Search This Blog

Monday, January 31, 2011

சினிமா ... மினிமா


பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் விஷால் -சமீரா ரெட்டி ஜோடியாக நடிக்கிறார்கள். பிப்ரவரி 14 சமீராரெட்டியின் பிறந்த நாள். அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.


பிரபுதேவா அவரது மனைவிக்கு விவாகரத்துக்காக வழங்கியது ரூ 30 கோடி என்பது தெரிந்த விஷயம். அது என்னென்ன தெரியுமா? 2 இனோவா கார்கள்.அண்ணா நகரில் 3440 சதுரடி நிலம்.

கோயம்பேடு வீட்டுடன் 1000 சதுரடி நிலம். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீடு,ஆந்திர மாநிலம் கொண்டப்பூர் கிராமத்தில் உள்ள வீடு,மேலும் 10 லட்சம் ரொக்கம் என கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்,நடனப் புயல்.


‘ஹிந்தி’யிலிருந்து அழைப்புவந்த வண்ணம் இருந்தபோது, ‘ஈசன்’ படத்தை முடித்த கையோடு போகலாம் என்று நினைத்தாராம் சசிகுமார். ஈசன் வரம் தரமறுத்ததால், மனம் உடைந்து போனதென்னவோ உண்மை. பெரிய தொகையைச் சுட்டு விட்டதாம். ‘பசங்க பாண்டியராஜ்’ மாதிரி வேறு ஒரு இயக்குனரின் இயக்கத்தில் படம் தயாரிக்கலாமா? என யோசித்து வருகிறார் சசிகுமார்.


இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். உடனே மகேந்திரனும் திரைக்கதை அமைத்தார். ஆனால், படம் நின்று போனது. அந்தப் படத்தில் கமலும் நடிக்க ஆசைப்பட்டார், இருவரின் ஆசையும் நிறைவேறவில்லை. இப்போது அந்தப் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இயக்குபவர் மணிரத்னம். எம்.ஜி.ஆரும், கமலும் ஆசைப்பட்ட கதாபாத்திரம் ‘பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன்.’


இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில், பாக்யராஜ் - பூர்ணிமா நடித்துள்ளனர். இதயம் நிறுவனத் தயாரிப்பான மந்த்ரா கடலை எண்ணெய் விளம்பரத்தை ராஜ் டி.வி., கே டி.வி., ஒளிபரப்புகிறது. நல்லெண்ணெய் விளம்பரத்தை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பகேட்டபோது அதன் நிறுவனம், பாக்யராஜ் மாற்று கட்சி என்பதால் மறுத்துவிட்டதாம்.


பொங்கல் ரிலீஸில் ‘சிறுத்தை’ வசூலில் செம கல்லா கட்டுகிறது. இப்படத்தை விஜய் டி.வி. 3 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. சிங்கமும், சிறுத்தையும் கோலிவுட்டில், சீற்றத்தோடு இருப்பதால் அப்பா மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார். சிறுத்தைக்கு கொங்கு மண்டலத்தில் பெண் ரெடியாகி விட்டதாம். இதுவும் விரைவில் அறிவிப்பு வரும்.


காமெடிப் புயலுக்கு ரொம்ப நாளாகவே தன் மகனை நாயகன் ஆக்க வேண்டும் என்று ஆசை. பிரபல இயக்குனர்களிடம் சொல்லிப் பார்த்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை.இப்போது ஒரு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார்.

ஆனால் தயாரிப்பாளர் போட்ட கண்டிஷனில் கொஞ்சம் கலங்கித்தான் போச்சாம் புயலு.

மகன் ஹீரோஆகவேண்டும் என்றால்,என் படத்தில் ‘கைப்புள்ளே’ நடிக்கவேண்டும். சம்பளத்தைப் பற்றிப் பேசக்கூடாது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியே வரும்.

பணத்தின் கதை! - வரலாறு!

நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன. ன்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது.  இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் தொடங்கினார்.  1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது. 

நமது நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப காலத்தில் ரூபாய் நோட்டை (1770 - 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100, 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக  பாதியாக வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய் கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.

1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த  நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் கரன்சி வெளியிடப்பட்டது. 

Sunday, January 30, 2011

டிஜிட்டல் கேமரா


இப்போதெல்லாம் கேமராவில் போட்டோ எடுப்பதென்றால் அவ்வளவு எளிதான விஷயமாகிவிட்டது. காரணம் டிஜிட்டல் கேமராக்களின் வருகைதான். எதைப் பற்றியும் கவலைப் படாமல் க்ளிக் செய்துவிடலாம்! அதேசமயம் பட மெடுப்பது எளிதாக ஆகிவிட்டாலும், கேமரா வாங்குவது என்பது அதற்கு நேர்மாறாக கடினமான விஷயமாகிவிட்டது! டெக்னிக்கல் விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொண்டால்தான் நமக்கு ஏற்ற நல்ல கேமராவை தேர்ந்தெடுக்க முடியும்!


கேமராவைப் பொறுத்தவரை பொழுதுபோக்குக்காக வாங்குகிறீர்களா அல்லது புரஃபஷனலுக்காக வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். மெகாபிக்சல், ஆப்டிக்கல் ஸ¨ம், லென்ஸ் பவர், ஸ¨ம் லென்ஸ் கெப்பாஸிட்டி, எல்.சி.டி. அளவு போன்றவற்றை உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும். பொழுதுபோக்குக்கான உபயோகத்துக்கு எனில் லென்ஸ் 18-55 எம்.எம், 8-14 மெகாபிக்சலும், புரஃபஷனல் எனில் 18-135 எம்.எம், 12-21 மெகாபிக்சலும்,  கொண்ட கேமராக்களை தேர்வு செய்யவும். முன்பு சி.சி.டி. டெக்னாலஜி கொண்ட டிஜிட்டல் கேமராக்கள் இருந்தது. தற்போது சீமாஸ் சென்ஸார் என்ற டெக்னாலஜி வந்துள்ளது. இது படம் எடுக்கும்போது குறைவான வெளிச்சம் இருந்தாலும் அதனை சரிசெய்து நல்ல படமாக தெளிவுடன் கொடுக்கும். எல்.சி.டி. அளவைப் பொறுத்து பேட்டரியின் செலவு இருக்கும். எல்.சி.டி. அளவு பெரிதாக இருந்தால் பேட்டரி செலவு அதிகமாகும். அளவு குறைய குறைய பேட்டரி குறைவாக செலவாகும். இதற்கு அடுத்து முக்கியமாக பார்க்க வேண்டியது பிராண்ட். நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட், லித்தியம் அயர்ன் பேட்டரி என கிடைக்கும் வகைகளில் உங்களின் தேவையைப் பொறுத்து தீர்மானித்துக் கொள்ளவும். இதில் நிக்கல் மெட்டல் பேட்டரி சாதாரண கெப்பாஸிட்டி கொண்டது. இது ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் பேட்டரி. லித்தியம் பேட்டரி அதிக கெப்பாஸிட்டி கொண்டது. இது பார்ப்பதற்கு செல்போன் பேட்டரி போன்று இருக்கும். சார்ஜர்களை பொறுத்தவரை சான்யோ, சோனி, யூனிராஸ் போன்ற பிராண்டட் சார்ஜர்கள் வாங்குவது நல்லது.


ஒரு மாதத்திற்கு ஒரு முறை சூரிய வெளிச்சத்தில் அரை மணி நேரம் வைக்கவேண்டும். அப்படி வைக்கும்போது லென்ஸ் ஃபங்கஸ் ஆகாமல் இருக்கும். மேலும் பேட்டரியை சார்ஜரில் போட்டால் சார்ஜ் ஏறியவுடன் அதிலிருந்து எடுத்து விடவும். கேமரா உபயோகத்தில் இல்லாத நேரத்தில் பேட்டரியை கேமராவிலிருந்து எடுத்துவிடவும். டிஜிட்டல் கேமராவின் எதிரி தூசி தான். கேமராவின் லென்ஸில் தூசி போய் படிந்து படம் எடுக்கும்போது கரும்புள்ளிகளாக வரும். உடனே தூசியை கையினால் துடைத்துவிடாமல் கம்பெனியில் கொடுக்கவும். அவர்கள் சர்வீஸ் செய்து தருவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் துடைத்துவிடாதீர்கள்.

      

Saturday, January 29, 2011

தமிழக பட்ஜெட் பார்வை 1

வ்வோர் ஆண்டும் மார்ச் முடிய சில நாட்கள் இருக்கும்போது, மத்திய-மாநில அரசுகள் பட்ஜெட் போடும்.  இந்த ஆண்டும் இந்த வைபவம், வரும் பிப்ரவரி 4-ம் தேதி தமிழக சட்டசபையில் அரங்கேற இருக்கிறது. இன்றைய தி.மு.க. ஆட்சி​யின் கடைசி (இடைக்கால) பட்ஜெட் இது. 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து போடப்படும் 6-வது பட்ஜெட். டந்த கால பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று பார்த்​தால்... பாதிக்கும் மேற்பட்டவை பஞ்சர் ஆகிக்கிடந்தன!

2006 ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்​பட்ட 2006-2007-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளின் இன்றைய நிலைமை மட்டும் இங்கே...

நிறைவேறாத திட்டங்கள் 

பழநி மற்றும் கொடைக்கானல் நகரங்​களிடையே பழநி திருக்கோயில் நிர்வாகத்தால் கேபிள் கார் திட்டம் செயல்படுத்தப்படும்.

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவாக ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்து​வோம்.

சென்னை மாநகரில் குடியிருப்புகள் பெருகி வருவதைக் கருத்தில்கொண்டு சென்னைக்கு அருகே துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

விமானப் போக்குவரத்தின் தேவை கருதி விமானவியல் துறையில் உயர் கல்வி அளிக்கவும், ராஜீவ் காந்தி நினைவாக ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விமான​வியல் உயர் கல்வி மற்றும் விமான ஓட்டிகள் பயிற்சி அகாடமி.

300 ஏக்கரில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்​ளிட்டவளர்ச்சிக் கட்டமைப்பு மையம் ஒன்று சென்னை அருகில் ஒரகடத்தில் அமைவதற்கு முயற்சிகள் மேற்கொள்​வோம்.

கோவை மாவட்டம் பல்லடத்தில் வெங்காயத்​துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்துக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் திராட்சைப் பழங்​களுக்கும் ஏற்றுமதிக்​கேற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியர் விரைவாக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக, ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த சேகரிப்பு மையங்கள், குளிர்​விக்கும் சாதனங்கள், தரம் பிரிப்பு, பதப்படுத்துதல், மற்றும் மின்னணு ஏலமுறை என அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று வணிக முனையங்கள் சென்னை, கோவை, மதுரையில் அமைக்கப்படும்.

வெள்ளத்தால் சென்னை பாதிப்ப​தைத் தடுக்க, கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அரும்பாக்கம் வடிகால், பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி ஆகியவற்றின் வழியாக வெள்ள நீர் சீராகக் கடலில் கலக்கும்படியான வெள்ளத் தடுப்புப் பணிகள் 279.01 கோடியில் நடைபெறும்.

நிறைவேறிய திட்டங்கள் 

காவலர் குறைதீர்க்க மூன்றாவது போலீஸ் கமிஷன்.

அனைத்துப் பள்ளிகளிலும் முதலாம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படும்.

கோவை வால்பாறையிலும், சேலம் மேட்டூரிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள கல்வியியல் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் நிறுவப்படும்.

விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி.

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக, காவிரி நீரைக் கொண்டுவந்து வழங்கும் 671 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்படும்.

கர்ப்பிணிப் பெண்களின் மகப்பேறு காலத்துக்கு முன்னர் 3 மாதங்களுக்கும், மகப்பேறுக்குப் பின்னர் 3 மாதங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 1,000 வீதம் 6 மாதங்களுக்கு 6,000 வழங்கப்படும்.

அறிவியல் தமிழ் மன்றம் அமைக்கப்படும்.

பரிதிமாற்கலைஞர் பிறந்த வீடு, நினைவு இல்லம்.

தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்குக் கேளிக்கை வரியில் இருந்து முழுமையான விலக்கு.

பெரியார் திரைப்படத்துக்கு 95 லட்சம்.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்த ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான பணிகள் மட்டும் இப்போது நடந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 23.50 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று 2006-ல் வெளியான அறிவிப்புக்கு 2008-ல் அடிக்கல் நாட்டியும் திட்டம் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.

 விகடன் 
Friday, January 28, 2011

காரணங்கள் எதுவுமில்லை!!!

அப்போது தான் மழை பெய்து
நின்று போன ஒரு இரவு தன்
பாடலை ஆள்அரவமற்ற
வீதியில் மெலிதாய்
ஒலித்துக் கொண்டிருந்தது

வெளியில் குளிர் தாங்காமல்
என் அறை நுழைந்து என்னை
வருடிச் சென்ற காற்று
நினைவுபடுத்துகிறது, உன் விரல்களின் அரவணைப்பை...

உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது,
மௌனங்களை வேலியாக்கி உன்னைப்
பாதுகாத்துக் கொள்ள…
என் விழி பிறந்து முகம்
அளந்த கண்ணீர் என் முகமெங்கும் விட்டுச் செல்கிறது,
புறக்கணிப்பின் தடயங்களை...

நீ இல்லாத என் நாட்கள்
வீட்டுச் சுவரில் தேன் தேடும் ப்ளாஸ்டிக்
பட்டாம்பூச்சி போல் போலியானவை
என்று உனக்கும் தெரிந்திருக்கக் கூடும்

வெயிலின் தன்மை சற்றே குறைந்து
சூரியன் மறையத் தொடங்கியிருந்த
ஒரு இலையுதிர்காலத்தில் இந்தக்
காதல் முறிந்து விட்டது என்று சொல்லிச் சென்றாய்

நாம் பிரிந்ததற்கான காரணங்களை
அலசி, ஆராய எனக்கு விருப்பமில்லை
நாம் மீண்டும் சேர்வதற்கான காரணம் வேறு
ஒன்றும் இல்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தவிர…
 
 
மணி

Thursday, January 27, 2011

'பூத் ஜலக்கியா’ - 'கின்னஸ் விருது' பெற்ற மிளகாய்!

'உலகின் மிக உயரமான மனிதர்!', 'உலகிலேயே அதிக எடையைத் தூக்கிய மனிதர்' இப்படி  'கின்னஸ் விருது' பெற்றவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதிகபட்சமான காரத்துக்காக கின்னஸ் புத்தகத்தில் மிளகாய் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது என்றால் ஆச்சரியம்தானே! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது, கின்னஸ் பெருமைமிக்க 'பூத் ஜலக்கியா’ எனும் மிளகாய்!

பல நூறு ஆண்டுகளாக இந்த மிளகாய் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அசாம் மாநிலம், தேஜ்பூர், ராணுவ வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மாத்தூர் எனும் விஞ்ஞானிதான், இது அதிகம் காரத்தன்மை கொண்ட மிளகாய் என்பதைக் கண்டறிந்து முதலில் தெரிவித்திருக்கிறார். என்றாலும், இது உலக அளவில் பரவி, கின்னஸ் அளவுக்கு போவதற்கு பிள்ளையார் சுழியிடப்பட்டது... 2004-ம் ஆண்டில்தான்!

லண்டன் நகரிலிருக்கும் ஓரியன்டல் ஸ்டோரில் 2004-ம் ஆண்டில் இம்மிளகாயை வாங்கியிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாய்மைக்கேல் மைக்கென்ட் தம்பதி. மற்ற மிளகாய்களைக் காட்டிலும் இந்த மிளகாய் அதிகபட்ச காரத்தன்மையுடன் இருக்கவே... அமெரிக்காவில் உள்ள ஒரு சோதனைக் கூடத்துக்கு அதை அனுப்பியிருக்கிறது இத்தம்பதி. ஆய்வின் முடிவில், அந்த மிளகாயின் காரத்தன்மை 9,23,000 எஸ்.ஹெச்.யூ (SHU-Scoville Heat Units)என்ற அளவுக்கு இருக்க, (சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மிளகாயின் கார அளவு 60 எஸ்.ஹெச்.யூ) ஆச்சர்யப்பட்டுப்போன தம்பதி... 'இதுதான் அதிகபட்ச காரத்தன்மை கொண்ட மிளகாய்' என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.


இதைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளின் மூலம் இம்மிளகாயின் காரத்தன்மை 10,00,000 எஸ்.ஹெச்.யூ. என்ற அளவுக்கு மேலும் இருக்கிறது என்பதைக் கண்டறியப்படவே, 2006ம் ஆண்டில் 'உலகின் மிக காரமான மிளகாய்’ என்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துவிட்டது இந்த மிளகாய்! அதற்கு முன்பு வரை, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 'ரெட் சாவினோ’ எனும் மிளகாய்தான், அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதைக் காட்டிலும் இருமடங்கு காரத்தன்மையைக் கொண்டிருக்கிறதாம் பூத் ஜலக்கியா!
இம்மிளகாய் பற்றி கூடுதல் தகவல்

''இதன் அறிவியல் பெயர் 'கேப்சிகம் சைனீஸ் பூத் ஜலக்கியா’. 'பூத்’ என்றால் பேய், 'ஜலக்கியா’ என்றால் மிளகாய். 

இதை நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் 'பீஹ் ஜலக்கியா’ (விஷ மிளகாய்) அல்லது 'நாகா ஜலக்கியா’ என்றும் அழைக்கிறார்கள். இப்பகுதிகளில் வாழும் போர் குணம் கொண்ட ஆதிவாசிகளின் பெயர்தான் நாகா.

அதிக வெயில் கிடைக்கும் இடங்களில் நல்ல சிவப்பு நிறத்தில் இம்மிளகாய் விளைகிறது. வெயில் குறைந்தால் சிவப்பு வண்ணம் வெளிறி, பச்சை நிறத்துக்கு மாறி விடுகிறது. நிறத்தைப் பொருத்துதான் மிளகாயின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 
வழக்கமாக அல்சர் நோயாளிகள் மிளகாய் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால், பூத் ஜலக்கியாவைத் தொடர்ந்து சாப்பிட்டால், அல்சர் நோய் குணமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. தவிர, வாய்வுப் பிரச்னை, மூட்டு நோய்கள், அஜீரணக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களும் இம் மிளகாய்க்கு உண்டு.  
அசாம் போலவே பருவநிலை நிலவும் நாகாலாந்து, மிசோராம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் இது விளைகிறது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் 'பூத் ஜலக்கியா’ விளைவிக்கப்படுகிறது. லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில், நம் நாட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி பயிரிடுவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
காரத்தைக் கண்டுபிடிப்பது இப்படித்தான் ! 

மிளகாயை அரைத்து உருவாக்கப்பட்ட நீர்த்த பசையை ருசி பார்த்துதான், அதன் காரத் தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த முறையில் காரத்தை அளப்பதை 'ஸ்காவிலி ஹீட் யூனிட்ஸ்’ (Scoville Heat Units) என்று அழைக்கிறார்கள். 1902ம் ஆண்டில் 'வில்புர் ஸ்காவிலி’ என்ற ஆங்கிலேயர்தான் இந்த முறையை உருவாக்கினார். அதனால், அவருடைய பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது.

Wednesday, January 26, 2011

விருதுநகர் - பாதாள சாக்கடைத் திட்டத்​தில் நடந்த குளறுபடிகள்..

விருதுநகர்  . விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது..  தொடர்ந்து 25 வருடங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட வாரியாக  தொடர்ந்து  முதலிடம் இருக்கும் ஊர் விருதுநகர்.

சென்ற முறை நான் விருதுநகர் சென்ற பொழுது என்னை அறியாமல் கோபம் வந்தது . ஏற்கனவே குறுகலான சாலைகள் உள்ள அந்த இடத்தில தற்பொழுது பாதாள   சாக்கடை என்ற பெயரில் கடந்த நாலு வருடங்களாக ரோடு எல்லாம் தோண்டி போட்டு நடக்க கூட வழி   இல்லாமல் செய்த கவுன்சிலர் மற்றும் அவர்களின் கையில் இருக்கு நகராட்சி ஆணையர் மீது... 

வச்சுட்டாங்க ஆப்பு..

விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டத்​தில் நடந்த குளறுபடிகள் காரணமாக, விருதுநகர் நகராட்சிகமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரை அரசு  சஸ்பெண்ட் செய்து உள்ளது. எதனால் என்பதை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள் ...

விருதுநகரில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்​களில் இருந்து கழிவு நீரை பாதாளச் சாக்கடை மூலம் ஊருக்கு வெளியே கொண்டு​வந்து, புதிதாக நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வெளியேற்றுவதுதான் திட்டம்! இதற்காக 23.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை நிறைவேற்றும் பொ​றுப்பு குடிநீர் வடிகால் வாரியத்​​திடம் ஒப்படைக்கப்​பட்டு, கடந்த 2006 டிசம்பரில் தொடங்கி, 2008 டிசம்பருக்குள் முடித்துத் தரவேண்டும் என்று காலக்​கெடுவும் விதிக்கப்​பட்டது.

'ப்ரியா கன்ஸ்ட்ரக்ஷன், சேகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனங்களுக்கு கான்ட்​ராக்ட் விடப்பட்டது. ஆனால்,  பல பிரச்னைகளினால் சுணக்கம் ஏற்பட்டு, முயல் வேகத்​தில் ஆரம்பித்த பணி, நத்தை வேகத்​துக்குப் போனது! பல இடங்களில் குழிகள் தோண்டப்​பட்டு அப்படியே பாதியில் விடப்​பட்டது.

இந்த நேரத்தில், விருதுநகர் நகராட்சி நிர்வாகம் திடீரென ஒரு காரியத்தில் இறங்கியது. வீடு, தெருக்களில் உள்ள கழிவு நீர்க் குழாய்களைப் பாதாள சாக்கடையில் இணைத்து, அதை அருகே ஓடும் கவுசிகா நதியில் கலக்க வைத்தது. இந்த முறைகேட்டினை, விருதுநகர் நகர்நல அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதாரத்துடன் புகார் அனுப்பியது. அதனால், 'பாதாள சாக்கடை திட்டம் முடிவடை​யாத நிலையில், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்​பது தவறு. உடனே இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்’ என்று நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். ஆனால், 'கனெக்ஷனை கட் பண்ணினால்... கழிவு நீர் ரோடுகளில் ஓடும்’ என்பதால் நகராட்சி நிர்வாகம் செயலற்று நின்றது. இதனால் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார்  அரசு சஸ்பெண்ட்செய்து உள்ளது ...''

ஏற்கனவே எனக்கு  தெரிந்து அரசு கொடுத்த சுமார் 25 கோடி கோவிந்தா !!!! வாழ்க கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி தலைவி.. பூனைக்கு மணி கட்ட போவது யாரோ !!

Tuesday, January 25, 2011

தமிழகத்தின் தொழிற் சூழல் எப்படி?

ம் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி பற்றி பேப்பரில் படிக்கும்போதெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. உலக வல்லுனர்கள் எல்லாம் ஓஹோ என்று புகழுகிறார்கள். அதே சந்தோஷத்தோடு பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிறு/குறு தொழில் செய்துவரும் பிஸினஸ்மேனைச் சந்தித்து தொழில் பற்றி பேச்சை எடுத்தால் அவர்களோ நேர்மாறாக கதறுகிறார்கள்!

உண்மையில் நம்நாட்டில் தொழிற்சூழல் நன்றாக இருக்கிறதா இல்லையா, இல்லை என்றால் எஸ்.எம்.இ. பிஸினஸ்மேன்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் என்ன, குறைந்தபட்சம் அவர்கள் செய்கிற பிஸினஸில் அவர்களுக்கு திருப்தியாவது இருக்கிறதா? இது மாதிரியான கேள்விகளை அவர்களிடமே கேட்க விரும்பினோம். இதையடுத்து தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்கள் அனைத்திலும் உள்ள பிஸினஸ்மேன்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் சொன்ன பதில், தமிழகத்தின் இன்றைய தொழிற்சூழலை வெட்ட வெளிச்சமாக்குவதாக அமைந்திருந்தது. 


 
தலையாயப் பிரச்னை!

சொல்லவே வேண்டியதில்லை, மின்வெட்டுதான்! ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னாடியெல்லாம் கோடைகாலம் வந்தாதான் மின்வெட்டு அதிகமா இருக்கும். ஆனா இப்போ கோடையோ, மழைக்காலமோ எதுவா இருந்தாலும் மின்வெட்டுதான். இவ்வளவுக்கும் காற்றாலை மூலமா அதிக மின்சாரம் கிடைச்சும், எங்களுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்தபாடில்லை. இந்த இருபது வருஷத்துல புதுசா எந்த மின்திட்டமும் கொண்டுவரலை. இதுதான் இந்த நிலைக்குக் காரணம். அதுவே குஜராத்தைப் பாருங்க, அங்க கரன்ட் கட் அப்படிங்கிற பேச்சே கிடையாது.


 
ஆட்கள் பற்றாக்குறை!

மின்வெட்டுக்கு அடுத்தபடியாக அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருப்பது வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்காதது!.''முன்னாடி எல்லாம் நிறைய பேர் ஏதாவது ஒரு வேலை கொடுங்கன்னு கேட்டு வருவாங்க. ஆனா இப்போ ஆட்கள் தேவையா இருந்தும் கிடைக்கமாட்டேங்கிறாங்க. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துல 100 நாள் வேலை கொடுத்துடறாங்க. தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்துடுது. பிறகு எதுக்கு அவங்க வேற வேலை தேடணும்? அதனாலதான் ஒருத்தரும் வேலை கேட்டு வரமாட்டேங்கிறாங்க.


 
தயங்கும் வங்கிகள்!

அரசாங்கத்துக்கு அடுத்து எஸ்.எம்.இ.களின் அதிருப்திக்கு அதிக அளவில் உள்ளாகி இருப்பது வங்கிகள்தான்.

ஃபேக்டரியில வேலை பார்த்துக்கிட்டிருந்த ஒருவர் , சொந்தமா தொழில் துவங்கற ஆசையில பேங்குல 6 லட்சம் கடன் கேட்டார் . எல்லா டாக்குமென்ட்டும் சரியா இருந்தும் எட்டு மாசம் அலைய விட்டாங்க. கடைசியில 85,000 லஞ்சம் கொடுத்துதான் கடன் வாங்கினார்  ! வங்கிகளோட ஒத்துழைப்பு இந்த லட்சணத்துலதான் இருக்குது''.


 
வளர்ச்சி இல்லை!

 சுருக்கமாகச் சொல்வதென்றால் தினம் ஒரு பன்னாட்டு நிறுவனம் நம் தமிழகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கையில் உள்ளூர் எஸ்.எம்.இ-க்களோ தொழில் செய்யச் சாதகமான சூழ்நிலை இல்லை என்று நினைப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது!.