பெட்ரோல் பங்க்குளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்றே மூன்று விதங்களில்தான் ஏமாற்ற முடியும் என்கிறார்கள். ஒன்று கலப்படம் செய்வது மூலமாக. இரண்டாவது நம் கவனத்தை திசை திருப்புவது மூலமாக குறைவாகப் போடுவது. மூன்றாவது மிஷினிலேயே அளவை மாற்றிவிடுவது.
கலப்படம்: எப்படி நடக்கிறது..?

பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?







தகவலுக்கு நன்றி சகோதரம்...
ReplyDeleteதொடர் அசத்தல் பதிவுகளை தருவதற்கு நன்றி!
ReplyDelete