Search This Blog

Friday, October 15, 2010

"ராவணன்"

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிற படம்  "ராவணன்". இந்த திரைப்படத்தின் மீதான இவ்வளவு எதிர்பார்ப்புக்கும் காரணமான ஒரே மனிதர் "மணிரத்னம்".. 

ராவணன் படம் ராமாயண கதை தான் அப்படின்னு உங்க எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கும். எனக்கும் ராமாயணம் கதை தெரியும் ஆனா இது அந்த காண்டம் இது இந்த காண்டம்னு எல்லாம் தெரியாது....

பழங்குடி மக்களுக்கு தளபதியாக இருக்கிறான் வீரா என்கிற வீரய்யா(விக்ரம், - ராவணன்). தங்கை வெண்ணிலா(ப்ரியாமணி- சூர்ப்பணகை) இவனை  வேட்டையாட வருகிறார் தேவ்(பிருத்விராஜ்-ராமன்). இந்த ராமனின் காதல் மனைவி ராகினி(ஐஸ்வர்யாராய்-சீதா). ராமனும், ராவணனும், சீதையும் இருக்கும்போது அனுமானும் இருந்துதானே ஆக வேண்டும். அது கார்த்திக். இப்படி கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்.

போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார்.வீரய்யா மற்றும் அவனது இனத்து மக்களுக்கும் இடையில் நடக்கும் அக்கப்போரே மிச்சம், மீதியான கதை..!
தன்னைத்தானே முரடனாகவும், முட்டாளாகவும் காட்டிக் கொள்ளும் விதமாக விக்ரமின் இயல்பும், பேச்சும் அமைக்கப் பெற்று அவருடைய பாடி லாங்குவேஜில் அத்தனை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்..! ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார்.

ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது.படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது.

எஸ்.பியாக பிருதிவிராஜ், இந்த படத்துல நடிக்கம இருந்து இருக்கலாம். ஐஸ் தம்பி போல இருக்காரு..

ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டேன் தான் படத்தை தூக்கி நிறுத்துவது..‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். சுகாஷினி வசனம் படத்துக்கு மிக பெரிய மைனஸ்.. படத்தில் மிகப் பெரிய ஓட்டை  திரைக்கதைதான்..  சுஜாதா இல்லாமல் மணிரத்னத்தின் படங்களை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த வகையில் ஷங்கர் தப்பித்தார் (ரோபோவிற்கு சுஜாதா எல்லா வேலைகளையும் முடித்துகொடுத்துவிட்டார்).

முதல் பாதி எப்படி கொண்டுபோவது என்றே தெரியவில்லை.. இரண்டாம் பாதி ஓகே ரகம்..

மணிரத்னம் படங்களில் இருக்கக்கூடிய மிக அழுத்தமான விஷயங்கள் இந்த திரைப்படத்தில் இல்லை.பிடிக்காத கணவன் தன்னை தொடவரும் போது "நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு" என்று மனைவி சொல்வார். ஆயிரம் பக்கம் வசனம் பேசி ஏற்படுத்த முடியாத அதிர்வை இந்த ஒற்றை வசனம் ஏற்படுத்தி போயிருந்ததது. 

மாதவன் : ஏய்... எங்கடீ உன் தாலியை காணோம்?
ஷாலினி : ராத்திரி குத்துதுன்னு நீதானே கழட்டி வெச்சே...

தமிழ்சினிமா கட்டிகாப்பாற்றிய கலாச்சாரத்தை ஒரே வார்த்தையில் போட்டு உடைத்தவர்.
நாசர் :நான் செத்ததுக்கு அப்புறம்தான் நீ அந்தப்பொண்ணை கட்டிக்க முடியும்.
அரவிந்த் சாமி : நீங்க சாகிற வரைக்கும் என்னால காத்துகிட்டு இருக்க முடியாது.


மாதவன் : நீ எங்களுக்கு பொறந்தவ இல்ல.. நானும் இந்திராவும் உன்னை தத்தெடுத்து வளர்த்தோம்.

இப்படி எல்லா திரைப்படங்களிலும் எதாவது ஒரு அதிர்ச்சியை, மேம்படுத்தப்பட்ட ரசிப்புத்தன்மையை, அதிகப்படியான புத்திசாலித்தனங்களை மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் பார்க்கலாம். இந்த படத்தில் இது மாதரி ஒன்னு குட மனசுல படல..

அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம்,  என்று எல்லாம் இருந்து கோட்டை விட்டுடீங்க மணி சார்..

No comments:

Post a Comment