Search This Blog

Sunday, July 05, 2015

4G

டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை நாடு முழுக்க அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது 4ஜி தொழில்நுட்பம். நம் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கும் இந்த 4ஜி தொழில்நுட்பம்தான், டிஜிட்டல் உலகில் அடுத்தப் புரட்சியைச் செய்யப்போகிறது. 
 
இன்னும் 3ஜி தொழில்நுட்பமே எல்லோரிடமும் முறையாகச் சென்று சேரவில்லை. அதற்குள் 4ஜி நடைமுறைக்கு வந்துவிடப் போகிறதா என்று நீங்கள் வியக்கலாம்.

 இன்றைய உலகம் தொழில் நுட்ப ரீதியாக அதிபயங்கர வேகத்தில் சுழன்று கொண்டி ருப்பதால், அதற்கு ஈடுகொடுக்க 4ஜி போன்ற வேகமான தொழில் நுட்ப வசதிகள் அவசியம் தேவைப்படுகின்றன. கூடிய சீக்கிரத்தில் நம் கையில் தவழ்ந்து நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது 4ஜி தொழில் நுட்பம். 4ஜி ஏற்படுத்தும் அதிரடி மாற்றங்களைப் பார்க்கும்முன், அந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.


4ஜி-ன் அவதாரம்!

கடந்த 2002-ம் ஆண்டு 4ஜி-க்கான திட்டங் களைச் சொல்லியிருந்தது சுவிட்சர்லாந்தில் உள்ள ITU-T (ITU - Telecommunication Standardization Sector)  என்ற அமைப்பு. அதன் அடிப்படையில் கடந்த 2005-ம் ஆண்டு தென் கொரியா WiMax தொழில் நுட்பத்துடன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மற்ற சில நாடுகளும் இந்தச் சேவையினைத் தரத் தொடங்கின. அந்த வரிசையில் இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங் களும் 4ஜி சேவையை  வழங்கத் தீர்மானித்து, அதற்கான தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வந்தன.

4ஜி தொழில் நுட்பமும், பயன்பாடும்!

4ஜி என்பதை 3ஜி-ன் அடுத்த வெர்ஷன் என்று சொல்லலாம். நான்காம் தலைமுறை அலைவரிசை சேவையான இது, 3ஜி-யைவிட 10 மடங்கு அதிகமான தொலைத்தொடர்பு வேகத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரயிலில், காரில் பயணிக்கும்போது 3-ஜி  இணைப்பானது விட்டுவிட்டுக் கிடைக்கும். ஆனால், இந்தப் பிரச்னை 4ஜி-ல் கிடையாது. ஏனெனில் கார், ரயில் போன்ற வற்றில் பயணிக்கும்போது விநாடிக்கு 100 மெகாபிட் அளவில் இணைய இணைப்பைப் பெற முடியும். நடக்கும்போது ஒரு கிகாபிட் அளவுக்குக் கிடைக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங் கள் விளம்பரம் செய்கிறது.

3ஜி போல, 4ஜியும் வயர்லெஸ் மோடமாகவும் செயல்படும். மேலும், வீடியோ காலிங், மொபைல் டி‌வி, மிக வேகமான டேட்டா சர்வீஸ், வாய்ஸ் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸிங் போன்ற சேவைகளை 3ஜி சேவை யில் பெற்றதைவிட மிகவும் துல்லியமாகவும், வேகமாகவும் 4ஜி மூலம் பெற முடியும். 4ஜி இணையப் பயன்பாடுகளுக்கு ipv6 (தற்போது நாம் பயன்படுத்து வது ipv4) என்கிற தொழில்நுட்ப முறையைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இதனால் மிக அதிக எண்ணிக்கை யிலான வயர்லெஸ் சேவைகளை நம்மால் பயன்படுத்த முடியும்.

4ஜி சேவைக்கு மிக அதிகத் திறன் வாய்ந்த அட்வான்ஸ்டு ஆன்டெனாக்கள் பயன்படுத்தப் படுகின்றன என்பதால், சிக்னல் கவரேஜ் எந்தவொரு இடையூறும் இல்லாமல் முறையாகக் கிடைக்கும். அதேபோல, 4ஜி சேவையானது முழுவதுமாக IP based Integrated Network என்பதால், இந்தச் சேவை மூலம் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்படும்.4ஜியிலும் பலவகையான சேவை முறைகள் உள்ளன. இதில் இந்தியா டிடிடி மற்றும் எல்டிஇ (Time-Division Duplex, Long-Term Evolution) என்ற 4ஜி முறையைப் பயன்படுத்துகிறது. இதனால்  4ஜி-ல் மிகக்  குறைவான விலைக்கு டேட்டா சர்வீஸ்களை நம்மால் பயன்படுத்த முடியும்.

ஆனால், சர்வீஸ் தருகிற ஆபரேட்டரைப் பொறுத்து இந்தக் கட்டணம் கூடவோ, குறையவோ செய்யலாம்.

4ஜி ஸ்மார்ட் போன்கள்!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான போன்கள் 3G வசதி மட்டுமே கொண்டிருக்கின்றன என்பதால், 4G தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த எல்டிஇ வசதியுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் சிம் கார்டுகளை வாங்க வேண்டும் என்பது மட்டுமே தற்போதைய குறையாக இருக்கிறது.

இந்தியாவில் 4G-யை பயன் படுத்த எல்டிஇ வசதி உள்ள போனை வாங்க வேண்டும். தற்போதைய நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஐபோன் 5, 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களில் எல்டிஇ தொழில் நுட்ப வசதி இருக்கிறது.

அதேபோல, ஹெச்டிசி ஒன் எக்ஸ்எல் (HTC One XL), ஹுவாய் அசெண்ட் பி1 எல்டிஇ (Huawei Ascend P1 LTE), சாம்சங் கேலக்ஸி நோட் 2 எல்டிஇ (Samsung Galaxy Note 2 LTE), சாம்சங் கேலக்ஸி எஸ்3 எல்டிஇ (Samsung Galaxy S3 LTE) ஆகிய ஸ்மார்ட் போன்கள் 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்திருக்கின்றன.

நோக்கியா லூமியா 638 மாடல் ரூ.5,399 விலையில் தற்போது கிடைக்கிறது. வருகிற நவம்பரில் வெளியாக இருக்கும் நோக்கியா லூமியா 820 எல்டிஇ (Nokia Lumia 820 LTE) மற்றும் நோக்கியா லூமியா 920 எல்டிஇ (Nokia Lumia 920 LTE) ஆகிய மொபைல்களும் 4ஜி தொழில்நுட்ப வசதியுடன் வெளிவர இருக்கின்றன.

வேகத்தின்  காரணம்!

3ஜி-யைவிட 4ஜி சேவை மிகவும் வேகமாக இருக்க மிக முக்கியக் காரணம், வை-ஃபை, டிஜிட்டல் டிவி, ரேடியோ மற்றும் ஏடிஎஸ்எல் பிராட்பேண்ட்களில் பயன் படுத்தி வரும் ஓஎஃப்டிஎம் (OFDM - Orthogonal Frequency Division Multiplexing) என்கிற வேகமான தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதுதான். இந்தத் தொழில் நுட்பம் நமக்குத் தொடர்ந்து இணையச் சேவையை இடையூறு எதுவுமில்லாமல் வழங்க வழிவகைச் செய்கிறது. அதே போல, எம்ஐஎம்ஓ (MIMO - Multiple input and multiple output) என்கிற தொழில்நுட்பமும் 4ஜி சேவை வேகமாக இயங்குவதற்குக் காரணமாக இருக்கிறது.

4ஜி சேவையானது 100Mbps டவுன்லோடு வேகத்தையும், 50Mbps அப்லோடு வேகத்தையும் தரும் என்று டெலிகாம் நிறுவனங் கள் தெரிவித்திருக்கின்றன. மேலும், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை ஐபோன் 5 கொண்டு சரிபார்த்தபோது, டவுன்லோடு 41Mbps வேகத்துக்குள்ளாகவும், அப்லோடு 14.3mbps வேகத்துக் குள்ளாகவும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

இதேபோல, ஹெச்டிசி, சாம்சங்க் ஸ்மார்ட் போன்களைக் கொண்டும் பரிசோதனை செய்ததில் 4ஜி சேவை மிக வேகமாகவும், துல்லியமாவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை நடைமுறையில் இருக்கும் 3ஜி சேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 3ஜி-யில் ஆவதைவிட 4ஜி-யில் மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடு ஆவதாகவும், 10 மடங்கு அதிக வேகத்தில் அப்லோடு ஆவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங் கள் தெரிவித்துள்ளன.

4ஜி சேவை தரும் நிறுவனங்கள்!

இன்றைய நிலையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்வதில் ஏர்டெல், ரிலையன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் வீடியோகான் போன்ற இந்தியாவின் மிக முக்கியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இதில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தான் 4ஜி சேவையை முதலில் அறிமுகம் செய்ய வேண்டும் என மும்முரமாகச் செயலாற்றி வருகின்றன.

தற்போதைய நிலையில், டெல்லி, மும்பை, பெங்களூரு, பூனே, கொல்கத்தா, சென்னை மற்றும் சண்டிகர் ஆகிய இடங் களில் 4ஜி தொழில் நுட்பத்திலான பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவையை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் தற்போது 3ஜி சேவை விலையிலேயே 4ஜி சேவையை வழங்கி இருக்கிறது. இதன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் 4ஜி போஸ்ட்பெய்டு திட்டங்களைக் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை செலுத்தி இந்தச்

சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

300 எம்பி (ரூ.100), 1ஜிபி (ரூ.250), 2ஜிபி (ரூ.450), 3ஜிபி (ரூ.650), 4ஜிபி (ரூ.750), 5ஜிபி (ரூ.850), 6ஜிபி (ரூ.950), 8ஜிபி (ரூ.1,250), 10ஜிபி (ரூ.1,500) என்கிற விலையில் 4ஜி சேவையை பார்தி ஏர்டெல் வழங்குகிறது. இதற்கான 4ஜி வயர்லெஸ் மோடம்கள் அல்லது டேட்டா கார்டுகள் வாங்குவது அவசியமாகும்.

வீடியோகான் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 4ஜி சேவையை இன்னும் சில மாதங்களில் வழங்க இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றன. பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங் கள் 4ஜி சேவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், சகல வசதிகளும், தொழில்நுட்ப சாதனங்களையும் கொண்ட அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த விஷயத்தில் வாய்திறக்கா மலே இருப்பது மர்மமாகவே இருக்கிறது.

 
4ஜி-யின் ஜாம்பவான்! 

நம் நாட்டில் செல்போனைப் பயன்படுத்து வதில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த ரிலையன்ஸ் நிறுவனம், 4ஜி சேவை வழங்குவ தில் ஜாம்பவானாக இருக்கப் போகிறது. 4ஜி சேவையை இந்தியா முழுக்க அளிப்பதற் காகவே ரிலையன்ஸ் ஜியோ  (Reliance Jio) என்கிற நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டு களில் 4ஜி சேவைக் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக 77,000 கோடி ரூபாயை முதலீடு செய்தி ருக்கிறது. அதுமட்டுமின்றி,  இந்தச் சேவையை மும்பை, டெல்லி, குஜராத் எனப் பல இடங்களில் இலவசமாக வழங்கி பரிசோதனை மேற்கொண்டுள்ளது.

மேலும், 4ஜி சேவையை அறிமுகம் செய்த அடுத்த 50 மணி நேரங்களில், 50 லட்சம் வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. 4ஜி தொழில்நுட்ப நடைமுறைக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் மூலதனம் மீதான சராசரி வருமானம் 7% அதிகரித்திருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை மேம்பாட்டுக்காக பெருமளவில் முதலீடு செய் தாலும், மேலதிகமாக தேவைப் படும் தொகைக்கு வங்கிகளிடம் இருந்தும் தனியார் நிறுவனங் களிடம் இருந்தும் கடன் வாங்குகிறது. கொரியா டிரேடு இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷ னிடம் (K-sure) 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,750 கோடி) கடன் வாங்கியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களின் கூட்டத்தில் 4ஜி சேவையை வருகிற டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் போவதாகவும், அதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சில மாதங்கள் அவர்கள் 4ஜி சோதனைச் சேவையை மேற்கொள்வார்கள் என்பதையும் தெரிவித்திருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

4ஜி சேவையைப் பயன்படுத்த எல்டிஇ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் அவசியம் என்பதால், அந்தவகை ஸ்மார்ட் போன்களையும் 4,000 ரூபாய்க்கு குறைவான விலையில் டிசம்பர் மாதத்துக்குள் விற்பனைக்கு வெளியிடப் போவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித் துள்ளது.


ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இதில் வேகமாகக் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎஸ் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது. இந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை விரைவில் வழங்காமல் போனால், பிரச்னை அவர்களுக்குத்தான்.

4ஜி தொழில்நுட்பத்தின் வேகம் உண்மையிலேயே நாம் எதிர்பார்ப்பதைவிட மிக அதிகமானது. அது தரவிருக்கும் புதுவித அனுபவத்தை அனுபவிக்க நாம் எல்லோரும் காத்திருப்போமாக!

செ.கார்த்திகேயன்

4ஜி-யால் இணைந்த அம்பானிகள்!
எட்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சகோதரர்களான முகேஷ் அம்பானியையும், அனில் அம்பானியையும் இணைத்த பெருமை 4ஜி தொழில் நுட்பத்தையேச் சேரும். முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4-ஜி சேவையை அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்தே இருவருக்குமான இணைப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோவும் தான் வழங்க இருக்கும் 4ஜி சேவைக்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை அனில் அம்பானிக்குச் சொந்தமான நிறுவனத்தைப் பயன்படுத்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment