Search This Blog

Tuesday, November 30, 2010

மாற்றம் வேண்டும் - என் தேசத்தில்

 'மாற்றம்' இது ஒன்று மட்டும்தான் இந்த உலகில் மாறாமல் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். மற்றதெல்லாம் மாறிவருகிறது. இன்றைக்கு அரசு அலுவலகங்களுக்கு  ஏதாவது ஒரு காரியமாகப் போனால் கிட்டத்தட்ட அந்த நாளையே தியாகம் செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. காரணம், அலுவலர்களின்போக்குதான். எத்தனை கம்ப்யூட்டர் வந்தால் என்ன? இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகள் வந்தால் என்ன? பழைய குருடி கதவைத் திறடி கதையாகத்தான் இருக்கிறது. 

காலதாமதம், சோம்பல், இழுத்தடித்தல் இதுபோன்ற வார்த்தைகளுக்கு தமிழ் அகராதியில் விடை தேடினால் மறக்காமல் அரசு அலுவலகம் என்று போட்டுக் கொள்ளலாம். அந்த அளவுக்குக் காரியங்கள் நடந்தேறுகின்றன.

 ஒரு மனு குறித்து விசாரிக்கவோ, கையெழுத்து வாங்கவோ அரசு அலுவலகத்துக்குச் செல்ல வேண்டுமானால் போகும் நபர்கள் அந்த ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அன்று முழுக்க அரசு அலுவலகத்தில்தான் நிற்க வேண்டும்.

காலை 9 மணிக்கு அலுவலகம் வருபவர்கள் பைல், கணினி இன்ன பிற பொருள்களை எடுத்து வைத்து சீட்டில் அமர 10 மணியாகும்.அதற்கு மேல் ஒரு பைலை பார்ப்பார். உடனே சங்க விவகாரம், அரியர்ஸ், போனஸ், ஊதிய உயர்வு என சகாக்கள் பேச்சு மெதுவாகத் தொடங்கும்.

அப்போது மனுவுடன் செல்பவரைப் பார்த்து கொஞ்சம் அமருங்கள் என்பார். அவரும் பரபரப்போடு அமர்ந்திருப்பார். அதற்குள் மணி 11-ஐ தாண்டிவிடும். வந்த நபர் மெல்ல எட்டிப் பார்ப்பார். அந்தநேரத்தில் தேநீர் வந்துவிடும். கொண்டு வரும் உதவியாளரோ, நாயரோ அவரிடம் பேச்சுத் தொடரும். சுமார் அரைமணி நேரம் பொழுது ஓடிவிடும். சார்..என் மனு என வந்த நபர் கேட்பார்.

இருப்பா..பார்த்திட்டுத்தானே இருக்கேன் என்று நேரம் ஒருவழியாகக் கடக்கும். மணி ஒன்றைத் தாண்டியிருக்கும். முழுதாக ஒரு பைல் நகர்ந்திருக்கலாம். பிறகு மதிய உணவு இடைவேளை. அரட்டைக் கச்சேரி. சகாக்கள் புடைசூழ உணவு அருந்தும் படலம்.வந்தவருக்கு நேரம் நன்றாக இருந்தால் காரியம் முடிந்திருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு தேதியைக் கூறி அனுப்பி விடுவார்கள்.

மதிய இடைவேளை முடிந்து இரண்டு அல்லது இரண்டரையைத் தொடும்போது மெல்ல வேலை தொடங்கும்; இடையிடையே செல்போன் அழைப்புகளும் வரும். அப்புறம் லேசாக ஒரு புகை இழுக்கும் படலம்.அடுத்ததாக பேச்சு என தொடரும் பணி. மணி நான்கை நெருங்கும்போது பழையபடி தேநீர் இடைவேளை வந்துவிடும். அதற்குப் பிறகு எப்படி வேலை பார்க்க முடியும்? எப்படா மணி ஐந்தாகும் என்ற எண்ணம் மேலோங்கும். அதுவரையில் பொறுமையாக அலைந்த மனுதாரர் இனி வேலைக்கு ஆகாது என்று கிளம்பி விடுவார்.    இந்த லட்சணத்தில் அரசுப் பணிகள் நடந்தால் பொதுமக்கள் எப்படி இவர்களை அணுக முடியும் என்பதுதான் நம் கேள்வி.

இதே நடைமுறையை மின் கட்டணம் செலுத்துபவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். மேலும், ரேஷன் கடையிலும் இதே நிலைமையைத்தான் காணமுடிகிறது.   இது ஒருபுறம் இருக்க வங்கிச்சேவையில் இருப்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏறக்குறைய மாநில அரசு ஊழியர்களுக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போல அவர்களிடம் கூனிக்குறுகி பொதுமக்கள் தவிக்கும் தவிப்பை வார்த்தையால் சொல்லமுடியாது.  வந்தவர்களை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து, அலட்சியமாகப் பேசி, கிட்டத்தட்ட மரியாதை என்றால் என்ன விலை என இவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதைவிட மற்றொரு துறை உள்ளது. அதுதான் ரயில்வே துறை. அங்கு போய் சில்லரை இல்லையென்றாலோ, அந்த ரயில் எப்போது வரும் என்றுகேட்டுவிட்டாலோ அவர்பாடு திண்டாட்டம்தான். கிட்டத்தட்ட எரிந்துவிழும் ஊழியர்கள்தான் அதிகம். இதேபோல அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் அத்தனை பயணிகளுமே ஏறக்குறைய படுகேவலமானவர்கள் அல்லது குற்றம்புரிந்துவிட்டு வந்தவர்கள் என்ற நினைப்புதான் பல நடத்துநர்களுக்கு. கிட்டத்தட்ட தற்கொலை செய்ய வைக்கும் மனநிலைக்குப் பயணிகள் வந்துவிடுவர். அத்தனை கேவலமாகவும், மரியாதைக்குறைவாகவும் அரசு ஊழியர்களால் நடத்தப்படுகிறார்கள்.

முதலில் இவர்கள் வேலை பார்க்கிறார்களோ என்னவோ? மற்றவர்களைத் தரக்குறைவாகவே நினைப்பது இவர்களது பழக்கமாகிவிட்டது. எனவே இவர்களுக்கு முதலில் மனிதாபிமானத்தைப் போதிக்க வேண்டும். அரசுப் பணி என்றால் பொதுமக்கள் இழிவானவர்கள் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்துடன் வாங்கும் ஊதியத்துக்கு உண்மையாகப் பணியாற்ற வேண்டும்.  இதே தனியார் துறையாகட்டும். மனிதரைக் கசக்கிப் பிழிந்து 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை வாங்குவார்கள். போதாக்குறைக்கு குறைந்த ஊதியம், எந்தவித சலுகைகளும் கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு அப்படியா?

ஒரு பழமொழி கூறுவார்கள் "வேலை பார்க்கிறவனுக்கு சம்பளம் கொடுக்காதே, வெட்டியாக இருப்பவர்களுக்கு சம்பளம் கொடு' என்று. அது அரசு ஊழியர்களுக்கு மிகவும் பொருந்தும்.இவர்களில் அனைவருமே இதுபோன்ற குணங்களுடன் செயல்படுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே.   ஒரு குடம் பாலுக்கு துளி விஷம் போதுமே. எனவே, மாற்றத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஒன்று மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்.          

ரவி  

Monday, November 29, 2010

வால்மார்ட்

மெரிக்காவின் பென்ட்டன்விள்ளே , அர்கன்சாஸ் மாகாணத்தில் 1967-ல் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது வால்மார்ட். இப்போது 15 நாடுகளில் 8,500 ஸ்டோர்களுக்கு மேல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வால்மார்ட், மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் அஸ்டா, ஜப்பானில் செய்யூ என்று ஊருக்கு ஒரு பேர் வைத்துக்கொள்ளும் வால்மார்ட்டின் இந்தியப் பெயர்  'பெஸ்ட் ப்ரைஸ்'! 

அமெரிக்காவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய வால்மார்ட், 'நெய்பர்ஹுட் மார்க்கெட்' என்ற கான்செப்ட்டை பிடித்துதான் ஹிட்டடித்தது. அதாவது, பெரிய ஸ்டோர்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய முடியாதவர்களுக்காக ஒவ்வொரு பகுதியிலும் சிறுசிறு கடைகளைத் திறந்தார்கள். மெகா வால்மார்ட் ஷோ ரூமைக் காட்டிலும் அங்கு விலை கொஞ்சம் கம்மி. ஆனால் தரத்தில் தள்ளுபடி இல்லை.  இதனாலேயே இந்த ஃபார்முலா ஹிட்டானது. சாம் வால்டன், இளமையில் 18 மாதங்கள் ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு எப்படி வியாபாரம் செய்தால் மக்கள் வருவார்கள் என்ற சூட்சமத்தை அறிந்திருந்தார். 19 வருடங்களாக 'தினமும் குறைந்த விலை' என்ற ஸ்லோகனைக் கொண்டிருந்த வால்மார்ட், 2007-ல் 'சேவ் மணி, லிவ் பெட்டர்' என்று அதை மாற்றியது.

இப்படிப் பல பெருமைகள் இருந்தாலும் 2002-ல்தான் முதன் முறையாக 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இடம் பிடித்தது. போட்டி நிறுவனங்களின் கண்படும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி கண்ட வால்மார்ட், 2005-ல் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு 20 மில்லியன் டாலர்களை நிவாரண நிதியாக அள்ளித் தந்தது. அத்துடன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் வழங்கியது.

2006 நவம்பரில் பாரதி என்டர் பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோத்து இந்திய சில்லறை வணிகத் துறையில் காலூன்றப் போவதாக அறிவித்தது. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத் தில் நுழைய அனுமதி இல்லை என்பதால் ஃபிரான்ச்சைஸ் மூலம் இயங்கி வருகிறது. சுமார் 40% பொருட்கள் வால்மார்ட் நிறுவனத் தின் பிராண்ட் ஆகவே விற்பனை செய்யப் படுகின்றன. ஜூலை 2009-ல் வால்மார்ட் 'கனடா வங்கி' என்று தனியார் வங்கி ஒன்றை ஆரம்பித்தது. மாஸ்டர் கார்ட் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்நிறுவனம் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறது. இதன் முக்கியப் போட்டியாளர்கள் பிரான்ஸ் நாட்டின் கேர்ஃபோர் நிறுவனமும், இங்கிலாந்தின் டெஸ்கோ நிறுவனமும்தான்.

ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் மக்கள் வால்மார்ட்டுக்கு வருகை தருகிறார்கள். இது அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. குறைவான விலைக்கு நல்ல தரமான பொருளை எதிர்பார்ப்பவர்கள், விலையைப் பற்றிக் கவலையின்றி பொருட்களை வாங்குபவர்கள், விலைக்கு ஏற்ற தரமான பொருளை நாடுபவர்கள் என நுகர்வோர்களை மூன்றாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்றவாறு விற்பனையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுதான் வால்மார்ட்டின் வெற்றிக்கு முக்கியக் காரணம். தன்னுடைய பணியாளர்களை ஊழியர்களாகக் கருதாமல் 'அசோஸி யேட்ஸ்' என்றுதான் அழைக்கிறது வால்மார்ட்.

Saturday, November 27, 2010

நான் ஆவலுடன் எதிர்பார்த்த நந்தலாலா...

மிஷ்கின் - எனக்கு   மிகவும்  பிடித்த  இரண்டு தமிழ் படத்தை இயக்கியவர். சித்திரம் பேசுதடி மற்றும் அஞ்சாதே என இரண்டு அற்புதமான சினிமாவை வழங்கியவர். இவரின் படத்தில் ஒரு மெலிதான காதலும் , அதனுடன் சிறந்த திரைகதையும் இருக்கும்.  

நீண்ட நாட்களை நான்  ஆவலுடன் எதிர்பார்த்த நந்தலாலா.. 

பொதுவாகவே ரொம்ப நாள் பெட்டிக்குள் தூங்கி கொண்டு இருக்கும் படிப்புகள்  மிக பெரிய வெற்றியை ஈட்டி உள்ளது நம் தமிழ் சினிமாவில்.. இந்த படமும் அந்த வகையை சேர்ந்தது தான்.. எத்தனை நண்பர்கள் இந்த படம் ஜப்பானிய மொழி ( கிகுஜிரோ  (1999)  தழுவல் என்றாலும் மிஷ்கின் திரைகதையில் கையாண்ட விதம் அந்த ஒரிஜினல் படத்தில் இருந்து விலகி உள்ளது...
கதை :

பாஸ்கர் மணி (மிஷ்கின்), அகில்(அஸ்வத் ராம்) – இந்த இருவரை சுற்றி நடக்கும் படம் தான் நந்தலாலா . பள்ளியில் படிக்கும் அகில் சிறு வயதிலேயே தன்னை விட்டுச்சென்ற தன் அம்மாவைத் தேட  பயணிக்கிறான். அதேபோல்,சிறுவயதிலேயே மனநல மருத்துவமனையில் தன்னை விட்டுவிட்ட தன் தாயை தேடி வெளியே வருகிறான் பாஸ்கர் மணி. ஒரு சமயத்தில் இந்த இருவரும் சந்திக்கிறார்கள் மற்றும் ஒன்று சேர்ந்து செல்கிறார்கள் தன் அம்மாவைத் தேடி. இடையில் நடக்கும் திருப்பம் மற்றும் அவர்களின் பயணத்தில் அவர்கள் கற்று கொண்டது என்ன என்பதே மிஷ்கின்னின் நந்தலாலா ..

அஸ்வத் & மிஷ்கின் :


படத்தில் முக்கிய கதாபாத்திரமே 10வயது சிறுவனாக வரும் அஸ்வந்த். இந்த சின்ன வயசில் என்ன ஒரு முதிர்ச்சியான நடிப்பு.. அந்த ஏக்கம் பரிதவிப்பு என்று கிடைத்த வாய்ப்பை  நன்றாக
செய்து உள்ளான். 

மிஷ்கின் தவிர வேறு யாரும் இந்த கதாபாத்திரத்தை இந்த அளவிற்கு  சிறப்பாக   செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. இவரின் நடிப்பு கச்சிதம். அதற்கு ஒரே காட்சி தான் உதாரணம்.. இறுதி கட்ட காட்சியில் திட்டிக்கொண்டே வந்து வீட்டின் பின்புறம் இருக்கும் தன் அம்மாவின் நிலையைப் பார்த்து கதறி தூக்கிக் கொண்டே ஓடி அழுகும் அந்த ஒரு காட்சிய அவர் பாஸ்கர் மணி ஆகா வாழ்ந்து இருக்கிறார் என்பதை உணர்த்தி உள்ளார்.


இளையராஜா



படத்தை தூக்கி நிறுத்தி வைத்தது ராஜா இசை. இந்த படத்தின் மூலம்   இளையராஜா  பின்னணி இசை உலகின் மகா  ராஜா என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி  விட்டார் . கண்டிப்பா தேசிய விருது நிச்சயம்.. இளையராஜா பாடல்கள் என் படத்திற்கு தடையாக இருக்கிறது என்று சொல்லி, சில பாடல்களை நிராகரித்த தைரியமும், தன் கதைக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் காட்டி இருக்கும் உழைப்பு தன் இந்த நந்தலாலா..


கடைசியில் மிஷ்கின் தன் அம்மாவை பார்த்த அந்த நொடியில் ஒலிக்கும் இளையராஜாவின் குரலைக்கேட்டு கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.  ஐங்கரனின் இன்னும் ஒரு ஐந்து வருடத்திற்கு  இந்த படத்தின் பெயரை சொல்லி மார் தட்டி பெருமையாக சொல்லலாம்  இந்த படத்தை .
 
 தமிழ் சினிமாவின் ஒரு தரமான படம் நீண்ட இடை வேளைக்கு  பிறகு. எந்த அரசியல் தலைவனை தலையீடு இல்லாமல் இருந்தால் குறைந்தது நான்கு விருதை பெரும் இந்த நந்தலாலா .

டிஸ்கி: 



“எங்க வீட்ல என்னோட மூத்த சகோதரர் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டவரா இருந்தார். அதைதான் இந்த படத்தில் கொண்டு வந்திருக்கேன்” என்றார் மிஷ்கின்.

மிஷ்கினின் இந்த படம் அவர் மீதிருந்த அத்தனை விமர்சனங்களையும் கழுவி துடைத்தெறிந்து விட்டது என்பதுதான் உண்மை

அடுத்த தமிழக முதல்வர் யார் ?








தமிழக மக்களின் எண்ணத்தை   அறிந்து கொள்வதற்கு விகடன் எடுத்த சர்வே மேலே கொடுத்து உள்ளேன். என்னை பொறுத்தவரை கடும் இழுபறி இருக்கும் என் எதிர் பார்கிறேன். அழகிரி தாயவள் தென் மாநிலத்தை பற்றி கவலை பட தேவை இல்லை. பார்க்கலாம் இன்னும் ஆறு மாசத்தில் என்ன என்ன மாற்றங்கள் நடை பெற போகிறது  என்று !!!

நன்றி - விகடன் சர்வே டீம்

Friday, November 26, 2010

மந்திரப் புன்னகை - விமர்சனம்

கரு.பழனியப்பன்.. இதற்க்கு முன் பார்த்திபன் கனவு மற்றும் பிரிவோம் சந்திபோம் என இரண்டு நல்ல  படங்களை இயக்கியவர்.. இம்முறை இயக்கம் மற்றும் நடிப்பும் சேர்த்து ஒரு படத்தை தந்து உள்ளார். இவரின் படத்தில் வரும் வசனம் மிக ஷார்ப் ஆகா இருக்கும். தற்பொழுது உள்ள நடைமுறைக்கு ஏற்ப இவர் வசனம் பெரும்பாலும்  வரும் .

ராம் படத்தில் இருக்கும் நாயகன் போல் இப்படித்தின் ஹீரோ. எதனையும் ஏகதாலமா பார்க்கும் மற்றும் கிண்டல் பண்ணும் மனச்சிதைவு நோய்க்கு உள்ளான நாயகனின் கதையே மந்திர புன்னகை. இவன் இப்படி ஆனதிற்கு கரன் அவன் தாய். காரணத்தை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .பொறுமை இருந்தால் !!!!! தனக்கென தனி உலகத்தை உருவாக்கி வாழும் தனி மனிதனின் கதையே மந்திர புன்னகை!

கரு  .பழனியின் குரலில் கதை தொடங்குகிறது.. இதனை தொடர்து சிதார் முகம் பாடல், அதனை படமாக்கிய விதம் மிக அருமை.


பிடித்த வசனம் படத்தில் இருந்து :

உலகத்தில்   கோடி மனிதர்கள் இருகிறார்கள், ஒவ்வருக்கும்  சந்தோசம், துக்கம் இருக்கும்.. நமக்குள் இருக்கும் உணர்சிகள் ஒன்றே.. என் இப்படி கேட்ட ஒவ்வரு மனிதனுக்குள்ளும் தனி கதை இருக்கும் ..
 
பிள்ளை இங்க  பெத்தவங்க மனசு நிறைஞ்சா போதும்..

பாக்குற வேலைல என்ன ஆண் (அ) பெண்  என்று ..

ஒரு காரியம் முடியும்ன முடியும்னு சொல்லணும், சும்மா இழுத்து அடிக்க கூடாது..

படிக்காதவன் மாடு மேய்ப்பான், படிச்சவன் இங்கே நாய்  மேய்கிறான்..

பொறந்த நாள் தான் துன்பம், இறந்த நாளை  தான் அனைவரும் சந்தோசமா கொண்டாடுறாங்க ..

எல்லா பிரச்சனைக்கும் கடைசியில் தீர்வு உண்டு..

முடியாதவர்களுக்கு மரணத்தை விட பெரிய சந்தோசம் எதுவும் இல்லை..

நம் செருப்பு தொலைந்தால் தான் அடுத்தவன் காலை பார்போம்..
 
காரணமே இல்லாம பிடிச்சிருந்தா அது குழந்தைகளைத்தான்..
 
பார்சலை ஏன் பிரிச்சு பாக்கலை?
பிரிச்சுப்பார்த்துட்டா என்ன இருக்குன்னு தெரிஞ்சிடும்.பிரிக்காம இருந்து என்ன குடுத்திருப்பான்னு ஏங்கறதுல ஒரு சந்தோசம்  இருக்கு.
 
வெளில நாம் எங்காவது போறப்ப கண்ணாடில ஒரு தடவை நம்மை பார்த்துட்டு போகனும்,நம்மையே நமக்கு பிடிச்சாதானே மத்தவ்ங்களுக்கு நம்மளை பிடிக்கும்.

காதலிக்கறவங்களை நிறுத்தி ஏன் காதலிக்கறீங்கனு கேட்டுப்பாருங்க,யாராலும் பதில் சொல்ல முடியாது.அதுதான் காதல்.
 
ஏன் தாலியை கழட்டி வெச்சுட்டே?தப்பு பண்ணும்போது உறுத்துச்சா?
 
 மேலே கூறிய வசனம் அனைத்தும் சாம்பிள் தான் .. படம் முள்ளுக்க இது போல நெறைய இருக்கு.. எனக்கு பிடித்தது அந்த வசனம் மற்றும்..
 
மீனாக்ஷி  ஒரு நாயகி.. ஒரு ஜடம் போல வந்து போறாங்க.. சந்தானம் சில இடகளில் சிரிக்க வைக்கிறார்..  சொல்லிக்கிற மாதரி வேற எதுவும் இல்லை..
 
கண்டிப்பா குடும்பத்துடன்  உட்கார்ந்து படம் பாக்குறது  கொஞ்சம் கஷ்டம் தான்
 
 

1 மாத மின்கட்டணம் 70 லட்சம்

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் புதிதாக குடியேறிய வீட்டின் முதல் மாத மின் கட்டணம் ரூ.70 லட்சம் வந்துள்ளதாம். 

மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக இது வர்ணிக்கப்படுகிறது. பெரும் பணக்காரரான பில் கேட்ஸுக்குக் கூட இப்படி ஒரு வீடு இல்லையாம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். 

புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த மாபெரும் வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார் முகேஷ் அம்பானி. இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம். ஒரு வீட்டுக்கு இவ்வளவு அதிக கட்டணம் வந்திருப்பது மும்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் அனைத்து மின்சார சாதனப் பொருட்களின் பயன்பாட்டையும் கூட்டிப் பார்த்தால் சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன விசேஷம் என்றால், கட்டணத்தை சரியாக கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கழித்து விட்டுத்தான் இந்த 70 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி..

முகேஷ் அம்பானி கட்டியுள்ள இந்த ஒரு மாத பில் கட்டணம், 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமம் என்கிறார்கள். 


Thursday, November 25, 2010

F.I.R பதிவு செய்வது எப்படி?

First Information Report - என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் 'முதல் தகவல் அறிக்கை'. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம்.

"இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும். உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட் டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும்.

சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக் கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும். அவருக்கும் மேல் உள்ள அதிகாரி களான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும். 

பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, 'குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்' ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். 
 
ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம்.  


விகடன்


Wednesday, November 24, 2010

பிகார் தேர்தல் சொல்லும் சேதி

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் போன்ற செய்திகள்தான் பத்திரிகைகளில் அதிகமாக இடம் பிடித்து வருகின்றன. இதனிடையே பிகாரில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கும், பொதுமக்களின் அதிகபட்ச பங்களிப்புடனும், வன்முறைகள் இன்றியும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பிகார் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 சதவீதம் கூடுதலாக வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.   
                               
அக்டோபர் 21 முதல் நவம்பர் 20-ம் தேதி வரை 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதல் கட்டத் தேர்தலில் பிகார் தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 54 சதவீத வாக்குகள் பதிவாயின.அடுத்த கட்டத் தேர்தல்களிலும் 50 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குப் பதிவு இருந்தது. 6-வது, இறுதிக் கட்டமாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இங்கும் 51 சதவீத வாக்குகள் பதிவாயின.மக்களை அச்சுறுத்தும் வகையில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய போதிலும் தொடர்ந்து அச்சமின்றி மக்கள் தேர்தலில் பங்கேற்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.தேர்தல் சுமுகமாக நடைபெற துணை ராணுவப் படையினரின் பங்களிப்பையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்களின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளால்தான் தேர்தலைச் சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன.   

பிகாரில் தேர்தல் என்றால் மாவோயிஸ்டுகளின் அட்டூழியத்துக்கு நடுவே அரசியல் கட்சியினரின்  வன்முறைகளும் அரங்கேறும். வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, வாக்குப் பதிவு இயந்திரங்களை அபகரித்துச் செல்வது போன்ற அடாவடிகளும் பிகார் தேர்தலின் போது நடைபெறும். ஆனால் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அரசியல்வாதிகளும் அடக்கியே வாசித்துள்ளனர்.ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி, காங்கிரஸ், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி என்று பிகார் பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. 

 இன்று அறிவித்த பிகார் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்ததன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு தங்களது ஆதரவு இல்லை என்பதை பிகார் மக்கள் தெளிவாக உணர்த்திவிட்டனர். எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடைபெறும் நமது மாநிலத்தில் கூட பலர் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கச் சோம்பேறித்தனம் காட்டும் நிலையில், மாவோயிஸ்டுகளின் மிரட்டல்களை புறம் தள்ளி பிகார் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.இதன் மூலம், "மாவோயிஸ்டுகள் மக்களின் பிரதிநிதிகள்', "மாவோயிஸ்டுகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது' என்று கூறுபவர்களின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. 

வன்முறையையும், வன்முறையாளர்களையும் மக்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது.பதிவான வாக்குகள் ஒவ்வொன்றும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரானவை. அவர்களை தாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை நாட்டுக்கு உணர்த்துபவை.தேர்தலின்போது கண்ணிவெடித் தாக்குதல் போன்ற ஒரு சில அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்த போதிலும், தேர்தலைச் சீர்குலைக்க மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் முற்றிலுமாகத் தோல்வியடைந்து விட்டன. மக்களின் உண்மையான மனநிலை (மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு இல்லை என்பது) வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், தேர்தலை நடத்த விடாமல் மாவோயிஸ்டுகள் குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்தினர்.

மக்கள் தங்கள் பக்கம் உள்ளார்கள் என்ற நம்பிக்கை மாவோயிஸ்டுகளுக்கு இருந்தால்,  தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று கூறினால் மட்டுமே போதுமானது. கொடூரமான தாக்குதல்களை நடத்தி மக்களை அச்சுறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று பிகார். அங்கு பல கிராமங்களில் மின்சார வசதிகிடையாது. சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவு இல்லை. வேலைவாய்ப்பு தேடி அம்மாநில மக்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலையும் உள்ளது. இதுவும் நக்ஸல் இயக்கத்தில் இளைஞர்கள் சேருவதற்கு முக்கியக் காரணம். இந்தப் பிரச்னைகளை அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை காப்பது அரசியல்வாதிகளின் கடமை!

முன்பு ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும், இதே போன்று பயங்கரவாதிகளைப் புறக்கணித்து மக்கள் பெருவாரியாக வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின், மக்களை மறந்து தங்கள் நிலையை வளப்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்கள் முயற்சித்ததால் அங்கு மீண்டும் பிரச்னைகள் தலை தூக்கி, முன்பை விட அதிகமாக வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகள் மக்களை மறந்து சுயநலத்துடன் செயல்பட்டால் காஷ்மீரில் இப்போது நிலவுவது போன்ற அமைதியற்ற சூழ்நிலை பிகாரிலும் ஏற்படும். மாவோயிஸ்டுகள் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்ளவும் இது வாய்ப்பை அளித்துவிடும்.

மீண்டும் நாளந்தா!

இந்தியத் திருநாட்டின் பெருமைகளைப் பண்டித நேருவின் "நான் கண்ட இந்தியா'வில் பார்க்கலாம். மனித நாகரிகங்கள் வளர்ந்த தொட்டில் இந்தியா. மனித குலம் தமிழ் மண்ணில் தோன்றியது. பல்வேறு தேசிய இனங்கள், பல கலாசாரங்கள் கொண்ட தொகுப்பே இந்தியா. இவ்வாறான கலாசாரமிக்க இந்தியாவில் ஆதியில் பல கலாசாலைகள் இருந்தன. நாளந்தா, காஞ்சி, தட்சசீலம், நாகார்ஜுனா, உஜ்ஜயினி என்று நீண்ட பட்டியலிடலாம்.

இன்றைக்கு மேலை நாடுகள் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப விஞ்ஞான வசதிகள் சார்ந்த நாகரிகம், வாய்ப்புகள் என்று வளர்ச்சி அடைந்துவிட்டிருந்தாலும் இந்தியாவிலிருந்த நாளந்தா உள்ளிட்ட சிந்தனைச் சாலைகள் செயல்பாட்டில் இருந்த (கி.மு. 415) காலத்தில் இம்மாதிரியான கலாசாலைகள் அங்கு இருக்கவில்லை. கிரேக்க நகர் நிர்வாக அமைப்பு, ரோமானிய அரசு நிர்வாகம் போன்றவை யாவும் நாளந்தாவுக்குப் பின்னால் ஏற்பட்டவைதான்.

உலகத்துக்கு நாகரிகத்தை, கல்வியை வழிகாட்டிய பெருமை நமது மண்ணுக்கு மட்டுமே உண்டு. இன்னும் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் நாளந்தாவுக்கு முந்தையது நமது தமிழனின் சங்க காலம்; காஞ்சியிலும் நாளந்தா மாதிரி பௌத்த அமைப்புகள் அமைத்த கல்விக்கூடங்கள் இருந்தன என்ற பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு.

1193-ம் ஆண்டு கீர்த்தி பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், துருக்கியைச் சேர்ந்த மன்னர் பக்தியார் கில்ஜியால் சீரழிக்கப்பட்டது. கல்வியின் கலங்கரை விளக்கமாக அன்று விளங்கிய நாளந்தா, பாடலிபுத்திரத்திலிருந்து 55 கி.மீ. தொலைவில் இருந்தது. இந்தப் புகழ்மிக்க கல்விக்கூடம்தான் உலகத்துக்கே முதன்முதலில் புத்தரின் போதனைகளைப் பரப்ப முற்பட்டது.  

நாளந்தா என்றால் "குறைவற்ற கொடை' என்று பொருளாகும். நாளந்தா அமைந்த மாமரத் தோப்பில் 1 கி.மீ. அளவுக்கு அகழாய்வு நடந்தது. அப்போது மொகஞ்சதாரா, ஹரப்பா போன்று நாளந்தாவிலும் கட்டடச் சுவர்கள் தென்பட்டன. சுட்ட செங்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்டு, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தர்போல் செங்கல் வண்ணத்தோடு வரலாற்றுச் சாட்சியங்களாக இன்றும் அவை எழுந்து நிற்கின்றன.

நாளந்தாவை குப்த மன்னர்களும், மௌரிய அரசர்களும் கட்டினர். கி.மு.415லிருந்து 455 வரை இருந்த மன்னர் சக்ரதித்யா என்ற குமர குப்தர் இதற்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். செங்கல், சுண்ணாம்பு, வெல்லம், வில்வம், உளுந்து ஆகியவற்றைக் கொண்டு வான் உயரக் கட்டடங்கள் இங்கே அப்போது எழுப்பப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகத்தைச் சுற்றி மதில் சுவர்களும், நான்கு நுழைவு வாயில்களும் அமைந்திருந்தன. அங்குள்ள காவலர்கள் அனுமதித்தால்தான் உள்ளே செல்ல முடியும்.

தனித்தனியாக 10 வளாகங்கள், 10 கோயில்கள், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகள், கருத்தரங்க அரங்குகள், தியான மண்டபங்கள் என்ற இவை யாவும் செங்கற்களால் கட்டப்பட்டவை. வகுப்பறைக்குப் பேராசிரியர்கள் வந்து பாடம் நடத்த, இன்றைக்கு இருப்பதுபோல மேடைகள், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் அமரக்கூடிய காற்றோட்டமான வசதிகள், தருமத்தின் புதையல் என்று அழைக்கப்பட்ட "தர்மா கஞ்ச்' என்ற 9 மாடி நூலகம் போன்றவை அமைந்திருந்தன. இந்த நூலகத்தை பக்தியார் கில்ஜி எரித்தபொழுது அங்கிருந்த உயிரோட்டமான ஓலைச் சுவடிகள் எரிந்து சாம்பலாகவே ஆறு மாதங்கள் ஆயின என்று வரலாறு கூறுகிறது. இந்த நூலகத்தில் பௌத்தம், இந்து மதம், வானிலை, அறிவியல், மருத்துவம், கணிதம், தர்க்கவியல், யோக சாஸ்திரம், வேதங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் விதவிதமான ஓலைச்சுவடிகள் நிரம்ப இருந்தனவாம்.

மாணவர்கள் தங்க அனைத்து வசதிகளோடு 11 விடுதிகளில், 11,500 அறைகள் இருந்தன. அங்கு வசதியான குளியலறைகளும் இருந்தன. மாணவர்களுக்கு உணவு சுவையாக, சுத்தமாக, தாராளமாக வழங்கப்பட்டன. மொத்தம் 10,000 மாணவர்கள், 2,000 பேராசிரியர்கள் நாளந்தாவில் இருந்தனர். இந்தப் பல்கலைக்கழகத்துக்கு துருக்கி, கிரீஸ், இந்தோனேஷியா, சீனா, திபெத், ஜப்பான், கொரியா, பெர்சியா போன்ற வெளிநாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து தங்கிக் கல்வி பயின்றனர். பல்கலைக்கழக மதிற்சுவரின் வெளியே பெரிய ஏரிகளும், பூங்காக்களும் இருந்தன.

இங்கு வெறும் மானிடவியல் மட்டுமல்லாமல், அறிவியல் மற்றும் பொதுச் சுகாதாரம் போன்றவை பற்றிய கல்வியும், பயிற்சியும் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.குறிப்பாக, பௌத்த தத்துவங்களுக்கு நாளந்தா கல்விக் கேந்திரமாகத் திகழ்ந்தது. நாளந்தா சிதையுண்ட பின்பு பலகாலம் கடந்துதான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இல்லை. இன்றைக்கு உலக அளவில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம், மொராக்காவில் உள்ள ஃபெஸ் நகரிலுள்ள அல் கரோயின் பல்கலைக்கழகமாகும். இது கி.பி. 895-ல்தான் தொடங்கப்பட்டது. அதேபோல கெய்ரோவில் கி.பி. 975-ல் அல் அழர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இவ்விரண்டைவிட நாளந்தா பழமை வாய்ந்தது.

நாளந்தாவின் பெருமைகளை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங், தன்னுடைய பயணக் குறிப்பில் சிறப்பாகச் சொல்கிறார். நாளந்தாவின் கட்டடங்கள், கோபுரங்கள், கோயில்கள், கலையரங்குகள் பற்றி தெளிவாகச் சொல்கிறார். வானுயரக் கோபுரங்கள் பனிப்படலத்தைத் தொடும் அளவுக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ் இ சிரஜ், பக்தியார் கில்ஜியின் படையெடுப்பால் பல்கலைக்கழகம் மட்டும் எரியாமல், பல புத்த பிட்சுகள் எரிக்கப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பிட்சுகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன என்றும் குறிப்பிடுகிறார்.

நாளந்தா பல்கலைக்கழகம் புத்துயிர் பெற 90-களிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சியால் 2006-ல், உலக அளவில் ஆலோசனைக் குழு அமார்த்தியா சென் தலைமையில் அமைக்கப்பட்டது. இக் குழுவில் சிங்கப்பூர் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜ் யோ, வரலாற்று ஆய்வாளர் சுகதா போஸ், தேசாய் பிரபு, சீன அறிஞர் வாங் பான்வெய் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த மசோதாவும் நிறைவேறியுள்ளது.

இப் பல்கலைக்கழகத்தைத் திரும்பவும் அமைக்க 500 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இதற்காக சர்வதேச அளவில் நிதி திரட்டும் பணிகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இந்திய - சிங்கப்பூர் அரசுகள் இப்பணியில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆக்ஸ்போர்டு, ஹார்வர்டு, யேல், பாரிஸ், பொலோனா போன்ற பல்கலைக்கழகங்கள் நாளந்தாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன.

உலகில் சிறந்த 25 பல்கலைக்கழகங்களில் ஆசியாவில் சிறப்பான பல்கலைக்கழகங்கள் டோக்கியோ, ஹாங்காங், கியோடோ ஆகும். இந்த வரிசையில் பழமையான நாளந்தா ஆசியக் கண்டத்தின் முழுமைக்கும், ஏன் உலக அளவில் மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்யும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் எழுந்துள்ளது. பன்னாட்டு அளவில் அமையும் இப் பல்கலைக்கழகம் ரூ. 250 கோடி கட்டுமானத்துக்கும், மற்ற செலவுகளுக்கு ரூ. 250 கோடி என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிகாரில், ராஜ்கீர் செல்லும் பில்கி மகதேவா என்ற பகுதியில் முள்புதராக இருந்த இடம், பல்கலைக்கழகம் அமைய கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டுத் திட்டமாக அமையும் இப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தின் நம்பிக்கை. ஹான்ஸ் என்ற காட்டுமிராண்டிகள் ரோம் பேரரசை அழித்தது போன்று இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்த நாளந்தாவை அழித்தாலும் அதனுடைய தரவுகள் ஓரளவு நம்முடைய பெருமைகளைப் பேசச் செய்கின்றன.

யுவான் சுவாங் குறிப்பிட்டவாறு அறிவுக் கோயிலாக மட்டுமல்லாமல் சகிப்புத்தன்மையுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து மனித நேயச் சந்திப்பாக இவ்வளாகம் இருந்தது. அமைக்கப்பட உள்ள பல்கலைக்கழகம் அம்மாதிரி அமைந்தால் எதிர்காலத்தில் யுவான் சுவாங்கின் கருத்து மெய்ப்படும்.

டாக்டர் அமார்த்தியா சென் குழுவினர் இதற்கான பணிகளில் இறங்கினாலும் இதை அமைக்கப் பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் நெருடல்; தர்மசாலாவில் 50 ஆண்டுகளாகத் தங்கிப் பணி செய்யும் தலாய் லாமா, சீனாவின் வற்புறுத்தலால் இந்தப் பிரச்னையில் தொடர்ந்து புறக்கணிக்கிறார் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகளாவிய ஒத்துழைப்புடன் இவற்றையெல்லாம் கடந்து நாளந்தா மீண்டும் உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பண்டித நேரு அலாகாபாத் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது, பல்கலைக்கழகம் என்றால் மனித நேயம், அறிவாற்றல், கருத்து உரிமை, புரிதல், உணர்தல், கண்டு கொள்ளுதல், பகுத்தறிதல், உண்மையைத் தேடல், சகிப்புத்தன்மை என்பதன் வெளிப்பாடு ஆகும். இந்த உயர்ந்த லட்சியத்தை நோக்கி நாளந்தா பயணிக்க வேண்டும்.




Tuesday, November 23, 2010

நகரம் - மறுப்பக்கம்

சுந்தர் சி, இவருடைய இயக்கத்தின் கீழ் வந்த அனைத்து படங்களிலும் காமெடி மிக அற்புதமா மகா இருக்கும்.. பெரிய லிஸ்டே சொல்லாம்.. கிட்ட தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு சுந்தர் சி இயக்கியுள்ள படம் நகரம். சுந்தர் சி முதல் முதலாக நாயகனாக நடித்து வெளிவந்த படம் தலைநகரம்.அதற்க்கு அப்புறம் அவர் நடித்த பிற இயகுனர்   இயக்கத்தின் படங்கள் அனைத்து படங்களையும் காலங்கள் அறியும்.. ( அட்டர் பிளாப் ).

கதை :

கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்!இது தான் படத்தின் கதை சுருக்கம்.. ஏற்கெனவே அவர் நடித்த தலைநகரம் படத்தின் இன்னொரு வடிவம்தான் இந்தப் படம்.

கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ரவுடி கேட் செல்வத்தின் (சுந்தர் சி) ப்ளாஷ்பேக்காக விரிகிறது கதை.அவரே அவர் கதையை சொல்ல சொல்ல காட்சிகள் பின்னோக்கி போகிறது. சுந்தர் சி ஒரு ரவுடி. ஒரு குற்றத்துக்காக 5 வருட தண்டனையுடன் சிறைக்குப் போகும் சுந்தர் சி , தனது பழைய நண்பனும் உள்ளூர் இன்ஸ்பெக்டருமான போஸ் வெங்கட் உதவியோடு விடுதலையாகிறான்.

ரவுடியாக வாழ்ந்தவன், சிறைக்குப் போய் திருந்தி நல்லவனாக வாழ முயற்சிக்கிறான். ஹைதராபாதுக்கு வருமாறு அவனது பழைய முதலாளி பாய் அழைக்கிறார்.ஆனால் சூழ்நிலை அவனை விடாமல் குற்றவாளியாகவே வைத்திருக்கப் பார்க்கிறது. குறிப்பாக போஸ் வெங்கட் தனது சட்டவிரோத காரியங்களுக்கு செல்வத்தை கருவியாக்குகிறான்.

அப்போதுதான் அனுயா உடன் அறிமுகம் ஏற்பட்டு, இருவருக்கும் காதலாகிறது.

இதற்கிடையே,  சுந்தர் சி பழைய முதலாளி பாய்க்கும் நண்பனுக்கும்  ஒரு கடத்தலில் பகை முற்றுகிறது. நண்பனை  காக்க செல்வம் முனைகிறபோதுதான் நண்பனின்   உண்மை யான முகம்  சுந்தர் சிக்கு  தெரிகிறது... அவர் என்ன செய்தற் மற்றும் அவர் நினைத்த வலக்கை அமைத்து கொண்டர என்பதே நகரம் படம்.

சுந்தர் சி ,  நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார். மூச்சிரைக்கிறார். ஆனால் முகத்தில் ஒரு மி.மீட்டர் எக்ஸ்பிரஷன் கூட இல்லை. 

வடிவேலு.படத்தின் ஹைலைட் இவர்தான். லாஜிக் பார்க்காமல் அவர் செய்யும் சேட்டைகளை ரசிக்கலாம். ஸ்டைல் பாண்டியாக மனிதர் கலக்கியிருக்கிறார். அதே காலனியில் எதிர்வீட்டில் குடியிருந்து கொண்டு இவர் விடும் காதல் அம்புகள் ( இதற்க்கு ஒரு பிளாஷ் பேக் ), நாயகியின்  வீட்டு ஆன்ட்டனாவை கரெக்ட் பண்ண போகிற காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி போகிறது. 

படம் முழுக்க தலைநகரம் படத்தின் சாயல் தெரிந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலம்.

ஆனால் படம் முழுக்க  செயற்கை தனம் நிறைய இருக்கு. சில நேரகளில் போர் அடிக்குது.இன்னும் நல்லா   எடிட்டிங் பண்ணி இருக்கலாம்.   

நகரம் - பார்க்கலாம் ஒரு முறை ...



எடியூரப்பா - "நிஜ' மோசடிகள்!

கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற சொற்றொடர் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது நன்றாகவே பொருந்தும். மும்பையில் ஆதர்ஷ் வீடுகள் தொடர்பாக முழுவீச்சில் களத்தில் இறங்கி, அந்த மாநில முதல்வர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கிய பா.ஜ.க.வினருக்கு, தற்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் இதே சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது, மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையில் எத்தகைய முறைகேடு நடைபெற்றதோ அதற்கு இணையான, அதைவிடவும் மிகவும் மோசமான முறைகேடுகள் கர்நாடகத்திலும் நடைபெற்று இருக்கின்றன.முதல்வர் பதவியில் இருப்பவர் தனது அதிகாரத்தைத் தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதை மீறுவது பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றம். ஆனாலும் அதிகாரம் கண்களை மறைக்கிறது. குடும்பத்தை மட்டுமே முன்நிறுத்துகிறது. இதற்கு எந்த மாநிலமும், எந்த முதல்வரும், ஏன், அரசியலில் இருக்கும் பெரும்பான்மையான தலைவர்கள் பலரும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.

எடியூரப்பா, அவரது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் "ஜி' பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் தன் மகன், மகள் உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த முறைகேட்டில் தான் தப்பிக்க முடியாது என்கிற நிலையில், தன் மகள், மகன் மற்றும் உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார் எடியூரப்பா.திருடியதைக் கொடுத்து விடுகிறேன் என்றால், திருடன் அல்ல என்றாகிவிடுமா, என்ன? இப்போது இன்னும் வேகமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர் மீது மட்டுமல்ல, எடியூரப்பாவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜே மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்தன. வீட்டுவசதித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் (மாநகராட்சிக் கவுன்சிலர்) கட்டா ஜகதீஷ் மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயில் தொடங்கி குமாரசாமி வரை இருக்கிறது. 

எடியூரப்பாவின் நிலமோசடி ஊழல் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் தற்போது பா.ஜ.க.வுக்கு இருக்கும் நெருக்கடி. நியாயமாகப் பார்த்தால், எடியூரப்பா தார்மிக அடிப்படையில் தனது பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் எடியூரப்பா. தனது கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படியொரு ஊழலை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் பா.ஜ.க.வின் போக்கு தற்போது அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. 

முதலில் கர்நாடகத்தில் உள்ள ஊழலுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி யாரெல்லாம் ஊழல் புகாரில் சிக்கினார்களோ அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கிக் கொண்டே வருகிறது என்கிற தார்மிக பலம்தான் காரணம். சசி தரூர், மும்பையில் முந்தைய முதல்வர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கல்மாடி மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வால் இதுவரை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை.   

தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை உடைப்பேன் என்று அவர் சொல்வதாக மேலிடத்துக்குத் தகவல் பறக்கிறது. தென்னகத்தில் தனது சக்தி கேந்திரம் என்று பா.ஜ.க. கருதும் கர்நாடக அரசை இழக்க அந்தக் கட்சி தயாராக இல்லை. அவரது சவாலைச் சகித்துக்கொண்டு சமாதானம் பேச தில்லிக்கு வரச் சொன்னால் புட்டபர்த்திக்குப் போகிறார் எடியூரப்பா. பா.ஜ.க.வால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. 

ஏற்கெனவே இரண்டு முறை எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. அதை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்த நிலையில் மூன்றாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் அவர். ஆட்சியைவிடக் கட்சியின் கௌரவம்தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாகத் தெரியவில்லை. தனது பதவியைவிட கட்சியின் நன்மதிப்புதான் பெரியதென்று எடியூரப்பாவும் கருதுவதாகத் தெரியவில்லை.

எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நில மோசடி என்பது இந்தியா முழுவதிலும் அரசியல்வாதிகளின் தொழிலாகவே ஆகிவிட்டது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சிக்கு நெருக்கமான தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள், உறவினர்கள், ஏன், அரசுக்குச் சாதகமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு ஒதுக்கீடு என்கிற பெயரில் வீட்டுமனைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஓர் அரசு தனிநபருக்கு நிலத்தை வழங்குகிறது என்றால், அது குறித்து அரசு கெசட்டில் வெளியாக வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் வெளியானாலும்கூட, பலன்பெறும் நபர்கள் யார் என்கிற விவரம் தொடர்புடைய சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதால், அரசு கெசட்டில் வெளியானாலும்கூட யாருக்கும் தெரியாமலேயே போகிறது. யாரோ ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரிலும் அரசு நிலம் மிகக் குறைந்த விலைக்குக் கைமாறுகிறது. இதைச் செய்யும் அரசியல்வாதிகள் கோடிகோடியாய் லாபம் அடைகிறார்கள்.    

இதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் மாவட்ட ஆட்சியர்களும்கூட இருக்கிறார்கள். முக்கியமான கோடைவாசஸ்தலங்கள் உள்ள பகுதிகளில் எந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலத்தில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் மனைகள், புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, விசாரித்தால் இன்னும் பல பூதங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளம்பும்.

லியோ டால்ஸ்டாய் எழுதிய "6 அடி நிலம்' சிறுகதையை இவர்களுக்கு யார் படித்துக் காட்டுவது? 

- தினமணி  

Monday, November 22, 2010

ராசா இப்போ..பரிவாரங்கள் எப்போ? - ஓ பக்கங்கள்

கடைசியில் ஆ.ராசாவைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டியதாகிவிட்டது. ஒரு வருடம் முன்னாலேயே செய்திருக்க வேண்டியதை சோனியாவும் மன்மோகன்சிங்கும் தாமதமாகச் செய்திருக்கிறார்கள். இப்போது செய்ய முடிந்ததற்குக் காரணம் இன்னும் ஆறு மாதங்களில் வரப் போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தி.மு.க இருப்பதால், இப்போது அது பணியவேண்டியதாயிற்று. இல்லையென்றால், தி.மு.க நிச்சயம் ராசாவை ராஜினாமா செய்யவைத்திருக்காது. காங்கிரஸ் தலைமையும் கடுமையாக நடந்துகொண்டிருக்காது.

ராசாவை நீக்க, நிச்சயம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு ஒரு காரணம். ஆட்சியை தி.மு.க கவிழ்த்துவிடும் என்ற பயம் இல்லாமல் நீக்குங்கள்; நிபந்தனையற்ற ஆதரவை நான் தருகிறேன் என்று ஜெயலலிதா அறிவித்தது நிச்சயமாக காங்கிரசின் கையை பலப்படுத்தியது. நீ இல்லாவிட்டால் அவர் என்ற சாத்தியம் இருக்கும்போது கருணாநிதியிடம் அடித்துச் சொல்லும் தைரியம் காங்கிரஸுக்கு கிடைத்தது. 

இதனால் தேர்தலில் அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் அணி சேர்ந்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் காங்கிரசின் பேரம் பேசும் சக்தி அதிகரித்துவிட்டது. தேர்தலில் அதிக இடங்கள், ஆட்சி அமைத்தால், எத்தனை மந்திரி பதவிகள், துணை முதல்வர் பதவி உண்டா இல்லையா என்பதையெல்லாம் அடித்துப் பேசி வாங்கும் சக்தி அதிகமாகியிருக்கிறது. காங்கிரஸ் விரும்பும் அளவை தி.மு.க தர மறுத்தால், நிச்சய்ம் நஷ்டம் தி.மு.கவுக்குத்தான். ஏனென்றால் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். காங்கிரஸ் ஜெ அணிக்குச் செல்லுமானால், கூடவே நிச்சயம் பா.ம.கவும் சென்று விடும். விஜய்காந்தும் அங்கே செல்வார். பதிலுக்கு வைகோவும் இடதுசாரிகளும் தி.மு.கவுக்கு சென்றாலும் கூட, எண்ணிக்கை செல்வாக்கு பலம் காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணிக்குத்தான் இருக்கும். எனவே மறுபடி ஆட்சியைப் பிடிக்க ஜெயலலிதாவுக்குக் காங்கிரஸ் தேவைப்படும் அதே அளவுக்குக் கருணாநிதிக்கும் தன் ஆட்சியை மறுபடியும் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஜெயலலிதாவின் அறிக்கையால் நிகர லாபம் காங்கிரசுக்குத்தான். அதன் அடையாளம்தான் ஆ.ராசாவுக்குக் கொடுத்த கல்தா.

ஸ்பெக்ட்ரம் 2ஜி முறைகேட்டில் ராசா செய்ததாக கணக்குத் தணிக்கைத் தலைவர் அறிக்கையில் சொல்லியிருப்பதைப் பார்ப்போம். ப்ழைய முறைப்படியே முதலில் விண்னப்பிப்போருக்கு ஒதுக்கிடு என்ற அடிப்படையைப் பின்பற்றியது தவறு. ஏனென்றால் ஸ்பெக்ட்ரம் உரிமத்தின் சந்தை மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆனால் பழைய விலைக்கே விற்றிருக்கிறார். வேண்டிய கம்பெனிகளுக்குக் கொடுபபதற்காக, விண்ணப்ப தேதியை திடீரென முன்னதாக மாற்றியிருக்கிறார். இப்படிச் செய்யாமல் ஏலத்தில் விட்டிருந்தால் , அரசுக்கு பல கோடி ரூபாய்கள் லாபம் கூடுதலாக கிடைத்திருக்கும். 

பழைய விதிகளை அப்படியே பின்பற்றினேன். அதிலென்ன தவறு என்பது ராசா, கருணாநிதி வாதம். நிர்வாகத்தில் செய்பவை செய்யத் தவறுபவை இரண்டுமே முக்கியமானவை. செய்யத் தவறிய குற்றம் இது. அதனால் பெரும் நஷ்டம் என்பது வெறும் யூகம்தான் என்பது ராசா-கருணாநிதியின் இரண்டாவது வாதம்.

இதுவும் சரியல்ல. ஏனென்றால் உரிமத்தை 1651 கோடி ரூபாய்களுக்கு ( சுமார் 40 கோடி டாலர்) அரசிடம் வாங்கிய கம்பெனிகள் தங்கள் பங்குகளை வெளியாருக்கு விற்றிருக்கின்றன. ஸ்வான் 45 சத பங்குகளை 90 கோடி டாலருக்கும், யூனிடெக் 60 சதப் பங்குகளை 136 கோடி டாலருக்கும், எஸ்டெல் 49 சதப் பங்குகளை 22.5 கோடி டாலருக்கும் டாட்டா 26 சதப் பங்குகளை 27 கோடி டாலருக்கும் விற்றிருக்கின்றன. அதாவது 40 கோடி டாலருக்கு வாங்கியதைப் பயன்படுத்தி 275 கோடி டாலருக்குப் பங்கு விற்றிருக்கிறார்கள். ஏழு மடங்கு லாபம் அவர்களுக்கு. அது அரசுக்கு நஷ்டம். தணிக்கைக் குழு வெவ்வேறு மதிப்பீடுகளின்படி நஷ்டம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை இருக்கலாம் என்று கூறுகிறது. 

அந்தக் கம்பெனிகளுக்கு லாபம் செய்து கொடுத்ததற்கு, பதிலுக்கு அதில் எவ்வளவு பங்கு அரசியல்வாதிகளுக்குக் கிடைத்தது என்பதுதான் முக்கியமான கேள்வி. இவ்வளவு கோடி ரூபாய்கள் சமபந்தப்படும் ஒரு விஷயத்தை ராசா தனியே தன்னந்தனியே செய்ய வாய்ப்பில்லை. நிச்ச்யம் கட்சியும் தலைமையும் கட்சிக்குள் ராசாவின் புரவலர்களும் சம்பந்தப்படாமல் இருக்க முடியாது. அந்த சம்பந்தம் இருப்பதனால்தான் கடைசி நிமிடம் வரை ராசா குற்றமற்றவர் என்றுகருணாநிதியும் கனிமொழியும் மீடியாவிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் தில்லுமுல்லுவில் லாபமடைந்தவர்கள் தி.முகவில் உள்ளவர்கள் மட்டுமா, அல்லது கூட்டணிக்கட்சியான காங்கிரசிலும் உண்டா எனப்தெல்லாம் இனிமேல்தான் துருவப்படவேண்டும்.

முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்படவிலலையென்றால் ராசாவை எப்போதோ பலி கொடுத்திருக்கலாம். ஒரே ஒரு டெலிபோன் பேச்சுக்காக தமிழகத்தில் பூங்கோதையை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார் கருணாநிதி. தன் உறவினர் மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியுடன் டெலிபோனில் பேசியதுதான் பூங்கோதையின் குற்றம். 

ராசா தொடர்பான இரண்டு டெலிபோன் பேச்சுகள் ஏழு மாதங்கள் முன்னால் மே மாதத்தில் அம்பலமாகின. இரண்டும் சி.பி.ஐ பஅதிவு செய்த பேச்சுகள். டெல்லியில் அதிகாரமையங்களுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்பில் தொடர்புகொண்டு காரியமாற்றும் பிரபல தரகரான நீரா ராடியா என்ற பெண்மணியுடன் கனிமொழியும் ராசாவும் பேசிய பேச்சுகள் இவை. ராடியாவை சி.பி.ஐ கண்காணித்து வந்தது. ஆகஸ்ட் 2008 முதல் 300 நாட்களுக்கு அவர் போனை ஒட்டுக் கேட்டது.

ஹெட்லைன்ஸ் டுடே சேனல் அம்பலப்படுத்திய பேச்சுகளில் சில பகுதிகள் மட்டும் 

இதோ:
பேச்சு 1. கனிமொழியுடன் – மே 21, 2009, காலை 8:41
கனிமொழி : ஹலோ
ராடியா : வேலை இன்னும் உறுதிப்படவில்லை. பிரதமர் இன்றும் அது பற்றிய விவாதங்களில்தான் இருக்கிறார்.
கனிமொழி : தொலைத்தொடர்புத் துறை எங்களுக்கு என்று வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். இனி அதில் ஏதாவது மாற்றங்கள் . . .
ராடியா : என்ன?
கனிமொழி : எங்களுக்குத் தொலைத் தொடர்பு என்பதை உறுதிப்படுத்தி விட்டார்கள். ஆனால் அது ‘அவருக்குப்’ போய்விடக் கூடாது. ஏனென்றால் அவர் மீடியாவில் அப்படியான செய்திகளை வரவழைத்துக் கொண்டிருக்கிறார். (‘அவர்’ என்பது தயாநிதி மாறன்தான் !)

பேச்சு இரண்டு: மே 24, 2009 காலை: 11:05
ராசா : என் பெயரை ‘கிளியர்’ பண்ணியாச்சா?
ராடியா : நேற்றிரவு உங்கள் பெயரை கிளியர் பண்ணியாச்சு.
ராசா : சரி, தயாநிதி விஷயம் என்னாச்சு? ஜவுளித் துறையா அல்லது ரசாயனம் / உரத்துறையா?
ராடியா : தயாவுக்குக் கிடைக்காது, அழகிரி, தயா இருவரில் ஒருவர்தான் நுழைய முடியும்.
ராசா : இல்லை, இருவருமே நுழையலாம்.
ராடியா : இருவருமா? பாலுவால்தான் பிரச்சினை இருக்குமென்று நினைக்கிறேன். மூன்று குடும்ப உறுப்பினர்களை நுழைப்பதில் கஷ்டம்தான்.
ராசா : (சிரிக்கிறார்) ஆமாம். ஆனால் எல்லோருக்கும் தெரியுமே .
ராடியா : இல்லை, கனி(மொழி) என்னிடம் நேற்றிரவு சொன்னார், அவர் தந்தை அவரிடம் நேற்று கூறியதாக, மூன்று குடும்ப உறுப்பினர்களை உள்ளே நுழைப்பது கஷ்டம், இதிலுள்ள பிரச்சினையை அவரால் உணரமுடிகிறது . . .
ராசா : பொறுத்திருந்து பார்ப்போம். நாம் போராடிப் பார்ப்போம்.

இந்த இரண்டு டேப்களுக்கு இன்றளவும் பிரதமர் முதல் கருணாநிதி வரை விளக்கம் தரவில்லை. போன் குரல்கள் எங்களுடையதல்ல என்றால் டெஹல்கா விவகாரம் போல கோர்ட்டுக்குப் போய் டேப்பை சோதனையிட்டு நிரூபிக்க சேனல் தயாராக இருந்தது. இப்படி ஒரு டேப்பில் ஜெயலலிதா சிக்கியிருந்தால், கருணாநிதி வானத்துக்கும் பூமிக்குமாக எம்பிக் குதித்து மாபெரும் மீடியா தாண்டவமே ஆடியிருப்பார்.

பூங்கோதைக்கு ஒரு நீதி; ராசாவுக்கு இன்னொரு நீதி என்று கருணாநிதி நடந்துகொண்டது ஏன்? ராசா மீதான சி.பி.ஐ விசாரணை ஏன் ஒரு வருடமாகியும் தாமதம், என்று உச்ச நீதி மன்றம் கடிந்துகொண்டபின்னரும் அவர் ராசாவை ஏன் விலகச் செய்யவில்லை?

அரசியல் சட்டப்படி சுயேச்சையான அமைப்பாக இருக்கும் கணக்குத் தணிக்கை அதிகாரி பற்றி கருனாநிதி அடித்த கமெண்ட் படு கேவலமானது. பிரதமர், அமைச்சர்கள் பத்தியெல்லாம் அவங்க எப்பிடி ரிப்போர்ட் எழுதறாங்கன்னு எங்களுக்குத் தெரியும். என்றார். இவரேதான் 1989ல் ஆடிட்டர் ரிப்போர்ட்டை தெருத்தெருவாக எடுத்துக் கொண்டு போய் பேசி இன்றைய நண்பர் சோனியாவின் கணவர் ராஜீவ் காந்தி ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல் செய்ததாக கடும் பிரசாரம் செய்தார். அதன் பயனாகத்தான் தேசிய முன்னணி ஆட்சி ஏற்பட்டு மத்தியில் மந்திரி பதவி அடையும் முதல் வாய்ப்பு தி.மு.கவுக்கு வந்தது. ராஜீவுக்கு எதிராக ஆடிட்டர் ரிப்போர்ட்டை நம்பி பிரசாரம் செய்ததற்கு இப்போது சோனியாவிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்பாரா ?

ராசாவின் விலகலுக்கு இப்போது சொல்லியிருக்கும் காரணம்தான் சூப்பர் நகைச்சுவை. இந்த விவகாரத்தால் சில எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தை நடக்கவிடாமல் முடக்குகிறார்களாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ராஜினாமாவாம். அவையை முடக்குபவர்கள் அநியாயம் செய்கிறார்கள் என்றால் அதை எதிர்க்காமல் அடங்கிப் போவது எப்படி தீர்வாகும் ? இது போல ஒவ்வொரு முறையும் ஒரு சிலர் அவையை முடக்கினால் இதே போல ராஜினாமாக்கள் செய்வார்களா? குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வாதாடுகிறார் கருணாநிதி.

மக்களைப் பொறுத்தமட்டில் ராசாவின் நீக்கம் தீர்வல்ல. இது ஓர் ஆரம்பமாக மட்டுமே இருக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் லாபமடைந்த ராசாவின் கூட்டாளிகள் யார் யார் என்பது அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் எதிர்கால அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் பயம் இருக்கும்.இல்லாவிட்டால் ராசா ராஜினாமா ஊழலை அமுக்க நடந்த உத்தியாக முடிந்துவிடும். 

இந்த வாரப் பூச்செண்டு
பல லட்சம் பட்டதாரிகளும் ஆசிரியர்க்ளும் அலட்சியமாக இருக்கும்போது, சமூகப் பொறுப்புடன் தங்களை மேலவை வாக்காளர்களாகப் பதிவு செய்துகொண்டிருக்கும் தமிழகப் பட்டதாரிகள் 3 லட்சத்து 11,681 பேருக்கும் ஆசிரியர்கள் 72 ஆயிரம் பேருக்கும் இ.வா.பூ.

கல்கி 20.11.2010

Saturday, November 20, 2010

ரக்த சரித்திரம் - I ( Rakta Charitra - I)

இந்த படத்தை ரொம்ப நாள் பார்க்கணும் முயற்சி செய்து கொண்டே இருந்தேன். கடும் முயற்சி செய்து இப்போ அந்த ஆசை நிறைவேறியது. பொதுவாக படத்தை தரை விறக்கம் செய்து உடனே பார்த்து அதனை அழித்து விடுவேன், என் மடி கணினியில்  இருந்து.. ஆனால், ஐந்து நிமிடம் பார்த்து கொண்டு இருக்கும் பொது பிற வேலைகள் காரணமாக என்னால் கிட்ட தட்ட பத்து முறை இந்த படத்தை பார்க்க முடியாமல் போய் விட்டது.. இப்போ பார்த்து முடித்த வுடன் ஐயோ, தியேட்டரில் போய் படம் பார்த்து இருந்தால் இன்னும் அருமை ஆகா இருந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

வழக்கமான பங்காளி சண்டை தான் கதை கரு .இதற்க்கு முன் எத்தனையோ  பழி வாங்கும் படத்தை நான் பார்த்து இருந்தாலும் இந்த படம் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. .. அதனை ராம் கோபால் வர்மா சொல்லிய விதம் அழகு. அதுவும் ஒரு உண்மை கதையை வைத்து கொண்டு, மிரட்டலான திரை கதை மற்றும் அதிரடியான  பின்னணி இசை உடன் ஒரு அதி பயங்கரமான மிரட்டல் படம் தந்து உள்ளார் வர்மா .. 

கதை :

அனந்தப்பூர் தொகுதி  நரசிம்ம ரெட்டி பெரிய அரசியல் வாதி , அவருக்கு செம்பு அடிக்கும் அரசியல் வாதியாக நாகமணி ரெட்டி, ஜாதிபெயர் சொல்லி அந்த ஊரில் சில நல்ல விஷயம் செய்பவர் வீரபத்ரய்யா. வீரபத்ரய்யா வளர்ச்சி பிடிக்காமல் நரசிம்ம ரெட்டி இடம்  நாகமணி ரெட்டி இல்லாததை சொல்லி  வீரபத்ரய்யாவை  அவமான படுத்தி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் நரசிம்ம ரெட்டி . 

நல்ல பெயருடன்  இருக்கும் வீரபத்ரய்யாவை அழிக்க நரசிம்ம ரெட்டியை தூண்டுகிறார் நாகமணி. வீரபத்ரய்யாவை அவரிடம்  பணி புரியும் ஆசிஸ் வித்யார்த்தியை கொலை செய்கிறார்கள் . இதனை தெரிந்த  வீரபத்ரய்யாவின் மூத்த மகன் , நரசிம்ம ரெட்டி மற்றும் நாகமணி ஆட்களை கொள்கிறார். அவனின் கொட்டத்தை அடக்க லோக்கல் இன்ஸ்பெக்டரை வைத்து  கொன்று விடுகின்றனர் நரசிமம் ரெட்டியும், நாகமணி ரெட்டியும்.  நாகமணி இளைய மகன் சரியான ரவுடி, பென் மோகம் கொண்டவன்..

வீரபத்ரய்யாவின் இளைய மகன் பிரதாப் ரவி நகரத்தில் வசித்து வருபவன். அவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அவளின் தந்தை யுடன் பேசி திருமணதிற்கு சம்மதம்  வாங்குகிறான் . தன் தந்தைக்கும் மற்றும் அண்ணனுக்கு  நேர்ந்த மரணத்தை கேள்வி பட்டு கோபம் அடைந்து, அதற்க்கு காரணம் ஆனவர்களை பலி வாங்குவதே ரக்த சரித்திரம் - I .

என்.டி.ஆரின் தெலுகு தேசம் கட்சியில் இருந்த பரிதால ரவி என்பவரின் நிஜ வாழ்க்கை கதை தான் ரக்த சரித்திரம்.

நடிகர்கள் தேர்வு மிக அற்புதம். அதற்க்கு காரணம் ராம் கோபால் வர்மா.. ஒவ்வொரு வரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மிக அருமை. அதுவும் படத்தில் காமெராவை சுற்ற/ ஆட  விட்டு அவர் படம் பிடித்த விதம் அழகு.. ஆரம்ப காட்சியில் இருந்தே கதை சொல்லி, இருபதாவது நிமிடத்தில் நிமிர்ந்து வீர நடை போட்டு செல்கிறது கதை களம்.

ஒவ்வரு ரவுடியும் தன்னை பாது காத்து  கொள்ள அரசியலில் இறங்கியதை தோல் உரித்து காட்டிய திரைப்படம் இந்த ரக்த சரித்திரம். இந்த பாகம் முடியும் தருவாயில் பிரதாப் ரவியை பழிவாங்க சூர்யாதிட்டம் தீட்டுவதை முன்னோட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். அது தான் ரக்த சரித்திரம -II ( ஹிந்தி )..

முதல் பாகமான இந்த எபிசோடை தமிழ் நாட்டில் ரிலீஸ் ஆகா வில்லை . ஆனால் தமிழ் பதிப்பில் முதல் மற்றும் இரண்டு பாகத்தையும் சேர்த்து ஒரே படமாய் ரத்த சரித்ரம் என்று வெளியிட இருக்கிறார்கள்..

ஊழல் தடுப்பு - விட்டல் நடவடிக்கை

(மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த விட்டல், தனது பதவிக்காலத்தில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகவும் பாரபட்சமற்றும் நடந்து, புகழ் பெற்றவர்.) 


ஜனநாயகம்தான் தேர்தலை நடத்துகிறது. ஆனால், அந்த ஜனநாயகமேகூட கறுப்புப் பணத்தை எரிபொருளாக்கிச் செலுத்தப்படுவது எத்தனை வேதனை!

தேர்தலில் 'டிரான்ஸ்ஃபரன்ஸி' எனப்படும் வெளிப்படையான தன்மை என்பதே சுத்தமாக இல்லை. அமெரிக்காவில் தேர்தல் நடந்தால், அங்கு ஒபாமா தன் கட்சிக்காக எவ்வளவு தொகையை, எப்படிச் சேகரித்தார் என்பதற்கு கணக்குகள் இருக்கும். பிரிட்டன் போன்ற நாடுகளில் அந்தக் கணக்குகளை தெளிவாக ஆடிட் செய்கிறார்கள். பிரிட்டனில் டோனி பிளேர் பிரதமராக இருந்தபோது, தன் 'லேபர் கட்சி'க்காக வியாபார முதலாளிகளிடம் இருந்து கடன் பெற்று அதைச் செலவு செய்து வெற்றி பெற்றார். அப்படி வெளிப்படையாக நிதி திரட்டுகிறார்கள். நம் நாட்டில் அப்படியா?

முன்பு கியாஸ் சிலிண்டர்கள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றுக்கு கோட்டா வைத்திருந் தார்கள். அப்படிச் செய்வதன் மூலம், அந்தப் பொருட் களுக்குப் பற்றாக்குறை ஏற்படுத்தி, அதன் மூலம் ஊழல் செய்து அதிக வருமானம் பார்த்தார்கள். இப்படித்தான் காலம்தோறும் ஊழல் வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து நடக்கிறது. அப்படித்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலும்!

போஃபர்ஸ் ஊழல் 65 கோடி என்று 20 வருஷங் களுக்கும் மேலாகக் கதை பேசி வருகிறோம். இப்போது 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு மேல் என்று ஸ்பெக்ட்ரத்தால் நாட்டுக்கு வந்த நஷ்டம் பெருத்துப் போயிருக்கிறது!  

இலவசங்கள் இருக்கும் நாட்டில், ஊழலும் இருக்கத்தான் செய்யும். நேத்தா, பாபு, லாலா, ஜோலா, தாதா என்று ஊழல் சக்கரத்தில் ஐந்து அச்சாணி கள் இருக்கின்றன. நேத்தா - ஊழல் செய்யும் அரசியல் தலைவர். பாபு - என்பவர்கள் 'மரியாதைக்குரிய' அதிகாரிகள். லாலா - என்றால் வியாபாரிகள். ஜோலா - சமூகத்தை மேம்படுத்துகிறேன், ஊழலை ஒழிக்கிறேன் என்று கிளம்பியிருக்கும் தன்னார்வ நிறுவனங்கள். தாதா - என்றால் சொல்லத் தேவையில்லை... கிரிமினல்கள்! இந்த ஐந்தும்தான் அரசு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கின்றன. இவற்றில் இருந்து அரசு இயந்திரத்தை மீட்டுவிட முடியுமா என்பது பேராசைதான்!

ஊழல் என்பதை நான்கு பேரால் மட்டுமே முற்றிலும் நாட்டில் இருந்து நீக்க முடியும். முதலாவது, உச்ச நீதின்றம் தன் நிலையில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும். எந்த சட்டத்தில் வேண்டுமென்றாலும் நாடாளுமன்றம் திருத்தம்கொண்டு வரட்டும். ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளில் அரசு கைவைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. நாடாளுமன்றத்துக்கு முறையான வழிகாட்டுதல்களை இதனால் நிச்சயமாகத் தர முடியும். அதற்கு நீதிபதிகள் துளிகூட அசைந்துகொடுக்காமல் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும். 2004-ல் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் சொத்துக் கணக்கைக் காட்ட வேண்டும் என்று சொன்ன பிறகுதான் நம் அரசியல்வாதிகளில் பலரின் முகத் திரைகள் கிழிந்தன!

இரண்டாவது, தேர்தல் ஆணையம்! சேஷன் பதவியில் அமர்ந்துவிட்டுப் போன பிறகுதான் அந்த ஆணையம் தனிச் சிறப்போடு செயல்படுகிறது. அவர் கொண்டுவந்த 'கோட் ஆஃப் கான்டக்ட்' இன்றும் பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு நீங்கள் செய்த செலவை கணக்குக் காட்ட வேண்டும், இப்படித்தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று நெறிமுறைகளை இறுக்கிப் பிடித்தார். அவற்றை மீறியவர்கள் மேல் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. தேர்தலையே ரத்துசெய்யும் உரிமை தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் வரையில், தேர்தல்களில் ஊழல் நடப்பது வெகுவாகத் தவிர்க்கப்படும்.

மூன்றாவது, சி.ஏ.ஜி. எனப்படும் 'காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல்'. அரசு செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் இதனிடம் கணக்கு சொல்லியாக வேண்டும். நிதி உரிமைகள் அனைத்தும் இதன் இடத்தில்தான் இருக்கின்றன. நாடாளுமன்றத்துக்காக இந்த அமைப்பு வேலை செய்கிறது. அப்படி இருக்கும்போது, பப்ளிக் அக்கவுன்ட்ஸ் கமிட்டி அமைத்து, அதற்குப் பொதுவாக எதிர்க் கட்சித் தலைவரை சேர்மனாக அமர்த்தி, கணக்குகளைத் தணிக்கை செய்யலாம். இப்போதுகூட ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில்தான் அனைத்துக் கணக்குகளையும் பதிவுசெய்து இருக்கிறோம் என்று சி.ஏ.ஜி. சொல்லி இருக்கிறது. தணிக்கை செய்ததன் மூலம்தான் இந்த ஊழலே வெளியே வந்தது!

இறுதியாக... ஆனால், முக்கியமானது 'சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன்'. மிகப் பெரிய கடிவாளம் இவர்களிடமே உண்டு. ஊழலைக் கண்டுபிடித்தால் இப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்கலாம் என்று இந்த அமைப்பால் பரிந்துரைக்க முடியும். அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாதது இவர்களது பலவீனம்!

ஊழல் வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். ஊழல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். வருடக் கணக்கில் இழுத்தடிக்க முடியாதபடி, ஒரே ஒரு அப்பீல்தான் செய்ய முடியும் என்று வரையறுக்க வேண்டும். 

நம் நாட்டில் சட்டங்களுக்குக் குறைவில்லை. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில்தான் நிறையக் குறைபாடுகள். ஊழல் செய்தவர்களுக்கு சட்டம் அளிக்கும் தண்டனையைப் பார்த்து, இனி ஊழல் செய்ய ஒவ்வொருவரும் பயப்படும் நிலை வரவேண்டும். அந்த நாள் வரும் வரையில் மாற்றம் என்பது கானல் நீர்தான்!''