'எந்திரன்' ரிலீஸ்! ரஜினியின் அடுத்த மூவ்..? "அரசியல்பற்றி ரஜினி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அடுத்த சினிமாபற்றிய எண்ணம்தான் அவருக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. 'இதற்கு மேல் சான்ஸே இல்லை!' என்ற அளவுக்கு சூப்பர் ஹீரோவாக 'எந்திரன்' படத்தில் நடித்துவிட்டார். இனி, அமிதாப் போல கேரக்டர் ரோல் நடிக்க வேண்டும் என்பதுதான் நடிகர் ரஜினிக்குள் இருக்கும் ஆசை. அதை மனதில் வைத்துதான் அவரது அடுத்த திட்டங்கள் இருக்கும்!" என்கிறார்கள்.
அது அப்படியே நிற்க... அமிதாப் நடித்த 'சீனிகம்', 'பா' படங்களைப் பார்த்த ரஜினி, அந்தப் படங்களின் இயக்குநர் பால்கியை அழைத்துப் பாராட்டு மழையில் நனைத்து இருக்கிறார். அப்போது, அமிதாப்புக்கென தான் உருவாக்கி இருக்கும் ஒரு கதையை பால்கி சொல்லி இருக் கிறார். 'நல்லா இருக்கே... இந்த மாதிரி கதையில் நடிக்கணும்னுதான் எனக்கும் ஆசை!' என்றாராம். இந்தியில் அமிதாப், இங்கே ரஜினி. இருவருக்கும் ஜோடியாக ஸ்ரீதேவி என ஒரு பேச்சு ஓடியது. ஆனால், ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளோடு தேங்கிவிட்டது. இப்போது 'எந்திரன்' வேலைகள் முடிந்துவிட்டதால் அதில் மீண்டும் வெளிச்சம் விழலாம் என்று ஒரு பேச்சு.
இயக்குநர் பால்கியிடம் இதுபற்றிக் கேட்டால், "எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. அப்படி நடந்தால், உங்களைவிட நான்தான் அதிகமாகச் சந்தோஷப்படுவேன். பார்ப்போம்!" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
'ரஜினி - ஸ்ரீதேவி'... மீண்டும் ஒரு 'ஜானி'?!
No comments:
Post a Comment