Search This Blog

Wednesday, August 31, 2011

ரோசய்யா.. உஷாரய்யா! - தமிழகத்தின் புதிய ஆளுநர்

'செக்' வைக்க வருகிறாரா சிதம்பரத்தின் நண்பர்?


தோ இதோ என இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆந்திராவின் ரோசய்யாவை நியமித்து இருக்கிறார், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.  சுர்ஜித்சிங் பர்னாலாவின் ஆளுநர் பதவிக் காலம் கடந்த ஜூன் 20-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அதற்கு முன்ன தாகவே, 'ஆளுநர் பதவியில் அமரப்போவது மார்க்ரெட் ஆல்வாதான்’, ' முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாதான்’ என பல பெயர்கள் அடிபட்டன. ஆனால்,  ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ரோசய்யா, தமிழக ஆளுநர் ஆகிவிட்டார்!

ரோசய்யா, ஆந்திர முதல்வர் ஆனது ஒரு திடீர் நிகழ்வு. முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, 2009-ம் ஆண்டு செப்டம்பரில் விமான விபத்தில் இறந்தபோது, தற்காலிக முதல்வராகப்  பொறுப்பு ஏற்றார் ரோசய்யா.ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிதான் அடுத்த முதல்வர் என அனைத்துத் தரப்பினரும் உறுதியாக நம்பிய நேரத்தில்... காங்கிரஸ் கட்சி மேலிடம் அதிரடி முடிவை எடுத்தது. தற்காலிக முதல்வர் ரோசய்யாவே முதல்வர் நாற்காலியில் தொடர்ந்தார்!1968-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆன ரோசய்யாவுக்கு, முதல்வர் ஆவதற்கு 43 ஆண்டுகள் ஆனது. ஆந்திரத்தின் முதல்வர் பதவி வகித்தவர்களில், பெரும்பாலும் ரெட்டி, நாயுடு போன்ற மெஜாரிட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்த நிலையில், ஆர்ய வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்த ரோசய்யா முதல்வர் ஆனது அதிசயம்!ரோசய்யா பழுத்த காங்கிரஸ்காரர் என்றாலும், சுதந்திரா கட்சித் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.ஜி.ரங்காவின் அத்யந்த சிஷ்யராகத்தான் அரசியலில் நுழைந்தார். குண்டூர் மாவட்டம் தெனாலி அருகில் உள்ள வெமுரு... சொந்த ஊர். குண்டூர் இந்துக் கல்லூரியில் படித்தவர், முதல் முறையாக 68-ல் ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 74, 80, 2009 ஆகிய ஆண்டுகளிலும் மேலவை உறுப்பினராக ஆனவர், 89, 2004-ம் ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராக ஆனார். 98-ம் ஆண்டு நரசராவ் பேட்டை மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி-யாகவும் பணியாற்றினார்.

79-ல் சென்னாரெட்டி முதல்வராக இருந்தபோது, முதல் முறையாக அமைச்சரான ரோசய்யாவுக்கு, போக்கு வரத்துத் துறை தரப்பட்டது. அடுத்து வந்த அஞ்சய்யா அமைச்சரவையிலும் அதே துறை மீண்டும் வழங்கப் பட்டது. விஜய பாஸ்கர் ரெட்டி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக முக்கிய இடத்தைப் பிடித்தார். மீண்டும் 89-ல் சென்னாரெட்டி முதல்வராக வந்தபோது, ரோசய்யா நிதி அமைச்சர் ஆனார். ஜனார்த் தன் ரெட்டி, விஜயபாஸ்கர் ரெட்டி, ராஜசேகர ரெட்டி என முதல்வர்கள் மாறியபோதும், நிதித் துறைரோசய்யாவிடம்தான்! இப்படி நம்பர் டூ-வாகவே நெடுங்காலம் இருந்து, 16 முறை பட்ஜெட் சமர்ப்பித்தவர் இவர். அதில் தொடர்ந்து ஏழு முறை பட்ஜெட் சமர்ப்பித்தது, இவருக்கு வரலாற்றுப் பெருமை தந்தது. ஆனால், முதல்வர் பதவியில் ரோசய்யாவால் ஒன்றரை வருடம்கூட நீடிக்க முடியவில்லை. 2009 செப்டம் பர் 3-ம் தேதி முதல்வர் பொறுப்பேற்ற ரோசய்யா, 2010 நவம்பர் 24-ம் தேதி பதவி விலக நேர்ந்தது!

ஆந்திராவையே இரண்டாகப் பிரித்த தெலுங் கானா விவகாரம், ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் அடங்க மறுக்கும் பிடிவாதம் இரண்டையும் சமாளித்து, அவரால் ஆட்சியை நகர்த்திச் செல்ல முடியவில்லை. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ரோசய் யாவுக்கு, பின்னால் திரளக்கூடிய அளவுக்கு சமூக ஆதரவு இல்லாதது, அவருக்குப் பலவீனம். உட்கட்சிப் பிரச்னைகளைக் கூட அவரால் சமாளிக்க முடியவில்லை!காங்கிரஸ் தன் வழக்கப் படி ரோசய்யாவைக் கழற்றி விட்டது. பதவி விலகியபோது மற்ற அரசியல்வாதிகளைப் போலவே, பணிச் சுமையைக் காரணமாகச் சொன்னார்.10 மாதங்களாகத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவருக்கு, தமிழகத்தில் கிடைத்திருக்கும் ஆளுநர் பதவி, அரசியல் வாழ்க்கை யில் இரண்டாவது இன்னிங்ஸ்!அவரைத் தமிழகத்துக்குத் தேர்வு செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு அதிகம். பர்னாலா பதவி காலியாகும் முன்பே பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் இவரது பெயர்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், மார்க்ரெட் ஆல்வா, நவீன் சாவ்லா போன்றவர்கள் ஜெ-வுக்கு நண்பர்கள் என்று சொல்லப்பட்டதால்... இறுதியாக, முதல் சுற்றில் இருந்த ரோசய்யாவின் பெயரே ஓகே ஆனது!ஆந்திராவின் 'நம்பர் டூ’ என்று அழைக்கப்படும் ரோசய்யா, தமிழக ஆளுநராக எப்படி செயல்படப் போகிறார் எனப் பார்ப்போம்!


விகடன் 

Tuesday, August 30, 2011

தாய்ப்பால் - உணர்ச்சிகரமான ஓர் உண்மைக் கதை


'தாய்ப் பாலுக்கு ஈடு இணையில்லை’ என்பது உலகறிந்த விஷயமே! அதற்கு மகுடம் சூட்டுவதுபோல... பல தாய்களிடம் இருந்து பெறப்பட்ட பால் மூலமாக... ஒரு குழந்தையை மறுபிறவி எடுக்க வைத்து, தாய்ப்பாலின் பெருமையை மேலும் ஒரு படி உயர்த்திப் பிடித்திருக்கின்றனர் திண்டுக்கல், அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவக் குழுவினர்!

திண்டுக்கல் மாவட்டம், தவசிமேடை கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிமேரி. கூலி வேலை செய்துவரும் இவருக்கு, கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆஷா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, தாய்ப்பால் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளால் பிறந்ததிலிருந்தே நோய்களால் தாக்கப்பட்டு, சாவின் விளிம்புக்கே சென்றுவிட... கடைசிக் கட்டத்தில் ஆஷாவைக் காப்பாற்றியிருக்கிறது, தாய்(களின்) பால்!

ஆஷாவை கைகளுக்குள் அடைக்கலப்படுத்தியபடி  அமர்ந்திருந்த நீதிமேரி, ''தாய்ப்பால் போதாதால, ஆறாவது நாள்ல இருந்தே புட்டிப்பால் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். நாப்பத்தி ரெண்டாவது நாள்ல வயித்துப் போக்கு ஆரம்பிக்க, திண்டுக்கல், கெவருமென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ரத்தம், குளுகோஸ்னு ஏத்தியும் ஒண்ணும் சரியாகல. என்ன ஆகப்போகுதோனு தவியா தவிச்சுக்கிடந்தேன்.என் நிலையைப் பார்த்து ரொம்பவும் பரிதாபப்பட்ட டாக்டர் ஜெயின்லால் பிரகாஷ், 'பக்கத்து பெட்கள்ல குழந்தை பெத்திருந்தவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கிக் கொடுக்கலாம்'னு சொன்னார். இப்போ குழந்தை உயிர் பிழைச்சுக் கிடக்கறதுக்கு அவர்தான் முக்கிய காரணம்! வெவரமெல்லாம் அவர்கிட்டயே கேட்டுக்கோங்க'' என்றார் கண்கள் கலங்கியபடி.

அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ஜெயின்லால் பிரகாஷ் ''நீதிமேரி, ரொம்ப கஷ்டப்படற குடும்பம். ஊட்டம் பத்தாததால அவங்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கல. குழந்தைக்கு அடிக்கடி வயித்துப் போக்கும் ஏற்பட, குழந்தை பத்தின கவலையால தாய்ப்பால் ரொம்பவும் சுண்டிப் போச்சு. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஆகவே... நோய்க்கிருமிகளோட தாக்கம் அதிகமாகி, ரத்தத்துல கலந்து 'செப்டிமீசியா ஸ்டேஜு'க்கு வந்துடுச்சு குழந்தை. இறுதியா, 'மராஸ்மிக் ஸ்டேஜ்'ல, உடம்புல உயிர் ஒட்டிக்கிட்டு இருந்ததுனுதான் சொல்லணும்.குளுக்கோஸ், ரத்தம் எல்லாம் ஏத்தினோம்... ஏகப்பட்ட மருந்துகளையும் கொடுத்தோம். பொதுவா அரசு மருத்துவமனையில வெளியில இருந்து மருந்துகளை வாங்கிக் கொடுக்கக் கூடாது. இந்தக் குழந்தைக்காக மேலிடத்துல ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி, அரசு செலவுலேயே வெளியில இருந்து மருந்துகள வாங்கிக் கொடுத்தோம். ஆனாலும், குழந்தையோட உடம்புல முன்னேற்றம் இல்லை. இறுதியா, அந்த சிசுவை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்ங்கற பொறுப்போட ஜூனியர் டாக்டர்ஸ், ஸ்டாஃப் நர்ஸ்கள், டிரெய்னிங் நர்ஸ்கள்னு எங்க டீம் போட்ட மீட்டிங்லதன்... 'தாய்ப்பாலை இரவல் வாங்கிக் கொடுக்கலாம்'ங்கற முடிவுக்கு வந்தோம்.

வார்டுல குழந்தை பெற்றிருந்த எல்லா தாய்மார்கள்கிட்டயும் குழந்தை ஆஷாவோட நிலையையும், தாய்ப்பாலோட மகத்துவத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வெச்சோம். சிசேரியன் பண்ணினவங்க, குழந்தை சரியா பால் குடிக்காம இருக்கிற தாய்மார்கள், போதுமான அளவைவிட அதிகமா பால் சுரக்கிற தாய்மார்கள்னு எல்லாரும் சந்தோஷமா பாலை எடுத்துத் தர ஆரம்பிச்சாங்க. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பிச்சோம். நாலஞ்சு நாள்லயே குழந்தை தேறிடுச்சு! பல தாய்களோட பால் மூலமா... வைட்டமின், புரோட்டீன்னு எல்லாச் சத்தும் கிடைச்சதுல... இப்ப முழுசா குணமாகி நல்ல ஆரோக்கியமா இருக்கு குழந்தை''  .

ஒவ்வொரு பெண்ணும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அது...

''இந்தக் குழந்தை பிழைச்ச விஷயத்தை 'மிராக்கிள் ஆஃப் பிரெஸ்ட் மில்க்’னுதான் சொல்லணும். 'தாய்ப்பால், இத்தனை சக்தி வாய்ந்ததா!'னு மத்த தாய்மார்கள் எல்லாம் அதோட அற்புதத்தை நேரடியா பார்த்து முழுமையா உணர்ந்தாங்க. இப்போ இருக்கிற இளம் தாய்மார்களும், அமிர்தமா இருக்கற தாய்ப்பாலோட மகிமையைப் புரிஞ்சு, உயிர் காக்கும் அந்த விலையில்லாத மருந்தை வீணாக்காம கொடுத்து, குழந்தைகள நோயில்லாமலும், புத்திசாலியாவும் வளர்க்கணும்!''


- விகடன்

Monday, August 29, 2011

ரிலையன்ஸின் கே.ஜி.பேஸின், ஏர் இந்தியா - 2000 கோடி & 200 கோடி ஊழல் கதை ஆரம்பம் - சீக்ரெட் அஃப் சி.ஏ.ஜி.

இரண்டு மிக முக்கியமா அறிக்கைகளை சி.ஏ.ஜி., அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க போகிறது. ஒன்று, ரிலையன்ஸின் கே.ஜி.பேஸின் சம்பந்தப்பட்டது. இன்னொன்று, ஏர் இந்தியா பற்றியது. 2ஜி போல், காமன்வெல்த் போல் இந்த இரண்டு வழக்குகளும் மீடியாவில் இனி விலாவாரியாக அலசப்படப் போகின்றன. 200 கோடி ஊழல், 2000 கோடி ஊழல் என்று பெரிய தொகைகளைப் பற்றிப் பேசப் போகிறார்கள். ஊழலில் மூழ்கிக் கிடக்கும் காங்கிரஸ் அரசே வெளியேறு என்று பி.ஜே.பி., நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கப் போகிறது. எனக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் அடக்கமாக அறிக்கை விடப்போகிறார். அண்ணா ஹசாரேவுக்கான மேலும் சில ஆயிரம் மெழுகுவர்த்திகள் ஒளிவீசப் போகின்றன.

 காங்கிரஸுக்கு இப்போதைக்கு ஒரே ஒரு எதிரிதான். சி.ஏ.ஜி. ஆயிரத்தெட்டு அரசு அமைப்புகளில் இதுவும் ஒன்று. ஆனால், 2ஜி மூலம் தான் திடீரென்று ஓவர் நைட்டில் பாப்புலர் ஆகிவிட்டது.காதில் பால் பாயிண்ட் பேனா செருகிக் கொண்டு யாரோ சில ஆடிட்டர்கள் அரசாங்கத்தின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதாக நாம் கற்பனை செய்து கொண்டிருக்கிறோம். யார் அவர்கள்? இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால், அரசாங்கத்தின் ஆடிட்டர், சி.ஏ.ஜி.

நம் வருமானத்தையும் செலவையும் ஒழுங்காகப் பதிவு செய்து கணக்குக் காட்டுகிறோமா என்பதைக் கண்காணிப்பதற்கு வருமான வரி அலுவலகம் இருக்கிறது. இந்த வரிகளை வசூலிக்கும் அரசாங்கத்தின் கணக்கு வழக்குகளை யார் சரிபார்ப்பது? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் அஃப் இந்தியா (சி.ஏ.ஜி.) தலைமை கணக்குத் தணிக்கையாளர். சி.ஏ.ஜி., இந்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களின் வரவு, செலவுகளைத் தணிக்கை செய்கிறது. அரசு உதவி பெற்று இயங்கும் பல்வேறு நிறுவனங்களும் தணிக்கைப் பட்டியலில் அடங்கும் .

சி.ஏ.ஜி.யாக நியமிக்கப்படுபவர் இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பிரிவின் தலைவராக இருப்பார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாட்டில் நிதி நிர்வாகம் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கவே இவர் தலைமையில் ஒரு குழு இயங்குகிறது. ஒவ்வொரு மாநிலமாக, ஒவ்வொரு யூனியனாக, அரசு சார்ந்த ஒவ்வொரு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையும் சி.ஏ.ஜி. ஆராய வேண்டும். உள்ளூர் மட்டுமின்றி அரசாங்கத்தின் வெளிநாட்டுச் செலவுகளையும் கண்காணிக்க வேண்டும். விரிவாகத் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, சி.ஏ.ஜி. மேற்கொள்ளும் தணிக்கைகள் மூன்று பிரிவுகளில் அடங்கும். முதலாவது, அன்றாட பரிவர்த்தனைகள் தணிக்கை. அரசாங்கத்தின் கடன், வைப்புத் தொகை, பட்டு வாடா, வர்த்தகம் போன்றவற்றைத் தணிக்கை செய்வது இதில் அடங்கும். இரண்டாவது, அரசாங்கத்தின் வரவு, செலவு கணக்குகளைத் தணிக்கை செய்தல். மூன்றாவது, அரசாங்கத்தின் கையிருப்பு கணக்குகளைச் சரிபார்ப்பது. 

சி.ஏ.ஜி.யின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று பிரதம மந்திரி சிபாரிசு செய்கிறார் என்றாலும், நியமன அதிகாரம் ஜனாதிபதிக்கே. நியமிக்கப்பட்டவரை பதவி நீக்கம் செய்வது சுலபமல்ல. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் இம்பீச்மெண்ட் முறையே இங்கும் இயங்கும். சம்பந்தப்பட்டவர் குற்றம் இழைத்திருக்கிறார். எனவே, அவரை நீக்கலாம் என்று மாநிலங்கள் அவையில் பெரும்பாலானோர் வாக்களித்து, பிறகு தீர்மானம் மக்கள் அவைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கும் வாக்கெடுப்பு எதிராக வந்தால் மட்டுமே அவர் நீக்கப்படுவார். ஓர் அரசாங்கம் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் சி.ஏ.ஜி. தலைவரை சேர்க்கவோ நீக்கவோ கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. 

பிரிட்டன் இந்தியாவை ஆண்டபோது உருவாக்கப்பட்ட அமைப்பு இது. அவர்கள் சென்ற பிறகும் கேள்வியின்றி நாம் இதனைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். சி.ஏ.ஜி.யின் கண்காணிப்பினால் அரசு, நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கத் தாமதப்படுத்துகிறது. அரசு நிர்வாகம் குறித்தும் வரவு செலவுகள் குறித்தும் சி.ஏ.ஜி.யால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவே சி.ஏ.ஜி.யைக் கலைத்து விடலாம்- இது சி.ஏ.ஜி.க்கு எதிரானோர் வாதம். அரசு தன் வருமானத்தை எப்படி ஈட்டுகிறது என்பதும் மக்களின் வரிப்பணத்தை எப்படிச் செலவு செய்கிறது என்பதும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சி.ஏ.ஜி., அரசுத் துறைகளைத் தணிக்கை செய்தால்தான் ஊழல் கண்டு பிடிக்கப்படும். இன்னும் சொல்லப் போனால், சி.ஏ.ஜி.க்கு தற்போது வரையறுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். சி.ஏ.ஜி. தேவை என்பவர்களின் வாதம் இது.  

ஆனால், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 2008ல் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. ஆதாரங்களுடன் பட்டியலிட்டபோது இவ்வளவு பெரிய ஊழலா என்று இந்தியா மட்டுமல்ல உலகமே வாய் பிளந்தது. எதற்கு அநாவசியமாக ஒரு துறை என்று கேள்வி கேட்டவர்கள் அதற்குப் பிறகு வாய் திறக்கவில்லை.ஆனால், 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் 2008ல் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. ஆதாரங்களுடன் பட்டியலிட்டபோது இவ்வளவு பெரிய ஊழலா என்று இந்தியா மட்டுமல்ல உலகமே வாய் பிளந்தது. எதற்கு அநாவசியமாக ஒரு துறை என்று கேள்வி கேட்டவர்கள் அதற்குப் பிறகு வாய் திறக்கவில்லை.சீனாவில் சி.ஏ.ஜி. போன்ற தணிக்கை அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு சீன அரசாங்கம் கூடுதல் அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு, கணக்கு வழக்குகளில் ஊழல் இருப்பது தெரிய வந்தால், தணிக்கை அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர்களை வரவழைத்து விசாரணை மேற்கொள்ளலாம். உண்மைகளை நேரடியாக வெளிக்கொண்டு வரலாம். இப்படிப்பட்ட அதிகாரத்தை இந்திய சி.ஏ.ஜி.க்கும் அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வாதிடுகிறார்கள். 

இருக்கும் அதிகாரமே அதிகம் என்று உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டாலும் வெளிப்படையாக சி.ஏ.ஜி.யைப் பாராட்டுவதைத் தவிர வேறுவழியில்லை காங்கிரஸுக்கு. சி.ஏ.ஜி. இயங்க ஆரம்பித்து 150 ஆண்டுகள் நிறைவான தையொட்டி இந்த ஆண்டு சிறப்பு நாணயம் வெளியிட முடிவு செய்திருக்கிறது அரசு. அதிலும் ஏதாவது ஊழல் செய்து அதையும் சி.ஏ.ஜி.யே கண்டுபிடித்து அறிக்கை தயாரிக்க வேண்டிய அவசியம் நேராமல் பார்த்துக் கொண்டால் சரி!  

 ஏர் இந்தியா பற்றி சி.ஏ.ஜி.

ஐம்பது புதிய விமானங்களை போயிங் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா வாங்கியிருக்கிறது. ஏற்கெனவே இழப்பில் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனம். கிட்டத்தட்ட 40,000 பணியாளர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதச் சம்பளம் பாக்கி. ஏப்ரல் முதல் ஊக்கத் தொகை கொடுக்கப்படவில்லை. இதுவரை, 40,000 கோடி கடன்பட்டிருக்கிறது. “இந்நிலையில் திடீரென்று ஏன் 50 புதிய விமானங்கள்?” என்று சி.ஏ.ஜி.கேட்டதற்கு, “லாபத்தைக் கூட்டுவதற்குத்தான் விரிவாக்கம் செய்கிறோம்,” என்று பதில் சொல்லியிருக்கிறது ஏர் இந்தியா. “உங்கள் கணக்குப்படியே பார்த்தாலும் 35 விமானங்கள் போதுமே?” “பல்க் டிஸ்கவுண்ட் தருவதாகச் சொன்னார்கள் வாங்கிவிட்டோம்,” என்கிறது ஏர் இந்தியா. ‘200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளது சி.ஏ.ஜி. விரிவான பின்னணி தகவல்கள் விரைவில் வெளிவரும்.  

சி.ஏ.ஜி. தலைவர் விநோத் ராய்

ஜனவரி 2007ல் கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரலாகப் பதவியேற்றார். முன்னதாக, நிதியமைச்சகத்தின் செயலாளராக இருந்தபோது, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்து வந்தார். கேரள அரசின் நிதித்துறையில் பிரின்ஸிபில் செகரடரியாக இருந்திருக்கிறார். வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளிலும் இயங்கியிருக்கிறார். சர்வதேச அளவிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார். உதாரணத்துக்கு, தணிக்கை அதிகாரிகளைக் கொண்டிருக்கும் ஐ.நா.வின் பேனலில் விநோத் ராய் அங்கம் வகிக்கிறார். தில்லி ஸ்கூல் அஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முது நிலைப் பட்டமும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். 

 முக்கியமான சி.ஏ.ஜி. அறிக்கைகள்:

ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல் தொகை மதிப்பிடப்படவில்லை.· காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் ஸ்பான்சர்ஷிப் மூலம் எதிர்பார்த்த வருமானம்: 960 கோடி ரூபாய். கிடைத்தது, 375 கோடி. டிக்கெட் விற்பனை (எதிர்பார்த்தது) : 100 கோடி, கிடைத்தது 39 கோடி. அரங்கம் பராமரிப்புச் செலவு, 76 கோடி. நிஜ செலவு, 671 கோடி. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் இழப்பு 1,76,000 கோடி.

சி.ஏ.ஜி. 1989லேயே கவனம் பெற்று விட்டது. போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து ஓர் சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு, அப்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானவர், டி.என்.சதுர்வேதி. பதவிக் காலம் முடிந்த பின்னர் இவர் பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டார். பின்னர், கர்நாடக ஆளுனராகவும் இருந்தார்.  

 

Sunday, August 28, 2011

எகிறப் போகுது செல்போன் கட்டணம் - செலவை குறைக்க ஆலோசனைகள்

செலவைக் குறைக்க சூப்பர் பிளான்!


''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17  சதவிகிதம் வரை உயரப்போகிறது...''பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.

ரு காலத்தில் பணக்காரர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தொலைபேசி, காலப்போக்கில் அனைவரது அத்தியாவசியப் பொருளில் ஒன்றாகிப் போனது! 1990-களின் இறுதியில் செல்போன் அறிமுகமான போது இன்கம்மிங் கால்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அதன் பிறகு இன்கம்மிங் கால்களுக்கான கட்டணம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, ஒருகட்டத்தில் இலவசமானது. அடுத்தகட்டமாக இன்னும் நிறையபேர் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து அவுட் கோயிங் கால்களுக்கான கட்டணத்தையும் குறைத்தார்கள். இரவில் போன் செய்தால் எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பதில் ஆரம்பித்து, இலவச எஸ்.எம்.எஸ்-வரை பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மக்களை இழுத்தன செல்போன் நிறுவனங்கள். 

அப்படி இதுவரை சலுகைகளைக் கொடுத்து வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது கட்டணங்களை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏர்செல்லும், டாடா டொகோமோவும் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்திவிட்டன. மற்ற மாநிலங்களில் ஏர்டெல், ஐடியா, வோடோஃபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் உயர்த்தலாம் என்கிறார்கள்.

செல்போன் நிறுவனங்கள் இப்போது திடீரென கட்டணத்தை உயர்த்த என்ன காரணம்?

இந்தியாவில் சுமார் 60.6 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். (ஆதாரம்: செல்லூலார் ஆபரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா- ஜூலை 2011 வரை). செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் இந்த வாடிக்கையாளர்களிடம் நன்றாக ஊறிவிட்டது. இனிமேல் இவர்களால் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதால், கட்டணத்தைக் கொஞ்சம் உயர்த்தினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றன செல்போன் நிறுவனங்கள்.

அடுத்து முக்கிய காரணம், மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகமானது இந்த வசதி. ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்பவர்கள் அடுத்த நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்ற இந்த வசதியை விரும்பியவர்கள் ஏற்கெனவே தாவி முடித்திருப்பார்கள். இப்போது கட்டணத்தை உயர்த்தினால் அவர்கள் இன்னொரு நிறுவனத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் செல்போன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

மூன்றாவது, செல்போன் நிறுவனங்களின் செலவு. கடந்த சில காலாண்டுகளாகவே செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாயை 3ஜி லைசென்ஸுக்காகச் செலவு செய்துள்ளன. ஆனால், 3ஜி சேவை மூலம் செல்போன் நிறுவனங்களின் வருமானம் இதுவரை உயரவில்லை. எனவே,  கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.


இவை எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கட்டணங்கள் குறைவாக இருப்பதால் அனைவரும் அதிகமாக செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நெருக்கடி அதிகமாகி, அதிக நபர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. இப்போது கட்டணத்தை அதிகரித்தால் செல்போன் நிறுவனங்களுக்கு இரண்டு விதத்தில் லாபம் கிடைக்கும். நடுத்தர மக்கள் செல்போனுக்கு என ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள், அதைத் தாண்டி அவர்கள் பேச மாட்டார்கள்.இதனால் நெருக்கடி குறையும். அதே சமயத்தில் கட்டணத்தை அதிகரித்தாலும் அதுபற்றி கவலைப்படாத மேல்தட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை தரமுடியும். அவர்கள் அதிகம் பேசினால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்று நினைத்துதான் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த கட்டண உயர்வை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், இதை எப்படிச் சமாளிக்கலாம், எந்த பிளானை எடுத்துக் கொண்டால் செலவைக் குறைக்க முடியும்.

''இப்போதிருக்கும் திட்டங்களில் சிறந்தது எது என்று சொல்ல முடியாது. செல்போனைப் பயன்படுத்துகிறவரின் தேவையை வைத்துதான் எந்த பிளான் சிறந்தது என்பது மாறும். ஆனால், எல்லோருக்கும் பொருந்தி வருகிற மாதிரி, செல்போனுக்காக நாம் செய்யும் செலவை எப்படி எல்லாம் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் .


காலர் டியூன் வைத்திருந் தால் தயவு செய்து நீக்கிவிடுங்கள். அதன் மூலம் மாதம் 30 ரூபாய் மீதமாகும். இதை வைத்துக் கொண்டு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பேசலாம். (ஒரு நிமிடத்துக்கு 0.72 பைசா என்றால்). அதேபோல அடிக்கடி பாடல்களை மாற்றாதீர்கள். இதற்கு ஒவ்வொரு முறையும் டவுன்லோடு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதி இருப்பவர்கள், பேஸ்புக், கூகுள் டாக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி செலவில்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

இலவச எஸ்.எம்.எஸ்.களை முழுமையாகப் பயன்படுத்தலாம். இலவச எஸ்.எம்.எஸ்.களை வைத்துக் கொண்டு போன் செய்வது கூடுதல் செலவுக்குத்தான் வழி வகுக்கும்.

நிமிடத்துக்கு ஒரு கட்டணம், நொடிக்கு ஒரு கட்டணம் என்பதுபோல இரண்டு வகையான திட்டங்கள் இருக்கிறது. நீங்கள் அதிக நேரம் பேசுபவராக இருந்தால் நொடிக்கு கட்டணம் இருக்கும் திட்டங்களை தவிர்த்துவிடுங்கள். ஒரு நொடிக்கு 1.2 பைசா என்றால், ஒரு நிமிடத்துக்கு 72 பைசா. ஆனால், ஒரு நிமிடத்துக்கு என்றால் 60 பைசா என்று கட்டணம் இருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்துக்கு 12 பைசா நஷ்டம். நீங்கள் எத்தனை நிமிடம் அதிகம் பேசுகிறீர்களோ, அவ்வளவு நிமிடத்துக்கும் 12 பைசா நஷ்டம்.

 உங்களுடைய பிளானில் பழைய பில்களை சரிபாருங்கள். யாருக்கு அதிகம் பேசி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நெட்வொர்கில் இருக்கும் நண்பர்களுடனா அல்லது வேறு நண்பர்களுடனா, வெளி மாநிலமா, வெளிநாடா என்று பார்த்து, அதற்கேற்ப பிளானை மாற்றுங்கள்.

இதைத் தாண்டி சந்தையில் புதிய பிளான்கள் வரும் பட்சத்தில் அந்த பிளானில் இருக்கும் சிம்மை வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த சர்வீஸ் புரவைடருக்கு நம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் மாறிக் கொள்ளலாம்''. 


தேவைப்பட்டால் மட்டுமே செல்போனில் பேசும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், செலவு நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லையே!



வா.கார்த்திகேயன்.

Saturday, August 27, 2011

தோனி,அவ்வளவுதானா?


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இவ்வளவு தூரம் அவமானப்பட்டு நிற்கும் என்று யாருமே எண்ணிப் பார்க்கவில்லை. கண்மூடித் திறப்பதற்குள் கோட்டையைக் கலைத்து விட்டது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட இந்தத் தோல்வி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதனால் இந்தத் தோல்வி?


முழுமுதற் காரணம், இங்கிலாந்து அணியின் பௌலர்கள்தான். ஒருவர் கூட சுமாராகப் பந்து வீசவில்லை. உழைப்பில் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆண்டர்சன், பிராட், ப்ரெஸ்னன், ட்ரம் லெட், ஸ்வான் ஆகிய ஐந்து பௌலர்களுக்கிடையே கடுமையான போட்டி மனப்பான்மை நிலவுகிறது. ஒருவரையொருவர் மிஞ்ச நினைப்பதன் பலனாக எதிரணியினர் திக்குமுக்காடிப் போய்விடுகிறார்கள். இவர்கள் பலத்தால் பேட்டிங்கும் கூடுதல் பலம் பெற்று, இங்கிலாந்து அணியை அசைக்கமுடியாமல் செய்துவிடுகிறது. இவர்களின் அசுரப் பலத்தை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்குத் தைரியமும் உடல்வலிமையும் இல்லாமல் போனதுதான் அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 

இந்தத் தோல்விக்குப் பிறகு, உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?  


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2003ல் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், முதல் ஆறு வருடம் ஆதிக்கம் செலுத்திய அணி, ஆஸ்திரேலியா. பிறகு, நான்கு மாதங்கள் அந்தப் பதவியில் சொகுசு கண்ட தென் ஆப்பிரிக்க அணியைக் கீழிறக்கி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியளித்தது இந்திய அணி. 2009 நவம்பர் முதல் இந்த ஆகஸ்ட் வரை, கடந்த இருபது மாதங்களாக முதலிடம் வகித்த இந்திய அணி, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் கௌரவம் பிடுங்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரில் 5-0 என்கிற கணக்கில் தோல்வி கண்டது இங்கிலாந்து அணி. உடனே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், என்கொயரி கமிஷன் வைத்து நிலைமையைச் சீராக்கியது. அதன் பலன்தான், இன்று, இங்கிலாந்தை உச்சியில் அமரவைத்திருக்கிறது. அதேபோல, இந்த வருடத் தொடக்கத்தில், இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரில் படு தோல்வி கண்டது ஆஸ்திரேலிய அணி. இப்போது அங்கும் தோல்விக்கான காரணங்கள் என்கொயரி கமிஷனால் கண்டறியப்பட்டு தூர் வாரப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடி நிலைமையில், இந்தியாவும் அதே பாணியைத்தான் பின்பற்ற வேண்டும். தோனி, ஸ்ரீகாந்த், ப்ளட்சர் போன்ற தலைமை நிர்வாகிகள் எடுத்த தவறான முடிவுகளைக் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது. எல்லாம் தானாகச் சரியாகிவிடும் என்றால் இந்தத் தோல்வி முடிவாக இருக்காது. பெரிய சறுக்கலுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்துவிடுகிற அபாயத்தைத் தவிர்க்க, உடனடியாக கமிஷன் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  

சீனியர்கள் ஓய்வுபெற வேண்டுமா?

அவசியமில்லை. அவர்களால்தான் இந்திய அணி நெ.1 பதவியை அடைந்தது. அதேசமயம், கிரிக்கெட் ஆடாத காலகட்டங்களில் இவர்கள் பயிற்சிக்காக முதல்தரப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், காயத்தால் ஓய்வுபெறுகிற வீரர்களும் தங்கள் உடல்தகுதியை முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டு நிரூபிக்க வேண்டும்.   

தோனியின் விசேஷத்தன்மை அவ்வளவுதானா?

எல்லா சாதனையாளர்களும் சறுக்கும் இடமொன்று உண்டு. ரஷ்ய போல்வால்ட் வீரர் செர்ஜி புப்கா, 35 முறை உலக சாதனை படைத்தவர் என்றால் அவர் எத்தனை ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வாங்கியிருக்க வேண்டும்? 1988ல் ஒரு ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கிய புப்கா, அதன் பிறகு பங்கேற்ற 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் சல்லி மெடல்கூட இல்லாமல் வெளியேறினார். இத்தனைக்கும் 1994ல் அவர் தாண்டிய 6.14மீ உயரத்தை இன்றுவரை யாரும் மிஞ்சமுடியவில்லை. புப்காவுக்கு ஒலிம்பிக் போல தோனிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர். 

இப்போது, தோனியின் ஈடுபாடு பற்றியும் அவருடைய உபயோகம் பற்றியும் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. தோனிக்கு வாழ்க்கை முன்போலில்லை. சவால்கள் தலை வாயிலில் காத்திருக்கிறது. ‘நெ.1 இடத்தை இழந்ததில் பிரச்னை எதுவுமில்லை, அது யாருக்கும் நிரந்தரமில்லை’ என்று தத்துவார்த்த ரீதியாகத் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார் தோனி. இந்தப் படுதோல்வி, இனி அவர் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்று நிறையக் கற்றுக் கொடுத்திருக்கும்.  


தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்
 
 
''ம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்!  

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.
 
 
ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?
 
இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர். அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள். முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.
 
 
'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள். முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.
 
அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள். இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
 
கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்! 
 
ஜூ.வி.
 

Friday, August 26, 2011

ஜெ.வைச் சந்திக்கத் தயக்கமில்லை! - வைகோ பேட்டி


சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறாததற்குக் காரணம் தொகுதிகள் பிரச்னையா... அல்லது ம.தி. மு.க.வைவிட ஜூனியர் கட்சியான தே.மு. தி.க.வுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமா?

தே.மு.தி.க.வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் நாங்கள் கூட்டணியில் இடம் பெறாமல் தவிர்த்தோம் என்பதில் உண்மை கிடையாது. ஒதுக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை எங்களுக்குப் போதாது என்ற காரணத்தால்தான் நாங்கள் கூட்டணியில் இல்லாத நிலை உருவானது. ம.தி.மு.க.வுக்கு தமிழகம் முழுவதும் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லையென்றாலும் கணிசமாக வோட்டு வங்கி இருக்கிறது. எங்கள் கட்சிக்கு உள்ள கட்டமைப்பு உறுதியானது. எனவே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட எங்கள் தோழர்கள் பலர் விருப்பப்பட்டார்கள். 2006முதல் ஐந்து வருட காலம் அ.தி.மு.க.வின் நம்பிக்கைக்குரிய உற்ற தோழனாக நாங்கள் இருந்தோம். ஆறு தொகுதிகள் என்று தொடங்கி இறுதிக் கட்டத்தில் பன்னிரண்டு தொகுதிகள்தான் எங்களுக்கு என்று தீர்மானித்தார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர். அந்த நாட்களில் எனக்கேற்பட்ட மனப் போராட்டத்தைச் சொல்லி மாளாது. வெளியில் எங்களுக்கு 18 தொகுதிகள் கொடுக்கப்பட்டதாகப் பேச்சு உலவியது. இதனால் சின்ன குழப்பம். நல்ல வேளையாக ஜெயலலிதாவே எழுதிய கடிதத்தில் 12 தொகுதிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. நடந்தது என்ன என்பது பன்னீர்செல்வத்துக்கும் செங்கோட்டையனுக்கும் முழுக்கத் தெரியும். இறுதியில் எங்கள் உயர்மட்டக்குழு கூடி தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை எடுத்தது. ‘தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே’ என்று பலர் கேட்கிறார்கள். அப்படிப் போட்டியிட்டால் வோட்டுக்களைப் பிரித்து யாரோ வெற்றி பெற வைகோ உதவுகிறார் என்ற அபவாதம் விழுந்திருக்கும். மீடியா கருத்துக்கணிப்பில் எழுபது சதவிகிதம் மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் 68 முதல் 75 சதவிகிதம் மக்கள் நாங்கள் எடுத்த முடிவு சரியென்றும், அ.தி.மு.க. எங்களை நடத்திய விதம் சரியல்ல என்றும் சொல்லியிருந்தார்கள். மற்றபடி கூட்டணி அமையாததற்கு விடுதலைப் புலிகள் ஆதரவு உட்பட வேறெந்த பிரச்னையும் காரணமாக இல்லை."

கட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு சோதனைகள், தோல்விகளைச் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் கட்சியிலிருந்து பிரமுகர்கள் விலகினாலும் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்களே?

எனக்குக் கட்சியில் எல்லோரும் முக்கியம். பாசத்தோடு இயங்கும் கொள்கையுடைய மறவர் கூட்டம் நாங்கள். தமிழக நலன்களுக்காக நாங்கள் நடத்திய போராட்டங்கள் மக்களிடையே எங்களைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றன. எங்களுக்கும் ஒரு காலம் வரும்."

ம.தி.மு.க.வில் பிரபலமான இரண்டாம் கட்ட பிரமுகர்கள் என்று யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?

அண்ணாவுடனேயே பழகிய திருப்பூர் துரைசாமி, பட்டிதொட்டியெங்கும் கொள்கை முழக்கம் செய்யும் நாஞ்சில் சம்பத், ஆற்றல்மிகு மல்லை சத்யா, மாசிலா மணி, செந்திலதிபன்... போன்றவர்கள் முதல் கட்டத்திலேயே என்னுடன் இணைந்து போராடுபவர்கள்."  

மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளாததற்கு வருத்தப்படுகிறீர்களா?

பொதுவாழ்வில் இதுபோன்ற வாய்ப்புகள் வரும்; போகும். தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் கடமையைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதையே மிகப் பெரிய மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். ஆனால் ஒரு விஷயத்தில் வருத்தமுண்டு. 2004ல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது தவறான முடிவு."

உங்களை நம்பி வந்தவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள். இப்போது அவர்கள் உங்களோடு இல்லையே?

அவர்கள் மீது எனக்கு எந்தக் கோபமும், வருத்தமும் கிடையாது. இந்த இயக்கத்துக்காக அவர்கள் பாடுபட்டதையும், என்னுடன் பழகிய நாட்களையும் நினைத்துப் பார்த்துக் கொள்வேன்."

தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்கிறதே தி.மு.க.?

துணிச்சலோடு சட்டமன்றத்திலேயே அதற்காகப் போராட வேண்டியதுதானே?"

நில அபகரிப்பு வழக்குகள் பழிவாங்கல் நடவடிக்கை என்று தி.மு.க. சொல்கிறதே!    

பழி நடவடிக்கை என்று மக்கள் நினைக்கவில்லை. தவறு செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை என்று தி.மு.க. தலைமையே கூறியிருக்கிறதே!" 

வாரிசுப் பிரச்னைகளால் தி.மு.க. ஆட்டம் கண்டுள்ள நிலையில், உங்கள் தலைமையில் எதிர்கால தி.மு.க. வழிநடத்தப்படும் வாய்ப் பிருக்கிறதா?

தி.மு.க. பற்றி எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை. என் மீது கொலைப் பழி போட்டு வெளியேற்றியது ஆறாத ரணமாக இன்னமும் இருக்கிறது. மறுமலர்ச்சி தி.மு.க. ஓர் அடர்த்தியான திராவிட இயக்கமாக ஆயிரக்கணக்கான என் இளைய தோழர்களால் கட்டமைக்கப்பட்டு வீரநடை போடுகிறது. பெரியார், அண்ணா உருவாக்கிய திராவிட இயக்கம் என்றைக்கும் தமிழகத்தில் இருக்கும். பல வடிவங்களாக இப்போது இருக்கிறது. எனினும், ம.தி.மு.க. அண்ணா வகுத்த பாதையில் எந்தக் கொள்கை சமரசமும் மேற் கொள்ளாமல் எந்தக் குடும்பத்தையும் முன்னிறுத்தாமல் உண்மையான திராவிட வடிவமாக விளங்குவது எல்லோரும் அறிந்த ஒன்று."

தலைமைச் செயலகக் கட்டடம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாமே?

இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் அணுகுமுறை சரியல்ல; சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்று கட்டடத்தை உருவாக்கும்போது, தேவையான உள்கட்டமைப்புகள் வேண்டும். ஆனால், தலைமைச் செயலகம், அலுவலகப் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு கட்டப்பட்டது. இப்போது மருத்துவமனைக்கு ஏற்ப உள் கட்டமைப்பை மாற்றுவதற்கு ஏகப்பட்ட செலவாகும். அதற்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளலாம். ஆனால், மீண்டும் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர முற்படுவது அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமோ என்றுதான் தோன்றுகிறது."

ராஜீவ்காந்தி வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு நிராகரிக்கப்பட்ட மூன்று பேருக்காக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்வீர்களா?

கடுமையான தண்டனையிருந்தால் தான் குற்றங்கள் குறையும்; மக்களுக்கு பயம் இருக்கும் என்ற கண்ணோட்டம் தவறானது. அமெரிக்காவில் எட்டு மாநில அரசுகள் மரண தண்டனையை ரத்து செய்து விட்டன. அங்கே மாநிலங்களுக்கு இதுபோன்று செயல்பட உரிமை உள்ளது. அந்த மாநிலங்களில் குற்றங்கள் குறைந்து போயிருக்கின்றன. பல்லாண்டு காலமாக, தனிமை நிலையில் மரண பயத்தோடு இருக்கும் ஒருவன் அன்றாடம் செத்துப் பிழைக்கிறான் என்பதே உண்மை. மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றோர் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள். உலகில் 135க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. நமது நாட்டில் மாநில அரசு மற்றும் நீதிமன்றங்களின் தலையீட்டால் சி.ர.பாலன், குருசாமி நாயக்கர் போன்றோர் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டனர். எனவே தற்போது கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள மூன்று பேர் உயிரைக் காப்பாற்ற உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுப்போம். ‘மூன்று பேர் உயிர்காக்கும் இயக்கம்’ என்ற அமைப்பு பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பையும் வேண்டி, முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார் பழ.நெடுமாறன். அப்படி முதல்வரைச் சந்திக்கப் போகிற குழுவில் ஒருவராகச் செல்ல எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை."

வைகோ, தமிழ்நாட்டுப் பிரச்னைகளைப் பேச மாட்டார். அவருக்கு எப்போதும் ஈழத் தமிழர்கள் பற்றிதான் கவலை" என்று உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனம்?

நான் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் பேசினால் அதில் கால் மணி நேரம்தான் ஈழப் பிரச்னை குறித்துப் பேசுவேன். அதில் விடுதலைப் புலிகள் பற்றி நான் சொன்னவைகளைப் பற்றித்தான் மீடியா வெளியிடும். மற்ற தமிழ்நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி நான் பேசியதைப் போட மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் இந்த விமர்சனம். தனியாருக்குத் தாரை போக இருந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை, பொதுத் துறையிலேயே தொடர வைத்தது நான்தான். 1200 கி.மீ. நடைப்பயணம் வந்தபோது நான் ஈழப் பிரச்னையைப் பற்றிப் பேசவே இல்லையே. நமது தமிழ்நாட்டு நதி நீர் பிரச்னைகளுக்காக என்னைவிடப் போராடிய வேறு தமிழ்நாட்டு அரசியல்வாதியைக் காட்டுங்கள் பார்க்கலாம். முல்லைப் பெரியாறு பிரச்னை பற்றி மட்டும் 648 ஊர்களில் பேசியிருக்கிறேன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று முதலிலிருந்தே குரல் கொடுப்பவன் நான். இப்போது இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதாடுகிறேன். இவ்வளவுக்கும் மேல் ஈழத் தமிழர்கள் நலனில் எனக்கு ஆழ்ந்த அக்கறை உண்டு என்பதும் நிஜம்தான்!" 

ஜெ- நூறு நாள்?

இலவசங்கள் சமுதாயத்துக்குக் கேடு என்று சொல்லிவிட்டு இப்போது அவரே இலவசங்களை அள்ளிவிடுவது ‘உழைப்பே உயர்வு தரும்’ என்ற தத்துவத்துக்கு வேட்டு வைப்பதாக இருக்கிறது. நீண்ட கால நோக்கில் இது சமுதாயத்துக்கு நல்லதல்ல. மக்களுக்கு அதிகபட்சம் கேடு விளைவிக்கின்ற மதுவை ஒழிப்பதற்கு நடவடிக்கை இல்லை. விற்பனையை அதிகப்படுத்தும் முயற்சிகளால் வருங்காலத் தலைமுறை குறித்த கவலை மேலோங்குகிறது. டாஸ்மாக் கடைகளை ஒழித்தால் வரலாற்றில் கல்வெட்டாக ஜெயலலிதாவின் பெயர் நிலைக்கும். சமச்சீர் கல்விக் குழப்பம், ஆட்சி அமைந்தவுடன் மக்கள் மனத்தில் அரசைப் பற்றிய கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி விட்டது. மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கை வன்மையாகக் கண்டித்தது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் போட்டது வரவேற்கத்தக்கவை."      

லோக்பால் ஊழலை ஒழிக்குமா? - ஓ பக்கங்கள், ஞாநி


நம் நாட்டில் லஞ்சம் ஊழல் எல்லாம் ஒழியாமல் இருப்பதற்கு ஒரே காரணம் இன்னும் லோக்பால் வராமல் இருப்பதுதான் என்பது போன்ற ஓர் அசட்டு நம்பிக்கை மத்தியதரவர்க்க மக்கள் மனத்தில் இப்போது பலமாக ஏற்பட்டுவருகிறது. அண்ணா ஹசாரேவை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்று இரு தரப்பிலும் பெருவாரியானவர்களுக்கு லோக்பால் பற்றிய விவரங்களே தெரியாமலும் இருக்கின்றன. 


அசல் பிரச்னையான லோக்பால் பற்றியும், லஞ்சம் ஊழலை ஒழிப்பது எப்படி என்பது பற்றியும் நிதானம் தவறாமல் மீடியாவில் இதுவரை ஒலித்த குரல்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று இன்ஃபோசிஸ் நிறுவன வேலையை உதறிவிட்டு இந்திய அரசின் குடிமக்களுக்கான மின்னணு அடையாள அட்டை வழங்கும் திட்டத் தலைவராகப் பணியாற்றும் நந்தனும் அவர் மனைவி ரோஹிணியும், அண்மையில் பெங்களூருவில் சூழல் கல்வி நிறுவனம் தொடங்குவதற்காக சொந்தப் பணம் 50 கோடி ரூபாயை நன் கொடையாக அளித்தவர்கள்.  அருணா ராய் ஆறு வருடங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி சமூகப் பணியில் ஈடுபட்டவர். தகவலறியும் உரிமைச் சட்டத்தை உருவாக்கி அதை நிறைவேற்ற சோனியா காந்தியை சம்மதிக்க வைத்து வெற்றி பெற்றவர். மக்களின் தகவலறியும் உரிமைக்கான தேசிய பிரசார அமைப்பு என்ற அமைப்பை அருணா உருவாக்கினார். இப்போது அண்ணா ஹசாரேவின் அணியில் இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் இருவரும் அருணாவுடன் அந்த அமைப்பில் இன்னமும் இருக்கிறார்கள். லோக்பால் மசோதா வடிவத்தில் மட்டுமே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. அருணா, அரவிந்த் இருவரும் மகசாசே விருது பெற்றவர்கள். நந்தன், அண்ணா ஹசாரே இருவரும் பத்ம பூஷன் பெற்றவர்கள்.


நந்தன் நீலகேணி, “லஞ்சம் ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதவே போதாது. பல முனைகளில் நடவடிக்கை தேவை. அதில் ஒன்று லோக்பால். ஊழலில் இருவகை. ஸ்பெக்ட்ரம் போன்ற மேலிடத்தில் நடக்கும் பெரிய ஊழல்கள். கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட்டுக்காக தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் தர வேண்டியிருப்பது போன்ற சில்லறை ஊழல்கள். முதல்வகை ஊழல்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் அன்றாடம் உரசுபவை அல்ல. ஆனால் தொலைநோக்கில் பாதிப்பவை. இரண்டாம் வகை சில்லறை ஊழல்கள் உடனடியாக அன்றாடம் பாதிப்பவை. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறுவிதமான தீர்வுகள் தேவை.  “எல்லா அரசு அலுவல்களும் வெளிப்படையாக நடக்கும் விதத்தில் டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் சில்லறை ஊழல்களை ஒழிக்கலாம். பெரிய ஊழல்களுக்குக் கடும் சட்டங்கள் தேவை. இதையெல்லாம் உட்கார்ந்து பேசி அலசித் தீர்மானிக்க வேண்டும். சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தின் நிலைக் குழுக்கள் ஒன்றும் முட்டாள்கள் நிரம்பியது அல்ல. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று உலகின் எந்த நாட்டுப் பாராளுமன்றக் குழுவுக்கும் நிகரான அறிவும் உழைப்பும் இங்கேயும் உள்ளது” என்கிறார் நந்தன். “எல்லா அரசியல்வாதிகளும் மோசம் என்ற மிடில் க்ளாஸ் பார்வையைத் தொடர்ந்து ஊக்குவிப்பது ஆபத்தானது” என்பது நந்தன் கருத்து.



இதே பார்வையை இன்னொரு கோணத்தில் இருந்து முன்வைக்கிறார் அருணா ராய். வெவ்வேறு மட்டத்தில் இருக்கும் வெவ்வேறு ஊழல்களை ஒழிக்க வெவ்வேறு சட்டங்கள் தேவை. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.கள் தனி. அரசு ஊழியர்களில் உயர் அதிகாரிகள் தனி, கீழ் மட்டம் தனி. நீதித் துறைக்கு முற்றிலும் தனியான கண்காணிப்பு அமைப்பு தேவை. இதுதவிர ஊழல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தர தனி அமைப்பும் சட்டமும் தேவை. இந்த நான் கையும் எப்படிச் செய்யலாம் என்பது பற்றி அவர் சார்ந்திருக்கும் அமைப்பு விரிவாக அறிக்கைகள் தயாரித்திருக்கிறது. மன்மோகன் அரசு கொண்டு வந்திருக்கும் லோக்பால் போதாது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் இன்னொரு ராட்சத அமைப்பாக மாறிவிடும். இரண்டும் தீர்வல்ல என்பது அருணாராய் கருத்து. 

நந்தன், அருணா இருவருமே அண்ணா ஹசாரே குழுவினரின் பிடிவாத அணுகுமுறையைக் கடுமையாக நிராகரிக்கிறார்கள். மக்கள் கருத்தையும் ஆதரவையும் திரட்ட போராட்டம் நடத்துவதை இருவரும் ஆதரிக்கிறார்கள். ஆனால், தாங்கள் எழுதியிருக்கும் லோக்பாலைத்தான் அரசு ஏற்று நிறைவேற்ற வேண்டும், அதுவும் ஆகஸ்ட் 31க்குள் செய்ய வேண்டும் என்றெல்லாம் அண்ணா ஹசாரே அணியினர் பிடிவாதம் பிடிப்பதை அருணாவும் நந்தனும் (நானும்) ஏற்கவில்லை.அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் எட்டாவது நாளை எட்டும்வரை பிடிவாதமாக இருந்த அவரது அணியினர், மெல்ல தங்கள் பிடிவாதங்களைத் தளர்த்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் எதையும் செய்ய முடியாது என்பதும், தங்கள் கருத்துக்கு, பல மாற்றுக் கருத்துகள் அரசிடம் மட்டுமல்ல, மற்ற பொதுமக்களிடையேயும் இருக்க முடியும் என்பதும் மெல்ல மெல்ல அவர்களுக்கு உறைத்து வருகிறது. முதலில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்து ஒரு மாதமாகப் பிரசாரம் செய்த டைம்ஸ் நவ், என்.டி.டிவி, ஹெட்லைன்ஸ் டுடே, சி.என். என். ஐ.பி.என். சேனல்கள் எல்லாம் கூட கடந்த ஒரு சில தினங்களாக மாற்றுக் கருத்துகள் இருப்பதை ஒளிபரப்ப ஆரம்பித்திருக்கின்றன. 



 சி.என்.என். ஐ.பி.என். ஒரு சமரசத் தீர்வையே முன்வைத்தது. அரசு தன் மசோதாவைத் திரும்பப் பெறவேண்டும். அண்ணா அணியினரும் தங்கள் மசோதாவை மட்டுமே சட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும். இன்னொரு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் அரசு, அண்ணா அணியினர், எதிர்க்கட்சிகள், எம்.பி.கள், சட்ட அறிஞர்கள், சமூகப் பிரபலங்கள் இடம்பெற வேண்டும். ஒரு மாதத்துக்குள் அந்தக் குழு விவாதித்து முடிவு செய்து தரும் சட்ட முன்வடிவை ஏற்றுக் கொண்டு பாராளுமன்றம் சிறப்புக் கூட்டம் நடத்தி, தீபாவளிக்குள் லோக்பால் சட்டத் தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தீர்வு யோசனை. இதையேதான் மன்மோகன் அரசு வேறு வடிவத்தில் இத்தனை நாட்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அரசின் லோக்பால் சட்ட முன்வடிவு பாராளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை நிலைக்குழுவிடம் தெரிவிக்கலாம். அண்ணா ஹசாரே குழுவின் மசோதாவையும் நிலைக்குழுவிடம் தருகிறோம். நிலைக்குழு ஆய்வு செய்து முடிவெடுக்க ஒரு மாதம் ஆகும். அதன்பின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றலாம்.

லோக்பால் வந்தால் என்ன லாபம், என்ன நஷ்டம்?  

லோக்பால் ஒன்றும் அண்ணா ஹாசாரேவின் கண்டுபிடிப்பல்ல. உலக அளவில் இந்த அமைப்பு 140 நாடுகளில் இருக்கிறது. உயர் மட்ட ஊழல்கள் பற்றி விசாரிப்பதிலேயே பெரும்பாலும் இவை அக்கறை காட்டுகின்றன. இந்தியாவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதைப் பற்றி நேரு காலத்திலேயே பேசியிருக்கிறார்கள். முதன்முதலில் 1968ல் மக்களவையில் சட்ட முன் வடிவு கொண்டுவரப்பட்டது (அதுதான் அரவிந்த் கேஜரிவால் பிறந்த வருடம்!). மசோதா நிறைவேறும் முன்பே அவையின் ஆயுள் முடிந்துவிட்டது. அதன் பின்னர் ஏழு முறை மக்களவையில் லோக் பால் மசோதாவை அரசு கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவையின் ஆயுள் முடிந்துவிட்டதால் நிறைவேறவில்லை. 1985ல் மசோதா திரும்பப் பெறப்பட்டது. கடைசியாகக் கொண்டு வந்தது 2001ல். ஒவ்வொரு முறையும் மசோதாவை விவாதிக்க நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். நிலைக்குழுக்களும் விவாதித்து, கருத்துசொல்லியிருக்கின்றன.  
 
இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒரு லோக்பால் போதாது. மாநிலத்துக்கு ஒரு லோகாயுக்தா தேவை என்று சொல்லப்பட்டது. இதையடுத்து 18 மாநிலங்கள் லோகா யுக்தாவை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் நாட்டில் இல்லை. குஜராத்தில் உண்டு. ஆனால், அங்கே ஏழரை வருடமாக லோகாயுக்தா பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. கர்நாடகத்தில் லோகாயுக்தாவாக இருப்பவர் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே. இவர்தான் அண்மையில் பி.ஜே.பி முதலமைச்சர் எடியூரப்பா மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரம் இருப்பதாக அறிக்கை தந்தவர். இவர் அண்ணா ஹசாரேவின் அணியில் இருப்பவர். அண்ணாவின் லோக்பால் மசோதாவை எழுதியதில் முக்கிய பங்காற்றியவர்.லோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று அண்ணாஹசாரே கேட்பதற்கெல்லாம் முன்பாகவே சோனியா காந்தியின் காங்கிரஸ் 2004லேயே சொல்லிவிட்டது. அது அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. அதன்படி இந்த வருடம் ஜனவரியில், ஊழலுக்கெதிரான நடவடிக்கைகளை வகுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர் குழுவை மன்மோகன் சிங் அமைத்தார். அந்தக் குழுவை லோக்பால் மசோதாவை உருவாக்கும்படி சொன்னார். 
 
அதன்பிறகுதான் அண்ணா ஹசாரே அணியினர் திடீரென்று களத்தில் குதித்தார்கள். மசோதாவை உருவாக்கும் குழுவில் மக்கள் சார்பாக, தாங்களும் இடம்பெற வேண்டுமென்று அண்ணா உண்ணாவிரதம் இருந்தார். உடனே அரசு அவரையும் அவர் சொன்னவர்களையும் குழுவில் சேர்த்துக் கொண்டது. மசோதாவை உருவாக்குவதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அரசு தான் தீர்மானித்த மசோதாவை பாராளுமன்றத்தில் வைத்தது. அண்ணா தங்கள் மசோதாவைத்தான் ஏற்கவேண்டுமென்று உண்ணா விரதம் தொடங்கினார். 
 
இரண்டு மசோதாக்களுக்கும் என்ன வித்தியாசம்? மூன்றாவதாக அருணா ராய் போன்றவர்கள் முன்வைக்கும் மசோதா என்ன சொல்லுகிறது?  
 
பிரதமரை லோக்பால் விசாரிக்கலாமா கூடாதா என்பதில் கருத்து வேறுபாடு பற்றி மட்டுமே எல்லாரும் மீடியாவில் அதிகம் பேசி வருகிறார்கள். பிரதமர் பதவியில் இருந்து விலகியபிறகு அவரை லோக்பால் விசாரிக்கலாம் என்கிறது மன்மோகன் அரசு. பதவியில் இருக்கும்போதே விசாரிக்க வேண்டும் என்கிறது அண்ணா குழு.ஆனால் வித்தியாசங்கள் பிரதமர் பற்றி மட்டுமல்ல. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால், இன்னொரு போட்டி அரசாங்கத்தையே உருவாக்கிவிடும் ஆபத்து இருப்பதாக அதை மறுப்பவர்கள் சொல்கிறார்கள்.அது அப்படித்தானா?
 
(விவாதிப்போம்)
 
  
1.எட்டு நாள் உண்ணாவிரதம் இருந்ததுமே பதறிப் போய் அண்ணாஹசாரேவுடன் பேச்சு நடத்தும் அரசு ஏன் பத்து வருடமாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளாவுடன் இதே போல பேச்சு நடத்த முன்வருவதே இல்லை? ஷர்மிளாவை மட்டும் தற்கொலை முயற்சி என்று கைது செய்து கட்டாய குளூகோஸ் ஏற்றிக் கொண்டிருப்பது ஏன்? அதை ஏன் அண்ணாவுக்குச் செய்யவில்லை?

2.கறுப்புப் பணம் ஏராளமாக உருவாக்கப்பட்டு, புழங்கிக் கொண்டிருக்கும் சினிமா துறையினருக்கு ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கும் தார்மிகத் தகுதி உண்டா?  

3. இந்தியாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைக்கப்படும் கூடன்குளத்தில் அந்தக் கிராம மக்கள் சுதந்திர தினத்தன்று நடத்திய கிராம சபையில் தங்கள் ஊரில் அணு உலை இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறை வேற்றி, ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக அரசு அலுவலகத்துக்குச் சென்று ரேஷன் கார்டுகளைத் திருப்பித் தந்த போராட்டத்தை ஏன் தமிழ், ஆங்கில டி.வி.சேனல்கள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை தேசியப் பிரச்னையாகக் கருதவில்லை?


பொது அறிவு செய்திகள்

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சிதானே? அது எங்கே இருக்கிறது?

தற்போது சோரா (sohra) என்று அழைக்கப்படும் சிரபுஞ்சி, இந்தியாவில் மேகாலயா மாநிலத்தில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 4872 அடி உயரத்தில் ஹாசி (khasi) மலை உச்சியில் அமைந்துள்ள பகுதி இது. ஆண்டுதோறும் 11,430 மி.மீ. மழை இங்கே பொழிகிறது.இவ்வளவு மழை பொழிந்தாலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் துன்புறுகிறார்கள் என்பதும் வியப்பான செய்தி. காரணம், அந்தத் தண்ணீர் முழுதும் தேக்கி வைக்க முடியாததால், வீணாகிவிடுகிறது.

ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதால், தொண்டையில் சதை வளருமா?

ஐஸ்கிரீம், குளிர் பானம் போன்றவற்றை சாப்பிடுவதற்கும், டான்ஸில் எனப்படும் தொண்டையில் சதை வளர்வதற்கும் தொடர்பில்லை. நாம் உட் கொள்ளும் பொருளின் மூலம் பரவும் கிருமிகளைத் தடுப்பது டான்ஸில். குளிர்ச்சியான பொருள்களை உட் கொள்ளும்போது, அது தன் வடிகட்டும் திறனை இழந்து விடுகிறது. அதனால், கிருமித் தொற்று ஏற்படவும், அந்தக் கிருமிகளின் மூலம் தொண்டையில் சதை வளரவும் வாய்ப்பு உண்டாகிறது. குளிர்பானம் என்றல்ல; குளிர்ச்சியான எந்தப் பொருளை சாப்பிட்டாலும் - ஐஸ் வாட்டர் உள்பட, இந்த நிலைதான்.
ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?

சர் வில்லியம் ராம்ஸே என்பவர், 1895ஆம் ஆண்டு இதைக் கண்டுபிடித்தார். ஹீலியம் என்பது வெறும் வாயுவல்ல. அதற்கு நிறமோ, மணமோ கிடையாது. இது, காற்றை விட எடை குறைவானது. இதைவிடவும் எடை குறைவானது ஹைட்ரஜன். 

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘வளையாபதி’ பற்றி...?

நவகோடி நாராயணன் என்ற வணிகரைப் பேசும் காப்பியம் இது. சமண சமய இலக்கியம் என்றும் சொல்வதுண்டு. என்றாலும், இந்தத் தொகுப்பு முழுமையாகக் கிடைக்க வில்லை. வெறும் 72 பாடல்களே கிடைத்துள்ளன. இயற்றியவர் பெயரும்கூடத் தெரியாது என்பது வருத்தமான விஷயம்!  


Thursday, August 25, 2011

சென்னை! - அந்நியர்களின் தலைநகரம்

தமிழ் சினிமாவின் சாகா வரம் பெற்ற காட்சி அது. வீட்டை விட்டு வெளியேறும் ஹீரோ, ''சென்னை போய் பொழைச்சுக்கிறேன்'' என்று சபதம் போடுவதும், சென்னை வந்து கோலோச்சுவதும். ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி ஒரு காட்சிக்குத் தேவை இருக்காது. படங்களில் மட்டும் அல்ல; நிஜத்திலும். சென்னையின் பிரமாண்ட மால்கள், மல்டிப்ளக்ஸ்கள், பெரிய சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... எங்கும் இப்போது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்!
 
சென்னையின் பொருளாதாரம் நீண்ட காலமாகவே ராஜஸ்தானியர்களிடமும் குஜராத்திகளிடமும்தான் இருக்கிறது. சென்னையில் எந்த ஒரு தொழிலிலும் மொத்த விற்பனையாளர்கள் - முதலாளிகள் அவர் கள்தான். ஒருவேளை அவர்கள் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடவில்லை என்றால், வட்டித் தொழில் மூலம் அவர்களுடைய கரங்கள் அந்தத் தொழிலில் பிணைந்து இருக்கும். இப்போது தொழிலாளர்கள் நிலையிலும், வெளி மாநிலத்தவர்களின் - குறிப்பாக - வட இந்தியர்களின் கை ஓங்குகிறது! 
 
தமிழர்கள் நஹி ஹை! 
 
எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு, கட்டுமானப் பணி. சென்னையின் வரலாற் றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட அடைபட்டு விட்டதாகவே தோன்றுகிறது. சென்னையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கும் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் 80 சதவிகிதத்தினர் வட மாநிலத்தவர்கள்.
 
தென் ஆசியாவிலேயே பெரிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற் பேட்டையில் பணியாற்றுவோரில் 70 சதவிகிதத்தினர் வெளி மாநிலத்தவர்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் இந்தத் தொழிற்பேட்டை, சென்னையின் வேலைவாய்ப்புகேந்திரங் களில் மிக முக்கியமானது. ''வெளிமாநிலத் தொழிலாளர்களைத் தவிர்த்துவிட்டு, இன்றைய தொழிற்பேட்டையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவர்கள் இல்லாவிடில், தொழிற்பேட்டை யையே மூடிவிட வேண்டியதுதான்''.
 
அடிமைகள் Vs அடிமைகள்!
 
 
வெளி மாநிலங்களில் இருந்து வந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை அப்படி ஒன்றும் மெச்சிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் இருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் தங்க வைக்கப்படும் இடம் அனல் கக்கும் தகரக் கொட்டகைகள். கூலி தவிர்த்து, வேறு எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவது இல்லை. கூலியும் தமிழர்களைவிடக் குறைவுதான். இந்தக் குறைந்தபட்சக் கூலியிலும் சரி பாதியை அவர்களை இங்கு அழைத்து வந்த ஏஜென்ட்டுகள் வாங்கிக்கொள்கிறார் கள். கிட்டத்தட்ட அந்தத் தொழிலாளர்கள் விலங்குகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஒரு காலத்தில், அரபு நாடுகளில் வேலைக்குப் போய் கொத்தடிமைகளாகச் சிக்கிய சக தமிழர்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட தமிழ்ச் சமூகம், இப்போது எந்தவிதக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்தக் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கிறது. ஆனால், இவ்வளவு பரிதாபத்துக்கு உரிய நிலையில் இருக்கும் இந்தத் தொழிலாளர்கள்தான் அதே வறிய நிலை யில் இருக்கும் தமிழகத் தொழிலாளர்களுக்கு மறைமுகமான போட்டியாளர்களாக மாறுகிறார்கள்.
 
''தமிழ் ஆட்கள் கிடைக்கலை. அப்படியே கிடைச்சாலும் நம் ஆட்களைவெச்சு வேலை வாங்க முடியலை. அவங்க அப்படி இல்லை. மாடு மாதிரி உழைக்கிறாங்க. தேவை இல்லாமப் பேசுறது இல்ல. லீவு எடுக்குறது இல்ல. ஞாயிற்றுக்கிழமைகூட வேலை செய்றாங்க. நம்ம ஆளு ஒருத்தனுக்குக் கொடுக்குற சம்பளத்துல பாதியைக் கொடுத்து, அவன்கிட்ட ரெண்டு ஆளு வேலை வாங்கிடலாம்.'' - வெளி மாநிலத் தொழிலா ளர்களை வேலையில் அமர்த்த சென்னை முதலாளிகள் சொல்லும் பொதுவான நியாயம் இது. இது இங்கு மட்டும் இல்லை. வெளி நாடுகளில் இது  சகஜம்.தமிழ் ஆட்கள் கிடைக்காமல் இல்லை. ஒரு தொழிலாளிக்கு என்று இருக்க வேண்டிய குறைந்தபட்ச சலுகைகளையும் வேலை செய்வதற்கு ஏற்ற சூழலையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை இன்றைய சென்னை முதலாளிகளுக்குத் தர விருப்பம் இல்லை. இந்தப் பிரச்னைக்கு மாற்றாகவே வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துகிறார்கள்.
 
அந்நிய நகரம்!
 
 
 இந்தியாவில் வேலை தேடிப் பிற மாநிலங்களை நோக்கிச் செல்வோரின் முதல் தேர்வு இப்போது சென்னைதான். ஏனைய இந்திய நகரங்களைப்போல உள்ளூர்வாசிகள் தொந்தரவு தராதது இங்கு வேலைத் தேடி வருவோரை வசீகரிக்கிறது. ஆனால், இந்த நகரமோ, மக்களோ அவர்களுக்குப் பிடித்தமானவர்களாக இல்லை என்பதையும் உணர முடிகிறது.'எதிர்காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் இது ஒரு பெரிய சமூகப் பிரச்னையாக மாறும்'' சமூகவியலாளரும் கலை விமர்சகருமான தேனுகா. ''இப்படி வருபவர்கள் இங்கேயே தங்கிவிட்டால்? கொல்கத்தா ஓர் உதாரணம். கொல்கத்தாவை நீங்கள் எல்லாம் வங்காளிகளின் மாநகர மாக நினைத்துக்கொண்டு இருப்பீர்கள். உண்மை என்ன தெரியுமா? இந்தியாவி லேயே அதிகம் இந்தி பேசுபவர்கள் வாழும் நகரம் அது. இன்றைய கொல்கத்தாவின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு எல்லாம் இதுவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது'' 
 
தளரும் பிடி!
 
உலகமயமாக்கல் பின்னணியில் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி என்பது உலக அளவிலான ஒரு பிரச்னை. உலகம் முழுவதும் இன்றைய தேதியில் 21.4 கோடித் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காகக் கூடும். வளர்ந்த நாடுகள் பலவும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோகாரர்கள், இங்கிலாந்துக்கு ஆசியர்கள், பிரான்ஸுக்கு ஆப்பிரிக்கர்கள், ஜெர்மனிக்கு கிரேக்கர்கள் மற்றும் துருக்கி யர்கள் என்று எல்லா வளர்ந்த நாடுகளுமே இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன. இடப் பெயர்ச்சியைத் தடுக்க தீவிர நட  வடிக்கைகளையும் எடுக்கின்றன. ஆனால், இந்தியாவில் இது உள்நாட்டுப் பிரச்னை. கதம்பம் போன்ற அமைப்பில் இருக்கும் ஒரு நாட்டில் இந்தப் பிரச்னையை அணுகுவது சிக்கலானது. இப்போதைக்குத் தீர்வுகள் புலப்படவில்லை. ஆனால், பிரச்னை தெளி வாகத் தெரிகிறது... 
 
தமிழர்கள் கைகளில் இருந்து நழுவுகிறது சென்னை!
 
 
விகடன்