Search This Blog

Friday, November 09, 2012

தீபாவளி ரிலீஸ் சினிமா


தங்கர் திரைக்களம் தயாரிக்கும் தங்கர்பச்சானின் அடுத்த முத்திரை வெடி ‘அம்மாவின் கைப்பேசி’. கிராமத்தில் எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாயின் கண்ணீரும் வியர்வையும்தான் கதை என்று சொல்கிறார் இயக்குனர் கம் தயாரிப்பாளர் தங்கர்பச்சான்! ‘தனிபிறவி’ப் படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்த ரேவதி தான் அம்மாவின் கைப்பேசி படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம். ‘ஒரு குடும்பத்தில் மாதச் சம்பளம் வாங்கும் முதல் தலைமுறைபடும் அவஸ்தையும், அவர்கள் கொள்ளும் காதலும் படத்துக்கு அஸ்திவாரம்’ என்கிறது படக்குழு. எப்போதும்போல தங்கர்பச்சானின் நெகிழ்வும் கோபமம், நேசமும், மண்ணும் இந்தப் படத்திலும் இருக்கும் என்கிறார்கள். சாந்தனாவும் இனியாவும் கதைக்குள் தங்களைக் கரைத்துக் கொண்டு நடித்திருக்கிறார்கள். சாந்தனாவுக்கு நடிப்புக்கான பக்கத்தைத் திறந்துவிட்ட படம் ‘அம்மாவின் கைப்பேசி’. தீபாவளி அவருக்கு திருப்பமாக இருக்குமா... கைப்பேசி ரீச் ஆகுமா? பார்ப்போம்!

தேசிய விருது வென்ற சீனுராமசாமி ‘நீர்ப்பறவை’யை தீபாவளி ரேஸில் நீந்த விட்டிருக்கிறார். கதை சத்துள்ள படம் என்பதால் சினிமாவை விரும்பும் ரசிகர்கள் சாய்ஸ் ‘நீர்ப்பறவை’. பைபிள் வசனத்தைப் பயன்படுத்தி எழுதிய பாடல் முதலில் சேர்க்கப்பட்டதும் பிறகு நீக்கப்பட்டதும் படத்துக்கு திருஷ்டிப் பொட்டுதான். ஏற்கெனவே நவம்பர் 23க்குதான் ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக உதயநிதி அறிவித்திருந்தாலும் திடீரென்று பத்து நாட்களுக்கு முன்பாகவே தீபாவளிக்கு திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். 

படத்துக்கு பக்காவான பப்ளிஸிட்டி இருப்பதால் இந்தத் தடுமாற்றம் ஒன்றும் பெரிதாக பாதிக்காது என்பது உதயநிதி தரப்பு வாதம்.


யூ சர்டிஃபிகேட் கொடுத்த சென்சார்போர்ட் ‘கேளிக்கை சலுகை’ தரவில்லை. தரமான படங்கள் இயக்க ஆசைப்படும் எனக்கு இது மிக வருத்தத்தைத் தருகிறது," என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி வருத்தப்பட்டிருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. தீபாவளிக்கு வரும் படங்களில் தரமாகவும் தமிழ்த் திரையுலகின் உரமாகவும் ‘நீர்ப்பறவை’ இருக்குமென்று எதிர்பார்க்கலாம்!

தீபாவளிக்கு முன்பே வெடிக்க வேண்டிய ‘துப்பாக்கி’ ஏனோ தீபாவளிக்கு வெடிக்கிறது. ஏற்கெனவே பெயர் வைப்பதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்தன! ஆரம்பத்தில் படத்தை விஜய் தரப்பே தயாரிப்பதாக இருந்ததாம். பிறகு நடந்த செட்டில்மென்ட்ஸ் தாணு தரப்புக்கு தயாரிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது! இடையில் இயக்குனர் முருகதாஸோடு லடா கணக்கைச் சரிசெய்து ‘துப்பாக்கி’யை வெடிக்க வைப்பதற்குள் ‘தோட்டா’ நமுத்துப் போய்விடும் அளவுக்கு பதற்றம் விஜய் தரப்புக்கு. காஜல் அகர்வால் பாக்ஸராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் பாடி லாங்குவேஜை குளோஸா வாட்ச் செய்த பிறகே நான் நடிக்க ஆரம்பித்தேன்" என்கிறார். ‘இலை’ சேனல் ‘ஒன்பது கோடி’ என்கிற அஸ்திரத்தோடு துப்பாக்கியை அணுக, அவர்களோ 13 கோடிக்கு ‘வெற்றி’ சேனலுக்கு விற்றுவிட்டார்களாம். அதனால் தமிழகம் முழுக்க ஐம்பது ரூபாய்க்கு மேல் ‘டிக்கெட்’ கூடாது என்று அதிகார வட்டத்திலிருந்து அஸ்திரம் பாய்ந்து பஞ்சாயத்து ஆகி இருக்கிறது.


சிம்பு தம் பங்குக்கு வெடிக்கும் வெடி ‘போடா... போடி’. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த பெருமை(?) இந்தப் படத்துக்கு உண்டு. தவிர, தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் சிம்பு இரண்டாவது படம் இதென்பதால் ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெடி. ‘லவ் பண்ணலாமா... வேண்டாமா’ என்று சிம்பு பாடல்களில் எகிறி அடிக்க அவரது ரசிகர்களிடையே பற்றிக்கொண்டது சரவெடி மகிழ்ச்சி. பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டில் விஜய்யோடு போட்டியாக தம்மால் வெடியை வெடிக்க வைக்க முடியாது என்பதால் படம் தீபாவளிக்கு இல்லாமல் தள்ளிப்போகும் வாய்ப்பும் உண்டு என்ற செய்தி, பொட்டு வெடிகளாய் வெடிக்கின்றன. தியேட்டர் புக்கிங், போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் படபடவென பற்றிக்கொண்ட சரவெடியாக நடக்கின்றன! ‘துப்பாக்கி’க்கும் ‘போடா... போடி’க்கும் புரொடியூஸர் ஒருவர்தான். எனவே எங்களுக்குள் போட்டி இல்லை" என்று புஸ்வாணம் பதிலைச் சொல்கிறார் இயக்குனர் விக்னேஷ்சிவா. இதற்கிடையில் ‘துப்பாக்கி’க்கு ‘யூ’ சர்டிஃபிகேட் கொடுத்த சென்சார், போடா போடிக்கு ‘ஏ’ சர்டி ஃபிகேட் கொடுத்ததில் ‘தௌசன் வாலா’ அளவுக்கு உஷ்ணத்தைக் கக்கி இருக்கிறாராம் சிம்பு!2 comments:

  1. சுருக்கமான விமர்சனங்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இந்த பந்தயத்தில் முன்னிற்பது எது பொருத்திறுந்து பார்ப்போம்

    ReplyDelete