Search This Blog

Sunday, August 30, 2015

அருள்வாக்கு - என்ன பிரயோஜனம்?


நம் படிப்பெல்லாம் வெள்ளைக்கார முறையில் உள்ள படிப்பு. பேச்சு, டிரஸ், நடவடிக்கை எல்லாமே வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டுமென்பதுதான் நம் ஆசை. சுதந்திரம் வந்த பிறகும் இப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறோம். முன்னைவிட அதிகமாக வெள்ளைக்கார நாகரிகத்தையே நம் வாழ்முறையாக்கிக் கொண்டிருக்கிறோம். ஸ்வதேசியம், பாரத நாகரிகம், நம்முடைய தனிப் பண்பாடு என்று பேசுவதில் மட்டும் குறைவில்லை. உள்ளே பரதேசியாக இருந்துகொண்டு வெளியில் சுதேசிப் பேச்சுப் பேசி என்ன பிரயோஜனம்? உள்ளும் புறமும் சுதேசியமாக இருப்பதென்றால், நம் தேசத்துக்கு முதுகெலும்பாக அநாதிகாலம் தொட்டு இருந்து வருகிற மதவிஷயங்களை பால்யத்திலேயே சொல்லிக் கொடுத்தால்தான் அது ஸாத்யமாகும். ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் மதச்சார்பற்ற ராஜாங் கத்தில் இதற்கு வழி பண்ணித் தரமுடியவில்லை! அதனால் பழைய வெள்ளைக்காரப் படிப்பே தொடர்ந்து வந்திருக்கிறது. அதில் சொல்லிக் கொடுப்பதெல்லாம் நம்முடைய சாஸ்திரங்கள் ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ (மூட நம்பிக்கை) என்பதுதான்! இதனால், ‘நம் மதத்துக்கு ஆதாரமான புஸ்தகம் என்ன? ஹிந்துக்கள் என்ற பெயருள்ள ஸகலருக்கும் பொதுவாக என்ன இருக்கிறது?’ என்று கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாத நிலையில் இருக்கிறோம்.

விஷயம் தெரியாதவர்கள் மட்டந்தட்டினாலும், இதர தேசங்களிலுள்ள விஷயம் தெரிந்தவர்களும் ஆத்ம ஸாதகர்களும் நமது ஆத்ம வித்தையை (லௌகிகம் என்று தோன்றுகிற வித்யைகள்கூட நம் தேசத்தில் ஆத்மாபிவிருத்திக்கே ஸாதனமாக இருப்பதால் நம்முடைய அரசியல் சாஸ்திரம், எகனாமிக்ஸ், நாட்டிய சாஸ்திரம் உள்பட எல்லாம் ஆத்மவித்யை தான்) பாராட்டுகிறார்கள். தேடித் தேடி எடுத்துக்கொண்டு தர்ஜுமா (ட்ரான்ஸ்லேட்) பண்ணி வைத்துக் கொள்கிறார்கள். எனவே லோகத்தில் நமக்கு ஒரு கௌரவம் வேண்டுமானால், அது எதனால் நமக்குத் தன்னால் பிறரது மரியாதை கிடைக்கிறதோ அந்த சாஸ்திரங்களில் நம் அறிவை விருத்தி பண்ணிக் கொள்வதால்தான் ஏற்படு

சாம்சங் கேலெக்ஸி எஸ்6 எட்ஜ்+ (Samsung Galaxy S6 Edge+)


புதிய தொழில்நுட்பத்துடன் அமைந்த அதிநவீன ஸ்மார்ட் போன் இது.
டிஸ்ப்ளே – 5.70 இன்ச் 1440x2560 பிக்ஸல் 518 PPI.
பின்புற கேமரா – 16 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Exynos 7420.
ரேம் – 4 ஜிபி.
பேட்டரி – 3000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி வரை.
எடை – 153 கிராம்.
NFC வசதி உண்டு.
சிம் – நானோ சிம் (4ஜி)

பிளஸ்:
தொழில்நுட்பம்.
டிஸ்ப்ளே.

மைனஸ்:
மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கிடையாது.

விலை: ரூ.57,900.


சோனி ஸ்மார்ட் பேண்ட் 2(Sony SmartBand 2)
இது உடலின் ஆரோக்கியம் மற்றும் மன அழுத்தத்தை அளக்கும் கருவி.  இந்த கேட்ஜெட் மூலம் தூக்கத்தின் தரத்தை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

இதயத்தின் மற்றும் உடலின் ஆரோக்கியத்தைச் சொல்லும் ‘Heart Rate Monitor’ இந்த கருவியில் உள்ளது.

இந்த NFC கேட்ஜெட் 3 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளத்திலும் இந்த கேட்ஜெட்டை பயன்படுத்தலாம்.

விலை: ரூ.8,700

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டேப் P680(Micromax Canvas Tab P680)

டிஸ்ப்ளே – 8 இன்ச் 800x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல். பிளாஷ் வசதி உண்டு.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 ஜிபி.
பேட்டரி – 4000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 ஜிபி வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 3ஜி. சிம் 2 – 2ஜி.
பிளஸ்:
இயங்குதளம்.
3ஜி, வாய்ஸ் காலிங் வசதிகள்.
மைனஸ்:
ரேம்.
விலை: ரூ.9,499.


கார்பன் ஆரா 9(Karbonn Aura 9)

டிஸ்ப்ளே – 5 இன்ச் 480x854 பிக்ஸல்.
பின்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2 GHz Quad-Core.
ரேம் – 1 ஜிபி.
பேட்டரி – 4000 mAh.
எடை – 160 கிராம்.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு கிட்-கேட் 4.4
இன்டெர்னல் ஸ்டோரேஜ் –8 ஜிபி.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் –32 ஜிபி வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 3ஜி. சிம் 2 – 2ஜி.
பிளஸ்:
பேட்டரி.
மைனஸ்:
இயங்குதளம்.
விலை: ரூ.6,390

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Sunday, August 23, 2015

மொபைல் மோகம் குறைக்க...


1) காலையில் எழுந்தவுடன் மொபைலில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதையும் பார்க்காதீர்கள்.

2) தேவை ஏற்படும்போது மட்டும் மொபைலைப்  பயன்படுத்துங்கள். சும்மா இருக்கிறோமே என மொபைலைக் கையில் எடுக்கும் அடுத்த சில நொடிகள், பல மணி நேரங்களைக் கபளீகரம் செய்யலாம்!

3) என்ன அவசரமாக இருந்தாலும் சில இடங்களில் மொபைலை எடுப்பது இல்லை எனத் தீர்மானமாக இருங்கள்... போக்குவரத்து சிக்னல், கார் ஓட்டும்போது, மருத்துவமனை, துக்க வீடு, வகுப்பறை என்பதுபோல.


4) நீங்கள் மொபைலை எப்படியெல்லாம் உபயோகமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைக் கணித்துச் சொல்லவும் சில ஆப்ஸ் உண்டு. அவற்றைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே மார்க் போடுங்கள்!

5) மற்ற முக்கிய வேலைகள் இருக்கும்போது, ஆஃப்லைன் போய்விடுங்கள். 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்க, ஸ்மார்ட்போன் உங்கள் வாழ்க்கைத் துணை கிடையாது!


 கார்க்கிபவா

ஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள்

மொபைல் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்களிடம் இப்போது மிகவும் பிரபலமாக இருப்பது இலவச ரீசார்ஜ் தரும் அப்ளிகேஷன்கள்தான். அதாவது, சில ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தாலே ஆட்டோமேட்டிக்கா ஒரு குறிப்பிட்ட தொகை கைப்பேசியில் ரீசார்ஜ் ஆகிவிடும். 

அதுமட்டுமில்லாமல் அந்த ஆப்ஸ்களை தனது நண்பர்கள், உறவினர்கள் என பிறருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் போது, அறிமுகம் செய்து வைப்பவரின் கைப்பேசியில் தொடர்ந்து ரீசார்ஜ் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

டவுன்லோட் செய்பவருக்கும் ரீசார்ஜ், டவுன்லோட்  செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் என ஒரே ஆப்ஸில் இரண்டு பலன்கள் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த வகை ஆப்ஸ்கள் மிகவும் பாப்புலராகி வருகின்றன.

ஏன் அந்த ஆப்ஸ் நிறுவனங்கள் டவுன்லோட் செய்பவருக்கும், டவுன்லோட் செய்யச் சொல்பவருக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்கிறீர்களா, ஒரு அப்ளிகேஷன் பலரால் டவுன்லோட் செய்யப்படும் போது ஆப்ஸ்ஸை தயாரித்து வெளியிட்டவருக்கு வருமானம் அதிகரிக்கும்.

சரி தற்போது இளைஞர்கள் மத்தியில் உலா வரும் இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
1. எம்சென்ட் (mCent):
 

இலவச ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களில், டவுன்லோடுக்கு அதிக அளவு ரீசார்ஜ் தரும் ஆப் இதுதான். சில சமயங்களில் இந்த அப்ளிகேஷனுக்குள் இருக்கும் ஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்து, அதை ஏழு நாட்கள் வரை கைப்பேசியில் வைத்திருந்தால், ஐம்பது ரூபாய் வரை ரீசார்ஜ் பெறலாம். 

மேலும் எம்சென்ட் ஆப்ஸை, எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலமாக நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை பதிவிறக்கம் செய்தால், நமக்கு நாற்பது ரூபாய் ரீசார்ஜ் இலவசம்.
2. லடூ (ladooo):
 

ஒரு ஆப்ஸை டவுன்லோட் செய்தால் லடூ-வில் இருபத்தைந்து ரூபாய் வரை இலவச ரீசார்ஜ் பெறலாம். நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் ஏதேனும் ஓர் ஆப்ஸை டவுன்லோட் செய்தால், நாம் முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். 
லடூ-வில் ஒரு ரூபாயிலிருந்து அப்ளிகேஷன்கள் ஆரம்பமாகின்றன. ஆகையால் சிறிய அளவு ஆப்ஸ்களை மட்டும் பதிவிறக்கம் செய்வோருக்கு உகந்த ஆப் இதுவே.
டாஸ்க்பக்ஸ் (Taskbucks):
 

டாஸ்க்பக்ஸ் ஆப், உறுப்பினராக சேர்ந்தாலே ஐந்து ரூபாய் இலவசமாக தருகிறது. மேலும் இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்தால் நமக்கு பதினைந்து ரூபாய் கிடைக்கும். இதைக்கொண்டு Paytm ஆப்ஸில் ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பொருட்கள் வாங்கலாம். 

இந்த ஆப்ஸிலும் சில ஆப்ஸ்களை ஒரு வாரம் வரை கைப்பேசியில் வைத்திருந்தால் கூடுதல் ரீசார்ஜ் உண்டு
ஃப்ரீ பைசா (FreePaisa):

ஃப்ரீ பைசாவில் ஒரு ஆப்ஸுக்கு ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை ரீசார்ஜ் பெறலாம். இதை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் ஏதேனும் இரண்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்தால் நமக்கு இருபது ரூபாய்க்கு ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும்.
மோஜோ (Mojo):
 

இந்த ஆப்ஸில் பதிவிறக்கம் செய்தால், மோஜோக்கள் சேர்கின்றன. பதினாறு மோஜோக்கள் சேர்ந்தால் ஒரு ரூபாய். இந்த ஆப்ஸை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு 200 மோஜோக்கள் சேர்த்தால், நாம் இருபத்தினான்கு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

இப்படி பல ஆப்கள் உள்ளன. ப்ளே ஸ்டோரில் ஃப்ரீ ரீசார்ஜ் ஆப்ஸ் என்று தட்டினால் போதும் அனைத்தும் வந்து நிற்கும். ஆனால்... இங்குதான் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இந்த ஆப்கள் எல்லாம் நம்பிக்கையானவையா? இலவசம் என்றாலே, ஏதேனும் உள்குத்து இருக்குமா? இவைகளிடமிருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?  

“ஃப்ரீ ரீசார்ஜ் தரும் ஆப்ஸ்களை கையாளும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த வகை ஆப்ஸ்களை பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட், அமேஸான் போன்ற நம்பகத்தன்மையுள்ள ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யலாமே தவிர, பெயர் மற்றும் பயன் தெரியாத ஆப்ஸ்களையெல்லாம் டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.

சிறிய அளவிலான ஆப்ஸ்தானே, டவுன்லோடு செய்து விட்டு ஃப்ரீ ரீசார்ஜ் கிடைத்தவுடன் அழித்துவிடலாம் என்று நினைத்து செய்தால் ஆபத்து உங்களுக்கே. ஆரம்பத்தில் இலவசமாக கிடைக்கும் அந்த ஆப்ஸ்களை சில காலத்திற்கு பிறம் பணம் கட்டி பயன்படுத்த வேண்டியதாகிவிடும்.

அல்லது இந்த ஆப்ஸ்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது 'பிளிங்க்' ஆகும் விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வைரஸ்கள் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைய நேரலாம். பின்னர் தகவல்கள் கூட திருடப்படலாம்.

இந்த வகை ஆப்ஸ்களை நாம் அனைவரும் ஃப்ரீயாக டவுன்லோடு செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களையும் டவுன்லோட் செய்ய நாம் நமது மொபைல் டேட்டாவை செலவு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் அதன் பயன் தெரிந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்” 
தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா

பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை?


நாமினி!
 
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம்.  வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது  பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம். 

பென்ஷன்!

பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.

மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது  வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.

இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும்.    இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின்   திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.

மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.

பிஎஃப் கணக்கை முடிப்பது!

பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.

இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)

பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.

அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.

எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.

டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ்  (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில்  உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541

நிரந்தரக் கணக்கு எண்! 

பிஎஃப் அமைப்பு UAN(Universal  Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.

இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே  வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.

இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.''Saturday, August 15, 2015

செந்தூர் கடற்கரையில்... - தீர்த்தங்களின் மகிமை !

'வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை’ என்று புறநானூறு போற்றும் புண்ணியம் பதி திருச்செந்தூர். முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான இத்தலம் கடல் சார்ந்தது என்பதால், ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை செய்வது சிறப்பு என்பார்கள் பெரியோர்கள்.
இதுமட்டுமல்ல, இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இந்தத் தலத்தில் தீர்த்தமாக உள்ளதாகக் கூறப்படு கிறது. இவற்றில், கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக் கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

கடற்கரையில் அமைந்திருந்த சில தீர்த்த கிணறுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. அந்தத் தீர்த்தக் கட்டங்களைக் குறிப்பிடும் கல்வெட்டு களும் காணாமல் போய்விட்டனவாம். சிறப்புமிகு 24 தீர்த்தங்களை நாம் அறிந்துகொள்வோமா?


முகாரம்ப தீர்த்தம்: இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப் பருகுவர்.

தெய்வானை தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.

வள்ளி தீர்த்தம்: இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத் துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.

லட்சுமி தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர், குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.

சித்தர் தீர்த்தம்: காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக, பைசாசு என்கிற பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.

திக்கு பாலகர் தீர்த்தம்: கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்கள் கொடுக்கும் பலனைத் தரும்.

காயத்ரீ தீர்த்தம்: அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் அருளும்.

சாவித்ரி தீர்த்தம்: பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன் னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.

சரஸ்வதி தீர்த்தம்: சகல ஆகம புராணங்க ளையும் அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.

அயிராவத தீர்த்தம்: சந்திர பதாகை முதலிய நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம்.

வயிரவ தீர்த்தம்: இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் பல புண்ணிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.

துர்கை தீர்த்தம் சகல துன்பங்களும் நீங்கி நன்மைகிட்டும்.

ஞானதீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவு வதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.

சத்திய தீர்த்தம் களவு, கள்ளுண்டல், குரு நிந்தை, அகங்காரம், காமம், பகை, சோம்பல், பாதகம், அதிபாதகம், மகா பாதகம் ஆகியவற்றினின்றும் நீக்கி, சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.

தரும தீர்த்தம் தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும்.

முனிவர் தீர்த்தம் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக் கண்ட பலனைப் பெறுவர்.

தேவர் தீர்த்தம் காமம், குரோதம், லோபம் மோகம் போன்ற ஆறு குற்றங்களை நீக்கி, ஞான அமுதத்தை நல்கும்.

பாவநாச தீர்த்தம் சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த்தங்களையும் அளிக்கவல்லது.

கந்தபுட்கரணி தீர்த்தம் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசை சூடும் மேன்மையைப் பெறுவர்.

கங்கா தீர்த்தம் இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பிறவிக் கடலைக் கடக்கச் செய்யும் தெப்பம் போன்றிருக்கும்.

சேது தீர்த்தம் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருள வல்லது.

கந்தமாதன தீர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.

மாதுரு தீர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.

தென்புலத்தார் தீர்த்தம் இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளும் தண்ணீரும் இறைத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட் கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.

மேலும், கோயிலுக்குத் தெற்கே 200  மீட்டர் தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம், உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. சமுத்திரக்கரையோரம் இப்படி இனிய நீராக அமைந்துள்ளது கந்தப்பெருமானின் அருளாடலேயாகும். இதில் மூழ்குவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்.

இத்தகு தீர்த்தச் சிறப்புகள் மிகுந்த திருச்செந்தூருக்கு, ஆடி அமாவாசை அன்று சென்று புனித நீராடி, முன்னோரை ஆராதித்து அருள்பெற்று வருவோம்.

வினோத் குருக்கள்

Minions

மஞ்சள் நிறம், குட்டையான உருளை வடிவம், சற்றே வாழைப்பழத்தை நினைவுபடுத்தும் தோற்றம், ஜீன்ஸ், ஒற்றை மற்றும் இரட்டைக் கண்கள், அந்தக் கண்களை கவர் செய்யும் பூதக் கண்ணாடி போன்ற மாஸ்க் என உலகச் சுட்டிகளை ஒட்டுமொத்தமாகச் சுண்டி இழுத்த மினியன்ஸ், மீண்டும் அட்டகாசம் பண்ண வந்துட்டாங்க.


2010-ம் ஆண்டு வெளியான ‘டெஸ்பிகபிள் மி’ (Despicable me) படத்தில் அறிமுகமானவங்கதான் இந்த மினியன்ஸ். படத்தின் ஹீரோ, க்ரூவுக்கு உதவியாக இருந்து, தங்களின் குறும்புகளால் எல்லோரையும் வயிறு குலுங்கச் சிரிக்கவெச்சாங்க. இரண்டாம் பாகமான, ‘டெஸ்பிகபிள் மி 2’ படத்திலும் அதகளம் செய்தாங்க. இந்த கேரக்டர்களுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்த்து, இவங்களை மட்டுமே மையமாவெச்சு எடுக்கப்பட்டிருக்கும் புதிய அனிமேஷன் 3D படம், ‘மினியன்ஸ்’ (Minions).  66 நாடுகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிச்சிருக்கு.

‘இந்த மினியன்ஸ் யார்? எங்கே இருந்து வந்தவங்க?’ என்ற கேள்விகளுக்கு, முந்தைய படங்களில் பதில் இருக்காது. இந்தப் படம், அதுக்கான பதிலில் இருந்து ஆரம்பிக்குது. ஒற்றைச் செல் உயிரினம் தோன்றிய காலத்தில், அதிலிருந்து பிரிந்து உருவானதுதான் மினியன்ஸ். ஒவ்வொரு காலகட்டத்திலும் வலிமையும் புத்திக்கூர்மையும் உள்ள ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து, உதவி செய்துட்டு இருக்கிறதுதான் இவங்களோட வாழ்க்கை.
உதவுறாங்க என்பதைவிட, தங்களின் குறும்புத்தனத்தால் அந்தத் தலைவர்களைப் படுத்துறாங்க எனச் சொல்றதுதான் சரியா இருக்கும். டி-ரெக்ஸ் என்கிற டைனோசர்களின் முன்னோடி, குகை மனிதன், ட்ராகுலா என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவங்ககிட்டே தலைவனா சிக்கிக்கிட்டுத் தவிக்கும் பட்டியல் ரொம்ப நீளம். ஆரம்பத்தில் வரும் அந்தக் காட்சிகள், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்குது. மாவீரன் நெப்போலியனையும் விட்டுவைக்கலை.


ஒருவழியாக அந்தத் தலைவர்களின் காலங்கள் முடிஞ்சுடுது. இப்போ, மினியன்ஸ் அன்டார்ட்டிகாவில் இருக்காங்க. அந்தக் கூட்டத்தில் புத்திசாலிகள் எனச் சொல்லிக்கிற ஸ்டூவர்ட், கெவின், பாப் என்ற மூன்று பேருக்கும் புதுத் தலைவனைத் தேடும் பொறுப்பு வருது.

அன்டார்ட்டிகாவில் இருந்து நியூயார்க் நகருக்கு வந்து, ஸ்கார்லெட் ஓவர்கில் (Scarlet Overkill) என்ற பெண்ணைச் சந்திக்கிறாங்க. சூப்பர் வில்லியான ஸ்கார்லெட், ‘லண்டனின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தைத் திருடி எடுத்துவந்தால், உங்களுக்கான தலைவனைக் காட்டுகிறேன்’ என்கிறார். அடுத்து என்ன நடக்குது? மினியன்கள், தங்கள் தலைவனைக் கண்டுபிடிச்சாங்களா என்பதை குறும்பு கொப்பளிக்கச் சொல்வதுதான் மீதிக் கதை.

கலக்கலான இந்த 3D அனிமேஷன் படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிச்சு இருக்கு. வில்லியான ஸ்கார்லட்டுக்குக் குரல் கொடுத்திருப்பவர், புகழ்பெற்ற ஹாலிவுட் நாயகி, சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). டெஸ்பிகபிள் மி 1 & 2 படங்களை இயக்கிய, பியர்ரி கோஃபின் (Pierre Coffin), கெலே பால்டா (Kyle Balda) சேர்ந்து இயக்கி இருக்கிறார்கள். பால்டா, ‘ஜுமான்ஜி’, ‘டாய் ஸ்டோரி 2’ ஆகிய படங்களில் பணியாற்றியவர்.

மினியன்ஸ் பாடும் ‘பா... பா... பா... பனானா’ என்ற பாட்டுதான் இப்போ உலகச் சுட்டிகளின் ரைம்ஸ்.
ஷாலினி நியூட்டன்

சுற்றுவது


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

பூமி கிழக்குப் பார்க்கத் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அப்படிச் சொன்னதிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது என்றே ஆகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். யோஜித்துப் பார்த்தால், (சிரித்து) அபிநயம் பண்ணிப் பார்த்துக் கொண்டீர்களானால் புரியும். ”The earth spins on its own axis from West to East” என்று சின்ன க்ளாஸில் படித்த விஷயம். அதனால்தான் இராப்-பகல் வித்யாஸம்; அந்த ராப்-பகல்களிலும் தேசத்திற்குத் தேசம் நேர வித்யாஸம் என்றெல்லாம் படித்திருக்கிறோம். இன்னும், இப்படி பூமி மேற்கு-கிழக்காகச் சுற்றுகிறதால்தான் அதிலே இருந்துகொண்டு வெளியே பார்க்கிற நமக்கு ஆகாசத்தில் ஸுர்ய- சந்த்ராதிகள் கிழக்கிலிருந்து மேற்காகப் போவதாகத் தோன்றுகிறது; வேகமாக ஓடுகிற ஒரு வண்டிக்குள்ளிருந்துகொண்டு பார்த்தால் வெளியில் உள்ளவை எதிர்த்திசையில் ஓடுகிற மாதிரித் தோன்றுவதைப் போலத்தான் இது என்றும் அந்தப் பாடத்தில் படித்திருக்கிறோம். (சிரித்து) அநேகமாக மறந்தும் போயிருக்கிறோம்!

இப்படி பூமி முதலானவை மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றிக் கொண்டிருப்பது அப்ரதக்ஷிணமாகத்தான்! அதாவது ப்ரதக்ஷிண க்ரமத்திற்கு நேர் எதிர்த் திசையில்தான். நாம் அந்த மாதிரிப் பண்ணவே கூடாது என்று சாஸ்திரங்களில் இருக்கிறது.

ப்ரதக்ஷிணத்தை clockwise என்றும் அப்ரதக்‌ஷிணத்தை anti-clockwise என்றும் சொல்கிறார்கள். கடிகார முள் எப்போதும் வலது பக்கமாகவே நகர்வது - அதாவது, வலம் வருவது - clockwise, இடது பக்கமாக நகர்வது அதற்கு anti. பூமி முதலான கோளங்கள் இப்படி இடது பக்கமாகத்தான் சுற்றிக்கொள்வது.

‘சுற்றிக்கொள்வது’, ‘சுற்றுவது’ இரண்டுமே இப்படி அப்ரதக்ஷிணமாகத்தான். நின்ற இடத்திலே அப்படியே சுழல்வதுதான் ‘சுற்றிக் கொள்வது’ - rotation. வெளியிலுள்ள வேறே ஒன்றைச் சுற்றுவதைத் தான் ‘சுற்றுவது’ என்றே சொல்வது - revolution என்று சொன்னது. ஸுர்யனை க்ரஹங்கள் சுற்றுவதும் அப்ரத க்ஷிணந்தான், ‘ஆன்டி-க்ளாக் வைஸ்!’.

Tuesday, August 11, 2015

மாயம் செய்யும் எண்கள்!

உங்கள் நண்பரை மூன்று இலக்கம் உள்ள தொகை ஒன்றை எழுதிக் கொள்ளச் சொல்லுங்கள். அதை நீங்கள் பார்க்க வேண்டாம். ஒரே எண் இரண்டு முறை வராமல் இருக்க வேண்டும். (உதாரணம் 591). அந்த எண்ணை அப்படியே திருப்பி எழுத வேண்டும். (195). இரண்டு எண்ணில் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழிக்கச் சொல்லுங்கள். (591-195 = 396). இதையும் திருப்பி எழுத வேண்டும். (693) இந்த இரண்டு எண்களிலும் பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணை மறுபடியும் கழிக்கச் சொல்லுங்கள். 693 - 396 = 297. இதையும் திருப்பி எழுத வேண்டும். (792) இப்போது இந்த இரண்டு தொகைகளையும் கூட்டச் சொல்லுங்கள்.

“விடை 1089 தானே” என்று கேளுங்கள். நண்பர் அசந்து விடுவார். (792+297=1089). இந்த 1089 என்பதுதான் மேஜிக் நம்பர்!

1089 என்பதை முன்கூட்டியே தனியே எழுதிக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் எந்த மூன்றிலக்க எண்ணை வேண்டுமானாலும் நினைத்து மேற்சொன்னவாறு சரியாகச் செய்தால் இறுதி விடை 1089தான்!

ஓணாண்டிக் கவிராயர்

அன்பு என்பது என்ன?

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

அன்பு என்பது என்ன? ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையொன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்யப்பட வைக்கவும் பரமாத்மா அநுக்ரஹித்திருக்கிற force தான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடைவதாகவே மநுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு. ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்யாஸம்: நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால் ‘நமக்கு’ அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக் கொள்கிறோம்; அன்பாயிருக்கும்போது நம்மால் அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம். ஆசை என்பது வாங்கல்; அன்பு - கொடுக்கல். ‘நமக்கு’ ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம் ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து- திரவிய ஸம்பத்து கூடத்தான் - இவை அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம் அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை இருந்தால்தான் ஏற்படும். இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற பற்றுதான் ஆசை. தப்பாக அதை அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில் உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும் புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்டு, அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி அங்கேயிருந்து வேலை செய்யும். அம்பாள் அன்புமயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக் குங்கூட ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு அநுக்ர ஹித்திருக்கிறாள். ஸாதனையால் மனஸும் புத்தியும் பண்பட்டவர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்கூடிய நிலை வாய்க்கிறது. அந்தஃகரணத்தின் பெர்மனென்ட் ஸ்தானமாகவே அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.

குரு ப்ரஸாதம்


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

குரு ப்ரஸாதம் முமுக்ஷபூதைக்கு மட்டுமில்லை; ஸாதனா க்ரமத்தில் அகாராதி க்ஷகாராந்தம் (அடி ஆரம்பத்திலிருந்து முற்றிய முடிவுரை) ஒவ்வொன்றும் குருப்ரஸாதத்தாலேயேதான் பூர்ணமாக வேண்டும். சிஷ்யன் அந்தரங்க சுத்தமாக முயற்சி பண்ணுவதன் மேல் குரு கருணைகொண்டு அநுக்ரஹம் பண்ணிப் பண்ணித்தான் ஒவ்வொரு படியிலும் அவன் ஜயித்து மேல் படிக்குப் போவது.

அடுத்தாற்போல் ஸாதனையின் மூன்றாம் ஸ்டேஜில் குருவிடம் சரணாகதியும், குருவின் பரிபூர்ணாநுக்ரஹமும் ரொம்பவும் முக்யம். இதுவரை கொஞ்சம் முன்னே பின்னே இந்த்ரிய வியாபாரம் முதலானதுகளில் ஒருவன் தப்புப் பண்ணியிருந்தால்கூட அது பெரிய தோஷமில்லை. ஆனால் ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக்கொண்டு, அநுபவத்திற்கெல்லாம் எவரெஸ்டான ப்ரம்மாநுபவத்தைக் கொடுக்கக் கூடிய மஹாவாக்ய மந்த்ரோபதேசம் வாங்கிக் கொள்ளும் ஸ்டேஜில் - அதற்கப்புறமுந்தான் - மனஸ் கொஞ்சம் தப்பாகப் போனால்கூட அது மஹாதோஷமாக, பாபமாகவே ஆகிவிடும். அந்த இடத்தில் ‘தானே ஸரிப் பண்ணிக்கலாம்’என்று ஒருத்தன் நம்பிக்கொண்டிருந்தால் முடியாது. தன்னம்பிக்கை அவசியந்தான். ஆனாலும் அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தற்காப்புப் பண்ணிக் கொள்ளப் பார்த்தால் போதாது. துளிக்கூடப் பாபம் ஸம்பவிக்காமல், ஸாதனா மார்க்கத்திலேயே ரயில் சக்கரம் அந்தண்டை இந்தண்டை இஞ்ச்கூடப் போகாமல் தண்டவாளத்தின் மேலேயே போகிறாற்போல இவன் போக வேண்டிய கட்டத்தில் தன்பலத்தோடுகூட அதை விடவும் ஜாஸ்தியாக, அநுக்ரஹ பலம் ரொம்பவும் அவசியம். அதனால் தான் இங்கே குறிப்பாக குரு ப்ரஸாதத்தைச் சொல்லியிருப்பது. முமு க்ஷபூத்வத்தில் நல்ல பற்று வந்தவுடன் ஸந்நியாஸமும் மஹாவாக்ய ஸ்வீகரணமும் ஆனதால், இனிமேல் நடக்க வேண்டியதற்கெல்லாம் சேர்த்து இங்கே குரு ப்ரஸாதத்தை ஞாபகப்படுத்தியிருக்கிறது.

Sunday, August 09, 2015

கேட்ஜெட்ஸ்

மோட்டோ ஜி3: (Moto G3)


டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 GB / 2GB.
பேட்டரி – 2470 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB/ 16GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 4G, சிம் 2 – 4G.

பிளஸ்:
தண்ணீரால் பாதிக்கப்படாது (Water Resistant)
இயங்குதளம்.

மைனஸ்:
டிஸ்ப்ளே.
ஆன்லைனில் சுமாரான விலை: 8GB மாடல் ரூ.11,999; 16GB மாடல் ரூ.12,999. )

விலை: ரூ.12,999

ஹையர் கோடோ: (Haier Codo Pocket-Sized Washing Machine)

இது ஒரு பாக்கெட் வாஷிங் கருவி.

துணியில் ஏற்படும் கறைகளை உடனடியாக அகற்ற இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்.

3AAA பேட்டரி கொண்டு இயங்கும் இந்த கேட்ஜெட்டின் எடை வெறும் 200 கிராம்தான்.

கறை மீது சிறிதளவு நீரை வாடிக்கையாளர்கள் தெளித்து இந்தக் கருவியை அதற்குமேல் பயன்படுத்த வேண்டும்.

இந்தக் கருவி சிறிது நீர் அல்லது சோப்பு பவுடர் நீரை கொண்டு செயல்பட்டு கறையை அகற்றிவிடும்.

விலை: ரூ.3,999 (ஸ்நாப்டீல் வலைதளத்தில்)

தொடக்க விலை : ரூ.3,999

வியு 60S8575 எல்இடி டிவி Vu 60S8575 LED TV
குறைந்த விலை சிறந்த தொழில்நுட்பம் – இதுதான் வியு நிறுவனத்தின் மார்க்கெட் யுக்தி.

இது ஒரு 60 இன்ச் full-HD 1920x1080 பிக்ஸல் LED டிவி.

இதில் நான்கு HDMI போர்டுகள், மூன்று USB போர்டுகள், ஒரு காம்போனன்ட் ஒரு காம்போசிட் AV, ஒரு RF, ஒரு VGA போர்டு ஆகிய போர்டுகளைக் கொண்டுள்ளது.

WiFi மற்றும் Ethernet வசதிகளைக் கொண்டுள்ள இந்த டிவி ஆண்ட்ராய்டு ஜெல்லி-பீன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

மேலும், க்ரோம் ப்ரௌஸரும் இதில் அடங்கும்.

பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கும் இந்த டிவி பிரத்யேகமான TViST ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

பிளஸ்:
ஸ்பீக்கர்.
ரிமோட்
பெரிய ஸ்கிரீன்.
மைனஸ்:
இயங்குதளம்.

டிஸ்ப்ளேவின் சில செயல்பாடுகள்.

தோராயமான விலை: ரூ.92,000.


ஒன் பிளஸ் டு: (One Plus Two)

டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1080x1920 பிக்ஸல்.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.8GHz Octo-Core.
ரேம் – 4GB.
பேட்டரி – 3300 mAh.
இயங்குதளம் – ஆக்ஸிஜென் ஓ.எஸ் 2.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64GB.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 4G, சிம் 2 – 4G.

பிளஸ்:

தொழில்நுட்பம்.
செயல்பாடு.
டிஸ்ப்ளே.

மைனஸ்:
டிசைன்.

விலை: ரூ.24,999

Monday, August 03, 2015

முதுகெலும்பைக் காக்க 10 வழிகள்


மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதையாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு மையத்தில் மிகப் பாதுகாப்பாக இந்தப் பாதை உள்ளது. இதில், இருந்து வரும் நரம்புகள், உடல் முழுவதும் பரவியுள்ளன. லட்சக்கணக்கானோர், இந்த முதுகெலும்புத் தொடரில் வரும் வலியால் அன்றாடம் அவதியுறுகின்றனர். முதுகு வலியிலிருந்து விடுபட்டு, உடலை ஆரோக்கியமாகவைத்துக்கொள்வதற்கான 10 வழிகள் இதோ...

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமரும்போது, முதுகுத் தண்டுவடத்தில் 40 சதவிகித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே அவ்வப்போது எழுந்து நடந்து முதுகெலும்புக்கு ஓய்வுகொடுக்க வேண்டும். நாற்காலியில் அமரும்போது முதுகின் அனைத்துப்பகுதிகளும், குறிப்பாக கீழ் முதுகு நாற்காலியில் படும்படி அமர வேண்டும்

தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யலாம்.

முதுகெலும்புத் தசையைத் தளர்வாக்கி, உறுதிப்படுத்தும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், முதுகெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு முதுகு வலி ஏற்பட, ஹை ஹீல்ஸ் ஒரு முக்கியக் காரணம். ஹை ஹீல்ஸ் அணியும்போது, அது முன்னங்காலில் அழுத்தத்தை ஏற்படுத்தி முதுகெலும்பைப் பாதிக்கிறது.

அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கும்போது கவனம் தேவை. நின்றபடியே முதுகை வளைத்துத் தூக்கினால், முதுகெலும்பு பாதிக்கப்படும். எடையுள்ள பொருட்களைத் தூக்கும் முன், அதன் அருகில் சென்று, முட்டியைக் கொஞ்சம் மடக்கி, முதுகை நேராகவைத்து, தூக்க வேண்டும்.

அதிக எடைகொண்ட பொருளை, பையை ஒரு கையில் மட்டும் அல்லது ஒரு பக்க தோளில் மாட்டித் தூக்கிச் செல்வதும் தவறு. 10 கிலோ எடை கொண்டதாக இருந்தால், ஐந்து, ஐந்து கிலோவாகப் பிரித்து இரண்டு கைகளில் தூக்கிச் செல்ல வேண்டும்.

மிகவும் கடினமான அல்லது மிகவும் மென்மையான மெத்தைக்குப் பதில், நடுத்தரமான அளவு மென்மையான மெத்தையில் படுக்க வேண்டும்.

உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, எப்போதும் துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது, முதுகு வலி வருவதைத் தவிர்க்கும். அதிக உடல் எடை, தொப்பை இருந்தால், அதிக அழுத்தத்தால் கீழ் முதுகு வலி வரக்கூடும்.

போதுமான அளவு நீர் அருந்துவது முதுகெலும்பைப் பாதுகாக்கும். முதுகெலும்புத் தொடரில் உள்ள டிஸ்க் மற்றும் மென்மையான திசுக்களுக்கு நீர்ச்சத்து அவசியம். உடலில் நீர்ச்சத்து குறையும்போது டிஸ்க்குகளின் அளவு சுருங்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.

வலியைப் புறக்கணிக்கக் கூடாது. எப்போதாவது ஒரு முறை முதுகு வலி வந்தால், பிரச்னை இல்லை. நான்கைந்து நாட்களுக்கு நீடித்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். வலியைப் பொறுத்துக்கொண்டு இருந்தால், முதுகு வலி மேலும் அதிகரிக்கும்.
- பா.பிரவீன் குமார்

கேட்ஜெட்ஸ்

லாவா ஃப்ளையர் Z1: (Lava Flair Z1)

டிஸ்ப்ளே – 5 இன்ச் 480x854 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.3 GHz Quad-Core.
ரேம் – 1 GB.
பேட்டரி – 2000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB வரை.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 3G, சிம் 2 – 2G.
பிளஸ்:
விலை.
இயங்குதளம்.
மைனஸ்:
பேட்டரி.
(Snapdeal இணையதளத்தில் மட்டும் கிடைக்கும்)
விலை: ரூ.5,699

சோனி பிராவியா ஆண்ட்ராய்டு டிவி (Sony Bravia Android TV Range)

சோனி நிறுவனம் ஐந்து புதிய டிவி மாடல்களைச் சமீபத்தில் வெளியிட்டது.
43 இன்ச் முதல் 75 இன்ச் வரை டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த டிவி மாடல்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தைக் கொண்டு இயங்குகின்றன.

டிவியில் இருந்தே கூகுள் ப்ளே ஸ்டோரை பயன்படுத்தித் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

மேலும், ‘Voice Command’ சேவைகள், வாடிக்கையாளர்களின் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் ஆகியவற்றைத் தெரிவிக்க ‘Notify Bravia’ என்ற பிரத்யேகமான அப்ளிகேஷனும் இந்த டிவியில் அடங்கும்.

தொடக்க விலை : ரூ.69,900.


சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 9.7(Samsung Galaxy Tab A 9.7)

டிஸ்ப்ளே – 9 இன்ச் 768x1024 பிக்ஸல்.
பின்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.2GHz Quad-core.
ரேம் – 2 GB.
பேட்டரி – 6000 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்.
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
சிம் வசதி கிடையாது.
பிளஸ்:
ரேம்.
ஸ்டோரேஜ் வசதிகள்.
மைனஸ்:
சிம் வசதி இல்லை.
தோராயமான விலை: ரூ.23,750


ஏசஸ் PB279Q:(Asus PB279Q)
இது ஒரு 4K டிஸ்ப்ளே  மானிடர்.

27 இன்ச் கொண்ட இந்த மானிடர் 178 டிகிரி ‘viewing angle’யைக் கொண்டுள்ளது.
30fps 4K வீடியோக்கள் வரை இந்த மானிட்டரில் சிறப்பாகச் செயல்படும்.
1080P கேம்ஸ் விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த தயாரிப்பு.

விலை: ரூ.66,340.