Search This Blog

Thursday, December 31, 2015

வெள்ளரியின் பலன்கள் 5


கருவளையம்: கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்‌ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தைப் போக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

கண் வீக்கம்: கண் வீங்கிப்போய் இருந்தால், வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள்வைத்தால், அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

சருமப் பொலிவு: வெள்ளரியை முகத்தில் தடவினால், முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன், சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.


புற ஊதா கதிர்வீச்சு: சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு, சருமத்தைப் பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும், சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

முடி வளர்ச்சி: வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து, தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து, சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்.


ஆரோக்கியம் காக்க வழிகள் 10

கம்ப்யூட்டருக்கும் நம்முடைய கண்களுக்குமான இடைவெளி, கோணம் என அனைத்தும் சரியாக உள்ளதா, நாற்காலி கீழ் முதுகைத் தாங்கும் வகையில் உள்ளதா என்பன போன்ற எர்கனாமிக்ஸைக் கவனிக்க வேண்டும்.
 கைகளை அவ்வப்போது சுத்தமாகக் கழுவ வேண்டும். முடிந்தால் ஆன்டிசெப்டிக் லிக்யூட்டை பயன்படுத்தலாம்.

எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல், அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.

அதிக அளவில் காபி, டீ அருந்துவதும் தவறு. இரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

சரியான நேரத்துக்கு மதிய உணவை உட்கொள்ள வேண்டும்.

வேலை செய்யும் இடத்திலேயே (டெஸ்க்கில்) அமர்ந்து மதிய உணவை உண்ணக் கூடாது.

நடப்பதற்காக ரிமைண்டர் செட் செய்துகொள்ளலாம். காபி, டீ சாப்பிட என நடப்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

மேசை மீது தண்ணீர் பாட்டிலை வைத்து, அவ்வப்போது நீர் அருந்த வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து, உலோகத்தால் ஆன பாட்டிலைப் பயன்படுத்தலாம்.

வடை, சமோசா போன்ற நொறுக்குத்தீனிகளைத் தவிர்த்து, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை என ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எல் நினோ

இந்த ஆண்டின் இறுதி, மறக்க முடியாத சோகத்தை அளித்திருக்கிறது. சென்னை மற்றும் கடலூர் பகுதியில், பல லட்சம் மக்களைத் தெருவில் வரவைத்தது பேய் மழை. ‘எல் நினோ’ எனும் உலக வானியல் நிகழ்வே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த ‘எல் நினோ’-வின் காரணத்தால், வெள்ளத்தில் சென்னை மூழ்கிவிடும் என்ற பெரும் பீதி கிளம்பியது. 


‘எல் நினோ’ என்றால், ஸ்பானிஷ் மொழியில்  ‘குட்டிப் பையன்’ என்று பொருள். ‘குழந்தை ஏசு’ என்றும் பொருள்படும். தென் அமெரிக்க பசிபிக் கடலில், பெரு நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், கிறிஸ்துமஸ் நெருங்கும் சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் வெப்பமாக இருப்பதை மீனவர்கள் கண்டனர். இந்த நிகழ்வுக்கு ‘எல் நினோ’ என்று பெயர் வைத்தனர். டிசம்பரில் ஏற்படும் எல் நினோ, அடுத்த ஒன்பது மாதங்கள் நீடித்து, உலக வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

எல் நினோவுக்கும் பசிபிக் கடலின் வானிலைக் காற்றழுத்த மாற்றங்களுக்கும் தொடர்பு உள்ளது. பசிபிக் கடலின் மேற்கில், குறைவான காற்றழுத்தம் இருந்தால், எடை இல்லாத தராசுத் தட்டு மேலே செல்வது போல பசிபிக் கடலின் கிழக்கில், காற்றழுத்தம் கூடுதல் அடையும். அதேபோல, மேற்குப் பகுதியில் காற்றழுத்தம் குறைந்தால், கிழக்குப் பகுதியில் அதிகரிக்கும். ஊஞ்சல் போல அலையும் இந்த வானிலை மாற்றத்தை, தென் பகுதி அலைவு (Southern Oscillation) எனப்படும். எனவே, எல் நினோவையும் தென் பகுதி அலைவையும் சேர்த்து, ‘என்ஸோ’         (ENSO-El Nino Southern Oscillation) என்று வானிலையாளர்கள் அழைக்கின்றனர்.


எல் நினோ நிகழ்வின்போது, கிழக்கு பசிபிக் கடல் நீரோட்டத்தின் வெப்பம் அதிகரிக்க, கடல் நீர் ஆவியாவதும் அதிகரிக்கிறது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. எனவே, எல் நினோ ஏற்படும்போது, கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் மழைப் பொழிவு கூடுதல் அடைகிறது. அதிக மழைப் பொழிவால், கிழக்கு பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில், வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கக் கண்டத்தில், அதிக வெள்ளம் ஏற்படும். கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்படுவது முதல், ஆஸ்திரேலியாவில் புயல் மழை வரை இதன் விளைவுகள் அமையும்.

சரி, இந்த நிகழ்வு இந்தியாவை எப்படிப் பாதிக்கும்? எல் நினோ- என்ஸோ அலைவுக்கும், இந்திய வானிலைக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு. எல் நினோ ஆண்டுகளில், மேற்கில் இருந்து கடல் நீர் வெப்பம் அடையத் துவங்கி, மத்திய பசிபிக் வரை வெப்பம் அடையும். பசிபிக் கடலில் குவியும் வெப்ப நீர்த்திரளின் காரணமாக, புவியின் பல பகுதிகளிலும் வானிலை வெகுவாகத் தாக்கம் பெறும். இந்தோனேஷியப் பகுதியில் அதிகரிக்கும் கடல் வெப்பம் காரணமாக, இந்திய நிலப்பரப்பின் மேலே இருந்து பசிபிக் கடல் நோக்கிக் காற்று பாயும். இதன் காரணமாக, தென் மேற்குப் பருவக் காற்று வலிமை குன்றி, இந்தியாவில் மழைப் பொழிவு குறையும்.


132 ஆண்டுகால இந்திய வானிலை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவில் வறட்சி ஏற்பட்ட ஆண்டுகள் எல்லாம் ‘எல் நினோ’ நிகழ்வு ஆண்டுகளே.  ஆயினும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எல் நினோ வில்லன் எனச் சொல்ல  முடியாது. தென்மேற்குப் பருவ மழையை, எல் நினோ கடுமையாகப் பாதித்தாலும், அதன்பின் ஏற்படும் வடகிழக்குப் பருவ மழை கிடைக்கும். எல் நினோவின் தங்கையாகிய ‘லா நினோ’ என்பது, ‘குட்டிப் பெண்’ என்று பொருள்படும். லா நினோ விளைவு, இந்திய தென் மேற்குப் பருவ மழைக்கு உதவும்.

- த.வி.வெங்கடேஸ்வரன்


2015 முக்கிய நிகழ்வுகள்!

திட்டக் குழுவை மாற்றி அமைத்தார்  மோடி! 
மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு அதிரடி மாற்றங்களை   இந்த ஆண்டின் முதல் நாளன்றே, அதாவது ஜனவரி 1-ம் தேதி அன்றே செய்யத் தொடங்கியது. அதில் முக்கியமானது, இந்தத் திட்டக் குழு மாற்றம். இந்தத் திட்ட குழுவின் பெயரை ‘நிதி ஆயோக்’ என்று மாற்றினார்.

பத்து பேர் கொண்ட இந்த ‘நிதி ஆயோக்’ குழுவின் துணைத் தலைவராக, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். 65 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த  இந்தத் திட்டக்  குழுவின் பெயரை மாற்றியது இந்த ஆண்டின் அதிரடி அரசியல் மாற்றங்களில் ஒன்றாகும்! 

பங்குச் சந்தையின் கருப்பு திங்கள்!

2015 ஆகஸ்ட் 24-ம் தேதி திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை பெரிய சரிவை சந்தித்தது.  அன்று சந்தை முடிவில்  சென்செக்ஸ் 1,624.51 புள்ளிகளும், நிஃப்டி 490.95 புள்ளிகளும் சரிந்தன. இதுதான் இந்தியப் பங்குச் சந்தையின் வரலாற்றில் மிகப் பெரிய சரிவாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் 2008-ல் உலகச் சந்தையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால், ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தை 1408 புள்ளிகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல்!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் நடவடிக்கைகளை செயல்படுத்த ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கினார் இந்தியப் பிரதமர் மோடி. இதன் மூலம் பல நிறுவனங்களில் இருந்து ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்றும், சுமார் 18 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது. டிசிஎஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் துறையில் 60,000 பேருக்கு வேலை வழங்கும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி சொல்லி இருக்கிறார்.

ஏஜென்ட்டுகள் தவறு செய்தால் ரூ. 1 கோடி!

காப்பீட்டு நிறுவன முகவர்கள் தவறு செய்தால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என காப்பீட்டு கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ. புதிய விதிமுறையைப் பிறப்பித்துள்ளது. அதேபோல, முகவர்கள் விதிமுறையை மீறி செயல்பட்டால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஒரு முகவர் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம், ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்காக மட்டும் பணியாற்ற முடியும் என்றும் சொல்லி இருக்கிறது ஐ.ஆர்.டி.ஏ.!

பழைய கார்களுக்குத் தடை!

வாகனங்களால் காற்று பெருமளவில் மாசுபடுவதால், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஹரியானா போன்ற மாநிலங்களில் 10 வருடங்களுக்கு மேல் இயங்கும் டீசல் வாகனங்களையும், 15 வருடங்களுக்கு மேல் இயங்கும் பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்த தடை விதித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாணையம். மீறி பயன்படுத்துவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதிய கார்களின் விற்பனை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சனிக்கிழமை தாக்கலான மத்திய பட்ஜெட்! 

மத்திய அரசின் பட்ஜெட் பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று தாக்கல் செய்யப்படும். இதுவரை இது வாரநாளாகவே இருந்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டம், 15 ஆண்டுகளுக்குப்பின்  சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது.  கடந்த    1999-ம் வருடம் யஷ்வந்த் சின்ஹா நிதி  அமைச்சராக இருந்த போது சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

 வட்டியை உயர்த்திய ஃபெடரல் வங்கி!

2006-ம் ஆண்டில் இருந்து மாற்றம் செய்யப் படாமல் இருந்த வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25%்) அதிக ரித்து ஃபெடரல் வங்கி உத்தரவிட்டுள்ளது. அமெ ரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி னால், இந்தியச் சந்தையி லிருந்து வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் வெளியேறும் என்றும், சந்தை சரியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்தில் இந்தியச் சந்தைகள் ஏற்றத்திலேயே வர்த்தகமாகின.

 மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இருந்து வெளியேறியது ரெலிகேர்!

 ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் ரெலிகேர் நிறுவனம் 51 சதவிகித பங்குகளையும் இன்வெஸ்கோ நிறுவனம் 49 சதவிகித பங்குகளையும் வைத்திருந்தது. ரெலிகேர் தனது 51 சதவிகித பங்கையும் இன்வெஸ்கோ நிறுவனத்திடமே விற்றுவிட்டு, மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸிலிருந்து   வெளியேறியது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறை சீராக வளர்ச்சி அடைந்த  நிலையிலும், ரெலிகேர் நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையின் புதிய உச்சம்!

2008 சரிவின்போது சுமாராக 8500 புள்ளிகளுக்கு வர்த்தகமாகி வந்த சென்செக்ஸ், 2015 மார்ச் மாதம்  30,024 என்கிற புதிய உச்சத்தை தொட்டது.

போலாரீஸ் நிறுவனத்தை கைப்பற்றிய வெர்சூசா!

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட போலாரீஸ் கன்சல்டிங் அண்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம், கோர் பேங்கிங் கன்சல்டிங், கார்ப்பரேட் பேங்கிங், வெல்த் அண்ட் அஸெட் மேனெஜ்மென்ட், இன்ஷூரன்ஸ் உட்பட பல சேவைகளை வழங்கி வருகிறது.  இந்த போலாரீஸ் நிறுவனத்தை அமெரிக்காவைச் சார்ந்த வெர்சூசா  நிறுவனம் ரூ.1,173 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. 

கார்பன் சிக்கலில் மதர்சன் சுமி!

வோக்ஸ் வோகன் கார் நிறுவனத்தின் கார்பன் வெளியீடு ஊழலைத் தொடர்ந்து அதன் முக்கிய சப்ளையரான மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் நிறுவனத் தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது. 05 ஆகஸ்ட் 2015-ல் 395 ரூபாய்க்கு வர்த்தகமான இந்தப் பங்கு இந்த செய்தி வெளியானபின் 01 அக்டோபர் 2015 அன்று 217 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது.

69% இறங்கிய ஆம்டெக் ஆட்டோ!

ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியா ளரான இந்த நிறுவனம் கூடுதல் கடன் சுமை, மூலப்பொருட்களின் விலை அதிகரித்தது, நிகர விற்பனை குறைந் தது, இதை எல்லாம் விட இன்வென்ட்ரி லாஸ் 252 கோடி ரூபாயாக அதிக ரித்தது, நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் குறைந்தது போன்ற செய்திகளால் இந்தப் பங்கின் விலை 69% சரிந்தது.

ஐந்து நிமிடங்களில் விற்ற 60,000 மேகி பாக்கெட்டுகள்! 

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான காரீயம் உள்ளது என்று அதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. பிற்பாடு அந்த  தடை விலக்கப்பட்டது. இந்த நிலையில் நெஸ்லே ஸ்னாப்டீலுடன் இணைந்து ஆன்லைனில் மேகி விற்பனையைத் தொடங்கிய ஐந்தே நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

ஜாக்பாட் அடித்த ஐபிஓகள்! 

2015-ல் ஐ.பி.ஓ.கள் மூலம் சுமார் ரூ.11,000 கோடி  திரட்டப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.3,025 கோடியை திரட்டியது. காபிடே ரூ.1,150 கோடியும் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ரூ.1,037 கோடியும் திரட்டின.

ரூ.765 ரூபாய்க்கு பட்டியலான இண்டிகோ பங்கு விலை தற்போது ரூ.1150-க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. எஸ்.ஹெச்.கேல்கர் பங்கின் விலை ரூ.180-க்கு பட்டியலானது, தற்போது ரூ.240-க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆனால், காபிடே பங்கு விலை ரூ.328-க்கு பட்டியலானது. ஆனால், இப்போது ரூ.275-க்கு வர்த்தகமாகி வருகிறது.

டீமேட் கணக்குகள் அதிகரிப்பு!

2015 ஜுன் 30 வரை  முடிந்த ஓராண்டில்  ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.4 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக என்எஸ்டிஎல் தெரிவித் துள்ளது. ஜூன் 30  வரை மொத்தம் 2.37 கோடி டீமேட் (இது அதற்கு முந்தைய ஆண் டில் 2.2 கோடியாக இருந்தது) கணக்குகள் உள்ளன. இந்த டீமேட் கணக்குகளில் உள்ள  மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.131.26 லட்சம் கோடி ஆகும்.  இது முந்தைய ஆண்டைவிட 29% அதிகம். திருப்பதி வெங்கடாசலபதியின் பெயரில் டீமேட்  கணக்கு தொடங்கப்பட்டுள்ளது!

வராமலே போன ஜி.எஸ்.டி.!

இந்த ஆண்டிலாவது நிச்சயம் நிறைவேறும் என்கிற மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தது பொருள் மற்றும் சேவை வரி மசோதா.  ஆனால், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் நிறைவேறாமல்  தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் கடைசியாக நடந்துமுடிந்த  நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது பாரதிய ஜனதா அரசாங்கம். இதற்காக பிரதமர் மோடி நேரடியாக களத்தில் இறங்கி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை கடைசி வரை தரவே இல்லை. 2016-லாவது இந்த மசோதா நிறைவேறுமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது!

கைமாறிய ஸ்பைஸ் ஜெட்!

2010 முதலே தொடர்ந்து விலை இறங்கிவந்த ஸபைஸ்ஜெட் நிறுவனத்தின்  பங்கு விலை 2014-ம்  ஆண்டு ஆகஸ்ட் 14-ல் 11 ரூபாய்க்கு வர்த்தகமானது. பல்வேறு பிரச்னைகளால் இந்த நிறுவனம் நஷ்டத்தையே கண்டுவந்த நிலையில், இந்த நிறுவனத்தை தொடங்கிய அஜய் சிங்கே மீண்டும் அதை வாங்கினார்.

அதிகரித்த விமான பயணிகளின் எண்ணிக்கை, விமான எரிபொருளின் விலை குறைவு போன்ற சாதகமான அம்சங்களால் இந்தப் பங்கின் விலை அதிகரித்து, தற்போது சுமாராக ரூ.69-க்கு வர்த்தகமாகி வருகிறது.

4ஜி சேலஞ்ச்: வரிந்துகட்டும் நெட்வொர்க் நிறுவனங்கள்!

இந்திய செல்போன் தொழில்நுட்பத்தில் அடுத்த மைல்கல் இந்த 4ஜிதான். இந்தியாவில் 4ஜி சேவை தர முதலில் இறங்கியது ஏர்டெல். இதனை அடுத்து ஏர்செல், ரிலையன்ஸ், ஐடியா மற்றும் வோடாபோன் என அனைத்து மொபைல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் 4ஜி-யை அறிமுகப்படுத்த உள்ளன. 4ஜி சேவை  நம் மக்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது 2016-ல் தான் தெரியும்.

தங்கம் இறக்குமதி  அதிகரிப்பு !

தங்கம் இறக்குமதி செய்யப்படுவதைக் குறைக்க மத்திய அரசு எத்தனையோ நடவடிக் கைகளை எடுத்துப் பார்த்தது. ஆனால், நடப்பாண்டில் (2015) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத் தின் அளவு 1,000 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2014-ம் ஆண்டைக் காட்டிலும் 11%  அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.சா.கெளதமன், ஜெ.சரவணன்.

2015 பெஸ்ட் கேட்ஜெட்ஸ்!

மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ் (Microsoft HoloLens) 

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முற்றிலும் ‘அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்’ கேட்ஜெட்டாக வலம் வருகிறது மைக்ரோசாஃப்ட் ஹாலோ லென்ஸ். இதை மூக்குக் கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் கண் எதிரே காண்பது, நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக, நீங்கள் உங்கள் லேப்டாப்பில் ஒரு பைக்கினை டிசைன் செய்கிறீர்கள் எனில், இந்த லென்ஸை அணிந்துகொண்டு பார்த்தால், அந்த பைக்கின் முன்மாதிரி உங்கள் கண்முன் தெரியும். இந்த பிம்பங்களை உங்கள் கைகள் அல்லது குரலை பயன்படுத்தி, உங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். விலை: ரூ.80,000 - ரூ.99,999.

பிரின்ட் கேஸ் (Print Case) 


இதன் மூலம் உங்கள் மொபைலை இன்ஸ்டன்ட் கேமராவாக மாற்றிக்கொள்ளலாம். இது வெறும் மொபைல் கேஸ்தான். இதனை உங்கள் மொபைலுக்கு அணிவித்தால் போதும். உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இதற்கென்றே பிரத்யேக ‘ப்ரின்ட் ஆப்’-ல் நீங்கள் பதிவேற்றம் செய்து இந்த கேஸினுள் வைக்கப்பட்ட போட்டோ ஷீட்டில் உங்களுக்கான போட்டோவை பிரின்ட் செய்து, இந்த கேஸின் மறுமுனையில் அந்த பிரின்டட் போட்டோவை பெற்றுக் கொள்ளலாம். கேமராக்களோடு இருந்த பிரின்ட் ஆப்ஷன் தற்போது மொபைலுக்கு தாவியுள்ளது. விலை ரூ.6,500 - ரூ7,000.

லைவ்ஸ்க்ரைப் 3 ஸ்மார்ட்பென் (Livescribe 3 Smartpen)


ஸ்மார்ட் ஆக்ஸசரீஸ் வரிசையில் இப்போது பேனாவும் வந்துவிட்டது. லைவ்ஸ்க்ரைப் நோட்புக்கில் நீங்கள் எழுதுவதை இதன் இன்ப்ரா ரெட் கேமரா பதிவு செய்யத் தொடங்கும். அந்தக் கணத்திலேயே உங்களைச் சுற்றி கேட்கும் ஒலியை அந்த நோட்ஸுடன் ஸிங்க் செய்து இதன் பிளாஷ் மெமரியில் பதிவு செய்துகொள்ளும் இந்த ஸ்மார்ட் பென். கையில் பேனா பிடித்திருக்கும் உணர்வையே மறக்கச் செய்யும் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்பென்னில் 400 முதல் 800 மணி நேரங்கள் வரையிலான ஆடியோக்களை பதிவு செய்துகொள்ளலாம். இதன் பேட்டரி 14 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. விலை ரூ.86,000 – 1,00,000

அமேசான் எகோ (Amazon Echo)

இந்த வருடம் முழுவதும் கூகுள் முதல் ஃபேஸ்புக் வரை அனைத்து நிறுவனங்களும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பில் மும்முரமாக இருக்க அமேசான் தன் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக பரிசளித்தது இந்த அமேசான் எகோ. வாய்ஸ் கண்ட்ரோல்டு ஸ்பீக்கர் என்பதைத் தாண்டி நிற்கும் இதன் ஸ்பெஸிஃபிகேஷன்கள் சந்தைக்கு புதிது. ‘அமேசான்’ அல்லது ‘அலெக்ஸா’ என்ற கட்டளைச் சொல்லின் மூலம் இயக்கப்படும் இதனிடம் நீங்கள் டைம், வெதர் ரிபோர்ட் கேட்கலாம்; டைமர் செட் செய்யலாம், மளிகை லிஸ்ட் தயார் செய்ய சொல்லலாம்.இன்று நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை கேட்கலாம். கடந்த மேட்சில் சென்னையின் எஃப்சி அணியின் ஸ்கோர் பற்றி விவாதிக்கலாம் இன்னும் எவ்வளவோ என நீண்டு கொண்டே போகிறது இந்த பட்டியல். விலை ரூ.12,500 முதல்...

ஃபிட் பிட் சார்ஜ் ஹெச் ஆர் (Fit Bit Charge HR) 


2015-ம் ஆண்டின் சிறந்த ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது இது. ஃபிட்னஸ் ட்ராக்கர்கள் என்பன நம் இதயத்துடிப்பு, நாம் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு, நாம் நடக்கும் தூரம் போன்ற உடலின் சில முக்கிய ஹெல்த் ஃபாக்டர்களை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வாட்ச் போன்ற கருவியாகும். மற்ற எல்லா ஃபிட்னஸ் ட்ராக்கர்களும் தினந்தோறும் நாம் நடக்கும் தூரத்தை கணக்கிடுவதில் ஏதேனும் ஒரு பிழை இழைத்தாலும் இது தனக்கான வேலையை மிகத் துல்லியமாக செய்து முடிக்கிறது. தானாகவே செயல்படத் துவங்கும் ஸ்லீப் ட்ராக்கர், வைரேஷன் வசதி கொண்ட அலாரம், குறைந்த விலை ஆகியவை மற்ற ஃபிட்னஸ் ட்ராக்கர்களை விட இந்த ஃபிட் பிட்–ஐ சந்தையில் முதலிடம் பிடிக்க வைத்திருக்கி்றது.விலை ரூ.12,900 முதல்...

சோனி ஸ்மார்ட் வாட்ச் 3 (Sony Smartwatch 3)
ஆப்பிள், சாம்சங், எல்.ஜி., பெப்பிள் என ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பல ஜாம்பவான்களின் தலை தென்பட்டாலும் சோனியின் பங்களிப்பு மிகவும் நுட்பமானது. இதன் GPS-இல் ஆப்பிள் தோற்றுப் போனது. இதன் வசீகரமான ஸ்லீக்கி டிசைனில் சாம்சங் தோற்றுப் போனது.

இதன் ஸ்போர்ட்ஸ் ஸ்டைலிங் வசதிகள் மற்றும் விலையே பெப்பிள், மோட்டோரோலா, எல்.ஜி. போன்ற பெரு நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளை சந்தையில் பின்னுக்கு தள்ளியதற்கான முக்கியக் காரணிகள். விலை ரூ. 17,000 முதல்...

ஸ்ரீ.தனஞ்ஜெயன்

Saturday, December 12, 2015

சேவையே மேலான பாக்கியம்!

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும் பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட, அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.


நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.

Friday, December 11, 2015

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

சந்தையில் கொட்டிக் கிடக்கும் கேட்ஜெட்டுகளை அலசி ஆராய்ந்து அக்கறையுடன் தருகிறோம் உங்களுக்காக...

மோட்டோ எக்ஸ் ஃபோர்ஸ்

மோட்டோரோலாவின்  புதிய வரவு  ‘Moto X Force’. மோட்டோ போன்களின் வரிசையில் புதிய தொழில் நுட்பத்துடன் அறிமுகம் ஆகியுள்ளது. ஸ்மார்ட் போன்களில் திரை பாதிப்புக்குள்ளாகாத கொரில்லா க்ளாஸ் தொழில் நுட்பமே பயன்படுத்தப் பட்டு வந்தது. ஆனால் அதனைவிட அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான ஷட்டர் ஷீல்டு க்ளாஸ் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தடுக்கு க்ளாஸ் அமைப்புதான் இதனை பாதுகாக்கிறது என்பதே இதன் சிறப்பு. தவறுதலாக கீழே விழுந்தாலும் உடையாது என மோட்டோரோலா கூறியுள்ளது.
மோட்டோ எக்ஸ் வகை ஸ்மார்ட் போன்களில் சிறப்பான அம்சங்களைக்கொண்ட போனாக விளங்குகிறது. மோட்டோரோலா எக்ஸ் ஃபோர்ஸ்  மோட்டோ எக்ஸ் ஸ்டைல் போன்ற அம்சங்களுடன் காணப்பட்டாலும், ப்ராஸசர் Snapdragon 810 , 3ஜிபி ரேம், பேட்டரி செயல் திறனில் எக்ஸ் வகை போன்களில் அதிகபட்சமாக 3760mAh உடன் ஃபோர்ஸ் வேறுபடுகிறது.

மெமரியை பொறுத்தவரை, 32  ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் எக்ஸ்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. முன்பக்க கேமரா 5 மெகா பிக்ஸலாகவும், பின்புற கேமரா 21 மெகா பிக்ஸலாகவும் உள்ளது.

இதில் ஒரே ஒரு சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். மல்டி சிம்கார்டு பயன்படுத்துபவர்கள், இந்த போனை கவனிக்கத் தேவையில்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.25,000-லிருந்து துவங்குகிறது.

5.4-inch shatterproof display
3GB RAM
32 and 64GB variants with 2TB microSD card support
sports a 21MP rear camera and 5MP front camera
128 ஜிபி வரை நீட்டிக்கும் எக்ஸ்டர்னல் மெமரி வசதி

ஸ்மார்ட் கீ!


ஸ்மார்ட் கீ... இது ஜஸ்ட் நம்ம ஹெட் போன்ல உள்ள ஜாக் மாதிரியான டிவைஸ்தான். இந்த கருவியை  நம் போனில் இணைத்து விட்டு,  ஸ்மார்ட் கீ கேட் லாக்ல இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்து ‘க்ளிக்’  செய்தால், எந்த ஆப்ஸும் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் ஆகிவிடும். அதில் 3 ஆப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்

சிங்கிள் க்ளிக்ல ஆரம்பித்து, 3 க்ளிக் வரைக்கும் இருக்கும் ஆப்ஷன்களில் ஒவ்வொரு க்ளிக்குக்கும் ஒரு செயலை  ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.

உதாரணமாக, முதல் க்ளிக்கில் ஆங்ரி பேர்டு கேம்ஸ் ஓப்பன் ஆகணும், இரண்டு க்ளிக் பண்ணா, வாட்ஸ் அப் ஓப்பன் ஆகிற மாதிரி செட் செய்துகொள்ளலாம்.


இந்த ஸ்மார்ட் கீ செல்போன் ஓப்பன்ல இருக்கும் போதும்,  லாக்-ல இருக்கும்போதும் இரண்டு மோட்லயுமே வேலை செய்யும். இதோட விலை 85 ரூபாய்தான். அமேசான் மாதிரியான இ-காமர்ஸ் தளங்களில் இது கிடைக்கிறது.

suitable for all android phone (above 4.0)
one key for call sos, taking photo, gps, voice record open apps
இதோட விலை 85 ரூபாய்தான்

ச. ஸ்ரீராம்

Saturday, November 28, 2015

மரத்தை வளர்ப்பதால்

முன்பெல்லாம் மழைக்காலத்தில் மழை பெய்தது. கடும் வெயிலால் மக்கள் அவதியுற்று நீர் நிலைகள் அனைத்தும் வற்றி தண்ணீருக்காக திண்டாடும் தமிழ்நாட்டில் அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்து பூமியை குளிரச் செய்து மக்களின் மனமும் மகிழ்ச்சியடைந்தது. வரவேற்கத்தக்கதே. ஆனால் ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது. கண் மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம். மரங்கள் குறைவதால் பூமியில் சூடு அதிகரிக்கிறது. Ozone படலத்தில் ஓட்டை வீழ்ந்து விட்டதால் சூரியனின் ultra violet கதிர்கள் பூமியில் இறங்குகின்றன. இவ்வகைக் கதிர்கள் கடலில் மிதக்கும் ஐஸ் பாறைகளில் படுவதால் அவை கரைந்து நீரின் அளவு கடலில் அதிகரிக்கிறது. தண்ணீரின் அளவு கூடுவதால் நிலத்தை தண்ணீர் ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை விழுங்கி வருகிறது. மரத்தை வளர்ப்பதால் மட்டுமே நம்மால் இனி நிலத்தை பாதுகாத்து போதிய அளவு மழையும் பெற இயலும். அகால மழையினால் பல ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. cervical spondylitis, lumbar spondylitis, lordosis போன்ற நோயுள்ளவர்கள் அகால மழையில் அதிக வலியை உணருவார்கள். விளக்கெண்ணையை சூடு செய்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். தணலில் வறுத்த பண்டங்களைத் தவிர்த்து உணவை சூடாக சாப்பிட வேண்டும்.


அகால மழையினால் குளம்போல மழைத்தண்ணீர் ரோடுகளில் தேங்கி நிற்கக்கூடும். அவைகளில் காலை வைப்பதால் நுண்கிருமிகள் பித்த வெடிப்புகளிலும் கால்நகத்தின் இடுக்குகளிலும் நுழைந்து பேராபத்தை தோற்றுவிக்கும். அதனால் வீட்டுக்குச் சென்றவுடன் வெந்நீரில் காலை நன்றாக அலம்ப வேண்டும். முகத்தை பாதுகாப்பது போல கால்களையும் அகால மழையில் மிகவும் சிரத்தையுடன் பாதுகாக்க வேண்டும்.

Sunday, November 22, 2015

(Oppo R7 Lite) - (Lenovo Phab Plus)-(Asus Zenfone 2 Deluxe )

ஓப்போ ஆர்7 லைட் (Oppo R7 Lite)


டிஸ்ப்ளே – 5 இன்ச் 720x1280 பிக்ஸல் 294PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்.
முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Qualcomm Snapdragon 615.
ரேம் – 2 GB.
பேட்டரி – 2320 mAh.
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (Color OS 2.1)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
எடை – 147 கிராம்.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1, சிம் 2 – 4G நேனோ சிம்.
பிளஸ்:
டிசைன்.
பேட்டரி.
செயல்பாடு.
கேமரா அப்ளிகேஷன்.
மைனஸ்:
குறைந்த வெளிச்சத்தில் கேமரா செயல்பாடு.
FM, NFC கிடையாது.
விலை:  ரூ.18,000.

லெனோவோ பேப் பிளஸ் (Lenovo Phab Plus)

டிஸ்ப்ளே – 6.80 இன்ச் 1080x1920 பிக்ஸல் 326PPI.
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 1.5 GHz Octo-Core Qualcomm Snapdragon 615
ரேம் – 2 GB
பேட்டரி – 3500 mAh
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு  லாலிபாப் 5.0 (Vibe UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 32 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB வரை
எடை – 220 கிராம்
டூயல் சிம் வசதி உண்டு
சிம் 1 – 4G மைக்ரோ சிம்
சிம் 2 – 4G நேனோ சிம்
பிளஸ்: மெட்டல் பாடி, கேமரா, செயல்பாடு
மைனஸ்: பயன்படுத்த பெரிதாக கடினமாக இருக்கிறது, இயங்குதள கோளாறுகள், மைக்ரோ SD கார்ட் மற்றும் இரண்டாவது சிம் ஒரே ஸ்லாட்டை பயன்படுத்துகிறது.
விலை:  ரூ.20,990.


ஏசஸ் ஜென்போன் 2 டீலக்ஸ் (Asus Zenfone 2 Deluxe )

டிஸ்ப்ளே – 5.5 இன்ச் 1080x1920 பிக்ஸல் 401PPI
பின்புற கேமரா – 13 மெகா பிக்ஸல்
முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்
பிராசஸர் – 2.3 GHz Quad-Core Intel Atom Z3580
ரேம் – 4 GB
பேட்டரி – 3000 mAh
இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 (Zen UI)
இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB
எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை
எடை – 170 கிராம்.
டூயல் சிம் வசதி உண்டு.
சிம் 1 – 4G மைக்ரோ சிம்
சிம் 2 – 2G மைக்ரோ சிம்
பிளஸ்: டிசைன், செயல்பாடு, டிஸ்ப்ளே
மைனஸ்: கேமரா, விலை
விலை:  ரூ.22,999.


சவுண்ட் மேஜிக் வென்டோ பி55 (SoundMagic vento P55)
சீனாவின் ஹெட்போன் நிறுவனமான சவுண்ட் மேஜிக், தனது சிறப்பான பட்ஜெட் ஹெட்போன்களுக்கு பெயர் போனது.
சமீபத்தில் தனது புதிய ‘வென்டோ பி55’ அதி நவீன ஹெட்போனை வெளியிட்டு, அதிக விலை ஹெட் போன் மார்க்கெட்டில் நுழைந்துள்ளது.
ஸ்டைய்ன்லெஸ் ஸ்டீல் ஹெட்பேண்ட், அலுமினியம் இயர்கப்ஸ் (Earcups), மென்மையான லெதர் இயர்பேட்ஸ் (Earpads) ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஹெட் போன்.
1.2m கழற்றிக்கொள்ளும் கேபிளை கொண்டுள்ள இந்த ஹெட்போன் ஒரு மைக்ரோ போனையும் கொண்டுள்ளது. விலை: ரூ.15,100.

செ.கிஸோர் பிரசாத் கிரண்

Saturday, November 21, 2015

அஷ்வின்

 
இந்தியாவின் தலைசிறந்த ஆப் ஸ்பின்னராக கருதப்படும் எரப்பள்ளி பிரசன்னா 20 டெஸ்டுகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒரு இந்திய சாதனை புரிந்தார். அஷ்வின் தன் முதல் இருபது ஆட்டங்களில் இச்சாதனையை முறியடிக்கும் வண்ணம் நெருங்கி வந்தார். ஆனால் ஒரு சின்ன இடைவெளியில் தவற விட்டார். ஆனால் இப்போது அவர் தனது 29வது ஆட்டத்தில் 153 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரசன்னாவையும் கடந்து சென்று விட்டார். அஷ்வினின் பந்து வீச்சு தரம் கடந்த சில மாதங்களில் பல படிகள் மேலே உயர்ந்து விட்டது. இன்று உலகின் தலைசிறந்த ஆப் சுழலர் அவர்தான். அவரால் எந்த ஆடு தளத்திலும் தனது பிளைட், வேக மாறுபாடு, ஆர்ம் பந்து, கேரம் பந்து உள்ளிட்ட மாறுபட்ட தன்மை, நீளத்தை கட்டுப்படுத்தும் பாங்கு, புத்திசாலித்தனம் ஆகியவை கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியும். இத்தனை திறமைகளையும் அஷ்வின் இயல்பிலேயே பெற்றிருக்கவில்லை. அவர் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாதனையாளர். அவரது ‘நமக்கு நாமே’ பயணம் பற்றி பார்ப்போம்.
 
அஷ்வின் உள்ளூர் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க நிலை மட்டையாளராகவே அறிமுகமாகி ஆடி வந்தார். பந்து வீச்சு அவருக்கு இரண்டாம் பட்சமே. ஒரு முறை விபத்து காரணமாய் அவரால் தமிழக அணிக்காக சற்று காலம் ஆட முடியாமல் போயிற்று. காயத்தில் இருந்து மீண்டு வந்த அஷ்வின் தன் ஆப் ஸ்பின் பந்து வீச்சில் கவனம் செலுத்த தொடங்கினார். 2006இல் அவரைப் பற்றி ஹிந்துவின் விளையாட்டு பக்க அறிக்கையில் படித்தது நினைவுள்ளது. அஷ்வின் உயரமான சுழலர். கட்டுப்பாடாக வீசக் கூடியவர். அதிகமான பவுன்ஸ் காரணமாய் அவருக்கு நிறைய விக்கெட்டுகள் விழுகின்றன என்று அவரைப் பற்றி சில தகவல்கள் கிடைத்தன. சேலஞ்சர் கோப்பையில் தான் முதன்முதலில் அஷ்வின் பந்து வீசுவதை கவனித்தேன். அப்போது அஷ்வின் உள்ளூர் அளவில் கூட முன்னணி வீச்சாளராக இல்லை. ஐ.பி.எல்லிலும் அறிமுகமாகவில்லை. முதல் பார்வையில் அவர் ஒரு வழக்கமான சுழலர் இல்லை எனப் பட்டது. பெரும்பாலான இந்திய சுழலர்கள் குள்ளமானவர்கள். அதனால் அவர்கள் பந்தை காற்றில் மிதக்கும்படி பிளைட் செய்வார்கள். பிளைட் சிறப்பாய் இருக்கையில் பந்து விழும் நீளம் குறித்து மட்டையாளனுக்கு குழப்பம் ஏற்படும். இப்படி ஏமாறும் மட்டையாளர்கள் சுலபத்தில் அவுட் ஆவார்கள். ஆனால் உயரமான சுழலர்கள் மட்டையாளனுக்கு மேலிருந்து கீழாய் பந்து வரும் படி வீச முடிவதால் அவ்வளவாய் பிளைட் செய்யாமலே நீளம் குறித்து குழப்பம் உண்டாக்க முடியும். அனில் கும்பிளேவும் அஷ்வினும் பந்தை பிளைட் செய்வதற்கு அதிகம் மெனக்கெடாதவர்கள். இருவருமே பவுன்ஸை நம்பி விக்கெட் எடுப்பவர்கள். அதனாலே இருவரையும் முதலில் பார்க்க குறைபட்ட சுழலர்கள் எனத் தோன்றும். ஆனால் இருவரும் மாறுபட்ட வீச்சாளர்களே அன்றி தரம் குறைந்தவர்கள் அல்ல.
 
அஷ்வின் முதல் பார்வையில் பந்தை அதிகம் சுழற்றவோ பிளைட் செய்யவோ செய்யாத, வேகமாக நேராய் வீசும் ஒரு சாதாரண வீரராகவே எனக்குத் தோன்றினார். ஹர்பஜன் சிங்கிடம் அவர் அறிமுகமான புதிதிலேயே ஒரு சுழலருக்கான அத்தனை திறன்களும் வெளிப்பட்டன. ஹர்பஜனிடம் இயல்பிலேயே லூப் இருந்தது. லூப் என்பது பந்தை அதிகமாய் சுழற்றி பார்வையாளனின் பார்வை மட்டத்துக்கு மேலாக கொண்டு செல்வது. லூப் உள்ள பந்து தன்னை நோக்கி வருகிறது என மட்டையாளன் எண்ணி இருக்க அது கடைசி நொடியில் அவனை விட்டு விலகி செல்லும். ஹர்பஜனின் பந்து அதிகமாய் சுழன்று திரும்பியது. ஆனால் அஷ்வின் அந்தளவுக்கு வசீகரமாய் தோன்றவில்லை. இதனாலேயே அஷ்வின் அறிமுகமான புதிதில் தோனி அவர் ஒரு “சாமர்த்தியமான சுழலர். பார்க்க ரொம்ப வசீகரமானவர் அல்ல” என்றார்.  

ஆனால் இந்த செலஞ்சர் கோப்பை தொடரில் அஷ்வினின் மாறுபட்ட பந்துகள் என்னை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக அஜெந்தா மெண்டிஸைக் கண்டு தூண்டுதல் பெற்று அவர் தனக்கென கேரம் பந்து எனும் ஒரு சொடுக்கி வீசும் பந்தை உருவாக்கிக் கொண்டார். அப்பந்தை கணித்து ஆட மட்டையாளர்கள் திணறினர். பின்னர் ஐ.பி.எல் அறிமுகமாக சென்னைக்காக ஆடத் தொடங்கிய அஷ்வின் இது போன்ற மாறுபட்ட பந்துகளாலும் கட்டுப்பட்டாலும் தான் மிகவும் அறியப்பட்டார். எந்த பதற்றமான சூழலி லும் நிதானமாய் வீசும் மன உறுதி அவருக்கு இருந்தது. இக்குணங்கள் தாம் தோனியை கவர்ந்திருக்க வேண்டும். 2011 உலகக்கோப்பைக்கு பின் அவர் ஹர்பஜன் இடத்துக்கு அஷ்வினைக் கொண்டு வந்தார். இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் மிகவும் ஆபத்தான வீச்சாளராக தோன்றினார். தன் முதல் டெஸ்டிலேயே ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது மாறுபட்ட பந்துகளை கணிக்கவோ பவுன்சை சமாளிக்கவோ முடியாமல் மட்டையாளர்கள் திணறினர். ஆனால் 2012இல் இந்தியா வந்த இங்கிலாந்து மட்டையாளர்கள் அஷ்வினை சிறப்பாக கையாண்டனர். அதன் பின்னர் வெளிநாடுகளில் ஆட ஆரம்பித்த அஷ்வின் அங்கும் திணறினார். அவரது பந்து நேராய் அதிக சுழல் இன்றி வந்தன. மட்டையாளர்கள் அவரை நேராய் ஆடத் தொடங்க அவர் பொறுமை இழந்து வைடாய் குறைநீளத்தில் வீசினார். அவர்கள் அவரை வெட்டவோ புல் செய்யவோ செய்தனர். இக்கட்டம் அவரது ஆட்டவாழ்வில் ஒரு தளர்ச்சி காலம்.
 
இதனை அடுத்து ஊருக்கு திரும்பின அஷ்வின் தனது இளம் வயது பயிற்சியாளருடன் பயிற்சி எடுத்து தன் குறைகளை களைந்தார். இடுப்பு மற்றும் மேலுடலை அதிகமாய் ஒவ்வொரு பந்து வீசும் போதும் பயன்படுத்தி பந்துக்கு அதிக ஆற்றல் அளித்தார். விளைவாக அடுத்து இங்கு ஆட வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் வீசிய பந்துகள் புற்றிலிருந்து வெளிப்படும் பாம்பு போல் சீறின. அவரை ஆட முடியாது ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். ஆனாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி.20 ஆட்டங்களில் ஆடியதால் அவரது பந்து வீச்சு மீண்டும் கோளாறானது. ஒரே ஓவரில் பலவித பந்துகளை வீச முயன்று கட்டுப்பாட்டை இழந்தார். விரைவில் அணியில் அவருக்கு பதில் ரவீந்திர ஜடேஜா ஆடினார். ஆட முடியாத காலத்தில் அஷ்வின் தன் தொழில்நுட்ப பிசிறுகளை சரி செய்தார். 2015 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராய் நியமனமான ஸ்ரீதர் தனது பல தொழில்நுட்ப ஐயங்களுக்கு விளக்கம் தந்ததே தன் முன்னேற்றத்துக்கு பிரதான காரணம் என அஷ்வின் தெரிவித்தார்.  

பால்யத்தில் இருந்தே முறையாக சுழல் பந்து வீசி பழகாத அஷ்வின் ஆட ஆடத் தான் பந்து வீச்சின் அடிப்படைகளை மெல்ல மெல்ல கற்று வளர்ந்தவராக உள்ளார். தன்னுடைய கலை குறித்து தீவிரமாய் யோசித்து புரிந்து கொண்டு அதை தன் வீச்சில் முயன்று பார்த்து சுயமாய் முன்னேறி இருக்கிறார். முயன்றால் யாரும் ஹர்பஜனோ முரளிதரனோ ஆக முடியாமல் போகலாம். ஆனால் அஷ்வின் ஆகலாம்.
 
ஆர். அபிலாஷ்

யமனும் அஞ்சினான்!அதிதியை தெய்வமாக நினைப்பது, அவனைக் கவனிக்காவிட்டால் தெய்வக் குற்றம் செய்த மாதிரி பயப்படுவது, இதெல்லாம் நம் மதத்தின் முக்கியமான அம்சங்களாகும். யமன் என்றால் நாம் எல்லோரும் கதி கலங்குகிறோம். அப்படிப்பட்ட யமனே கதிகலங்கி விட்டதாகக் கடோபநிஷத்தில் ஒரு கதையில் வருகிறது. அவன் யாரிடம் பயப்பட்டான்? ஒரு சின்ன பிராம்மணப் பிள்ளையிடம் தான் பயப்பட்டான்! ஏன் பயப்பட்டான்? இந்தப் பையன் யமனுடைய க்ருஹத்துக்கு வந்து மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்துவிட்டான்! (அவன் ஏன் வந்தான் என்பது வேறு கதை) அதிதி ஒருவனின் வயிற்றுக்குப் போடாவிட்டால் அது மஹா அபசாரமாகுமே என்றுதான் ஸாக்ஷாத் யமனே பயந்து விட்டான். ஸர்வ லோகத்தையும் நடுங்கச் செய்கிறவன் இந்த வாண்டுப் பயலிடம் நடுங்கிக் கொண்டு வந்து, “என் க்ருஹத்தில் ராத்திரி சாப்பிடாமல் இருந்து விட்டாய். இதனால் எனக்கு தோஷம் உண்டாகாமல் இருக்க உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன் அப்பா. ஒவ்வொரு நாள் பட்டினி இருந்ததற்கும் ஈடாக ஒவ்வொரு வரம் வீதம் என்னிடம் மூன்று வரம் வாங்கிக் கொள்” என்று ப்ரார்த்தித்ததாக உபநிஷத் சொல்கிறது.

இங்கெல்லாம் ‘பரோபகாரம்’என்று செய்கிறபோது இருக்கக்கூடிய ‘ஸுபீரியாரிடி’ மனப்பான்மை இல்லாமல், உபகாரத்துக்குப் பாத்திரனாகிறவனிடம் பயந்து பயந்து தாழ்ந்து, தெய்வத்துக்குப் பூஜை செய்கிற மாதிரி அவனுக்கானதைச் செய்வதையே பார்க்கிறோம். பரோபகாரத்தில் ஒரு முக்யமான அங்கமான ஈகையில் சிறந்தவர்களை நம் தர்மத்தில் தலைக்குமேல் வைத்துக் கொண்டு கொண்டாடுகிறோம். எத்தனையோ துர்குணங்கள் இருந்தால்கூட கர்ணன் போன்றவர்களைக் கொடைக்காகவே போற்றுகிறோம்.

நவரசமும் சாந்தமும்!ஒரு காவியம் அல்லது நாடகம் என்றால் அதில் ஒரு கதை, Plot இருக்கிறது. அநேக ஸம்பவங்கள் வருகின்றன. இயற்கை வர்ணனைகள் இருக்கின்றன. உவமை போன்ற அணிகள், எதுகை, மோனை போன்ற சொல் ஜாலம் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இதெல்லாம் அதற்கு உயிர் இல்லை. ‘ரஸம்’ என்ற உணர்ச்சி அநுபவம்தான் உயிர் என்று வைத்தார்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனை சொல்லழகு இருந்தாலும் அது கவிதையாகிவிடாது, ‘ரஸம்’ இருந்தால்தான் அது கவித் தன்மை பெறும் - ‘வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்’ என்று ஒரு பெரிய ‘கிரிடிக்’ சொல்லியிருக்கிறார். இந்த ரஸங்களின் கணக்கில் இரண்டு தினுசான அபிப்பிராயங்கள் உண்டு. ஒரு சாரார் எட்டு ரஸம் என்பார்கள். இன்னொரு சாரார் ஒன்பது ரஸம் (நவரஸம்) என்பார்கள். சிருங்காரம், ஹாஸ்யம், கருண (சோகம்), ரௌத்திரம் (கோபம்), வீரம், பயானகம் (அச்சம்), பீபத்ஸம் (அருவறுப்பு), அத்புதம் (அற்புதம்) என்ற எட்டும் ரஸங்கள் என்பது ஒரு கட்சி. இவற்றோடு ‘சாந்தம்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நவரஸக்காரர்களின் வாதம்.

சாந்தத்தை ரஸமாகச் சேர்க்காத ஆலங்காரிகர்கள் அதை மட்டமாக நினைத்தார்கள் என்று அர்த்தமில்லை. பார்க்கப் போனால் அவர்கள் தான் நவரஸக்காரர்களை விட அதை உயர்த்தியாக மதித்தார்கள். நம் பண்பாடே சாந்தத்தில் நிறைந்து போவதுதான். “சாந்தி: சாந்தி : சாந்தி:” என்று மூன்று முறை சொல்லியே எந்த வைதிக காரியத்தையும் நாம் பூர்த்தி செய்கிறோம். அந்த சாந்த நிலையில், உணருகிறவன் - உணரப்படுவது என்ற பேதமில்லாமல் எல்லாம் அடங்கிப் போகிறது.

24வது 007!


ஆங்கிலம் மற்றும் தமிழிலும் 1962-ஆம் ஆண்டு தொடங்கி, 2015 வரை, மொத்தம் 23 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவந்துள்ளன. 'Spectre' இவ்வாண்டு வெளியாகியுள்ள 24வது படம். காஸினோ ராயல் ‘க்வான்டம் அப் சோலாஸ்’, ‘ஸ்கைபால்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து டேனியல் க்ரேக் 4வது முறையாக இதிலும் ஜேம்ஸ் பாண்டாகத் தோன்றுகிறார். ‘அமெரிக்கன் பியூட்டி’ மற்றும் ‘ரோட் டு பெர்ஷன்’ போன்ற விருதுகளைப் பெற்ற படங்களை இயக்கியுள்ள சேம்மென்டிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தொடர்ச்சியாக இரு ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கியுள்ளவர்.

‘ஸ்பெக்ட்ரா’ என்கிற உலக அளவில் பிரபலமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் ஒரு நிறுவனம், ஸீன் கானெரி இறுதி முறையாக ஜேம்ஸ் பாண்டாக நடித்த ‘டைமன்ஸ் ஆர் ஃபாரெவர்’ படத்தில்தான் முதன்முதலாக இடம்பெற்றது. ‘ஸ்பெக்ட்ரா’ என்கிற இப்படத்திலும் அந்நிறுவனம் பற்றி நிகழ்வுகளும், அவற்றை மையமாக வைத்து, ஜேம்ஸ்பாண்ட் 007 அதன் பின்னணியில் நிற்கும் வில்லனைத் தேடிப் புறப்பட்டுச் சென்று, மோதி வெற்றி கொள்வதே இப்படக் கதையின் சாரம். நாவலாசிரியர் ஐயன் ப்ளெமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துத் தான் இதன் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

‘பேஸ்புக்’


நாற்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு இவரை நன்றாகத் தெரியும். 30 வயதுக்குக்கீழ் இருப்பவர்களுக்குப் பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு மானசீகத் தோழர். 20 வயதுக்காரர்களுக்கோ இவர் கடவுள். அவர் மார்க் எலியட் சர்கர்பெர்க். சர்ச்சைக்குரிய ‘பேஸ்புக்’ நிறுவனர். இந்த ‘சர்ச்சைக்குரிய’ என்ற முன்னொட்டு பேஸ் புக்கைக் குறிக்கிறதா, அல்லது அதன் நிறுவனர் மார்க்கைக் குறிக்கிறதா எனக் கேட்பவர்களுக்கு எனது பதில்: இரண்டையும்தான்.

பேஸ்புக் தொடங்கப்பட்ட நாளிலேயே சர்ச்சை முகிழ்த்துவிட்டது. அவரது கல்லூரி சீனியர்கள் தங்களுடைய ஐடியாக்களை மார்க் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்தார்கள். (அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்ய நரேந்திரா) 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் கொடுத்து அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட்டது. மார்க்கும் சர்ச்சைகளுக்குத் தப்பவில்லை. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படத்திலிருந்து - (தி சோஷியல் நெட்ஒர்க் - கோல்டன் குளோப் விருது பெற்றது) யாரோ ஒரு ஜெர்மானியப் பெண்மணி முகமது நபியின் படத்தை வரையும் போட்டியை பேஸ்புக்கில் அறிவித்ததற்காக பாகிஸ்தான் அரசு அவர் மீது குற்ற வழக்குத் தொடர்ந்தது வரை அவர் எதிர் கொண்ட சர்ச்சைகள் ஏராளம்.

இளைஞர்களின் இந்தக் கடவுள் அண்மையில் இந்தியா வந்திருந்தார். தில்லி ஐ.ஐ.டி.யில் பேசும் போது ஒரு சர்ச்சைக்கு அல்ல அல்ல விவாதத்துக்கு விதை போட்டிருக்கிறார். கொஞ்சநாளாக வலைவாசிகளிடம் நடந்து கொண்டிருக்கும் பட்டிமன்றம் நெட் நியூட்ராலிட்டியா? ஜீரோ ரேட்டிங்கா? அதாவது கைபேசி மூலம் இணையத்தில் (இன்டர்நெட்) உலாவ காசு ‘அழ’ வேண்டுமா? அல்லது அது இலவசமாக இருக்க வேண்டுமா?  

குறிப்பிட்ட சில இணைய தளங்களை (உதாரணமாக விக்கிபீடியா, பேஸ்புக், கூகுள்) சில குறிப்பிட்ட மொபைல் நிறுவனங்கள் வழியாக இலவசமாகப் பெற வகை செய்வது ஜீரோ ரேட்டிங். இதற்காகும் செலவைப் பயனாளர்களிடமிருந்து கட்டணமாகப் பெறாமல் இணையதள நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வார்கள். இதன் மூலம் வளரும் நாடுகளில் இருக்கும் ஏராளமானோர் இணையத்தைப் பயன்படுத்துவார்கள். அவர்களது படிப்புக்கு இது உதவியாக இருக்கும் என்பது இதனை ஆதரிப்பவர்களது வாதம். இது ஒரு சில இணைய தளங்களுக்கும், சில மொபைல் நிறுவனங்களுக்கும் சாதகமாகவும் மற்ற வர்களுக்கு, குறிப்பாக, சிறு நிறுவனங்களுக்கு எதிராகவும் அமைந்துவிடும். மொபைல் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டி அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியுள்ளன. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பலருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றன. எல்லாம் இலவசம் என்றால் வருவாய்க்கு எங்கு போவது? வருவாய் இல்லாமல் வளர்ச்சி இல்லை என்பது நியூட்ராலிட்டிக்காரர்கள் வாதம். 

மார்க் இலவச கட்சியை ஆதரிக்கிறார். (அவரது நிறுவனம் ரிலையன்ஸோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது) ஆனால் நெட் நியூட்ராலிட்டியை எதிர்க்க வில்லை. அது இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் இலவசத்துக்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறார் ஐரோப்பிய ஒன்றியத்தை உதாரணம் காட்டி. இணையத்தைப் பயன்படுத்தினால், மின்னஞ்சலோ, பத்திரிகையோ, புத்தகமோ, பாட்டோ, சினிமாவோ, தொலைபேசி அழைப்போ, வெற்று அரட்டையோ எதற்கும் பைசா கொடுக்க வேண்டியதில்லை என்பதால் ஆரம்பத்திலிருந்தே இணையம் என்றால் இலவசம் என்று மனத்தில் விழுந்து விட்டது. கிடக்கட்டும். இந்த இணையம் மட்டும் இலவசமாக இல்லையென்றால் அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களை எதிர்த்து நம் அறச் சீற்றங்களை எப்படித்தான் வெளிப்படுத்துவதாம்?

மாலன்

குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு!


பொதுவாக குழந்தைகளுக்குப் பால் பற்கள் 6 மாதங்களில் முளைக்கும், ஆனால் சில குழந்தைகளுக்கு இதில் தாமதமும் ஏற்படலாம். பெரும்பாலான பெற்றோர்கள், பல் முளைப்பதில் தாமதம் ஏற்படின் அதே வயதுடைய மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு கவலை கொள்வார்கள், ஆனால் பல் முளைப்பதில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும் உள்ளன.

பற்கள் முளைக்கும்போது ஏற்படும் உறுத்தலினால் குழந்தைகள் எதையாவது வாயில் போட்டுக் கடிக்கும். எனவே சத்துக் குறைபாடு காரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். எனவே பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

பல் முளைக்கும் நேரத்தில் குழந்தைகளின் ஈறுகள் சிவந்தும் வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஜுரம், வலி போன்றவைகூட ஏற்பட வாய்ப்புண்டு. இது பொதுவாக உள்ள பிரச்னை என்பதால், பெற்றோர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. முடியாத பட்சத்தில் பல் மருத்துவரிடம் காண்பித்துக் கொள்வது நல்லது.

பால் பற்கள் நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மையாகவும் மிக அழகாகவும் காணப்படும்.

பால் குடிக்கும் குழந்தைகளை அப்படியே தூங்க, கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. இதனால் பால் பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு ‘நர்ஸிங் பாட்டில் கேரிஸ்’ என்று பெயர், இது அவர்களின் பற்களில் அதிக பாதிப்பை உண்டாக்கும்.

எனவே இரவில் பால் குடித்த பின்பு, அவர்களின் வாயைச் சுத்தம் செய்வது அவசியம். பாலுக்குப் பின் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தோ, அல்லது ஈரப் பஞ்சினால் அவர்களின் வாயையும், பற்களையும் துடைத்துவிட்டோ, சுத்தம் செய்யலாம். இதனால் பற்சிதைவு தடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளை, கூடுமான வரை குறைந்த அளவே கொடுப்பது நல்லது. அவர்களுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவுகளை அதிக அளவு கொடுத்து பழக்கப்படுத்துவது. அவர்களின் உடல்நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

பால் பற்களின் வேருக்கு அடியில்தான், நிரந்தர பற்களின் ‘பல் மொட்டு’ (Tooth bud) உள்ளது. அது வளர வளர பால் பற்களின் வேர் அரிக்கப்பட்டு, பால் பல் அடி, விழுந்துவிடும், அந்த இடத்தில் நிரந்தரப் பல் வளரும்.

டாக்டர் கோபாலகிருஷ்ணன்

நல்ல பிள்ளை ஆக வேண்டும்!
கெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்து விட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம்! வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணைகொண்டால் இதையும் எளிதாகச் சாதித்து விடலாம். நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புக்கள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.

ஸ்வாமியின் பாதக் கமலங்களை விடாமல் பிடித்துக்கொண்டு, “எனக்கு வேறு கதியில்லை; நீதான் நல்ல வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இளவயதிலேயே பெறுவதுதான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போக விட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம்கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்!

Tuesday, November 03, 2015

அடங்காத டெங்கு! எச்சரிக்கை ரிப்போர்ட்!

“தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்குன் குனியா மற்றும் டெங்கு நோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று மதுரையில் தொடரப்பட்ட வழக்கில், “டெங்குவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என உயர் நீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது டெங்கு. சுகாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உள்ள இந்தக் காய்ச்சலின் பாதிப்பு காரணமாகப் பலர் பலியாகி வருகின்றனர். இதன் தீவிரத்திலிருந்து தப்பிப்பது எப்படி?
 
டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணம் என்ன?

“டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் வைரஸ் நோயாகும். இது நான்கு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டல அணிமையிடம் சார்ந்த நாடுகளில் காணப் படும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது.”

நோய்க்கான அறிகுறிகள் என்ன?

“திடீரென காய்ச்சல் ஏற்பட்டு, 40-40.5 டிகிரி செல்சியஸ் வரை உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சருமத்தில் வேனிற்கட்டிகள், வெடிப்புகள், நோய் தொற்றிய 3-4 நாட்களில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி, முகம், கை, கால்கள் என்று பரவத் தொடங்கும். இதனுடன் தசைவலி, மூட்டுவலி, தலைவலி ஏற்படும்.”

எப்படிக் கண்டறிவது?

“வெள்ளை அணுக்களின் மொத்த அளவைப் பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந் திருக்கிறது என்பதைப் பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம். டெங்கு காய்ச்சலின்போது ரத்தத்தில் உள்ள ரத்த வட்டுக்களின் (Platelets) எண்ணிக்கை குறைவாகக் காணப்படும். டெங்கு வைரஸுக்கு எதிராக உடல் உற்பத்தி செய்யும் ஆன்ட்டி-பயாடிக் என்று அழைக்கப்படும் எதிர்ப்புச் சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிணநீர் பரிசோதனை ஆகியவை இந்த நோயைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படும்.”

இதற்கான மருத்துவம் என்ன?

“டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை ஓய்வும், திரவ வகை உணவு அதிகம் உடலில் ஏற்றப்படு வதும், உடல் உஷ்ணத்தைக் குறைக்க அசிட்டா மினோஃபென் மாத்திரைகளும் அவசியம். ரத்த வட்டுக்களை கண்காணிக்கும் அளவுக்கு சீரியஸாகப் போகும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியம். இதற்கான தகுந்த ஆலோசனைகளை உங்கள் மருத்துவர் வழங்கக்கூடும். ரத்த வட்டுக்கள் அளவு 40,000-த்துக்கும் குறைவாக இறங்கும் போது புதிய ரத்தமோ அல்லது ரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா), அதாவது பி.ஆர்.பி. ஏற்றப்படும்.”

டெங்கு காய்ச்சலின் போது சாப்பிடவேண்டிய உணவுகள் என்ன?

“ஆரஞ்சுப் பழத்தில் நிறைய வைட்டமின்களும், இதரச் சத்துக்களும் காணப்படுகின்றன. செரிமானத்துக்கும், நன்றாகச் சிறுநீர் போவதற்கும் ஆரஞ்சு உதவுவதால் டெங்கு காய்ச்சலிலிருந்து விரைவில் விடுபட முடியும். டெங்கு காய்ச்சலால் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு கஞ்சிதான் மிகமிகச் சிறந்த உணவாகும். கஞ்சி குடிப்பதால் உடலுக்கு நிறைய சக்தி கிடைக்கும். அதைக் குடிப்பதும் மிகவும் எளிது. இளநீரை நிறைய குடிப்பதாலும் டெங்கு காய்ச்சல் விரைவில் குணமாகும். கனிமச்சத்துக்கள், எலெக்ட்ரோ லைட்டுகள் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. கேரட், வெள்ளரி மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான ஜூஸ்களைக் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.

நிறைய பழச்சாறுகளைக் குடிப்பதாலும் டெங்கு காய்ச்சலிலிருந்து தப்பிக்கலாம். அதிலும் வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ரா பெர்ரி, கொய்யா, கிவி, பப்பாளி உள்ளிட்ட பழங்களின் சாற்றைக் குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளை உண்பதாலும் டெங்கு காய்ச்சலை விரட்டலாம். பால், முட்டை, மீன், சிக்கன் ஆகியவற்றைச் சாப்பிடுவது நலம்.

பல வகையான சூப்புகளைச் சாப்பிடுவது டெங்கு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடம்புக்குத் தெம்பு கிடைக்கவும், எலும்புகள் வலுப்பெறவும் சூப்புகள் உதவுகின்றன. அவை பசியைப் போக்குவதோடு, நாவுக்குச் சுவையையும் தருகின்றன. சிட்ரிக் அமிலம் நிறைந்திருப்பதால், எலுமிச்சையும் டெங்கு காய்ச்சலை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையில்லாத விஷத்தை முறிக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே எலுமிச்சையும் செரிமானத்துக்கும் நிறைய சிறுநீர் வெளியேறுவதற்கும் உதவுகிறது.”

டெங்கு காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

“நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்களினால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனை மருந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் நீரை, அப்புறப்படுத்துதல் அவசியம். பயன்படுத்தப்படாத டயர், அம்மி, உரல் போன்றவற்றில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்த வேண்டும். திறந்தவெளி தொட்டியில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு தூய்மைப்படுத்த வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனையை உடனே அணுகவேண்டும்.”

 
 வனராஜன்

 

‘அமராவதி’ தமிழகத்துக்கு பாதிப்பா?


தெலங்கானா தனது தலைநகராக ஐதராபாத்தைத் தக்க வைத்துக்கொள்ள, ஆந்திராவின் புதிய தலை நகருக்கான தேடல் ஆரம்பமானது. இதற்கென அமைக்கப்பட்ட சிவராமகிருஷ்ணன் குழு விசாகப் பட்டினம், விஜயவாடா, திருப்பதி, குண்டூர் எனப் பல நகரங்களைப் பரிந்துரைத்தாலும், ஆந்திராவின் தலைநகரம் ‘அமராவதி’ என்பதில் மாநில முதல்வர் சந்திரபாபு உறுதியாக இருந்தார்.

நாடாளுமன்ற வளாக மண் மற்றும் கங்கை, யமுனை ஆறுகளின் புனித நீர் அடங்கிய கலசங்கங்களைப் பிரதமர் மோடி முதல்வர் சந்திரபாபுவிடம் ஒப்படைத்தார். இவற்றுடன் ஆந்திராவில் ஓடும் ஆறுகளின் தண்ணீர், ஆந்திராவின் 16,000 கிராம / நகரங்கள், மானசரோவர், வாரணாசி, ஆஜ்மீர் தர்கா, மெக்கா, ஜெரூசலம், அமிர்த்சரஸ் தங்கக் கோயில், மேடக் சர்ச், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், அம்பேத்கர், அப்துல்கலாம் ஆகியோர் பிறந்த இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் ஆகிய அனைத்தும் அமராவதி நகரக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. 

புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை சிங்கப் பூரைச் சேர்ந்த சர்பனா ஜுராங்க் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சட்டமன்றம், உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, அரசு அலுவலகங்கள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை 55,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைநகரம் அமைய உள்ளது. இதற்கான உத்தேச செலவு ரூ 4 லட்சம் கோடிகள் (முதற்கட்டமாக 32,000 ஏக்கர் செலவு ரூ 20,000 கோடிகள்). 17 சதுர கி.மீ. சுற்றளவில் நிறுவப்பட உள்ள குடியிருப்புப் பகுதியில் 3 லட்சம் மக்களைக் குடியமர்த்தவும் 7 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

நிர்வாகக் கட்டமைப்புக்கு மலேசியாவின் புத்ர ஜயா நகர், ஆற்றின் முகப்புப் பகுதிக்கு லண்டன் தேம்ஸ் நதிக்கரை, நகரக் கட்டமைப்புக்கு துபாய், துறைமுக முன்மாதிரிக்கு சிங்கப்பூர், வானளாவிய கட்டடங்களுக்கு நியூயார்க் எனப் பல நகரங்களின் கலவையாகத் தலைநகர் அமராவதி நிர்மாணிக்கப்படும். அமராவதி அருகே மங்களகிரியில் 5000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம், சென்னை - பெங்களூரு - ஐதராபாத் - விசாகப்பட்டினம் ஆகியவற்றுடன் அமராவதியை இணைக்க உலகத் தரம் வாய்ந்த சாலைகள், 12 கி.மீ. தூர மெட்ரோ ரயில், 15 கி.மீ. தூர அதிவேகப் பேருந்து, 26 ச.கி.மீ. வட்ட - உள்வட்டச் சாலைகள், சிகாகோவில் உள்ளது போன்று கிருஷ்ணா நதியில் ‘வாட்டர் டாக்ஸி’ மற்றும் தீம் பார்க் ஆகியவை இடம்பெறும். 

அறிவுசார் நகரம், நிதி நகரம், சுகாதார நகரம், சுற்றுலா நகரம், அரசு நகரம், விளையாட்டு நகரம், மின்னணு நகரம், நீதி நகரம், கல்வி நகரம் என ஒன்பது நகரங்களை உள்ளடக்கிய ‘நவரத்ன’ நகரமாக அமராவதி விளங்க வேண்டும் என்பதே சந்திரபாபுவின் கனவு. அமராவதி ‘மக்கள் தலைநகரம்’ என்பதால் முதலீடுகளைத் திரட்ட ஒவ்வொரு ஆந்திரரும் குறைந்தபட்சம் ஒரு செங்கல் செலவாக ரூ 10/- அரசுக்கு வழங்க வேண்டுமென முதல்வர் விடுத்த வேண்டுகோளுக்கு தெலுங்கர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.  

புதிய தலைநகருக்கான சிறந்த செயல்திட்டங்களுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும் விமர்சனங்களும், கண்டனங்களுக்கும் தப்பவில்லை. 58 தாலுக்காக்களைச் சேர்ந்த 500 மக்களை வெளியேற்றியதற்கும், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதற்கும், நான்கு போகம் காணும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்பட்டதற்கும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், விவசாயிகள், சமூக ஆர்வலர் மேதா பட்கர், இடதுசாரிகள், காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. “புதிய தலைநகர் அமைய 1000 ஏக்கர் தரிசு நிலம் போதும் என்பதால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட பசுமை நிலங்கள் அனைத்தையும் திருப்பித் தருவோம்” என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் உறுதி அளித்துள்ளார். 

புதிய தலைநகரத்துக்கான மிகப்பெரிய பிரச்னை சுமார் ரூ 4 லட்சம் கோடிகளைத் திரட்டும் பொருளாதாரச் சிக்கல்தான். குறிப்பாகத் தெலங்கானா பிரிவினை காரணமாக ஆந்திராவுக்கு ஏற்பட்டுள்ள ரூ 17,000 கோடிகள் நிதிப் பற்றாக்குறை. அடுத்தது அரசு நிர்வாகத்துக்கான தலைநகரமாக உருவாக்காமல் மேற்கூறிய நவரத்ன நகரமாகச் சந்திரபாபு உருவாக்க முனைந்தது கடுமையான நிதி நெருக்கடியுடன், நிர்வாகக் கோளாறுகளுக்கும் வழிவகுக்குமென எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.  

இவற்றுடன் இந்த இடம் நிலநடுக்கம் மண்டலம் 3-இன் கீழ் வருவதாலும், கருப்புப் பருத்தி மண் நிறைந்த பகுதி என்பதாலும், 70-80 அடுக்கு மாடிக் கட்டுமானங்களோ, மேம்பால / பாதாள மெட்ரோ ரயில்களோ ஆபத்தானவை என்பதால், தலைநகராக உருவாவதற்கான எந்தத் தகுதியும் அமராவதிக்கு இல்லை என்ற சில நிபுணர்களின் அறிக்கைகளையும் புறந்தள்ள முடியாது. 

ஆவலுடன் ‘எதிர்பார்த்த’ ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து என்ற அறிவிப்பு பிரதமரிடமிருந்து கடைசி வரை வராததும், யாருமே ‘எதிர்பார்க்காத’ வகையில் தெலங்கானா முதலவர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவும், ஆந்திராவுக்கு சந்திரபாபு நாயுடுவும் முன்னுரிமை தர, வறண்ட பகுதிகளைக் கொண்ட ராயலசீமா மீண்டும் சீந்துவார் இல்லாத சவலைக் குழந்தையானது. செழிப்பான விவசாய நிலங்களை அழித்து அமராவதியைத் தலைநகராக மாற்றுவதை விட, வானம் பார்த்த பூமியான ராயலசீமாவில் குறிப்பாக பிரகாசம் ஜில்லாவில் ஏதேனும் ஒரு பகுதியைத் தலைநகராக மேம்படுத்தி இருக்கலாம் என்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகனின் கருத்தும் கவனிக்கத்தக்கது.  

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி உருவாவது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், இதில் தமிழகத்துக்கு ஓர் ஆபத்து காத்திருப்பதை யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. சென்னையின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வரும் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியின் கட்டுமானப் பணிகளுக்கு கிருஷ்ணா தண்ணீர் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஏற்கெனவே கேரளம் (முல்லைப் பெரியாறு), கர்நாடகம் (காவிரி) தண்ணீர் வழங்குவதில் பிடிவாதம் காட்டும் நிலையில், ஆந்திராவிலிருந்து (கிருஷ்ணா) மட்டுமே ஓரளவு பிரச்னை இல்லாமல் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அமராவதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட பிறகு வரும் காலங்களில் கிருஷ்ணா நதி நீர் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு முழுமையாகக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. 

இது வாழ்வாதாரப் பிரச்னை என்பதால் தமிழக அரசு விழித்துக்கொண்டு கிருஷ்ணா நதிநீர் தடையின்றிக் கிடைப்பதற்கான உத்தரவாதத்தை ஆந்திர அரசிடமிருந்து பெறவேண்டியது கட்டாயமாகும். 

ஜனனி ரமேஷ்

குப்புற விழுவது ஏன்?


ஒருமுகமாக இந்தக் கார்யத்தைப் பண்ண வேண்டும், அப்போது பராக்குப் பார்க்கப்படாது என்பதால்தான் வெளியிலே ஒன்றையும் பார்க்காமல் பூமிப் பக்கமாகத் தலையைக் குனிந்துகொண்டு குப்புற வாக்கில் நமஸ்கரிப்பது, மற்றவர்களால் தலைகுனிவு ஏற்படுவது அவமானம். நாமே குனிவது பஹுமானம்!

பஹிர்முகமாக (வெளிமுகமாக) ஒரு ஜீவனை இழுக்கிற இந்தக் காரியங்களெல்லாமே மல்லாக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் லோகத்தின் திசையிலிருந்து திருப்பவே குப்புற நமஸ்கரிப்பது.

குப்புற விழுகிறது, முதுகு காட்டுகிறது - ‘புற முதுகு காட்டுவது’ என்கிறது - இதெல்லாம் அவமானம். ஆனால் மானம் என்பது ‘நான்’ என்கிற அஹம்பாவம் இருக்கிறபோதுதானே முக்கியம்? மநுஷ்ய வாழ்க்கையிலே ‘நான்’-பாவமும் மானமும், அதோடேயே அவமானமும் - அபிமானமுந்தான்! இந்த எல்லாமும் இல்லாமலிருக்க முடியாதுதான். (இவை) இல்லாமல் மட்டுமிருந்தால் நாமே ராஜா தான். என்ன ராஜா? ஆத்மாவை ஜயித்த ராஜா. ஜீவன் முக்தன் என்னும் ராஜா. அப்போது நமஸ்காரமே இல்லை. ஆனால் நம் மாதிரி நிலையிலே வாழ்க்கை நடத்துகிறதற்கு மானாவமானங்களை அவச்யமான இடங்களில் வைத்துக்கொண்டே இருப்போம். ரொம்பவும் அதைக் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சம் அடக்கி வைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதை வைத்துக் கொள்ளாமலே இருக்கிற இடங்களும் உண்டு என்று அறிவு பெற்று அங்கே மட்டும் தூக்கிப் போடுவோம். அந்த இடங்கள் என்ன? ஈச்வர ஸந்நிதானம், மஹான்கள், பெரியவர்களின் ஸந்நிதானம்தான். அங்கே மானமே வேண்டாம்! குப்புற விழுவோம்! புறமுதுகு காட்டுவோம்! ஆத்ம ஜயம் என்று சொன்னேனே, அந்த வெற்றிக்கு ஏற்றுகிற முதல் சின்னப் படியாக இங்கே இப்படிப் புறமுதுகு காட்டுவோம். பிற இடங்களிலும் ரொம்பவும் மானாவமானம் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சமாவது அடங்குவதற்கு இதுவே ஸஹாயம் செய்யும்.

Monday, November 02, 2015

ஜியோனி ஈலைப் ஈ8 (Gionee Elife E8)

ஜியோனி ஈலைப் ஈ8 (Gionee Elife E8)* டிஸ்ப்ளே – 6 இன்ச் 1440x2560 பிக்ஸல் 490PPI.
* பின்புற கேமரா – 24 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 8 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 2 GHz Octo-Core MediaTek Helio X10 MT6795.
* ரேம் – 3 GB.
* பேட்டரி – 3500 mAh.
* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 (Amigo 3.1)
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 64 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* எடை – 210 கிராம்.
* சிம் 1 – 4G மைக்ரோ சிம்; சிம் 2 – 3G மைக்ரோ சிம்.
* பிளஸ்: ஃபிங்கர் பிரின்ட் ஸ்கேனர், செயல்பாடு, டிஸ்ப்ளே, பேட்டரி.
* மைனஸ்: டிசைன், எடை, விலை.
விலை: ரூ.34,999.
(இந்த ஸ்மார்ட் போன் ஸ்நாப்டீல் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்கப்படுகிறது.)
Snapdeal: http://bit.ly/1ki0dwC


அமேசான் ஃபயர் டேப்லெட்: (Amazon Fire Tablet)


* இது ஒரு பட்ஜெட் டேப்லெட்.
* டிஸ்ப்ளே – 7 இன்ச் 1024x600 பிக்ஸல் 171 PPI.
* பின்புற கேமரா – 2 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 0.3 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 1.3GHz Quad-Core.
* ரேம் – 1 GB
* இயங்குதளம் – Fire OS.
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 8 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* எடை – 313 கிராம்.
* சிம் வசதி கிடையாது.
* பிளஸ்:  விலை,  இயங்குதளம்.
* மைனஸ்: எடை, டிஸ்ப்ளே.
விலை: $49.99

ஃபாஸில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் (Fossil Android Smart Watch)


* இது இன்டெல் பிராசஸரைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் வாட்ச்.
* ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் மற்றும் அதற்கு மேல் உள்ள ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள், ஐ ஓஎஸ் 8.2 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களைக் கொண்டுள்ள கேட்ஜெட்டுகளோடு இந்த ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துப் பயன்படுத்தலாம்.
* ப்ளூ-டூத் மூலம் இணைக்கப்படும் இந்த ஸ்மார்ட் வாட்ச், கூகுள் Fit, ஹெல்த், Jawbone UP, Under Armour UA Record ஆகிய பிட்நெஸ் அப்ளிகேஷன்களோடு வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் வாட்சைப் பயன்படுத்தலாம்.
* பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பது  இந்த ஸ்மார்ட் வாட்சின் பிளஸ்.
விலை: ரூ.18,000.


மோட்டோ எக்ஸ் ஸ்டைல்: (Moto X Style)

* டிஸ்ப்ளே – 5.7 இன்ச் 1440x2560 பிக்ஸல் 520PPI.
* பின்புற கேமரா – 21 மெகா பிக்ஸல்.
* முன்புற கேமரா – 5 மெகா பிக்ஸல்.
* பிராசஸர் – 1.7 GHz Hexa-core      Qualcomm Snapdragon 808 MSM8992.
* ரேம் – 3 GB
* பேட்டரி – 3000 mAh.
* இயங்குதளம் – ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1.1
* இன்டெர்னல் ஸ்டோரேஜ் – 16 GB.
* எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ் – 128 GB வரை.
* சிம் 1 & சிம் 2 – 4G GSM நானோ சிம்.
* பிளஸ்: எடை – 179 கிராம், டிஸ்ப்ளே, இயங்குதளம், எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், தரம்.
* மைனஸ்: சுமாரான கேமரா, பேட்டரி.
விலை: ரூ.31,999.
Flipkart: http://bit.ly/1GQW2lM

செ.கிஸோர் பிரசாத் கிரண்