குஜராத்தில். இன்றும் அதுதான் உப்பு விளைச்சலில் முதல் இடத்தில் இருக்கிறது. பெரும்பாலான வட மாநிலங்களுக்கு குஜராத்தில் இருந்தே உப்பு சென்றது. உப்பு வணிகம் குஜராத்தில் பராம் பரியமாக நடைபெற்று வருகிறது. உப்பு காய்ச்சப்பட்ட பாரம்பரிய இடங்களில் ஒன்றுதான் காந்தி உப்புச் சத்தியாக்கிரகம் நடத்திய தண்டி. தண்டி என்பது கலங்கரை விளக்கத்தைக் குறிக்கும் சொல். இது ஒரு பாரம்பரிய உப்பளப் பகுதி. அது போல, குஜராத்தில் நிறைய உப்பளங்கள் இருக் கின்றன. குஜராத் போலவே ஒரிசா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் உப்பு விளைச்சல் அதிகம். வங்காளத்தில் கிடைக்கும் உப்பு, நெருப்பில் காய்ச்சி எடுக்கப்படுவது. அது தரமற்றது என்று அந்த உப்புக்கு மாற்றாக வங்காளிகள் சூரிய ஒளியில் விளைந்த ஒரிசா உப்பையே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தினார்கள்.வங்காளத்தை நிர்வகித்து வந்த வாரன் ஹேஸ்டிங், ஒரிசாவில் இருந்து வங்கத்துக்குக் கொண்டுவரப்படும் உப்புக்கு கூடுதல் வரி விதித்ததுடன், அரசிடம் மட்டுமே உப்பை விற்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையையும் விதித்தார். அதாவது, ஒரு மூட்டை உப்புக்கு இரண்டு ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதில், ஒன்றரை ரூபாயை வரியாக கிழக்கிந்தியக் கம்பெனி பிடுங்கிக்கொண்டது. இதனால், உப்பு காய்ச்சுபவர்களும் உப்பு வாங்குபவர்களும் பாதிக்கப் பட்டார்கள்.உப்பளங்களைக் கண்காணிக்கவும் அரசிடம் மட்டுமே உப்பு விற்பனை செய்ய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தவும், சால்ட் இன்ஸ்பெக் டர்கள் நியமிக்கப்பட்டனர். கூடுதலாக உப்பை அரசுக்கு வாங்கித் தரும் துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதன் வழியே, கம்பெனி லட்சக் கணக்கில் பணத்தை வாரிக் குவிக்கத் தொடங்கியது. 1784-85ம் ஆண்டுக்கான உப்பு வரியில் கிடைத்த வருமானம் 62,57,470 ரூபாய்.இந்தக் கொள்ளையால் அதிக ஆதாயம் அடைந்த கிழக்கிந்தியக் கம்பெனி, இந்தியா முழுவதும் உப்பு வணிகம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று முடிவு செய்தது. அதற்காக, உப்பு கொண்டுசெல்லப்படும் வழிகள் அடையாளம் காணப்பட்டன. அதன் ஊடாகத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே சுங்கச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, உப்பு கொண்டுசெல்வது கண்காணிக்கப்பட்டது.

உப்பு, இன்றியமையாத பொருள் என்ப தால் உழைக்கும் மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாவது உப்பை வாங்குவார்கள் என்ற கிழக்கிந்தியக் கம்பெனியின் பேராசை பலிக்கத் தொடங்கியது. ஒரு தொழிலாளி உப்புக்காக மாதந்தோறும் இரண்டு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. அந்தப் பணம் அவனது ஒரு மாத சம்பளத்தைவிட அதிகம். 50 பைசா பெறுமான உப்பு, ஒரு ரூபாய் வரியோடு சேர்த்து விற்கப்பட்ட கொடுமையை வெள்ளை அரசு நடைமுறைப்படுத்தியது.உப்பு கொண்டுசெல்வதைத் தடுக்கும் நடவடிக் கைகளுக்கு எதிராக நாடோடி இன மக்களான உப்புக் குறவர்களும், தெலுங்கு பேசும் எருகுலரும், கொரச்சர்களும் உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். அதை, கடத்தல் என்று சொல்வதுகூட தவறுதான். தங்கள் பாரம்பரியமான தொழிலைத் தடையை மீறி செய்தார்கள் என்பதே சரி.உப்பு வணிகம் செய்வது தங்களது வேலை, அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று சவால்விட்ட நாடோடி இன மக்களை ஒடுக்கு வதற்காக, அந்த இனத்தையே குற்றப்பரம்பரை என்று அடையாளப்படுத்தி, கைது செய்து சிறையில் அடைக்க அரசு முயற்சி செய்தது.தலைச் சுமை அளவு உப்பு விற்ற உப்புக் குறவர்கள் ஒரு பக்கம் என்றால், உப்பளத்தில் இருந்து நேரடி யாக உப்பு வாங்கி, வண்டிகளிலும் கோவேறுக் கழுதைகளிலும் ஏற்றிச் சென்று, லம்பாடிகளும் பஞ்ஞாராக்களும் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி உப்பைப் பிற மாகாணங்களில் விற்றார்கள். பண்டமாற்று செய்துகொண்டார்கள். அவர்களைத் தடுக்க வன்முறையை ஏவிவிட்டதோடு, அவர்களை திருடர்கள் எனவும் குற்றம் சாட்டியது பிரிட்டிஷ் அரசு.உப்பு வணிகத்தைத் தங்கள் கைகளுக்குள் கொண்டுவர வேண்டும் என்றால், மாபெரும் முள் தடுப்பு வேலி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற திட்டம் அப்போதுதான் தீட்டப்பட்டது. இந்த வேலி, ஒரிசாவில் தொடங்கி இமயமலையின் நேபாள எல்லை வரை நீண்டு செல்வதற்காக வரைபடங்கள் உருவாக்கப்பட்டன. 1823-ல் ஆக்ராவின் சுங்க வரித் துறை இயக்குநர் ஜார்ஜ் சாண்டர்ஸ், இதற்கான ஆரம்பப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ஒரிசாவின் சோனப்பூரில் தொடங்கிய இந்தத் தடுப்பு வேலி, மெள்ள நீண்டு கங்கை, யமுனை நதிக் கரைகளைக் கடந்து சென்று அலகாபாத் வரை போடப்பட்டது. அந்த நாட்களில் இந்த வேலி மூங்கில் தடுப்பு ஒன்றால் அமைக்கப்பட்டு இருந்தது. அதைக் கடந்து செல்ல முடியாதபடி பெரும் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. 1834-ல் சுங்கவரித்துறை இயக்குநராக வந்த ஜி.எச்.ஸ்மித், இந்தத் தடுப்பு வேலியை அலகாபாத்தில் இருந்து நேபாளம் வரை நீட்டிக்கும் பணியைச் செய்தார்.

விகடன்