Search This Blog

Thursday, September 30, 2010

காதலை 8 வகையாக பிரிக்கலாம். இதில் நீங்கள் எந்த வகைக் காதலர் என்று பார்க்கலாமா?


1. நீங்கள் விரும்புபவர் மீது உங்களுக்கு அன்பு, நேசம், இரக்கம் கொள்ளுதல் போன்ற உணர்வுகள் வருகிறதா? அவருடன் நெருக்கமாக இருத்தல், அவர் மனதில் இடம் பெறுதல், அவள் எனக்குச் சொந்தமானவள் போன்ற எண்ணங்கள் வருகிறதா? அவருக்கு உதவி செய்யும் எண்ணம், அவருடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை… இதெல்லாம் தோன்றுகிறதா? அப்படியானால் அவர் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று அர்த்தம். இது காதலாகவோ, நட்பாகவோ மாறக்கூடும்.





2. நீங்கள் விரும்புபவரின் உடல்வாகில் ஈர்க்கபடுகிறீர்களா? அதனால் உங்கள் உணர்வு தூண்டபடுகிறதா, அவரிடம் தனிமையில் பேசும் எண்ணம் வருகிறதா? அப்படியானால் நீங்கள் காதலின் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறீர்கள். அவரின் அழைப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள், அவரை பற்றி எண்ணும் போதே இதயத்துடிப்பு எகிறுகிறது. …ம்…ம்… இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். சிற்றின்ப உணர்ச்சி, தொடுதல், முத்தமிடுதல் ஆகியவற்றை விரும்புகிறீர்களா? நீண்ட நேர பிரிவை தாங்க முடியவில்லையா? நிச்சயம் இது மோகக் காதல் தான். காதலில் மோகம் அதிகமாவது நல்லதல்ல. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.





3. அவள் மீது நட்பிருக்கிறது ஆனால் மோக உணர்ச்சி இல்லை. அன்பிருக்கிறது. எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிருக்கிறது. ஆனால் அது உடல் ஈரப்பு சார்ந்ததல்ல. அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் வேறு எந்த விதமான ஆசைகளும் இல்லை என்று உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் காதல் ஆத்மார்த்தமான, மனிதநேயக் காதல். இந்த மேம்பட்ட எண்ணங்கள் உங்கள் விருப்பத்திற்குரியவரை மிகவும் கவர்ந்திழுக்கும். காதலை கனியச் செய்யும்.






4. நீங்கள் இருவரும் எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுகிறீர்கள். உங்கள் இருவரின் சிந்தனைகள் அதிகமாக ஒத்திருக்கின்றன. அன்பு, பிணைப்பு இருக்கிறது. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. எண்ணங்கள், அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறீர்கள். அவருடன் இருக்கும்போது மனஇறுக்கம் இல்லாமல், கவலையற்று இருப்பதாகத் தோன்றுகிறது. அவர் மீது மதிப்பு, மரியாதை வைத்திருக்கிறீர்கள். அபடியென்றால் நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.





5.எல்லா நேரங்களிலும் அவருடனேயே இருப்பதை விரும்புகிறீர்கள், பரிசு பொருட்கள் கொடுப்பது, அவருடன் கனவில் சஞ்சரிப்பது, ஒன்றாகச் சாப்பிட விருப்பம், அவருடன் இருக்கும்போது மட்டும் ரிலாக்சாக இருப்பதாக உணர்கிறீர்களா? அவரின் உடல் அழகால் ஈர்க்கபடுவது, அவர் சமையலறையில் இருந்தாலும் அவருக்கு முன் இருக்க விரும்புவது, உங்கள் உலகமே அவரைச் சுற்றி இருப்பதாக நினைக் கிறீர்களா? காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது, எதையும் மனம்விட்டு பேசுவது, உள்ளங்கையை வருடுவது, ஒன்றாக இசை கேட்பது என்று உங்கள் நேரம் கழிகிறதா? இவையெல்லாம் ரொமான்டிக் காதலின் உணர்வுகள். உங்கள் காதல் உன்னதக் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது.





6. அவளை பார்த்ததும் இதயத்துடிப்பு எகிறும். புது அனுபவமாகத் தோன்றும். நீண்ட நேர பிரிவை மனம் ஏற்றுக்கொள்ளாது. எல்லா நேரங்களிலும் அவள் நினைப்பாகவே இருக்கும். கனவிலும் வந்து விடுவாள். ஆரம்பத்தில் அதிக அன்பும், பின்னர் சற்று மங்கியதாகவும் தோன்றுகிறதா? அவருடன் இருக்கமுடியாத நேரத்தில் வேதனையை உணர்கிறீர்களா, முத்தமிடும் எண்ணமும், தழுவிக் கொள்ளும் எண்ணமும் அதிகரிக்கிறதா? இதற்கு பெயர் `பப்பி லவ்’. பருவ வயதில் தோன்றும் ஆரம்ப நிலைக் காதல் அனேகமாக இந்த வகையைச் சார்ந்தது.





7. எப்போதும் அவரை பற்றிய நினைப்பும், அவருடனேயே இருக்க வேண்டும் என்ற நினைப்பும் வருகிறதா? அவர்தான் உங்கள் வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர் என்று நினைக்கிறீர்களா? அவருக்காக அனைத்தையும் விட்டுத் தரவும் சம்மதிக்கிறீர்களா, மோகம், சிற்றின்பம், முத்தமிடுதல், தழுவிக் கொள்ளும் உணர்ச்சி, இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற உணர்வுகள் இருக்கிறதா? உங்கள் காதல் உணர்ச்சிமிக்கது. இருவருக்கும் இதே உணர்வு இருந்தால் தவறில்லை. ஒருவர் மட்டும் அதிகமாக உணர்ச்சி வசப்படுவது விபரீத விளைவுகளை உண்டாக்கும்.





8. `எனக்கு காதல் வந்துவிட்டது என்று தோன்றுகிறது, அவளை பிரியவே கூடாது. நான் பார்த்ததிலே அவள்தான் அழகு, அவளை எப்படியாவது மடக்கிவிட வேண்டும்’ என்று நினைத்து சாகசங்களைச் செய்வது என்று இருக்கிறீர்களா? அவரது அழகில் உணர்ச்சி தூண்டப்படுவது, தகாத கற்பனைகளிலும் மிதப்பது என்று இருந்தால் உங்கள் காதல் இனக்கவர்ச்சி வகையைச் சார்ந்தது. `டீன் ஏஜ்’ பருவத்தில் ஏற்படும் உணர்வுகள் இத்தகையதாக இருக்கிறது. அன்பு கூடி அனுபவம் முற்றியதும் இனிய காதல் மீண்டும் மலரும்.

No comments:

Post a Comment