Search This Blog

Friday, October 15, 2010

மதராசபட்டினம் - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

சாதரணமாக நான் எல்லா படத்தை பார்த்தாலும், அவற்றை விமர்சனம் பண்ணுவதில்லை. சில.. மற்றும் பல அருமையான..அற்புத..சிறந்த படைப்பாய் இருந்தால்..மனதில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன்..அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும் என விழைபவன்.அதுவும் படம் பார்த்து இது வரை உடனே விமர்சித்தது இல்லை. ஆனால், இந்த படம் ஆவலை தூண்டி என்னை எழுத வைத்து விட்டது.ஆரம்பம் டைடானிக்..பின் சில நிகழ்ச்சிகள் லகான் ஆகியவற்றை நினைவூட்டினாலும் மனத்திருக்கு திருப்தி குடுத்த திரைப்படம்.லண்டனில் வசிக்கும் பாட்டி, தன் உடல் நிலை ஒவ்வாத பொழுதும் இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் தான் காதலித்த வாலிபன் பரிதியைத் தேடி தற்போதய சென்னை வருகிறாள் , அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள்.படத்தின் முதல் பாதி மிக நீளம். ஆனால், லாஜிக் இடிக்காமல் திரைக்கதை மிக அமைதியாக செல்கிறது. படத்தில எல்லா நடிகரகுளும் சரளமாக உரையாடும் போது காட்சிகள் நகைசுவையாக செல்கிறது.இல்லாத !!! நேதாஜியை பாலோ செய்யும் குஸ்தி வாத்தியார் ( நாசர் ), தந்திரம் வந்திட்டா மட்டும் என்ன பெரிசா என்ன கிடைக்க போகுதுன்னு சொல்லும் தகப்பன் ( பாஸ்கர் ), அந்த வாத்தியார் , பொழுதனைக்கும் தூங்கி கொண்டு இருக்கும் ஒருவன், மற்றும் பல காட்சிகளை அருமையான திரைக்கதை மூலம் சுதத்திரம் அடைவதற்கு முன் நடந்த கட்சிகளை அருமையாக சொல்லி இருகிறார்கள்.ஆர்யாவின் நடிப்பு சூப்பர், குறிப்பாக ( வாத்தியார் வீட்டுக் கதவைத் தட்டி..நன்றி என்பதற்கு ஆங்கிலத்தில் என்ன எனக் கேட்கும் காட்சியில் ஆகட்டும்..ஏ.பி.சி.டி., கற்றுக் கொள்ளும் போதும் பிரமாதம்).எமி ஜாக்ஸனின் அழகும், அவரது நடிப்பும் மிக நன்று. 'மறந்து விட்டியா' அந்த வசன உச்சரிப்பு மிக அருமை.ஆர்ட் டைரக்டர்.. இவரை பத்தி என்ன சொல்ல, எனக்கு பேர் தெரியவில்லை. ஆனா மதராசபட்டினம் இன்னும் ஏன் கண் முன்னே நிற்கிறது.ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, இவரை பற்றி அதிகம் சொல்ல தேவை இல்லை. குடுத்த வேலை கன கட்சிதமாக செய்து விட்டார். குறிப்பாக அந்த "கிளைமாக்ஸ் காட்சி" . இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். மிக அருமையான பின்னணி இசை.நானூறு வருசத்துக்கு அப்புறம் இப்போ தன் நாம அவுங்கள அடிக்கிறோம் போன்ற வசனம் அங்க அங்க இருக்கிறது.இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவை..காற்றிலே பாடல் என்னால் விவரிக்க முடியவில்லை.இயக்குநர் விஜய் ..க்ரீடம், பொய் சொல்லப் போறேன் என இதற்கு முன் இரண்டு படங்களை தந்தவர். வழக்கமாய் சுதந்திர போராட்ட காலத்தை எடுத்துக் கொண்டு அதை பற்றி சொல்லாமல் அந்த காலத்தில் ஒரு காதலர்களுடய கதையை எடுத்துக் கொண்டு அருமையாய் சொல்லியிருக்கிறார்.படம் அருமை..அனைவரும் பார்க்க வேண்டிய படம்..

No comments:

Post a Comment