Search This Blog

Wednesday, December 29, 2010

"மன்" "மதன்" " "அம்பு "

பொதுவாக எனக்கு கமல்ஹாசனின்  படங்கள் பிடிக்கும். படம் நன்றாக இருந்தால் சூப்பர் ஹிட், இல்லேன்னா பிளாப். அது தான் கமல். இது ரவிக்குமார் அவர்களுக்கும் பொருந்தும்.  ரவிக்குமார் கமல் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களும்  நகைசுவைக்கு பிரதான முக்கியத்துவம் இருக்கும் .அவ்வை சண்முகி ,தெனாலி ,பஞ்ச தந்திரம் ;  தசாவதாரம் . இந்த வருசையில் மன்மதன் அம்பு இருக்கும் என எதிர்பார்த்து படம் பார்த்த அனைவரயும் இந்த படம் திருப்தி படுத்தியதால் என்றால் கண்டிப்பாக இல்லை என்பேன்..

நடிகை நிஷாவும் ( த்ரிஷா )  தொழிலதிபர் மதனகோபாலும் ( மாதவன் ) காதலிக்கிறாங்க. மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் ( கமல் ) மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது நண்பனை காப்பதற்கு மேஜர் மன்னார் பொய் சொல்லி  மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை.

நரையோடிய தாடி, அதையும் மீறி இழையோடும் இளமை என்று பயம் வர  வைக்கிறார் கமல்.  வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் ரொம்பவும் அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.

தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார்.

த்ரிஷா தன் சொந்த குரலில் நன்றாக பேசி உள்ளார். ஆனால், நடிப்பு ஹ்ம்ம்..

சங்கீதா நன்றாக நடித்து உள்ளார்.. இந்த படத்தில் எந்த ஒரு காட்சியும் மனதில் ஒட்டவே இல்லை.. இது இன்னொரு மும்பை எக்ஸ்பிரஸ்..

கடைசி இருபது நிமிடங்களில் ஆள் மாறாட்டக் காட்சிகளில் மட்டுமே காட்சியமைப்புகளின் மூலமே நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், crazy மோகன் இல்லது நன்றாகவே தெரியுது படம் முழுவதும் ..

நம்ம ஞானி சார் பையன் தான் படத்துக்கு ஒளிபதிவு.. ஐரோபியவை நன்றாக படம் பிடித்து காட்டி உள்ளார்..

படத்தில் பிடித்த வசனம் :

-          வீரத்தின் உச்சகட்டம்  அகிம்சை .
-          சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க.
      -          பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.அடுத்தவர்களின் படத்தை மொத்தமாக  வாங்கி மிகக்  லாபம் பார்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தை மட்டும் ஏன் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்கு மொத்தமாக விற்றார் என்பது படம் பார்க்கும் அனைவரும் புரிந்து கொள்வார்கள்..

மைனா படத்தில் பல கோடி லாபம் பார்த்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைச் சொந்தமாக ரிலீஸ் செய்திருந்தால் இதே அளவுக்கு நிச்சயம் நஷ்டத்தைத்தான் சந்தித்திருப்பார் என்று ஊகிக்க முடிகிறது..


3 comments:

 1. பழைய படங்களில் உள்ள கமலின் நடிப்பை பார்க்கும்போது கமல் நடித்து வெகுநாள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.

  ReplyDelete
 2. பதிவு போடுறப்ப நல்லா நாலு தடவ யோசிச்சு, படிச்சு பாத்து போடுங்க தலைவா.. படத்தில் பிடித்த வசனம்ன்னு சொல்லிட்டு அதையே தப்பா போட்டிருக்கீங்களே.. :-)

  வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.. மன்னிப்பு கேட்பது அல்ல. படத்திலயும் வசனம் "வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை" என்று தான் வரும்..

  ReplyDelete
 3. @இனியவன் : நூறுக்கு நூறு உண்மை

  @ பால் [Paul] : சரிங்க வாத்தியரே.. தவறை திருத்தியாச்சு.. ஒரே நல்லில் மூன்று படம் பார்த்தால் பல வசங்களை முழுமையாக தர முடியவில்லை

  ReplyDelete