Search This Blog

Saturday, February 25, 2012

அருள் மழை ----------- 41


திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி [பெரியவாளின் தாயார்] கண் விழித்தபோது, பக்கத்தில் சுவாமிநாதனைக் காணவில்லை.வீடெல்லாம் தேடியாகிவிட்டது. ஊர் மூலைகளெல்லாம் துழாவி வந்தாகிவிட்டது.காோம். "ஒருவேளை சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமி வீட்டுக்குப் படிக்க சென்றுவிட்டானோ?" என்றுபோய்ப் பார்த்தால், முதலுக்கே மோசம்.நண்பனையும் காணோம்!
 
  இரண்டு குழந்தைகளையும் தேடி ஊரே அல்லோலகல்லோலப் பட்டது.அந்த சமயத்தில் மடத்திலிருந்து ஒரு ஆள் வந்து,"குழந்தைகள் மடத்துக்கு வந்தார்கள்.பத்திரமாக இருக்கிறார்கள்.சுவாமிகள் உங்களிடம் சொல்லிவிட்டு வரச் சொன்னார். நாலு நாட்கள் வைத்திருந்து அப்புறம் குழந்தைகளை அனுப்புவதாகச் சொன்னார்!" என்றார். இதைக் கேட்ட பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. "எதற்காக அத்தனை பெரிய குரு இத்தனை சின்னக்குழந்தைகளை விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்?"என்பது புதிராக இருந்தது.

 உண்மை இதுதான். ஒரு நாள் சுவாமிநாதன், ஜகத்குருவாக மலர்ந்து காமகோடி பீடத்தை அலங்கரிக்கப் போகிறார், தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது.பின்னால் இவனுடன் சில நாட்கள் சேர்ந்திருக்க வாய்ப்பு கிடைக்கப் போவதில்லையே?அந்த ஆசையை நாலு நாளாவது வைத்துக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று பரம குருவானவர், தீர்க்க திருஷ்டியுடன் முடிவு செய்திருக்க வேண்டும். சுவாமிநாதன் அவரை பெருமுக்கலில் பார்த்ததற்கு அடுத்து அவர் ஸாரம் என்ற இடத்துக்குப் போய்விட்டார்.
இந்தக் குழந்தைக்கோ அவரைப் பார்த்தது முதல் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. உடனே, சொல்லாமல் கொள்ளாமல் துணைக்குசிநேகிதனையும் அழைத்துக் கொண்டு அங்கே போய் விட்டான்.ஆச்சார்யரோ, "முதலில் ஆத்திலே சொல்லிட்டு வந்தாயா?"என்று கேட்டார். "இல்லை ஸ்வாமி! உங்களைப் பாக்கணும்னு தோணித்து: உடனே கிளம்பி வந்துட்டேன்." என்கிறான் குழந்தை.இதற்காக குரு சந்தோஷப்பட்டாராம். ஏனெனில், இப்படி வீட்டையும் வாசலையும் விட்டு வரவாதானே அவருக்கு வேணும்!
 எல்லா தகப்பனாரையும் போல் தன் பிள்ளை டாக்டராக அல்லது இன்ஜினீயராக வர வேண்டுமென்று தந்தை சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆசைப்பட்டார். இத்தனை சின்ன வயசில் இப்படி மடத்தை நோக்கி ஓடினால் எந்தத் தந்தைதான் கவலைப்படமாட்டார்? "இது என்ன தேறுமா...தேறாதா? படிப்பு கிடிப்பு வருமா?"என்ற பயம் அவரை உலுக்கியது. உடனே சிநேகிதன் கிருஷ்ணஸ்வாமியினĮ 1; அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்.
  "வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. 

இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார்.அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை.சுவாமிநாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலை யேபடாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை. இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பெசினார்.

வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!

அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க ஆவல் கொண்ட ஜோசியர்,அங்கிருந்த சுவாமிநாதனிடம்,"போ,கால் அலம்பிண்டு வா" என்று கட்டளையிட்டார். அலம்பிக் கொண்டு வந்தவனை, நாற்காலி ஒன்றில் அமர்த்தி அழுக்கு ஒட்டிக் கொண்டிருந்த காலில் தண்ணீர் விட்டுத் தன் கையாலேயே அலம்பினார்....துடைத்தார். சற்று தூக்கிப் பார்த்தார்.அப்படியே  கெட்டியாய் பிடித்துக் கொண்டு அழுதார். காலை விடவேயில்லை.

  "விடுங்கோ மாமா!" என்ற சிறுவனின் குரலோ, "என்ன இது! குழந்தை காலை பிடிச்சுண்டு...விடு" என்ற சுப்ரமணிய சாஸ்திரியின் குரலோ ஜோசியர் காதில் விழவேயில்லை.அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழமக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்கள என்று நினைத்தார் போலும்.

   காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன் அவர் என்று கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர் கண்ணுக்குப்புலப்பட்டன.

 முதன் முதலில் பெரியவாளுக்குப் பாத பூஜை பண்ணும் பாக்கியம் இந்த வெங்கட் ராமய்யருக்குத்தான் கிடைத்தது.நல்ல கைராசிதான்! விஷ்ணுவுக்கும் கிடைக்காத பாதத்தை இவர் பார்த்து விட்டார் என்றால், இவர் பாக்கியமே பாக்கியம்!.
[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி டைப் அடிக்கப்பட்டது]

Friday, February 24, 2012

‘ஜெ’ நிஜமான தமிழக அன்னையாவது எப்படி? - ஓ பக்கங்கள்,ஞாநி

மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு,


வணக்கம். அன்புள்ள என்று விளித்து எழுதத்தான் ஆசை. ஆனால், மெய்யாகவே உங்களுக்கு தமிழக மக்கள் மீது அன்பிருக்கிறதா என்பதை, இந்தக் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை நீங்கள் எடுக்கப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.  நீங்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் உங்களுக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. முதல் கடிதம் பகிரங்கமாக இதே ‘ஓ பக்கங்களி’ல் செப்டம்பர் 24, 2011 அன்று எழுதினேன். அந்தக் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் அச்சத்தைப் போக்காமல் உலையைத் தொடங்கக் கூடாது என்று உங்கள் அமைச்சரவை தீர்மானம் போட்டு பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதியதைப் பாராட்டியிருந்தேன். அணு உலை எதிர்ப்பில் தொடர்ந்து பிடிவாதமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக் கொண்டேன்.அடுத்த இரு கடிதங்களும் பகிரங்க கடிதங்கள் அல்ல. முறையாக உங்கள் அலுவலகத்தில் அளிக்கப்பட்டவை. ஜூலை 11,2011 அன்று அனுப்பிய கடிதத்தில் இந்தியாவிலேயே ப்ளஸ் டூவில் புகைப்படம் கற்றுத் தந்த பெருமைக்குரிய ஒரே பள்ளியான சூளைமேடு நகராட்சிப் பள்ளியில் அந்தத் தொழில் பாடப் பிரிவு நிறுத்தப்பட்டதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோதே, அந்தப் பாடப் பிரிவை மூடவேண்டாமென்று சென்ற வருடம் நான் இந்த ஓ பக்கங்களில் அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். நிறுத்தப் போவதில்லை என்று மேயர் மா.சுப்பிரமணியன் எனக்குத் தெரிவித்தார். ஆனால், இந்த வருட கல்வியாண்டு ஆரம்பத்தில் பாடப்பிரிவு மூடப்பட்டது தெரிந்ததும், உங்களுக்குக் கடிதம் எழுதினேன். ஜூலை 11 அன்று அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 10 அன்று சென்னை மாநகராட்சியிலிருந்து பதில் வந்தது. என் கோரிக்கை ஏற்கப்படவில்லையாம். காரணம் என்ன? 26.10.2009ல் போட்ட அரசாணை எண் 277ன்படி இந்தப் பாடப்பிரிவு தொழிற்கல்விப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது தான் காரணமாம்.


இதுதான் அரசு இயந்திரத்தின் அசட்டுத்தனம். 2009ஆம் வருட ஆணைதான் ஸ்டாலின் காலத்தில் போடப்பட்டது. அதை மாற்றும்படிதான் நான் உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். ஏன் மாற்றமுடியாது என்பதற்கு எந்தக் காரணமும் சொல்லாமல், அதே ஆணையைக் காட்டி இப்போது கடிதம் அனுப்புகிறது அரசு இயந்திரம்.இந்த மாதிரி அதிகார வர்க்கத்தை வைத்துக்கொண்டு இங்கே ஒரு சின்ன மாற்றம் கூட வராது. நியாயப்படி என்ன செய்திருக்க வேண்டும்? உங்கள் அலுவலகம் என் கடிதத்தை மாநகராட்சிக்கு அனுப்பி காரணம் கேட்டிருக்க வேண்டும். காரணம் தெரிந்ததும் அதைப் பரிசீலித்து முடிவெடுத்து எனக்குப் பதிலை உங்கள் அலுவலகம்தான் அனுப்ப வேண்டும். ஆனால், என் கடிதத்தை உங்கள் அலுவலகம் மாநகராட்சிக்கு அனுப்பியதும் அதுவே நேரடியாக எனக்குப் பதில் அனுப்பிவிட்டது. முதலமைச்சரான நீங்கள் என் கடிதத்தைப் பார்க்கவே இல்லை என்று தோன்றுகிறது.எனவேதான் உங்களுக்கு நான் அனுப்பிய மூன்றாவது கடிதத்தை, கோட்டையில் உங்கள் அலுவலகத்துக்கே வந்து உரிய உயர் அதிகாரியிடம் நேரில் கொடுத்தேன். பிப்ரவரி 7ந் தேதி கொடுக்கப்பட்ட அந்தக் கடிதத்துக்கு, ஒரு வாரம் கழித்து நினைவூட்டல் மின்னஞ்சல் அனுப்பியும் இன்றுவரை எந்தப் பதிலும் இல்லை. இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது. நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம். கேரள, மேற்கு வங்க மாநில அரசுகள் அணு உலை தங்கள் மாநிலத்தில் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துள்ள சரியான நிலைப்பாட்டை, தமிழக அரசும் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரில் உங்களுக்குத் தகுந்த காரணங்களுடன் விளக்கித் தெரிவிக்க சுமார் 20 நிமிட பவர் பாய்ண்ட் விளக்கத்துடன் உங்களைச் சந்திக்க விரும்பினோம். ஏனோ நீங்கள் நேரம் ஒதுக்கவில்லை. தினசரி கட்சித் தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினரின் திருமண நாள், பிறந்த நாட்களுக்கெல்லாம் வாழ்த்து பெற உங்களைச் சந்திக்க முடிகிறது. எனவே தமிழகத்தின் வாழ்வா, சாவா பிரச்னை பற்றி எடுத்துரைக்க விரும்பும் எழுத்தாளர்களைச் சந்திக்க முடியாத அளவு உங்களுக்கு வேலைச் சுமை இருக்கிறது என்று புரிந்துகொள்கிறேன்.


சந்திப்பதைவிடச் சிந்திப்பதுதான் முக்கியம். எங்கள் கடிதத்துடன், ஏன் அணு உலை கூடாது என்பதை விளக்கும் 48 பக்க கேள்வி பதில் தொகுப்பையும் கொடுத்திருந்தேன். அதைப் படித்துவிட்டு நீங்கள் சிந்தித்திருந்தாலே போதுமானது. அணு உலைகள் பாதுகாப்பானவை, அணுமின்சாரம் விலை மலிவானது, அணு மின்சாரத்தை விட்டால் வேறு வழியில்லை, அணுமின்சாரம் தமிழக மின் பஞ்சத்தைத் தீர்த்துவிடும் என்ற நான்கு பொய்களை மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வருகின்றன. இவை நான்குமே பொய்கள்தான் என்பதை போதுமான புள்ளிவிவரங்களுடன் அந்தக் கட்டுரைத் தொகுப்பில் விளக்கியிருக்கிறேன்.  கூடங்குளம் அணு உலையைத் தொடங்கக் கூடாது என்று போராடும் மக்கள் பக்கம் நீங்கள் இறுதி வரை நிற்பீர்கள் என்று கடந்த நான்கு மாதங்களாக இருந்து வந்த நம்பிக்கை அண்மையில் எனக்குக் குறைந்துவிட்டது. காரணங்கள் உண்டு. மத்திய அரசின் நிபுணர் குழு மக்களைச் சந்திக்க மறுத்தது. போராடுவோர் சார்பில் அனுப்ப முன்வந்த விஞ்ஞானிகளையும் சந்திக்க மறுத்தது. இந்த நிலையில் நீங்கள் ஒரு மாநில அரசுக் குழுவை நியமித்தீர்கள். யாரை? கூடங்குளம் உலைப்பகுதியில் மக்களே வாழவில்லை என்று உலைக்கான இடம் தேடிய போதே ஒரு சார்பாக அடித்துப் பேசிய அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், அணுசக்தி துறையின் நிதி உதவியுடன் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் இருவர். எப்படி விளங்கும்?! இந்தக் குழுவும் மக் களைச் சந்திக்க மறுத்தது. மக்கள் சார்பான விஞ்ஞானிகளைச் சந்திக்கவும் மறுத்தது. இந்தக் கடிதத்தை நீங்கள் (படித்தால்...) படிக்கிற வேளையில் அந்தக் குழு உலை பாதுகாப்பானது என்று அறிக்கையே உங்களிடம் கொடுத்துவிட்டிருக்கக்கூடும். அந்தக் குழுவின் தலைவர் இனியன் என்பவர் என்று உங்கள் அரசுதான் சொல்கிறதே ஒழிய மத்திய காங்கிரஸ் அமைச்சரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து அவதூறு செய்துவருபவருமான நாராயணசாமி, அந்தக் குழுவை சீனிவாசன் குழு, சீனிவாசன் தலைமையிலான குழு என்றேதான் டி.வி.பேட்டிகளில் சொல்லிவருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டைப் போக்குவேன் என்று பிரசாரம் செய்துதான் ஆட்சியைப் பிடித்தீர்கள். ஆனால், உங்கள் ஆட்சியில் ஏன் மின்வெட்டு வீராசாமி காலத்தை விட அதிகமாக இருக்கிறது? காரணம் இந்த மின்வெட்டு செயற்கையானது என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. மத்திய அரசால் நிர்ப்பந்திக்கப்பட்ட மின்வெட்டு என்று முடிவுக்கு வரத் தோன்றுகிறது. பழையது வீராசாமி பவர் கட். இது நாராயணசாமி பவர் கட். கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏற்க வைப்பதற்காகச் செயற்கையாக மத்திய அரசால் எடுக்கப்படும் நடவடிக்கை என்று நம்புவதற்கு நிறையவே இடம் இருக்கிறது. காரணம், மாநிலத் தொகுப்புக்குத் தர வேண்டிய அளவில் ஆயிரம் மெகாவாட்டைக் குறைத்தே மத்திய அரசு கொடுத்து வருகிறது. அரசுக்கு மின்சாரம் தரமுடியாது என்று சொல்லும் நான்கு தனியார் நிறுவனங்களை நீங்கள் நினைத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் நாட்டுடமையாக்க முடியாதா? அல்லது அவர்களுக்குத் தரவேண்டிய பண பாக்கியை செலுத்த, மேற்கு வங்க மம்தா அரசுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி கொடுத்தது போல இங்கேயும் கேட்டு வாங்க முடியாதா? 


கூடங்குளம் இயங்கினால்கூட கிடைக்கப் போவது வெறும் 400 மெகாவாட்தானே. தமிழகத்தில் தற்காலிகமாக இருக்கும் மின் பற்றாக்குறையைத் தீர்க்க அது உதவவே உதவாது. நமது மின்பற்றாக்குறையைத் தீர்க்க மாற்றுவழிகளையே நாம் மேற்கொள்ள வேண்டும். அணு உலையை நாடுவது என்பது வாணலியிலிருந்து அடுப்பில் குதிப்பதற்குச் சமமாகும். குண்டு பல்புகளை சி.எஃப்.எல். குழல்பல்புகளாக மாற்றினாலே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகுமே. மழை நீர் சேகரிப்பு போல ஒரே ஆணையில் இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றிவிட முடியும். தொலை நோக்கில் பார்க்கும்போது மின் கடத்து வதில் விரயமாகும் 40 சதவிகிதத்தைப் பாதி குறைத்தாலே புதிய மின் உற்பத்தியே நமக்குத் தேவைப்படாது. உங்கள் நண்பர் நரேந்திர மோடி இந்த வாரம் கூட அவர் மாநிலத்தில் சூரிய மின்சக்தி நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆறே மாதங்களில் 100 மெகாவாட் அவர் இலக்கு.என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னி குக்கை நினைவுகூர்வது போல தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச்சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம். 

ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர்.  

மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். 

அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்.

அன்புள்ள
ஞாநி

அருள் மழை 39


காஞ்சி மகா பெரியவா ஓரிடத்தில் தங்கியிருந்தார்.அன்று 'ஏகாதசி'.தண்ணீர் கூட சாப்பிடமாட்டார்.அங்கே ஒருவர் மின்சாரம் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.மணி ஆகிக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பெரியவா,"இந்த ஆள் சாப்பிடவே போகாமல் வெலை செய்துகொண்டிருக்கிறார்! சாப்பிட்டு விட்டு வரச்சொல்லுங்கள்."என்கிறார். அதைக் கேட்டுவிட்டு அவர் ", இன்று ஏகாதசி, நான் சாப்பிட மாட்டேன்." என்றார். அவர் மராட்டிக்காரர்.மராட்டியர் ஏகாதசி உபவாசங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.ஆச்சர்யப்பட்ட பெரியவா, "சரி,சாப்பிட வேண்டாம்.டீ யாவது குடித்துவிட்டு வரச்சொல்லுங்கள்." என்றார். அவரோ, "நான் தண்ணி கூடக் குடிக்க மாட்டேன்.நீங்ககவலைப்பட வேண்டாம்."என்றார். அதைக் கேட்டதும் அன்று முதல் ஏகாதசியில் குடித்த வந்த பாலையும் பெரியவா விட்டுவிட்டார்.அந்த பழுது பார்க்க வந்தவரிடமிருந்து ஓர் உபதேசம் பெற்றதாக நினைத்தாரோ இந்த ஜகத்குரு!

இப்படிஏகாதசி தண்ணீர்கூடஇல்லாமல் கழிந்தது. மறுநாள் 'துவாதசி'. ஏகாதசியில் பட்டினிகிடக்காவிட்டால்கூடநாமெல்லாம் துவாதசியில், 'பாரணை' என்று சொல்லிக்கொண்டுசீக்கிரமாகச்சாப்பிட உட்கார்ந்துவிடுவோம். சாஸ்திரப்படி, துவாதசி ஸ்ரவண நட்சத்திரத்தில் வந்துவிட்டால் ஏகாதசிக்கு பட்டினி கிடக்காவிட்டாலும் துவாதசியில் தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என்பர்.அப்படிப்பட்ட துவாதசியாகஅமைந்துவிட்டதால் பெரியவாளுக்கு அன்றும் உபவாசம். அடுத்தநாள் 'பிரதோஷம்'. அதில் பகலெல்லாம்விரதமிருந்துஇரவு 'சிவபூஜை' பண்ணி, சிவதரிசனமான பின்தான்உண்பது வழக்கம். அதிலும் ஞாயிற்றுக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால் சூரியாஸ்தமனம் ஆன பிறகு சாப்பிடக் கூடாது. நாலாம் நாள் 'மகாசிவராத்திரி'.அன்றும்உபவாசம். தீர்த்தமாட மட்டும்தான் சுவாமிகள் தண்ணீரைப் பார்த்தார்.அவ்வளவுகடுமையாக உபவாசங்களைத்தொடர்ந்துஅனுஷ்டித்தவர் அவர்.'அப்படிப்பட்டவர் தான் வேளாவேளைக்குப் பசியெடுக்காத நிலை.' எனக்குஇன்னும் வரவில்லைஎன்கிறார்.

Thursday, February 23, 2012

தமிழகம்... இருளகம்!


''இந்தியாவின் மின் தேவை 2017-ல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலக்கரியைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் அனல் மின் திட்டங்களே இந்தத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும். அந்த முக்கியமான தருணத்துக்கேற்ப நாங்கள் இப்போதே திட்டமிடுகிறோம்!''- இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது.  ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங் களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக் கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன!

தோஷிபா - ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத் தொடக்க விழாவில் நம்முடைய முதல்வரும் பங்கேற்றிருக்கிறார். நாட்டிலேயே பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கும் அவர்,  தமிழகத்தில் மட்டும் 282 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதி அளித்திருக்கிறார்.ஒருகாலத்தில் மூன்று ஷிஃப்ட்களை இயக்கி, கடந்த சில ஆண்டுகளாக இரண்டு ஷிஃப்ட்களாக இயக்கத்தைக் குறைத்து, இப்போது ஒரு ஷிஃப்ட் இயக்கத்துக்கே அல்லாடும் ஆயிரக்கணக்கான உள்ளூர் சிறு, குறுந்தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மின்வெட்டுப் பிரச்னை தொடர்பாகப் பதில் சொல்ல முடியாத தமிழக முதல்வர்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க இப்படிக் கூவி அழைத்திருக்கிறார்!தமிழகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் 3,000 மெகா வாட் மின் தட்டுப்பாடு திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்புகளுக்குப் பின்... குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாகவே சராசரியாக ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 400 மெகா வாட் மின் தேவை அதிகரித்துக்கொண்டேவந்தது. பன்னாட்டு நிறுவனங்களை ஓடியோடி அழைத்தவர்கள் அவற்றுக்குத் தேவையான மின் கட்டமைப்பை உருவாக்கி இருக்க வேண்டுமா, இல்லையா?கடந்த 2005-ல் தமிழகத்தின் மின் தேவை 7,662 மெகா வாட்; உற்பத்தி 9,600 மெகா வாட். இப்போது தேவை 12,000 மெகா வாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி 7,500 மெகா வாட்டாகக் குறைந்திருக்கிறது. காரணம் என்ன?

ஆசியாவிலேயே அதிவேகமாகக் காற்று வீசும் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழியும் முப்பந்தலும். தமிழக அரசு திட்டமிட்டு இருந்தால், தென் மாவட்டங்களில் மட்டும் 5,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் மிக்க காற்றாலைகளை இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிறுவி இருக்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களைக் கோலோச்ச விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தது அரசாங்கம்.மின் உற்பத்தியில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் காட்டிய அலட்சியத்துக்கு, எண்ணூர் அனல் மின் நிலையம் ஒரு நல்ல உதாரணம். தன் ஆயுட்காலத்தைத் தாண்டியே 40 ஆண்டுகளாகிவிட்ட இந்த மின் நிலையத்தை இன்னமும்கூட 450 மெகா வாட்டுகளுக்கு நம்பி இருக்கிறது தமிழகம்!பராமரிப்பிலும் இதே கதிதான். தமிழகத்தில் மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்ட அணைகளில் பெரும்பாலானவற்றை சகதி சூழ்ந்திருக்கிறது. புனல் மின்சார உற்பத்தி சரி பாதியாகக் குறைந்ததில் நீர்நிலைகள், அணைகள் முறையாகப் பராமரிக்கப்படா ததற்குப் பெரும் பங்கு உண்டு.சரி, ஒரு மாநிலமே இருண்டுகிடக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையே மாறி இருக்கிறது. ஆனால், அதே மாநிலத்தின் 30 சதவிகித மின்சாரம் 24 மணி நேரமும் எந்தத் தடங்கலும் இன்றி பெருநிறுவனங்களுக் குப் போவது ஆட்சியாளர்களுக்கு எப்படி உறுத்தாமல் இருக்கிறது? பெருநிறுவனங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்கும் இதில் பங்கு உண்டு அல்லவா?நெய்வேலியில் கடந்த ஆண்டு மட்டும் 21.586 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது; 17,455.90 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச உற்பத்தி இது!'' என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.ஜெயராமன். ஆனால், தமிழகமோ இருளில் தத்தளிக்கிறது. (தமிழகத்தின் மின் தேவைக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பங்களிப்பு வெறும் 15 சதவிகிதம்தான்!) மத்திய மின்சாரத் தொகுப்பில் இருந்து தமிழகத் துக்கு குறிப்பிடத்தக்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. தேசிய நலன் பேசுபவர் கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

கூடங்குளத்தில் தங்கள் சரக்கை விற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் தூதர் அலெக்ஸாண்டர் கடாக்டின், ''தமிழகத்தின் மின் தேவைக்கு கூடங்குளம் அணு உலையைச் செயல்பட அனுமதிப்பதுதான் தீர்வு!'' என்கிறார். பிரதமர் மன் மோகன் சிங்கும் காங்கிரஸ்காரர்களும் அதையே சொல்கிறார்கள் என்றால், இவர்கள் யாருடைய தூதர்கள்? 

சமஸ்
விகடன் 

அருள் மழை ( நயன தீக்ஷை ) ----------- 40



உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு. காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு. ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்". பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் காமாக்ஷித் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!

Wednesday, February 22, 2012

மகா பெரியவா- திருஆனைக்கா செல்லப்பிள்ளை! (தெய்வத்தின் குரலிலிருந்து...)


பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின்கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மகா கோபிஷ்டர் கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவார் என்றால், அப்படிப்பட்டவர் வெகு நல்ல மனம், உயர்ந்த அன்புள்ளம் படைத்தவ ராகத்தானே இருக்க வேண்டும். இப்படி ஒரு உதாஹரணம் பிள்ளையார் விஷயமாக இருக்கிறது.நம் எல்லோரிடமும், ஈ எறும்பில் இருந்து ஆரம்பித்து அனைத்து ஜீவராசிகளிடமும் பரம கிருபையோடு இருக்கக்கூடியவர் யார்? ஸாக்ஷ£த் அம்பாள்தான். இத்தனை ஜீவராசி களுக்கும் தாயாக இருக்கப்பட்ட அகிலாண்ட ஜனனி அவள்தானே? அப்படிப்பட்ட அந்த அகிலாண்டேச்வரியே ஒரு ஸமயம் உக்ர ரூபம் கொண்டிருந்தாள். ஜம்புகேச்வரத்தில் (திருவானைக்காவில்) இருக்கப்பட்ட அகிலாண்டேச்வரி, கலிகாலத்தில் ஜனங்கள் போகிற போக்கைப் பார்த்து இப்படி உக்கிர கோலமாக ஆகிவிட்டாள். ஸகல சக்தியும் அவள்தான் ஆகையால் அன்பில் பரம ஸெளம்யமான லலிதாம்பாளாக இருக்கப்பட்ட அவளே கோபம் வந்தால் அதன் உச்சியில் காளியாயிருப்பாள். இப்போது அப்படித்தான் ஆகியிருந்தாள். கலியைக் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அவதாரம் செய்திருந்த நம்முடைய ஆச்சார்யாள் அங்கே வந்தார். பரமேச்வர அவதாரம் ஆனதால், அவரால் உக்ர கோலத்திலிருக்கிற அம்பாளிடமும் போக முடியும். ஆனாலும் அவர் இந்த ஸந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிள்ளையாரின் அன்பு மனப் பெருமையை உலகத்துக்குத் தெரிவிக்க நினைத்தார். அதனால் அம்பாளுக்கு நேர் எதிரே, கோயில் முடிந்து மதில் வந்துவிடுகிற அவ்வளவு தூரத்திலே, பெரிசாக ஒரு பிள்ளையாரை பிரதிஷ்டை பண்ணிவிட்டார்.

அவ்வளவுதான் செல்லப்பிள்ளை எதிரே இருக்கிறான் என்றதும் அம்பாளுடைய அத்தனை உக்கிரமும் போன இடம் தெரியாமல் போய் விட்டது! அப்போது அம்பாளைவிட்டு போயிருந்த கோபம் மறுபடியும் ஒருபோதும் அவளிடம் திரும்பிவிடக் கூடாதென்று, நினைத்தார் ஆச்சார்யாள். அதனால் அந்த உக்ர கலைகளை இரண்டு தாடங்கங்களில் ஆகர்ஷித்து சமனம் செய்தார் (அடக்கினார்). அந்த தாடங்கங்களை அம்பாளின் காதுகளிலேயே அணிவித்தார். ஜம்புகேஸ்வரம், திரு ஆனைக்கா இரண்டு பெயர்களிலுமே பிள்ளையார் சம்பந்தமிருக்கிறது. ஜம்பு என்பது நாவல் மரம். பிள்ளையாருக்கு ரொம்பப் பிடித்தது நாவல் பழம். திருஆனைக்கா என்றபோதும் அதில் ஆனை வந்து உட்கார்ந்து கொண்டு கஜானன மூர்த்தியை ஞாபகப்படுத்துகிறது.

- மகா பெரியவா (தெய்வத்தின் குரலிலிருந்து...)

Tuesday, February 21, 2012

ஜகம் நீ... அகம் நீ..! -1

'சின்ன காஞ்சிபுரத்துல, வரதராஜபெருமாள் ஸ்வாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுல, தென்கிழக்கே, வேகவதி ஆற்றுக்கும் பாலாற்றுக்கும் இடையிலே இருக்கிற சிற்றூர்தான் தேனம்பாக்கம்.1952-ல், தெற்கே யாத்திரை எல்லாம் முடிஞ்சு, மகா பெரியவா காஞ்சி புரம் திரும்பினார். காஞ்சிபுரம் வர்ற வழியிலே பாழடைஞ்சு, சிதிலமாகிக் கிடந்த ஒரு கோயிலைப் பார்த்தார்!' என்று ஆரம்பித்தார், சங்கர பக்த ஜன சபாவின் செயலர் ஜி.வைத்தியநாதன்.  ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அது. சிவபெருமானை பிரம்மா பூஜை பண்ணின புண்ணிய ஸ்தலம்! 'இப்படி சிதிலம் அடைஞ்சு கிடக்கே...’ என்று மகா பெரியவாக்கு முதலில் ரொம்பவும் தாபமாக இருந்தது. கஜ பிருஷ்ட விமானம் உள்ள விசேஷமான கோயில் அது. அதாவது, யானையின் பின்புறம் போல அந்தக் கோயில் விமானமும் கோஷ்டமும் அமைஞ்சிருக்கும். காஞ்சி எல்லை வரையில், காமாட்சியைத் தவிர வேறு அம்பாளே கிடையாது. அதனால் அதை, காஞ்சிபுரம் எல்லை என்றுதான் சொல்வார்கள்.பெரியவா பார்த்தபோது, அந்தக் கோயிலைச் சுற்றி ஒரே காடாக இருந்தது.  பூச்சி பொட்டெல்லாம் நிறைய இருந்தது. கோயிலும் நல்ல நிலைமையில் இல்லை. ஆனா, பெரியவா மனசை யாரால புரிஞ்சுக்க முடியும்?  

'நான் இங்கயேதான் தங்கப் போறேன்’னு தீர்மானமா சொல்லிட்டார், பெரியவா. கோயிலைச் சுத்தம் பண்ணி, சின்னதா ரூம் ஒண்ணு கட்டி, கொட்டகையும் போட ஏற்பாடு ஆச்சு. 1954-ல், ஜெயேந்திரர்கிட்ட மடத்துப் பணிகளை ஒப்படைக்கிறவரைக்கும், அடிக்கடி தேனம்பாக்கம் வந்து போய்க் கொண்டிருந்தா பெரியவா. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட இருபது வருஷம் போல, அங்கேயேதான் பெரியவா தங்கியிருந்தார்!  அங்கே, பிரம்மா ஸ்நானம் பண்ணின பிரம்ம தீர்த்தமும் இருந்துது. அதுலதான் பெரியவா தினமும் ஸ்நானம் பண்ணுவார். அங்கேயே தங்கிண்டு,அனுதினமும் ஈஸ்வர தரிசனம் பண்ணிண்டு இருக்கிறதுன்னு பெரியவா தீர்மானம் பண்ணிட்டார். அங்கே நிறைய வி.ஐ.பி. எல்லாம் வந்திருக்கா. க்ரீஸ் தேசத்து ராணி எப்போ இந்தியா வந்தாலும் பெரியவரை தரிசனம் பண்ணாமல், ஓரிரு வார்த்தை பேசாமல் போக மாட்டார்.  இந்திராகாந்தி வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணினதும் இங்கேதான்.அந்த இடம் அப்போ குருக்கள் அதாவது சிவாச்சார்யர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இந்து சமய அறநிலையத்துறைகிட்டே இல்லே. அதனால், சிவாச்சார்யர்கிட்டே சொல்லி, குருக்கள் ஆதீனத்தில் இருந்த அந்த பாத்யதையை, அதாவது உரிமையை சங்கரபக்த ஜன சபா பேரில் பெரியவா ரிஜிஸ்தர் பண்ணிட்டார். அங்கே நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு டிரஸ்ட்டும் அமைச்சார். இரண்டு கால பூஜை, அன்னாபிஷே கம் எல்லாம் ஒழுங்கா பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணினார்.  

பெரியவா வந்து மாடிப் படியிலே நின்னு, கோபுர தரிசனம் பண்ண வாகா வசதி பண்ணியிருந்தா. ஒரு வருஷ காலம் பெரியவா அந்த அறையை விட்டு வெளியே வரவே இல்லே. அவரே அடுத்தாப்பல இருந்த கிணத்துலே இருந்து, தானே ஜலம் சேந்தி எடுத்துப்பார். அங்கே ஒரு கதவைத் திறந்தால், பிள்ளையாரை தரிசிச்சுடலாம். ஒரு கவுன்ட்டர் மாதிரி சின்ன இடம் பண்ணி இருந்துது. அது வழியாத்தான் பெரியவாளுக்கு நித்யம் பிட்சை கொடுப்போம். அவரும் ஆகாரம் பண்ணிட்டு, பிட்சைப் பாத்திரத்தை அங்கே கவுன்ட்டரில் வச்சுடுவார்.அங்கே ஸ்ரீவிஷ்ணு துர்கை விசேஷம்! நவராத்திரி ஒன்பது நாளும் கோலாகலமா இருக்கும். இன்னொண்ணு, இங்கே ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சிரிச்ச முகத்தோடு இருப்பார். தன்னைப் பார்க்க வரவா கிட்டே எல்லாம், 'கொஞ்சம் கிட்டே போய் தக்ஷிணாமூர்த்தி முகத்தைத் தரிசனம் பண்ணிட் டுப் போங்கோ!’ என்பார் பெரியவா.இது 54-ல் சிவராத்திரி அன்னிக்கு நடந்தது. ஓம் ராமச்சந்திர அய்யர்னு ஒரு பக்தர்... அகஸ்தியர் நாடி ஜோஸ்யத்தில் அவருக்கு ரொம்பவே நம்பிக்கை. அவர் அங்கே வந்து நாடியைப் படிச்சுட்டு, 'பெரியவா அன்னிக்கே அங்கே சமாதி ஆகிடுவா’ அப்படின்னார்.பெரியவா உடனே, 'நீங்கபாட்டுக்கு அங்கே பூஜை பண்ணிண்டிருங்கோ. நான் இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே செத்துப் போயிடுவேன்னு இவர் சொல்றார். நான் இதோ, இங்கேயே இருக்கேன்!’ அப்படின்னு அங்கேயே உட்கார்ந்துட்டார். நாங்கள்லாம் பதறிப் போயிட்டோம். ஆனா,  நல்ல காலம்... அப்படியெல்லாம் விபரீதமா ஒண்ணும் நடக்கலே. பெரியவா அதுக்கப்புறம், 40 வருஷ காலம், 94-ஆம் வருஷம் வரை நம்மோடு இருந்து, நமக்கெல்லாம் அனுக்கிரஹம் பண்ணினார். அந்த இடத்திலே, பெரியவா ஸித்தியானப்புறம் சின்னதா ஒரு கோயில் கட்டியிருக்கோம். கருங்கல்லிலேயே கட்டினது. உள்ளே பெரியவாளோட மார்பிள் விக்கிரகம். அதற்கும் கும்பாபிஷேகம் நடத்தியாகி விட்டது. பெரியவாளுக்கு குலதெய்வம், சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி. பெரியவாளின் பூர்வாஸ்ரமப் பெயரும் சுவாமி நாதன்தானே! அதனால, அங்கே ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமிக்கும் ஒரு கோயில் கட்டி, கும்பாபிஷே கமும் பண்ணிட்டோம்.  பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கும் அஞ்சு தடவை கும்பாபிஷேகம் பண்ணிட்டோம். தேனம்பாக்கத்தில், இந்திரா காந்தி வந்து பெரியவாளைத் தரிசனம் பண்ணினா இல்லையா... கிணத்தடியிலேதான் அவர் அந்தப் பக்கமும், பெரியவா இந்தப் பக்கமுமாக உட்கார்ந்தார்கள்.   பெரியவா பேசவே இல்லே. முதல்ல இந்திராகாந்தியை உட்காரச்சொன்னார். ஆனா, பெரியவா உட்கார்ந்த அப்புறம்தான் உட்காரு வேன்னு நின்னுண்டிருந்தார் இந்திராகாந்தி. கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணினார் பெரியவா.  அதுவே தனக்குக் குறிப்பா ஒரு செய்தி சொல்றாப்பல இருந்துது இந்திராகாந்திக்கு. அதுவரை பசுமாடு - கன்று சின்னம் வச்சுண்டிருந்தார் தன்னோட காங்கிரஸ் கட்சிக்கு. அதைத்தான் முடக்கிட்டாளே! அதனால பெரியவா ஆசிர்வாதம் பண்ணின கை மனசுல பதிஞ்சு போகவும், கையையே தன் கட்சிக்குச் சின்னமா வச்சுட்டார். அவர் வந்து உட்கார்ந்திருந்த இடத்திலே அடையாளமா ஒரு சிவப்புக் கல் பதிச்சு வைக்கத் தீர்மானிச் சிருக்கோம்.
மகா சுவாமிகளுக்கு மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச இடம், தேனம்பாக்கம். இன்னும் நிறைய விசேஷங்கள் நடந்திருக்கு இங்கே. ஒவ்வொண்ணா சொல்றேன்!' என்றார் வைத்தியநாதன்.
சாருகேசி  
விகடன்

அருள் மழை 38


Nehru once joked that Hinduism is a kitchen religion. our Periyava explains this as....... This is from "Deivathin Kural"

ராஜா ஒர்த்தன் இருந்தான். அவனுக்கு ஒரு குரு. அவர் பெரிய மஹான். அடிக்கடி அரண்மனைக்குப் போயி அவனுக்கு நல்ல உபதேசங்களைப் பண்ணிட்டு வருவார். அந்தமாதிரி ஒருநாள், காலம்பற போனவர், ரொம்ப நேரமா அநேக விஷயங்களைப் பேசிண்டே இருந்தாரா!.......மத்யான்னம் வந்துடுத்து. ராஜா சொன்னான் " இங்கியே பிக்ஷை பண்ணிட்டு போகணும். ஆசார நியமத்தோட, ஒங்களுக்குன்னு தனியா சமைச்சுப் போட ஏற்பாடு பண்றேன்.."ன்னு ரொம்ப கெஞ்சினான். மறுக்க முடியாம ஒத்துண்டார். நன்னா ஸம்ருத்தியா போஜனம் ஆச்சு! பஞ்சபக்ஷ்ய போஜனம் பண்ணினதால அரண்மணைலேயே கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிண்டார். எங்க? ராஜாவோட 'ரூம்' லேயே படுத்துண்டார். படுத்துண்டு இருக்கறச்சே, அங்க ஒரு சுவர்ல தொங்கிண்டு இருந்த ஒரு முத்து ஹாரம் அவர் கண்ணுல பட்டுது. அது ரொம்ப ஒஸ்தியான முத்து! சாக்ஷாத் ராஜாவோடது!
நல்ல வைராகியான குருவுக்கு அன்னிக்கு என்னவோ அந்த முக்தாஹாரத்தை பாத்ததும், அதை எடுத்துக்கணும்...ன்னு ஒரு எண்ணம் ரொம்ப 'ஸ்ட்ராங்' உண்டாச்சு! பக்கத்ல யாருமே இல்லாததால, சட்னு அதை எடுத்து வஸ்த்ரத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுண்டுட்டார். சாதாரண மனுஷா பண்ணினாலே, திருட்டு..ங்கறது மஹாபாவம், தப்பு! இவரோ, பெரிய மஹானா, ராஜகுருவா இருக்கப்பட்டவர், கொஞ்சங்கூட மனஸை உறுத்தாம, இப்பிடி பண்ணிப்டு, தாம்பாட்டுக்கு ஆஸ்ரமத்துக்கு போய்ட்டார்! சித்தே நாழி ஆனப்புறம், ஹாரம் திருட்டுப் போன சமாச்சாரம் அரண்மனைல தெரிஞ்சுது. ஒர்த்தரையும் விடலை. எல்லாரையும் 'செக்' பண்ணியாச்சு. ஆனா, வாஸ்த்தவத்ல அதுக்கு காரணமான குருவை மட்டும் யாருமே கொஞ்சங்கூட சந்தேஹப்படலை. ஏன்னா...........அவர் அன்னிவரைக்கும் அவ்வளவு ஸுத்தரா இருந்தவர்!
"பழி ஓரிடம், பண்டம் ஓரிடம்"...ன்னு யார் யாரையோ பிடிச்சு, மரியாதைப்பட்டவாளை வாயால கேட்டு, ஆள் படைகளை அடிச்சு, ஒதைச்சு "enquiry ", "investigation " அது இதுன்னு நடத்தினா! தடயம் ஒண்ணும் கெடைக்கலை. இப்டியே ஒரு நாள் முழுக்கப் போச்சு! அன்னிக்கு ராத்ரி, "குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததால" இல்லே; மத்யான்னம் பண்ணினது போறாதுன்னு, ராத்ரியும் ஏதோ கன்னா பின்னா...ன்னு எண்ணம்! அது வேணும் இது வேணும்...ங்கற ஆசைனால தூக்கமே வரலை அந்த குருவுக்கு. ஸம்ருத்தியா சாப்டுட்டு ராப்பூரா தூங்காததால, ஒரே அஜீர்ணம்! மறுநாள், முழிச்சுக்கறச்சேயே வயத்ல 'கடமுடா' பண்ண ஆரம்பிச்சுது. பேதி பிடிச்சுண்டது.
அஞ்சாறு தடவை போய் போய் ரொம்ப பலஹீனமா ஆய்ட்டார்! ஒடம்பு இப்பிடி ஆயாஸப்பட்டாக்கூட பேதியானதுலேர்ந்து அவர் மனஸ்ல ஒரு தெளிர்ச்சி உண்டாச்சு. இதுக்கு மேல 'போறதுக்கு' ஒண்ணும் இல்லேங்கற மாதிரி ஒடம்பு கிழிஞ்ச நாரா ஓஞ்சு போன ஸ்திதில...........அவரோட வழக்கமான ஒசந்த மனஸ் அவருக்கு வந்துடுத்து! அந்த பட்டபடைக்கற வெய்யில்ல, ஒடம்பு அசதியக்கூட பாக்காம, ஓடினார் முத்து மாலையைத் தூக்கிண்டு ராஜாகிட்ட! அவன்கிட்ட சொன்னார்......
"என்ன காரணமோ தெரியலை.......நேத்தி மத்யானத்துலேர்ந்து என் புத்தி கெட்டுப் போயி, அந்த கெட்ட ஆவேசத்ல, நான்தான் அந்த மஹா பாபத்தை பண்ணிட்டேன்! நிர்தோஷமான மிச்ச எல்லாரையும் சிக்ஷை பண்ணின பாபத்துக்கு நான் காரணமாயிட்டேன். எல்லாத்தையும் சேத்து வெச்சு, நேக்கு தண்டனை குடு!" ன்னு ரொம்ப பொலம்பினார். ராஜாவோ நம்ப மாட்டேங்கறான்! "நீங்க சொன்னது ஒரு நாளும் நடந்திருக்காது. நெஜத்திருடன் பயந்து போய் காப்பாத்தச் சொல்லி ஒங்க கால்ல விழுந்திருப்பான்.....ஒங்களோட பரம தயாள குணத்தால, நீங்களே குத்தத்தைப் பண்ணின மாதிரி சொல்றேள்..."ன்னு சொல்லிட்டான். ஆனா, குரு ரொம்ப கெஞ்சி கெஞ்சி தன்னை நம்பும்படி சொன்னார். அவனோ பாதி மனசோட, "நீங்க சொல்றது நெஜந்தான்...ன்னு ஒத்துண்டாலும், நிச்சயமா இதுக்கு ஏதோ அடிப்படைல காரணம் இருக்கணும். "circumstance ,motive பாத்துதானே sentence பண்ணனும்னு law வே இருக்கோல்லியோ?" ன்னு விஜாரிச்சான்.
கடைசில குரு சொன்னார்... "வழக்கத்துக்கு மாறா நேத்திக்கு நான் அரண்மனைல சாப்டதால, அன்ன தோஷம் உண்டாகி, அது த்வாரா..........குண தோஷம் உண்டாகியிருக்கு. ராத்ரிகூட மனஸ் கெட்டே இருந்தது. வயறு கெட்டு "அதிஸாரம்" உண்டானதால, புத்தில தெளிவு உண்டாச்சு.........அதுனால, நேத்து பக்வம் பண்ணின அன்னம் எங்கேர்ந்து வந்துதுன்னு விஜாரி" ன்னு ராஜாகிட்ட சொன்னார்.
அன்னத்துல கார்போஹைட்ரேட், வைட்டமின் மட்டும் இல்லே! அதை சமைச்சவர், காய்கறிகளை தானமாவோ, வெலைக்கோ குடுத்தவர், அதை பயிர் பண்ணினவர்...ன்னு ஒரு மொழநீள லிஸ்ட்டுக்கு, சம்பந்தபட்டவா எல்லாரோட குணதோஷங்களும் அந்த அன்னத்ல 'டெபாசிட்' ஆகி சாப்டறவா உள்ளே போறது.
ராஜா ஒடனே உக்ராண மணியக்காரன்கிட்ட முந்தின நாள் குருவுக்கு சமைச்ச அன்னம் எங்கேர்ந்து வந்துது?ன்னு விஜாரிச்சான். அவனும் விசாரணை பண்ணிட்டு சொன்னான்......."கொஞ்சநாளைக்கு முன்னால, கடைத்தெருவுல இருக்கற மளிகைக் கடைல ரொம்ப ஒசந்ததான ஸன்ன சம்பா அரிசி மூட்டைகளை ஒரு திருடன் திருடி முதுகுல தூக்கிண்டு போறச்சே, ராஜசேவகாள்கிட்ட பிடிபட்டான். அவங்கிட்ட இருந்த மூட்டையை அரண்மனைல வெச்சிருந்தா. மளிகைக் கடைக்காரா யாருமே அரிசி மூட்டையை 'டிமாண்ட்' பண்ணிண்டு வராததால, அது அரசாங்கத்துக்கு சொந்தம். நேத்திக்குத்தான் குருவுக்காக, அந்த ஒசந்த அரிசியை சமைச்சோம்". குருவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு.
"பாத்தியா? அதுனாலதான் ராஜாவோட அன்னம் கூடாது...ன்னு சாஸ்திரம் சொல்றது. கொஞ்சநேரம் திருடனோட முதுகுல ஒக்காந்திருந்த அரிசி மூட்டை எனக்குள்ள போய் என்னை திருட வெச்சுடுத்தே! எப்படி ஒர்த்தன் ஒடம்புல இருக்கற வ்யாதி அணுக்கள் இன்னோர்த்தன் ஒடம்புக்குள் தொத்திகறதோ........அதே மாதிரி, கெட்ட எண்ணங்களோட பண்ற கார்யங்கள்ள, அதை பண்ணினவனோட மானஸீக அணுக்கள் ஒட்டிண்டு இருக்கும். அந்த திருடனோட திருட்டு குண பரமாணுக்கள் எனக்குள்ள போனதோட 'ரிசல்ட்'டை பாத்தியா?" ன்னு கேட்டார்.
அதுனாலதான் கண்ட எடத்ல கண்டவா கையால சமைச்சு சாப்டரதால நம்ம மனஸ் கெட்டுப் போக ரொம்ப ஹேதுவாயிருக்கு. ஆத்துலேயே சமைச்சாலும், அன்னதோஷம் போறதுக்குத்தான், என்ன சமைக்கறோமோ அதை பகவானுக்கு நைவேத்யம் பண்ணிட்டா, அதுல இருக்கற கொஞ்சநஞ்ச தோஷமும் போய்டும். மனஸும் கெடாது. சரீரமும் கெடாது