குறைந்த விலை, சிறந்த தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை கொண்டுள்ள ஷியோமி
நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட் போனான ரெட்மி நோட் 3-ஐ சமீபத்தில்
இந்தியாவில் வெளியிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன்,
பல பட்ஜெட் ஸ்மார்ட் போன்களுக்கு பலத்த போட்டியாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.
இது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போனாக இருந்தாலும் டிசைனில் எந்தவித குறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த போன் சரிபாதி அளவு மெட்டலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ‘Matte’ பினிஷும் அடங்கும்.

1.4 GHz ஹெக்ஸா-கோர் Qualcomm Snapdragon 605 SoC பிராசஸர் கொண்டு செயல்படும் இந்த ஸ்மார்ட் போன் இரண்டு மாடல்களில் வருகின்றன. 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி. மற்றொன்று, 3ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி .

மேலும், 32 ஜிபி வரை மைக்ரோ SD கார்டு மூலம் விரிவுபடுத்திக் கொள்ளலாம். 5.50 இன்ச் 1080x1920 பிக்ஸல் 403 PPI டிஸ்ப்ளேவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், 4050 எம்ஏஹெச் (mAh) பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் போனில் ஷியோமி நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதள டிசைனான MIUI 7 இந்த ஸ்மார்ட் போனிலும் அடங்கும். டூயல் சிம் எல்டிஇ (LTE) வசதி கொண்டுள்ள இந்த ரெட்மி நோட் 3, ஐந்து விரல் ரேகைகள் வரை ஸ்டோர் செய்துகொள்ளும் ‘Finger Print’ சென்சார், 16 மெகா பிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன்புற கேமராவை கொண்டுள்ளது.
விலை:
2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.9,999
3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் – ரூ.11,999
பிளஸ்:
டிசைன்
டிஸ்ப்ளே
தொழில்நுட்பம்
பேட்டரி
மைனஸ்:
NFC வசதி கிடையாது 32 ஜிபி வரைதான் SD கார்டு மூலம் மெமரியை விரிவுபடுத்த முடியும்
சுமாரான கேமரா
செ.கிஸோர் பிரசாத் கிரண்
No comments:
Post a Comment