Search This Blog

Thursday, September 22, 2011

புதிய தலைமுறை வீரர்கள் - இந்திய கிரிக்கெட் அணி

கனவில் கூட நினைக்காத தோல்விகள், அவமானங்கள், குழப்பங்கள் எல்லாம் சந்தித்தும், ஒருநாள் தொடரிலும் தோற்றபோதும், இந்திய அணி மீது நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வியை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. புதிய தலைமுறை வீரர்கள், ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடி, இந்திய கிரிக்கெட் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். யார் அவர்கள்?

ரெஹானே: 23 வயது மும்பை வீரர். மும்பையின் ரஞ்சி ஆட்டங்களில் இவர்தான் நாயகர். ஆனாலும், புஜாரா, பத்ரி போன்ற மாமலைகளைத் தாண்டி, ரெஹானேவை முன்னிறுத்துவது கடினமாகவே இருந்தது. இங்கிலாந்து தொடரில் பல வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதே சமயத்தில், ரெஹானே இந்தியா ஏ அணிக்காக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். உடனடியாக, இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். இப்போது ரெஹானேவுக்கு ஏராளமான ரசிகர்கள். உடனடியாக டெஸ்ட் அணியிலும் ரெஹானேவைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெஹானே, இப்போது ஓப்பனராகவும் முத்திரை பதித்துவிட்டதால் விஜய், முகுந்த் போன்ற தொடக்க ஆட்டக்காரர்களுக்குக் கடும் நெருக்கடியைக் கொடுத்துவிட்டார். தகுந்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் ரெஹானே இன்னொரு திராவிடாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

அஸ்வின்: 24 வயது தமிழக வீரர். சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரம், இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் கவனம் பெற்றுவிட்டார். ஹர்பஜன் சறுக்குகிற சமயம் பார்த்து, அஸ்வின் இந்திய அணிக்குள் நுழைந்திருப்பது மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது. எல்லா கிரிக்கெட் நிபுணர்களும் அஸ்வினின் திறமையிலும் போட்டி மனப்பான்மையிலும் மிகத் திருப்தியாக இருக்கிறார்கள். இங்கிலாந்து வீரர்களால், இறுதிவரை அஸ்வினின் பந்துவீச்சை வீழ்த்த முடியவில்லை. சாம்பியன்ஸ் லீக் முடிந்த பிறகு, அக்டோபரில், ஒரு நாள் போட்டிக்காக இந்தியா வரப்போகிறது இங்கிலாந்து அணி. அதற்கு ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவாரா? அல்லது அஸ்வின் முன்னிறுத் தப்படுவாரா? 


“முன்னெப்போதும் விட நான் மிக உற்சாகமாக இருக்கிறேன். இனி என் மறுபிறப்பைக் காணலாம்,” என்று வேறு அதிரடியாகப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் ஹர்பஜன். தோனி யார் மீது நம்பிக்கை வைக்கப் போகிறார்? இங்கிலாந்தில் அஸ்வின் காட்டிய பங்களிப்புக்கு என்ன பிரதிபலன் கிடைக்கப் போகிறது? ஹர்பஜனைத் தவிர்த்து டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இடம்பெறுவாரா? அஸ்வினை மையமாகக் கொண்டு இத்தனை கேள்விகள் உள்ளன.

p26.jpg 

பார்தீவ் படேல்: 26 வயது பார்தீவ், சச்சின் போல மிக இளம் வயதில் (17) இந்திய அணிக்குள் நுழைந்தவர். மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இந்திய விக்கெட் கீப்பர். முதல் டெஸ்டிலேயே இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியவர். ஆனால், தோனியின் வரவால் காணாமல் போன விக்கெட் கீப்பர்களில் படேலும் ஒருவர். மற்றவர்களைக் காட்டிலும் படேல் தனித்து நிற்கக் காரணம், பேட்டிங். சச்சின், சேவாக், கம்பீர் ஆடாத நிலையில், முரளி விஜய் சரியான ஃபார்மில் இல்லாத இந்தக் காலக்கட்டத்தில், அணிக்குள் நுழைந்து தன் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டார் படேல். வழக்கமாக, இந்திய அணி வீரர்கள் பவுன்சர்களுக்குத் தொடை நடுங்குவார்கள். ஆனால், படேல், சிக்ஸருக்கு விரட்டுகிறார். எப்போது இந்திய அணியைத் தேர்வு செய்தாலும் தம் மீது ஒரு கண் இருக்கும்படி பார்த்துக் கொண்டதே இவருடைய சமீபத்திய சாதனை.

1.jpg 

ஜடேஜா: ஒருகாலத்தில் இவரை வெறுத்தவர்கள் நிறைய பேர். யூசுப் பதானுக்கு இந்திய அணி முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்த பிறகு, ஜடேஜா இந்திய அணிக்கு அவசியமில்லாமல் போனார். ஆனால், 2011 ஐ.பி.எல்.லில், தம்மை யார் என்பதை நிரூபித்தார் ஜடேஜா. தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்தின் வழக்கமான சொதப்பல்களால், இங்கிலாந்து ஒரு நாள் தொடருக்கு முதலில் ஜடேஜா தேர்வாக வில்லை. 

திடீரெனத் தேர்வாகி, அவசர அவசரமாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட அடுத்த நாளே மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஆடினார் ஜடேஜா. பயணக் களைப்பு, ஜெட்லாக் போன்ற நெருக்கடிகளைத் தாண்டி அட்டகாசமாக பேட்டிங், பௌலிங் செய்தார் ஜடேஜா. மேன் ஆப் தி மேட்ச் பரிசும் பெற்றார். 


இந்திய அணிக்குத் தேவைப்படுகிற ஆல்ரவுண்டர் இவர்தான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். பின்னாலேயே நின்று யூசுப்பதான் மிரட்டிக் கொண்டிருந்தாலும் ஜடேஜாவின் ஃபீல்டிங்குக்கு முன்னால் பதான் நிற்கக்கூட முடியாது. 22 வயதில், இந்திய ஒருநாள் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறார் ஜடேஜா.



Wednesday, September 21, 2011

10 மாநகராட்சி - ஜெ. டிக் அடித்த அந்த 10 பேர்

ன்று நிறைந்த வெள்ளிக்கிழமை... சுப முகூர்த்த நாளும்கூட. 10 மாநகராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து கூட்டணி தர்மத்துக்குக் கெட்ட நேரத்தை சுட்டிக் காட்டிவிட்டார் ஜெயலலிதா. 'எந்நேரமும் மாற்றத்துக்கு உட்பட்டது’ என்று அடிக் குறிப்பு இருந்தாலும், இந்த உள்ளாட்சித் தேர்தல் சர வெடிக்குத் திரி கிள்ளிப் போட்டிருக்கும் அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களின் பரபர புரொஃபைல் இதோ... 

சைதை துரைசாமி (சென்னை):

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட வர். 'மினிஸ்டர் கேண்டிடேட்’ என்று அ.தி.மு.க-வின் மூத்த புள்ளிகளே விளிக்கும் அளவுக்கு, ஜெயித்தால் மந்திரியாகும் யோகத்தில் இருந்தவர். சொற்ப வாக்குகளில் தோற்றார். அடுத்து அ.தி.மு.க-வின் கோட்டாவுக்கு வந்த ராஜ்யசபா எம்.பி. பதவி துரைசாமிக்குத்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரபி பெர்னார்டுக்கு அதை வழங்கினார் முதல்வர். காரணம் வணக்கத்துக்குரிய, சிவப்பு விளக்கு சுழலும் காரில் துரைசாமியை அமர்த்த வேண்டும் என்ற எண்ணம்தானாம். இப்போதே மேயர் தோரணையில் மிதக்கிறார் சைதையார்.


கார்த்தியாயினி (வேலூர்): 

வேலூர் அ.தி.மு.க-வினருக்கு சற்றும் அறிமுகம் இல்லாதவர். கணவர் அனுஷ்குமார், மாவட்ட மருத் துவர் அணி இணைச் செயலாளராக இருப்பதுதான் கட்சியில் கார்த்தியாயினியின் விசிட்டிங் கார்டு. வி.ஐ.டி. யுனிவர்சிட்டியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் கார்த்தியாயினி, வேட்பாளர் அவதாரம் எடுத்தது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனாலும் 'இதுவரை இந்த மாவட்டத்துல எங்க கட்சி சார்பா நடந்த எந்தக் கூட்டத்திலும் போராட்டத்திலும் இந்த அம்மாவை நாங்களே பார்த்தது இல்லை. எங்களுக்கே அறிமுகம் இல்லாத இவங்க,  வேலூர் மக்களை எப்படி இம்ப்ரெஸ் பண்ணுவாங்க?’ என்று புலம்புகிறார்கள் வேலூர் அ.தி.மு.க-வினர்.

சவுண்டப்பன் (சேலம்): 

கடந்த 2001 முதல் 2006 வரை சேலம் மாநகராட்சி யின் துணை மேயராகவும், ஆறு மாத காலம் மேயராகவும் இருந்தவர் சவுண்டப்பன். சேலம் மேடை நாடக நடிகர்கள் சங்கத் தலைவராக இருக்கிறார். பெயரில்தான் சவுண்டு இருக்கிறது. ஆனால், கட்சியில் செம சைலன்ட் பார்ட்டி. மேயர் பொறுப்பு வரை வளர்ந்து இருந்தாலும், தனக்காக எந்த கோஷ்டியும் சேர்த்துக்கொள்ளாமல், எந்த கோஷ்டியிலும் இணைந்துவிடாமலும் இருப்பவர். கன்னட தேவாங்க செட்டியார் இனத்தை சேர்ந்தவர். சேலத்தில் குறைவான வார்டுகளில் மட்டுமே இவரது சமூகத்தினர் இருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகக் கை ஓங்கி இருக்கும் வன்னியர்களை எப்படி வளைப்பார் என்பது புரியாத புதிர். இந்த நிலையில், 'கடந்த ஆட்சிக் காலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜாவை வைத்து சேலத்தில் விழா எடுத்தவர் சவுண்டப்பன்’ என்ற புகார் கார்டன் கதவைத் தட்டி இருக்கிறதாம்.

  
ஜெயா (திருச்சி):

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஜெயா, மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணிச் செய லாளர் ராஜேந்திரனின் மனைவி. 1984-ம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினர். ஆனாலும், இதுவரையில் எந்தப் பொறுப்பும் வகித்தது இல்லை. புதுமுகமான ஜெயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், மேயர் ஸீட் எதிர்பார்த்துக் காத்திருந்த கட்சியின் சீனியர்கள் பலருக்கும் அதிர்ச்சி. புத்தூர் ஆபீஸர்ஸ் காலனியில் கால்நடைத் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் வீட்டுக்கு எதிரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சிவபதியின் சிபாரிசின் பேரிலேயே ஜெயாவுக்கு ஸீட் கிடைத்தது என்றும் சொல்கிறார்கள். ஸீட் எதிர்பார்த்து ஏமாந்த பலரும், 'ஜெயாவை வேட்பாளர் ஆக்கினால் தோல்வி அடைந்துவிடுவோம்’ என்று தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி வருகிறார்களாம். .
செ.ம.வேலுசாமி (கோவை): 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா தங்கியிருந்தார். அவருக்குத் தேவையான பொருட்களை தினமும் சென்னைக்கும் கொடநாட்டுக்குமாக கொண்டுபோய்ப் சேர்க்கும் பொறுப்பு வேலுசாமிக்குத் தரப்பட்டு இருந்தது. ஆனால், இந்தப் போக்குவரத்தை ஒழுங்காக நிர்வகிக் காததால் டென்ஷனான ஜெயலலிதா, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து இவரைத் தூக்கி எறிந்ததாகச் சொல்வார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சூலூர் தொகுதியில் இவருக்கு முதலில் ஸீட் வழங்கப்பட்டது. பிறகு அதைப் பறித்ததால், தே.மு.தி.க. கைக்கு தொகுதி போனது. இப்படிக் கட்சியில் தொடர் புறக்கணிப்புக்கு உள்ளாகி நொந்துகிடந்த இந்த மாஜி அமைச்சருக்கு ஒரு வழியாக இப்போது அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

மல்லிகா பரமசிவம் (ஈரோடு): 

ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செய லாளராக இருக்கும் மல்லிகா, கழகத்துக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே கட்சியில் உயர் பொறுப்பு கிடைத்துள்ளது. மேயர் வேட்பாளர் வாய்ப்பு என்ற விறுவிறு வளர்ச்சியைப் பெற்றிருப்பது லோக்கல் அ.தி.மு.க-வினரின் மண்டையைக் காய வைத்து இருக்கிறது. பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் அமைச்சர் கோகுல இந்திராவின் மூலம் மல்லிகா ஸீட் வாங்கி இருக்கி றார் என்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் இப்போதும் ஸீட் எதிர்பார்த்து ஏமாந்தவர்கள், மல்லிகாவுக்கு எதிராகப் 'பழைய விஷயங்களை’க் கிளறி எடுத்து தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பி இருக்கிறார்களாம். கூடவே தே.மு.தி.க-வும் ஈரோட்டை கேட்டு நச்சரிப்பது மல்லிகாவுக்கு கிலியைக் கிளப்பி இருக்கிறது.

விசாலாட்சி (திருப்பூர்): 

மாநில மகளிர் அணித் துணைச் செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக் கழகப் பேச்சாளர் என்று அ.தி.மு.க-வின் கட்சிப் பொறுப் பளவில் பல அவதாரங்களை எடுத்திருக்கும் விசாலாட்சியிடம் ஜெயலலிதாவுக்கு தனிக் கருணை உண்டு. காரணம் இரு முறை எம்.எல்.ஏ. டிக்கெட் வழங்கப்பட்டு... பிறகு இவரது கைகளில் இருந்து பறிக்கப்பட்டதுதான். தொடர் ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டு விடாப்பிடியாக விசுவாசியாக இருந்து வரும் விசாலாட்சிக்குத் தகுந்த கௌரவத்தை வழங்கி இருக்கிறது தலைமை. ஆனாலும் விசாலாட்சிக்கு ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும்போதும் அதைத் தட்டிவிடுவதோடு மட்டுமின்றி இவரது தோல்வியில் சந்தோஷப்படும் லோக்கல் அ.தி.மு.க. புள்ளி, இந்த முறையும் விசாலாட்சியைக் கவிழ்ப்பதற்காக 'சாமி... சாமி!’ என்று பிரார்த்தனையில் இறங்கியிருக்கிறாராம்.

ராஜன் செல்லப்பா (மதுரை): 

கட்சியில் பொறுப்பான பதவிகள் இல்லாத போதும்கூட மதுரைக்குள் செல்லப்பாவுக்குத் தனியான ஓர் ஆதரவு வட்டம் உண்டு. மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அவரைப் பின்வாங்கவைத்துவிட வேண்டும் என்பதற்காக அழகிரி பட்டாளம் துரத்தித் துரத்தி அடித்தது. அவருடைய தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும் ஏகப்பட்ட இடைஞ்சல்கள். அத்தனைக்கும் ஈடுகொடுத்து கம்பாகக் களத்தில் நின்றார். எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையில் நடந்த ஹார்லிக்ஸ் திருட்டு விவகாரத்தைத் திரட்டிக் கொடுத்து ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மத்திய தொகுதி தே.மு.தி.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், செல்லப்பாவின் வாய்ப்பு நழுவிப்போனது. அதனால்தான் இப்போது மேயர் வாய்ப்பு.

   
 விஜிலா சத்தியானந்த் (திருநெல்வேலி): 

அதிர்ஷ்டம் இருந்தால் அரசியலில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இவரே. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீவிர அரசியலுக்கு வந்த விஜிலாவுக்கு கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. நெல்லை அ.தி.மு.க-வில் கோஷ்டி அரசியல் தீவிரமாக இருந்த நிலையிலும் எதிலும் தலையிடாமல் இணக்கமாகச் செயல்பட்டதால், பொதுக் குழு உறுப்பினர் பதவியும் தேடி வந்தது. அமைச்சர்கள் ஓ.பி.எஸ்., கோகுல இந்திரா ஆகியோரின் தீவிர விசுவாசி. ஆனாலும், கட்சியில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த சிலர், இவரது வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையிலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கிறார்கள்.

சசிகலா புஷ்பா (தூத்துக்குடி): 

அ.தி.மு.க-வில் மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செய லாளராக இருந்து வரும் இவருக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இறுதியில் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வுக்கு அந்தத் தொகுதி வழங்கப்பட்டுவிட்டதால் கடைசி நேரத்தில் போட்டியிடும் வாய்ப்பை இவர் இழக்க நேரிட்டது. அப்போது ஜெயலலிதா, 'உனக்கு மீண்டும் வாய்ப்பு தருகிறேன்’ என்று கூறியதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார்.  'சசிக்கு நெருக்கமாக இருப்பதும், மணல் வைகுண்டராஜனுக்கு உறவினராக இருப்பதுமே இந்த சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைப்பதற்குக் காரணம்’ என்கிறார்கள். நெல்லையில் இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தையும் சென்னையில் டீம் ஐ.ஏ.எஸ். அகடமியையும் இவர் நடத்தி வருகிறார் என்பது கூடுதல் தகுதி.

- ஜூ.வி. டீம்
  

Tuesday, September 20, 2011

அறிவியல் காரணங்கள்

துருவப் பிரதேசத்தில் வாழும் விலங்குகளின் ரோமம் வெள்ளையாக இருப்பது ஏன்?


துருவப் பகுதிகளில் வாழும் ஜீவராசிகளுக்கு விரோதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இயற்கை அளித்த வரப்பிரசாதம், இந்த வெள்ளை ரோமம். துருவப் பகுதிகளின் சூழ்நிலை, உறைபனியின் காரணமாக வெண்மையாகக் காணப்படும். அந்த வெண்மையோடு வெண்மையாக விலங்குகளை அடையாளம் காண முடியாதபடி, செய்கிறது இந்த வெள்ளை ரோமம். இங்கு வாழும் பல பிராணிகளுக்கு, அவற்றின் ரோமம் கோடையில் நிறம் மாறக்கூடியது. பருவ நிலைக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப, இவற்றின் ரோமங்கள் நிறமாற்றம் பெறுகின்றன. துருவ முயல், கீரி இனத்தைச் சேர்ந்த ஸ்டோட் (stoat) போன்ற பிராணிகளின் ரோமம், குளிர்காலத்தில் வெண்மையாகவும், கோடையில் செம்பழுப்பாகவும் மாறும். 

நெடுஞ்சாலைகளில் வளைவான இடங்களில், ஒரு பக்கம் மட்டும் சாய்வாக சாலைகள் இருப்பது ஏன்?


வளைவான சாலைகளில் வாகனங்கள் வேகமாகத் திரும்பும்போது, மைய விலக்கு விசை தோன்றும்; அவை வாகனங்களை வெளிப்புறமாகத் தள்ளும். அதைத் தவிர்ப்பதற்காகவே சாலை சற்றே சாய்வாக அமைக்கப்படுகிறது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாக்கப்படும். இதுபோன்றே ரயில் தண்டவாளங்களும், வளைகிற இடங்களில் இவ்வாறு சாய்வாகக் காணப்படும்.

இரும்பு ‘துரு’ பிடிப்பது ஏன்?


காற்றுக்கும், இரும்புக்கும் உள்ள உறவு அப்படி. சாதாரணமாக வெளியில் இருக்கும்போது இரும்பு ஒன்றும் ஆவதில்லை. ஆனால் காற்றில் ஈரம் இருப்பின், அது வினை புரிகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஆக்ஸிஜன், ஈரப்பதம், இரும்பு ஆகியவற்றின் ரசாயனக் கூட்டு வினைதான். இதன் விளைவாக ஃபெரஸ் ஆக்ஸைடு உருவாகிறது. இந்த வினைபாட்டை ‘துரு’ (Rust) என்கிறோம். இதனைத் தவிர்க்கக் கண்டுபிடிக்கப்பட்டதே, எனாமல் பெயின்ட். இது இரும்பு மீது ஈரப்பதம் பாதிப்பதைத் தடுக்கின்றது. இதனால் பல காலம் துரு ஏறாமல் இரும்பைப் பாதுகாக்கலாம். 




Monday, September 19, 2011

கணித மேதை;வானியல் வல்லுனர்!



இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள தில்லமல்ல என்ற ஊரில் கி.பி.598-ல் பிறந்தவர். ஆரியபட்டருக்குப் பின் தோன்றிய வானவியல், கணிதவியல் மேதை இவர். முதன்முதலில் கணிதம், அல்ஜீப்ரா என்ற இரண்டையும் வெவ்வேறு துறையாகப் பிரித்தவர். முதன்முதலாக பூஜ்யத்தைப் பயன்படுத்துவது பற்றி விளக்கியவர். இந்தியாவில் குறிப்பிட்டுக் கூறத்தக்க முதல் கணித மேதை இவரே. வியாக்ரமுகன் என்ற மன்னரின் அவையில் வானவியல் அறிஞராக விளங்கியவர். இவரது ‘பிரம்ம ஸ்புட சித்தாந்தம்’ என்ற நூல்தான் இன்றும் இந்தியாவிலும், அரபு நாட்டிலும் வானவியல் துறைக்கு அடிப்படை நூலாக விளங்குகிறது. ஈக்வேஷன்களுக்கு சுலபமாக விடை கண்டுபிடிக்கும் முறையை விளக்கியவர்.‘நியூமெரிகல் அனாலிசிஸ்’ என்ற உயர்நிலை கணிதத்தைக் கண்டு பிடித்தவரும் இவர்தான். வானவியல் தொடர்பான கணக்குப் போட, இவரது ‘கரான கண்ட கத்யாகம்’ எனும் நூலே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது.



இவர் 668ல் மறைந்தார்.





யார் இவர்?


















விடை: பிரம்ம குப்தர்

Sunday, September 18, 2011

புண்ணிய புரட்டாசியில்... வேங்கடவனைத் தொழுவோம்!


'உலகளந்த நாயகனாம் திருமாலுக்கு இந்தப் பூவுலகில்தான் எத்தனையெத்தனை க்ஷேத்திரங்கள்? அவற்றுள் முக்கியமான ஒரு தலம், திருமலை என்றும் திருப்பதி என்றும் புகழப்படுகிற திருவேங்கடம்!''

'அடேங்கப்பா, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 அடி உயரத்தில் உள்ள திவ்விய தேசம் இது! 'வைகுந்தத்துக்கும் மண்ணவர்க்கும் இதுவொரு வைப்பு’ என வைஷ்ணவ ஆச்சார்யப் பெருமக்களால் போற்றப்படும் அற்புதத் தலம். அதாவது, விண்ணுலக தேவர்கள் மட்டுமின்றி, மண்ணுலக உயிர்கள் அனைத்தும் பரந்தாமனுக்குக் கைங்கர்யம் செய்யக்கூடிய திருவிடம் என்று அர்த்தம். வேம் கடம் = வேங்கடம்; 'வேம்’ என்றால், வினைகள்; 'கடம்’ என்றால், கடந்து செல்வது. திருமலைக்குச் சென்று திருவேங்கடத்தானைத் தரிசித்தால், வினைகள் (பாவங்கள்) யாவும் நம்மைக் கடந்துசெல்லும் என்பது சத்தியவாக்கு! கம்பர், தான் எழுதிய ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், திருமலையை சிலாகித்துள்ளார்''.

''அளவற்ற கருணை கொண்டவன் வேங்கடத்தான். அவனுடைய பெருமை, அவனைவிடப் பெரிது. அத்தகைய பெருமானுக்கு முன்னே நாம் வெறும் துரும்பு. வைகுந்தத்தில் இருந்து நமக்காக மண்ணில் வந்து கோயில்கொண்டிருக்கும் பெருமாளுக்கு திருஷ்டி ஏதும் படாதிருக்க வேண்டும் அல்லவா?! அதற்காக, மங்களகரமாகப் பாசுரம் பாடினார்கள் ஆழ்வார்கள். அதனால்தான் அவற்றை மங்களாசாசனம் எனப் போற்றுகிறோம். பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகியோர் மங்களாசாசனம் செய்தருளிய திருத்தலம், திருமலை! இங்கே குடிகொண்டிருக்கும் வேங்கடவனை ஸ்ரீதியாகையர், ஸ்ரீஅன்னமாச்சார்யர், புரந்தரதாசர் ஆகியோர் தங்களது இசையால் பாடிப் பரவினார்கள். இவர்களில் ஸ்ரீஅன்னமாச்சார்யர், 32-க்கும் மேற்பட்ட சங்கீர்த்தனங்களைத் தந்துள்ளார். அதுமட்டுமா?! 'வேங்கடேச சதகம்’ எனும் நூலையும் இயற்றியுள்ளார்'.''ஊழிகள் பல கடந்த திருமாலை... எல்லா நாளிலும் எந்த நட்சத்திரத்தில் வேண்டுமாயினும், எந்த மாதமாக இருப்பினும் அவனைக் கொண்டாடலாம். பன்னிரண்டு மாதங்களிலும் திருவிழா எடுத்து வழிபடலாம். 'நாளும் கோளும் அவனிட்ட வழக்கு’ என்பார்கள். அத்தகைய பெருமாளை, அடியவர்கள் பலரும் இணைந்து துதிக்கவும், தங்களுடைய ஆசையையும் விருப்பத்தையும் நிறைவேற்றிக்கொள்கிற விதமாக, குறிப்பிட்ட நாட்களில், உத்ஸவங்களையும் விழாக்களையும் வைத்துக் கொண்டாடினார்கள். அப்படிக் கொண்டாடப் படுவதற்கு, அது எம்பெருமானின் திருஅவதார தினமாகவும் இருக்கலாம்; அவரின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்த நாளாகவும் இருக்கலாம். ஆக, எல்லா மாதங்களிலும், திருமாலுக்கு விழா எடுக்கலாம். ஆனாலும், புரட்டாசியில் கொண்டாடப்படுகிற உத்ஸவ- விழாக்கள் தனிச்சிறப்பு கொண்டவை. 


கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம்- புரட்டாசி. இந்த மாதம் பௌர்ணமிக்குப் பிறகு வருகிற பிரதமை முதல் மஹாளயம் என்பார்கள். இந்த நாட்கள், பித்ருக்கள் எனப்படும் நம்முடைய முன்னோர்கள் மற்றும் தேவதைகளுக்கு உரிய புண்ணிய காரியங்களைச் செய்வதற்கு உகந்த அருமையான நாட்கள். பிரதமை முதல் அமாவாசை வரை இவற்றைக் கொண்டாடலாம். அமாவாசையை அடுத்து வருகிற நாட்கள் மட்டும் என்ன... அப்போதுதானே நவராத்திரி கொண்டாடப்படுகிறது?! அந்த ஒன்பது நாட்களும் ஸ்ரீமகாலட்சுமி எனும் பெரிய பிராட்டியாருக்கு உகந்த நாட்கள் என்கின்றனர், வைணவர்கள். அதனால்தான் பெரியபிராட்டியார் குடிகொண்டிருக்கும் திருமலையில், திருவேங்கடத்தானுக்கு பிரம்மோத்ஸவ வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், இந்த மாதத்தில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் சுபவேளை கைகூடும் என்பது உறுதி. இதனால்தான், புரட்டாசி மாதத்தை 'கன்யா மாதம்’ என்றும் சொல்வார்கள்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலையில் ஸ்நானம் செய்து, பூஜையறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, நம் மனதுக்குப் பிரியமான பெருமாளின் திருவுருவத்தை துடைத்துப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், சுத்தமான அரிசியை இடித்து மாவெடுத்து, அதனுடன் வெல்லம் கலந்து  இரண்டாகப் பிடித்துவைக்க வேண்டும். இதில், திரியிட்டு நெய்விளக்கேற்றி, மலர், துளசி கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரது நாமாவளிகளை மனதாரச் சொல்லி வழிபட, அவ்விடத்தில் சாட்சாத் அந்தப் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.  திருப்பதியில் இப்படியரு வழிபாட்டினை, கோயிலின் பல இடங்களில் செய்வார்கள் பக்தர்கள். ஆனால், உத்ஸவ காலமான பத்து நாட்கள் மட்டும், பெருமாள் எழுந்தருளியிருக்கும் இடத்தில்தான் மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டுமாம்! காலை நேரத்தில், வீடுகளில் 'திருவிளக்குமாவு’ கொண்டு மாலவனை வழிபட்டுவிட்டு, மாலையில் கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.'பெருமாளே! கோவிந்தா! நாராயணா! ராமா!’ எனத் திருமாலின் எந்தத் திருநாமத்தைச் சொல்லி அழைத்தாலும், அவன் ஓடோடி வருவான். 'நம்பினவர்க்கு நாராயணன்’ என்று சும்மாவா சொன்னார்கள்?!

எனவே, புண்ணிய புரட்டாசியில், திருமாலை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அவனது திருநாமங்களை இடைவிடாது ஜபியுங்கள். பூஜைக்கு மலர்கள், நைவேத்தியத்துக்கு உணவு என எதுவுமே இல்லையாயினும், தூய்மையான சிறிதளவு தண்ணீரே போதுமானது. நாம் முழு பக்தியுடன் தருகின்ற எதையும் ஏற்றுக் கொள்வான். அந்தத் தூயவனை வணங்கி, அவனுடைய திருவடியைத் தொழுதால், நிம்மதியுடன் உங்களை வாழச் செய்வான், திருவேங்கடத்தான்!''ஓம் நமோ நாராயணா!’. 

ஸ்தலசயனத் துறைவார் ஸ்வாமி.

 

தங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்!


முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள்.  

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை!  


தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம்.  

முத்திரையில் ஏமாற்றினால்..?  

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.  சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.    

ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.    

பி.எஃப். பென்ஷன் அடிப்படை தகவல்கள்

'ரிட்டயர்ட் ஆனபிறகு எவ்வளவு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்?’ ஒவ்வொரு தனியார் நிறுவன ஊழியரின் மனதிலும் இருக்கும் கேள்வி இது! 'சம்பளம் அதிகமாக வாங்கும் நபர்களுக்கு கூடுதலாகப் குடும்ப ஓய்வூதியத் தொகை கிடைக்குமா? ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா? வாரிசுகளுக்கும் கிடைக்குமா?’ என பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கிறார்கள் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும். 

ணியாளர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியில் 12% பிராவிடன்ட் ஃபண்ட்- அதாவது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆக பிடிக்கப்படுகிறது. நாம் வேலை பார்க்கும் நிறுவனம் தனது பங்களிப்பாக 12 சதவிகித பணத்தைக் கட்டுகின்றது. இதில் 3.67% பி.எஃப்.-க்கும் மீதமுள்ள 8.33% குடும்ப ஓய்வூதியத்திற்கும் செல்கிறது (அதிக பட்சமாக 541 ரூபாய்).

பென்ஷன் எப்போது கிடைக்கும்?    

பத்து வருடங்கள் பி.எஃப். பிடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த பென்ஷன் கிடைக்கும். அப்படி பத்து வருடங்களுக்கு குறைவாக கட்டியிருந்தால் குடும்ப ஓய்வூதியக் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையைக் குறிப்பிட்ட விகிதத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பென்ஷன் தொகை கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூப்பு அடிப்படையில் பென்ஷன் கிடைக்கும். அதாவது, முதல் இரண்டு குழந்தை களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும். முதல் குழந்தைக்கு 25 வயது பூர்த்தியான பிறகு அந்த தொகை மூன்றாவது குழந்தைக்கு கிடைக்க ஆரம்பித்து, அதன் வயது 25  பூர்த்தி ஆவது வரை கிடைக்கும்.
சம்பளம் அதிகமிருந்தால்..? 

ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏ.வைப் பொறுத்து பி.எஃப். தொகை பிடிக்கப்படுகிறது. சம்பளம் அதிகமாக அதிகமாக பி.எஃப். தொகையும் அதிகமாகப் பிடிக்கப்படும். ஆனால், அதிகமாக சம்பளம் கிடைப்பதாலேயே அதிக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.நாம் வேலை பார்க்கும் நிறுவனம் அளிக்கும் தொகையில் 8.33%, இன்னும் சொல்லப்போனால் அதிகபட்சம் 541 ரூபாய் மட்டுமே குடும்ப ஓய்வூதியத்திற்குச் செல்லும். சம்பளம் எவ்வளவு உயர்ந்தாலும் அதிகபட்சம் 541 ரூபாய் மட்டுமே ஓய்வூதியத் திற்குச் செல்லும் என்பதை மறந்துவிட வேண்டாம். 

எப்படி கணக்கிடப்படுகிறது?

பணியாளரின் சர்வீஸ் மற்றும் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு பென்ஷன் வழங்கப்படுகிறது.

15.11.1995-க்குப் பிறகு உள்ள பணிக்காலத்திற்கேற்ப ஓய்வூதியத்தை கணக்கிடும் ஃபார்முலா கீழே தரப்பட்டுள்ளது.(ஓய்வூதியத்திற்கான ஊதியம் என்றால் தொழிலாளி வேலையிலிருந்து ஓய்வுபெறும் காலத்திற்கு முன்னதாக 12 மாதங்களில் பெறப்பட்ட ஊதியம்.)

தொடர்ந்து பத்து வருடங்கள் பி.எஃப். கட்டி வந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். பத்து வருடங்களுக்கு குறைவாக கட்டியிருந்தால் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியுமே ஒழிய, பென்ஷன் கிடைக்காது. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறினால், புதிதாகத்தான் பி.எஃப். கணக்கைத் தொடங்குவார்கள். இப்போது நிறுவனம் மாறினாலும் பழைய நிறுவனத்தில் இருந்த கணக்கிலேயே பி.எஃப். கணக்கு தொடங்கும் வசதியும் வந்துவிட்டது.

எனினும், நிறுவனம் விட்டு நிறுவனம் செல்லும்போது,  பழைய நிறுவனத்திடமிருந்து பி.எஃப். கணக்கிற்கான 'ஸ்கீம் சர்டிஃபிகேட்’டை கையோடு வாங்கிக் கொள்வது நல்லது.பிற்காலத்தில் பிரச்னை யில்லாமல் பென்ஷன் பெற உங்களுக்கு உதவியாக இருக்கும்.


விகடன் 



  

Saturday, September 17, 2011

லோக்பால் ஊழலை ஒழிக்குமா? பகுதி-4, ஓ பக்கங்கள் -ஞாநி


பிரெஞ்ச் மொழியில் டேஜா வூ என்றால் ஏற்கெனவே கண்டது என்று அர்த்தம். ஒரு விஷயம் நடக்கும்போது அதேபோல முன்னர் ஒருமுறையும் நடந்த உணர்வு மனதில் தோன்றுவதுதான் டேஜா வூ. ஒவ்வொரு முறை ஊழல், லஞ்சம் பற்றி விவாதங்கள் எழும்போதெல்லாம், எனக்கு இந்த டேஜா வூ உணர்வு தவறாமல் ஏற்படுகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னர் 2004ல் ஒரு பிரபல வாரமிருமுறை இதழில் “ஊழலே உன் வேர் எங்கே” என்று ஒரு தொடர் கட்டுரை எழுதினேன். இப்போது ஊழலை ஒழிப்போம். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்று பேசப்படுகின்றவை எல்லாம் ஏற்கெனவே கேட்ட கருத்துகளாகவே தோன்றுகின்றன. ஏழு வருடம் முன்பு எழுதிய கட்டுரைத் தொடரை எடுத்துக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தேன். டேஜா வூவாக இருக்கிறது. அதிலிருந்து சில பகுதிகள் இதோ:

ஊழலின் வேர் படிப்பில் இருக்கிறதா? கல்லாமையில் இருக்கிறதா? பண பலத்தில் இருக்கிறதா? கிரிமினல் குற்ற மனப்பான்மையில் இருக்கிறதா? எதிலிருக்கிறது? நமது எம்.பி.களில் எல்லாவிதமானவர்களும் இருக்கிறார்கள். கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும். மீடியா பொதுவாகக் கோமாளி என்று வர்ணிக்கிற லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்துதான் 2004 மக்களவைக்கு மிக அதிகமான படித்த எம்.பி.கள் வந்தார்கள்! லாலுவே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மாணவர். புதிய தலைமுறையினர் அரசியலுக்குள் வந்தால் நிறைய மாற்றங்கள் வந்துவிடும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால், 2004 மக்களவையில் மிக அதிக கடன் பாக்கி, கிரிமினல் குற்றச்சாட்டுக்கெல்லாம் உள்ளான எம்.பி.கள் அதிகமாக இருந்தது லாலுவின் கட்சியில்தான். 

கடந்த பத்தாண்டுகளில் அரசியலுக்கு வந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே அரசியல் கட்சிகளுடன் ஏதாவது ஒரு தொடர்பில் இருந்தவர்கள். ஒன்று குடும்பத் தொடர்பு. அப்பா அம்மாவோ, அண்ணன் அக்காளோ, தாத்தா பாட்டியோ அரசியல் பிரமுகராக இருக்கும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அல்லது அரசியல்வாதிகளுக்கு ரவுடித்தனத்தில் ஒத்தாசை செய்து வந்த ரவுடிக் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். அப்துல் கலாம் ஆசைப்படுகிற மாதிரி லட்சிய வேகம் உள்ள இளைஞர்கள் அல்ல. சமூக அறிஞர் ரஜ்னி கோத்தாரி சுட்டிக் காட்டியது போல ஒரு காலத்தில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்களாக இருந்து வந்த தாதாக்கள் பலரும், 1975க்குப் பிறகு சஞ்சய் காந்தியின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு, தாங்களே நேரடியாக அரசியல் தலைவராகிவிட்டால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து அப்படி ஆகிவிட்டவர்கள்.  ஊழலை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்தும் ஒரு வேலையை அரசியல்வாதிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது செய்திருக்கிறார்கள். தொழிலதிபர்களோ, சினிமாக்காரர்களோ, வேறு யாராயிருந்தாலும் சரி, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள், தாமாகவே முன்வந்து அதை அறிவித்துவிட்டால், அதற்கு வெறும் 30 சதவிகித வரி விதிக்கப்படும். வரியை செலுத்திவிட்டால் போதும். அந்தப் பணம் எப்படிச் சம்பாதிக்கப்பட்டது என்ற கேள்வி எதுவும் கேட்கப்படமாட்டாது என்று 1997ல் அறிவிக்கப்பட்டது. 

அரசுக்கு வரி வருமானத்தை அதிகரிக்கவும், கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி சுழற்சிக்குக் கொண்டு வந்து பொருளாதாரத் தேக்கத்தை உடைக்கவும் இதைச் செய்வதாக அப்போது அறிவிக்கப்பட்டது.  கணக்குக் காட்டாமல் வைத்திருந்த சொத்து, பணமாக இருந்தால் 30 சதவிகித வரி. கட்டடமாகவோ, நகைகளாகவோ இருந்தால், அதன் மதிப்பில் 30 சதவிகித வரி. இந்த இடத்தில்தான் ஒரு சலுகை ஷரத்து சேர்க்கப்பட்டது. அதாவது கட்டடம், நகைகளின் மதிப்பு 1997ஆம் ஆண்டு மதிப்பாக இருக்கத் தேவையில்லை. 1987ஆம் ஆண்டு மதிப்பு அடிப்படையில் வரி செலுத்தினால் போதும்.

இதன் விளைவு என்ன தெரியுமா?
 
 கைவசம் கோடிக்கணக்கில் ரொக்கமாக கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் எல்லாம் அந்தப் பணத்துக்கு வரி கட்டாமல், நகையும், கட்டடமும் வைத்திருப்பதாகப் பொய் சொன்னார்கள். அந்தப் பொய் நகைகளுக்குப் பத்தாண்டு பழைய மதிப்பில் வரி கட்டினார் கள். வரி கட்டியபிறகு சில ஆண்டுகள் கழித்து அந்தப் பொய் நகைகளைத் தற்போதைய மதிப்பில் விற்றுவிட்டதாக இன்னொரு கணக்கைக் காட்டிவிட்டார்கள். அதாவது கறுப்புப் பணம் வைத்திருந்ததற்கு வரி கட்ட அனுமதி தந்தால்,அதிலும் மோசடி. இப்படி சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருக்கிறது. ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.ஏன் நடவடிக்கை இல்லை? அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளுக்கு ஏராளமாகப் பணம் தேவைப்படுகிறது. அவர்களுடைய சொந்த ஆடம்பரத்துக்கும் அவர்கள் குடும்பத்தில் அடுத்த பத்து தலைமுறைகளின் தேவைக்காகவும் மட்டுமா இந்த ஊழல்கள் நடத்தப்படுகின்றன? சகிக்கப்படுகின்றன? இல்லை. நீங்கள் மிக மிக நேர்மையான தனி மனிதராக இருந்தாலும் பெரும் பணம் இல்லாமல் அரசியல் செய்யவே முடியாது என்பதுதான் உண்மை. 

 ஏன் அப்படி ?

 இந்திய அரசியலைப் பொறுத்தமட்டில் தேர்தல் என்பதுதான் அரசியலில் உச்சக் கட்டம். தேர்தல் விதிகளின்படி சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் பத்து லட்ச ரூபாய் வரையும், மக்களவைத் தேர்தலில் 25 லட்சம் வரையும் செலவு செய்யலாம். ( இது 2004ல். இப்போது லட்சம், லட்சம் முறையே.)நேர்மையானவரான உங்களைத் தப்பித் தவறி ஏதோ ஒரு பெரிய கட்சி தன் வேட்பாளராக அறிவித்துவிட்டால் என்ன ஆகும்? வரம்பை மீறி நான் செலவு செய்யமாட்டேன் என்று முடிவு செய்கிறீர்கள். நீங்கள் ஒரு அரசு ஊழியராகவோ, ஆசிரியராகவோ, பத்திரிகையாளராகவோ, தனியார் அலுவலக ஊழியராகவோ, வேலை பார்த்து வந்த நடுத்தர வகுப்பு அறிவுஜீவி என்று வைத்துக் கொள்வோம். உங்கள் சேமிப்பு, பிராவிடண்ட் ஃபண்டு லோன் எல்லாம் போட்டு தேச சேவை செய்ய முடிவு செய்துவிட்டீர்களானால் கூட, அதிகபட்சம் ஓரிரு லட்சங்களுக்கு மேல் உங்களால் திரட்ட முடியாது. 

உங்கள் எம்.எல்.ஏ, தொகுதியில் சராசரியாக இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள். நீங்கள் போட்டியிடும் செய்தி ஒவ்வொருவருக்கும் தெரிவிக்க, அச்சிட்ட தபால் கார்டை மட்டுமே ஒரே ஒரு முறை அவர்களுக்கு அனுப்புவதானால் கூட, அச்சுக் கூலி 50 பைசா, அஞ்சலட்டை விலை 2 ரூபாய் என்று மொத்தமாக 5 லட்சம் ரூபாய் செலவாகும். ஒரு குடும்பத்துக்கு ஒரு கார்டு அனுப்பினாலே, 2 லட்சம் காலி. வீடு வீடாக நீங்கள் நடந்து போனால் கூட, உங்கள் கூட வரும் பத்து பேருக்கும் உங்களுக்கும் சுமார் 25 நாட்கள் தினப்படி ஆகும் குறைந்தபட்ச செலவுக்குக் கூட காசில்லை. மிகக் குறைந்த பட்சம் இரண்டு ஜீப், நாலு ஆட்டோ, பத்தாயிரம் சுவரொட்டிகள், இருபது பொதுக் கூட்டங்கள் இல்லாமல் நீங்கள் போட்டியிடும் செய்தியை வாக்காளர்களிடம் எடுத்துச் செல்லவே முடியாது. இதற்கான செலவே பத்து லட்ச ரூபாய் தாண்டி விடும்.  நீங்கள் செலவிடும் சொந்தப் பணம் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். மீதி பத்து லட்ச ரூபாயை உங்கள் கட்சி உங்கள் நேர்மையை மதித்து உங்களுக்காகச் செலவு செய்ய முன்வருவதாக வைத்துக் கொள்வோம் (சும்மா ஒரு ஃபேண்ட்டசிதான்). கட்சிக்கு அந்தப் பணம் எங்கிருந்து வரும்? பொது மக்களிடம் உண்டியல் ஏந்தி, கட்சி அதைத் திரட்டியதால் நீங்கள் நம்பினால், நீங்கள் நேர்மையானவர் மட்டுமல்ல முட்டாளும் கூட. 

கட்சி திரட்டி வைத்திருக்கிற பணம் வெவ்வேறு வியாபாரிகள், தொழிலதிபர்கள் ரகசியமாக அளித்திருக்கும் பணம்தான். இதை சும்மா கொடுக்க அவர்கள் முட்டாள்கள் அல்ல. கட்சி ஆட்சியில் இருந்தால் தங்களுக்கு சாதகமானதைச் செய்து தரவும், எதிர்க்கட்சியில் இருந்தால், தங்களுக்கு சாதகமானவற்றை எதிர்க்காமல் இருக்கவும், பாதகமாக எதுவும் செய்யாமல் இருக்கவும், அவர்கள் கொடுத்து வைத்திருக்கும் அட்வான்ஸ் லஞ்சம்தான் அது. சில ஆண்டுகள் முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த ஒருவரை பஸ் முதலாளிகள் சந்தித்து, ‘நன்கொடை’ தரச் சென்றார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் பதில் விருந்தளித்தார். விருந்தின் முடிவில் பிரதான எதிர்க் கட்சித் தலைவரையும் சந்தித்துவிடும்படி அறிவுரையும் வழங்கினார். அதன்படி மறு நாள் காலை எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அவருக்கும் ‘நன்கொடை’ அளிக்கச் சென்றார்கள். வந்தவர்களை காலை டிபன் சாப்பிட அழைத்தார் தலைவர். “அங்கே லஞ்ச் என்றால் இங்கே டிபனாவது உண்டில்லையா?” என்று இரட்டை அர்த்தத்தில் அவர்களிடம் சொன்னார். கட்சியின் காஃபிச் செலவுக்கு மட்டும் நன்கொடை தரச் சென்றவர்கள், டிபனுக்கும் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். இந்த நிலைமையை மாற்ற ஒரு முயற்சி இந்திரா காந்தி காலத்தில் நடந்தது. ஊழலை ஒரேயடியாக நிறுத்திவிடும் முயற்சி என்று தப்பாகக் கருத வேண்டாம். உள்ளூர் தொழிலதிபர்கள், வியாபாரிகள் பிடியிலிருந்து மட்டும் கட்சியை விடுதலை செய்ய வேண்டும் என்பது சஞ்சய் காந்தியின் திட்டம். அவர்களில் கணிசமானவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் ஆதரிப்பவர்கள் என்பது சஞ்சய் காந்திக்கு உறுத்தலாக இருந்தது. எனவே பிரம்மாண்டமான வெளி நாட்டு கம்பெனிகளின் பேரங்களில் கட்சிக்கு நிதி திரட்டிக் கொண்டால், உள்ளூர் முதலாளிகளை சார்ந்திருக்கத் தேவையில்லை என்பது சஞ்சயின் யுக்தி. இந்த அணுகுமுறையின் விளைவாகத்தான் இரான் கேஸ் பைப் ஊழலில் தொடங்கி, பல்வேறு ராணுவ ஆயுத பேரங்கள் வரை வளர்ந்திருக்கிறது.

கட்சியின் ஊழலால், மக்கள் பாதிக்கப்படுவதை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்த்தால், உங்களைக் கட்சி விரோத நடவடிக்கைக்காக கட்சி நீக்கிவிடும். நேர்மையான ஒருத்தரை கட்சி தன் செலவில் பதவியில் அமர்த்தும் என்பதே சுகமான கற்பனை தான். ஒவ்வொரு கட்சியும் தேர்தல் டிக்கட்டுக்கு விண்ணப்பிக்கும்போதே உங்களை, பணம் டிபாசிட் செய்யச் சொல்கின்றன. இருப்பதில் தனி நபர் ஊழல்கள் மோசடிகள் பெரிதும் இல்லாத இடதுசாரி கட்சிகளில் சேர்ந்து நீங்கள் எம்.எல்.ஏ, எம்.பியாக முயற்சித்தால் நிலைமையே வேறு. அங்கே கட்சி நடத்துவதற்கான பணமே குறைவு. உங்கள் எம்.எல்.ஏ, எம்.பி சம்பளத்தையே கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சியின் முழு நேர ஊழியருக்கு அவை தரும் குறைந்த தொகையை நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். இது நல்ல நடைமுறைதான். ஆனால் தியாகிகளுக்கே பொருத்தமானது. மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்சிஸ்ட் கட்சி பெண் எம்.எல்.ஏ தமக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம், பழையபடி ஆசிரியர் வேலைக்கே போகிறேன் என்று போய் விட்டார். காரணம் கட்சி தந்த ஊழியர் சம்பளத்தில் குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே அரசியலில் சுயநலமில்லாமல், கட்சி நலம், பொது நலத்துக்கு மட்டுமே பாடுபடும் எம்.எல்.ஏ, எம்.பியாக நீங்கள் விரும்பினால், முதலில் உங்கள் குடும்பம் உங்கள் வருவாயை நம்பியிராத அளவுக்காவது உங்களுக்குப் பணவசதி இருக்க வேண்டும். 

எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி, கவுன்சிலர் பதவிகளே வேண்டாம். வட்டச் செயலாளர், நகரச் செயலாளர் அளவில் மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுகிறீர்களா? அது சாத்தியம்தானா?

 இந்த வாரக் கேள்வி!

 தென் மாவட்டங்களில் குரு பூஜை என்ற பெயரில் தலைவர்களுக்கு அஞ்சலி என்ற போர்வையில் ஜாதி வெறியைத் தூண்டி விடும் எல்லா குரு பூஜைகளுக்கும் ஏன் ஒரேயடியாகத் தடை விதிக்கக் கூடாது?

“சாலையோரத்திலே வேலையற்றதுகள். வேலையற்றதுகள் நெஞ்சிலே விபரீத எண்ணங்கள்” என்று அண்ணா சொன்னதற்கொப்ப, தற்போது கலவரங்கள் நடக்கும் பகுதிகளில் கடுமையான படிப்பின்மையும், அதைவிடக் கடுமையான வேலையின்மையும் இல்லாமல் இருந்தால் இப்படிப்பட்ட கலவரங்கள் நடக்குமா? மாறி மாறி 44 வருடங்கள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஆட்சி நடத்திய பின்னரும் இப்பகுதிகளில் கல்வியும் வேலையும் ஏன் பெருகவே இல்லை ?






ஜாக்கிசான் - ஹாங்காங்கில் பிறந்தவன்!


1954ஆம் வருடம், ஏப்ரல் ஏழாம் தேதி ஹாங்காங்கில் பிறந்தவர் ஜாக்கிசான். அப்பா பெயர்: சார்லஸ் சான். அம்மா பெயர் லீ-லீ. பிறந்தவுடன் ஜாக்கிசானுக்கு பெற்றோர் வைத்த பெயர் சான் காங்-சாங். அதாவது ‘ஹாங்காங்கில் பிறந்தவன்’ என்று அர்த்தம். பிறக்கும்போதே குண்டு கத்தரிக்காய் போல இருந்த குழந்தை ஜாக்கியின் எடை: 12 பவுண்டு. பருமனான குழந்தையான ஜாக்கிக்கு பெற்றோர் வைத்த செல்லப் பெயர்: குட்டி பீரங்கி. பெற்றோர்களின் ஏழ்மையைப் பார்த்த டாக்டர், “உங்களுக்கு வேண்டிய பணத்தை நான் தருகிறேன்; இந்தக் குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று சொன்னார். ஆனால், அவர் பெற்றோர்கள் உடன்படவில்லை.ஜாக்கிசானின் அப்பா, அம்மா இருவரும் ஹாங்-காங்கில் இருந்த பிரெஞ்ச் தூதரக அதிகாரியின் வீட்டில் வேலை செய்து வந்தார்கள். அப்பா, அந்த வீட்டின்சமையல்காரர். அம்மா, வீட்டு வேலை செய்பவர். வருமானம் மிகவும் குறைவு. குழந்தைக்கு வேண்டிய பால் பவுடர், துணி, மருந்து, மாத்திரைகள் போன்றவற்றுக்குக்கூட பணமில்லாமல் சிரமப்பட்டார்கள்.பள்ளி செல்லும் வயது வந்ததும், அருகில் உள்ள துவக்கப் பள்ளியில் ஜாக்கி சேர்க்கப்பட்டான். ஆனால், ஜாக்கிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை; முதல் வகுப்பில் தேறி, அடுத்த வகுப்புக்குப் போக முடியவில்லை. தன் ஒரே மகன் படிப்பில் சிறந்து விளங்கவில்லையே என்ற ஏக்கம் அவனது அப்பாவுக்கு.


ஜாக்கிக்கு ஏழு வயதான போது, ஆஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்க தூதர் அலுவலகத்தில் தலைமை சமையல்காரர் வேலை கிடைத்தது அவர் அப்பாவுக்கு. கூடவே அம்மாவும் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படத் தயாரானார். அதாவது, ஜாக்கியை ஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு, அவர்கள் இரண்டு பேர் மட்டும் ஆஸ்திரேலியா செல்வது என்று முடிவு செய்தார்கள். ஏழு வயது குழந்தையான ஜாக்கி, ‘சைனா டிராமா அகாடமி’ என்ற உறைவிடப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டான்.  அங்கே ஜாக்கிக்கு சொல்லித்தரப்படாத விஷயங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கராத்தே, குங்க்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகள், அக்ரோபாடிக் உடற்பயிற்சிகள், பாட்டு, நடிப்பு என்று பல விஷயங்கள்! சீனாவின் ஓபரா எனப்படும் மேடை நாட்டிய நிகழ்ச்சிகள், மிகவும் மாறுபட்டவை. அது நடிப்பு, உடற்பயிற்சிகளின் அடிப்படையிலான அக்ரோபடிக்ஸ், தற்காப்புக் கலைகள் என அனைத்தும் சேர்ந்து உருவாக்கப்படுவதாகும். அந்தத் துறையில் சீனாவில் சிறந்து விளங்கியது ‘பீகிங் ஓபரா’ என்ற அமைப்பு. அதற்குத் தேவையான கலைஞர்களை உருவாக்குவதுதான் சைனா டிராமா அகாடமியின் முக்கிய நோக்கம்.அந்தப் பள்ளியில், தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். நாள் முழுக்க பயிற்சி வகுப்புகள். இரவு படுக்கைக்குப் போகிறபோது நள்ளிரவு ஆகியிருக்கும். தவிர, குழந்தைகளுக்கு வயிறார சாப்பாடு போட மாட்டார்கள். மேலும், அங்கே இருக்கும் ஆசிரியர்கள் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்கள். சிறிய தவறுக்குக்கூட, தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்கும். 

என்றாலும், தனக்கு சொல்லித்தரப்பட்ட விஷயங்களை அவன் மிகுந்த ஆர்வத்தோடும், அக்கறையோடும் கற்றுக் கொண்டான். கூடவே அதிர்ஷ்ட தேவதையின் அருளும் இருந்தது. பலன்? எட்டு வயதிலேயே, ஜாக்கிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு, தேடி வந்தது. ‘பிக் அண்டு லிட்டில் வாங் டின் பார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர், விரைவிலேயே ஒரு ஸ்டன்ட் வல்லுனர் ஆனார். பிறகு, ஹாங்காங்கின் சினிமா உலகத்தில் சிறு வேடங்களில் குறிப்பாக ஸ்டன்ட் காட்சிகளில், நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. 1973ல் புரூஸ் லீ நடித்த ‘என்டர் தி டிராகன்’ படத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 19. ஆனால் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால், தன் பெற்றோர்களின் அழைப்பின்பேரில், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அங்கே ஒரு கட்டிடங்கள் கட்டும் வேலை செய்தார். அப்போது சக தொழிலாளி ஒருவர், சான் காங்-சாங் என்ற பெயரை, ‘லிட்டில் ஜாக்’ என்று அழைக்க ஆரம்பித்தார். அதுவே ஜாக்கி என்று ஆனது. சினிமாவில் ஜாக்கி சான் என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.இந்தச் சமயத்தில்தான், வில்லி சான் என்ற சினிமா தயாரிப்பு நிர்வாகியிடமிருந்து, உடனே புறப்பட்டு ஹாங்காங் வரும்படி ஒரு தந்தி வந்தது. ஸ்டன்ட் காட்சிகளில் ஜாக்கியின் திறமையை முன்பே கவனித்திருந்தார் இந்த மனிதர். ஹாங்காங் வந்த 21 வயது ஜாக்கிசானுக்கு, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் அவர் வாழ்வின் திருப்புமுனை!

Friday, September 16, 2011

திரிவேணி சங்கமம் - பூமிக்குள் நதி


நம் நாட்டில், திரிவேணி சங்கமம் என்று அலஹாபாத் நகரைச் சொல்வார்கள். அங்கே கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. அதனால்தான் இந்தப் பெயர். நீங்கள் அங்கே சென்றால், கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிப்பதைக் கண்களால் காண முடியும். சரஸ்வதி எங்கே என்று கேட்டால்...? 'அது பூமிக்கு அடியில் ஓடுகிறது’ என்பார்கள். இதைப் பலரும் நம்பமாட்டார்கள். ஆனால், இப்போது பிரேஸில் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம், பூமிக்குள் நதிகள் ஓடுவது உறுதி ஆகிவிட்டது. அங்கே அமேஸான் பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு, பூமிக்குள் நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில்... நதி ஒன்று ஓடுவதாக ஹம்ஸா என்பவரின் தலைமையிலான குழு கண்டறிந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இவர், பிரேஸில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள 'தேசிய புவி வெப்ப ஆய்வு மையத்’தில் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

''பூமிக்குள் ஓடும் இந்த நதியை, புவியின் வெப்ப மாறுதல்களை அடிப்படையாக வைத்துக் கண்டறிந் துள்ளோம். இந்த நதி, ஒரு வினாடிக்கு 3,900 கன மீட்டர் அளவுக்குத் தண்ணீரைக் கொண்டுசெல்கிறது. இந்த நதிக்கு என்னுடைய மாணவர்கள் ஹம்ஸா நதி என்று பெயரிட்டுள்ளனர். நதியைக் கண்களால் காண 4 கி.மீ. ஆழத்துக்குக் கிணறு வெட்ட வேண்டும். அந்த அளவுக்கு செலவு செய்ய பணம் இல்லை என்பதால் அந்த முயற்சியில் இறங்க வில்லை'' என்கிறார் ஹம்ஸா.

இப்போது சொல்லுங்கள்... நம் நாட்டில் பூமிக்குள் சரஸ்வதி நதி ஓடுவதை நம்பலாம் தானே!

கேட்கும் முறை! - அறிவோம் ஆங்கிலம்


சந்தோஷ், சுரேஷ், மூர்த்தி: Good morning, sir.


ஆசிரியர்:Yes. Good morning, sir.. என்ன மூர்த்தி ஏன் ரொம்ப டல்லா இருக்கே. Any Problem?

மூர்த்தி: ஸார் இன்னிக்கு என்னைப் பத்தி அறிமுகப்படுத்திக்கணும்னு சொல்லியிருக்கீங்க, அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு. 

ஆசிரியர்: இதுல பயப்படறதுக்கு என்ன இருக்கு? முதல்ல உன் பேரை சொல்லு. நீ எந்த ஸ்கூல்ல எத்தனையாவது படிக்கறேன்னு சொல்லு. அப்புறம் உன் தந்தையின் பெயர், அவர் எங்கே வேலை செய்யறார்னு சொல்லு. எல்லாம் உனக்கு தெரிஞ்ச விஷயங்கள் தானே.  

மூர்த்தி: எல்லாம் தெரிஞ்ச விஷயங்கள்தான்; ஆனா அதையெல்லாம் இங்கிலீஷ்ல சொல்லத்தான் பயமா இருக்கு.

ஆசிரியர்: நீ பயப்படாம start பண்ணு. நான் உனக்கு help பண்றேன்.


மூர்த்தி: Sir, my name is S. Murthy. I am ............... I am study ..................sorry. I am studying in 6th Standard......... சரியா ஸார்.


ஆசிரியர்: கரெக்ட். ஆனால் I am Studying in 6th Standard னு சொன்னே இல்லியா, இதை I am studying in the 6th Standardனு, the சேர்த்து சொல்லணும் என்ன புரியுதா? சரி, நீ எந்த ஸ்கூல்ல படிக்கறே?


மூர்த்தி: Sir, I am studying in S.R Higher Secondary School.


ஆசிரியர்: ok. இப்போ எல்லாத்தையும் சேர்த்து சொல்லு.


மூர்த்தி: Sir, my name is S.Murthy. I am studying in the 6th Standard. I am studying in S.R. Higher Secondary School.


ஆசிரியர்: Good................. மூர்த்தி நீ இப்போ சொன்னது எல்லாம் சரிதான், ஆனால் ஒரு சின்ன மாற்றம் மட்டும் செய்துகொள். My name is S.Murthy. I am studing in the 6th Standard in S.R Higher Secon-dary School னு சொன்னால் போதும்.


மூர்த்தி: OK, sir...அவ்வளவுதானே ஸார்?

ஆசிரியர்: ம்ம்......... என்ன மறந்துட்டியா? உன் தந்தையின் பெயர் என்ன, அவர் என்ன வேலை செய்கிறார், என்று சொல்லணுமே. சரி, சந்தோஷ் நீ மூர்த்தியிடம் அவனுடைய அப்பாவின் பெயர் என்ன? அவர் என்ன வேலை செய்கிறார் என்று கேள். மூர்த்தி, நீ இப்போ சந்தோஷ் கேட்கற கேள்விகளுக்கு பதில் சொல். என்ன சரியா?


மூர்த்தி: சரி, ஸார். ட்ரை பண்றேன்.


சந்தோஷ்: Murthy, what is your father name?


ஆசிரியர்: ஏய் ... சந்தோஷ், நீ கேட்ட கேள்வி சரியில்லை. ஏதோ ஒரு சின்ன தப்பு பண்ணியிருக்கே. நல்லா யோசனை பண்ணி கேளு ......


சந்தோஷ்: ஸார், சரியாத்தான் கேட்டிருக்கேன். தப்பு பண்ணின மாதிரி தெரியலையே?


ஆசிரியர்: உன் தந்தையினுடைய பெயர் என்ன என்பதை what is your father name? என்று கேட்பது சரியல்ல,what is your father's name? (உன் தந்தையினுடைய பெயர் என்ன?) என்றல்லவா கேட்க வேண்டும்.


சந்தோஷ்: ஸாரி .. ஸார் ...


ஆசிரியர்: மூர்த்தி, what is your father's name?


மூர்த்தி: Sir, my father name is R. Shanmugam.


ஆசிரியர்: சந்தோஷ் பண்ணின தப்பையே நீயும் பண்ணியிருக்கே. My father name இல்ல, My father's name னு சொல்லணும்.


மூர்த்தி: Ok, sir. My father's name is R.Shanmugam.

தெரிந்து கொள்ளுங்கள்!  

a, e, i, o, u இந்த ஐந்து எழுத்துகளையும் vowels அதாவது உயிரெழுத்து என்கிறோம். இந்த ஐந்து எழுத்துகளில் ஏதேனும் ஒரு எழுத்து இல்லாமல் ஒரு வார்த்தை உருவாகாது என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் a, e, i, o, u இவற்றில் ஒரு எழுத்தைக்கூட உபயோகிக்காமல் சில வார்த்தைகளை உருவாக்கலாம். அவை எவை என்பதை சொல்லுங்கள் :)
Veta ராஜகோபாலன்





Thursday, September 15, 2011

ஹீரோ இனி? Hero ஹீரோ ஹோண்டாவின் புது அவதாரம்!

கடந்து வந்த பாதை

 
சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ நிறுவனம், 1984-ம் ஆண்டு ஜப்பான் ஹோண்டா நிறுவனத்துடன் கூட்டணி போட்டு, மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் முதன்முறையாக அடியெடுத்து வைத்தது. முதன்முறையாக 1985-ம் ஆண்டு 'சிடி டான்’ மோட்டார் சைக்கிளைத் தயாரித்து வெளியிட்டது ஹீரோ ஹோண்டா! விலை குறைவான பைக் என்பதோடு நகர, கிராமப் பகுதிகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த வாகனமாக இருந்த சிடி டான் செம ஹிட்! விற்பனைக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகின. 1989-ம் ஆண்டு முதல் பைக் வெளிவந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஸ்லீக்’ என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது ஹீரோ ஹோண்டா. 10 ஆண்டுகள் கழித்து 1994-ம் ஆண்டு ஹீரோ ஹோண்டாவின் விற்பனையைத் தூக்கி நிறுத்திய 'ஸ்ப்ளெண்டர்’ பைக் அறிமுகம் செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டு, 'உலகிலேயே அதிமாக விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்’ என்ற உச்சத்தைத் தொட்டது ஸ்ப்ளெண்டர். அதன் பிறகு, ஹீரோ ஹோண்டாவின் விற்பனைப் புள்ளி விவரங்கள் அனைத்துமே உச்சத்தைத் தொடும் சாதனைகள்தான். உலகிலேயே அதிக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் நிறுவனமாக ஹீரோ ஹோண்டா உயர்ந்தது. அதே காலகட்டத்தில், 2001-ம் ஆண்டு முதல், தனியாக இந்தியாவில் கடை திறந்தது ஹோண்டா.
 
 
ஒரு பக்கம், இந்திய நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதில் ஹோண்டா நிறுவனத்துக்கு விருப்பம் இல்லை. மறுபக்கம், மோட்டார் சைக்கிள் தயாரிப்பு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்ட பிறகு ராயல்ட்டியாக பல ஆயிரம் கோடிகளைத் தர ஹீரோ நிறுவனம் தயாராக இல்லை. இதுவே இரண்டு பேருக்கும் இடையே பெரிய பகையை உண்டு பண்ணியது. இதற்கிடையே, ஸ்பேர் பார்ட்ஸ் தொழிலை ஹோண்டா தங்களது ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனத்திடம் தந்து விடும்படி ஹீரோ நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தியது. இதற்கு ஹீரோ நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதி காத்து வந்த ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பிரிந்துவிடப் போவதாக கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. ஹீரோ ஹோண்டா நிறுவனத்தில் ஹோண்டா வைத்திருந்த 26 சதவிகிதப் பங்குகளையும், ஹீரோ நிறுவனத்தின் முஞ்சால் குடும்பமே 3,800 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஹீரோ நிறுவனமும் ஹோண்டா நிறுவனமும் முறைப்படி பிரிந்து விட்டாலும், 1994-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 2014-ம் ஆண்டு வரை ஹோண்டா, ஹீரோ நிறுவனத்துடன் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 
இந்தியாவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஹோண்டா நிறுவனம், லாபத்தைப் பங்கு போட விரும்பாததே தனியாக கடை திறக்கக் காரணம்! தனியாக வந்தாலும் 'முதலில் ஸ்கூட்டர்களை மட்டுமே தயாரிக்கப் போகிறோம். அதனால், மோட்டார் சைக்கிள் விற்பனையுடன் போட்டி போடப் போவதில்லை’ என்று சமரசம் சொன்னது ஹோண்டா. ஆனால், 2005-ம் ஆண்டு முதன்முதலாக 'யூனிகார்ன்’ எனும் 150 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. இது, நேரடியாக ஹீரோ ஹோண்டாவின் 'சிபிஸீ’ மோட்டார் சைக்கிளுக்குப் போட்டியாக இறங்க... அப்போதே ஹோண்டாவுக்கும், ஹீரோவுக்கும் பிரிவு உறுதியானது.
 
 
ஹீரோ இனி.. 
 
ஹோண்டாவை விட்டுப் பிரிந்து விட்டதால், ஹீரோ நிறுவனம் மீண்டும் ரேஸில் முதலில் இருந்து துவங்கத் தயாராகி இருக்கிறது. அதற்கு முதலில் 'ஹீரோ மோட்டோ கார்ப்’ என்ற தனது புதிய பெயரை பிரபலப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 9-ம் தேதி லண்டனில் உள்ள புகழ் பெற்ற 'ஓ2 அரினா’ அரங்கில் புதிய மோட்டார் சைக்கிள்களையும், பிராண்டையும் அறிமுகம் செய்தது ஹீரோ. இம்பல்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ எனும் இரண்டு வாகனங்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஷாரூக்கான், ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா, பாப் பாடகர் ஏகான், முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் என பலரையும் அழைத்து வந்து விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது ஹீரோ. இதற்கிடையே ஹீரோவின் புதிய தீம் பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துப் பாடியிருக்கிறார்.
ஹீரோ இம்பல்ஸ் 
 
ஹீரோ ஹோண்டா சிபிஸீ எக்ஸ்ட்ரீம் மற்றும் ஹங்க்கில் பொருத்தப்பட்டு இருக்கும் அதே 149.2 சிசி இன்ஜின்தான் இம்பல்ஸ் மோட்டார் சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது மற்ற பைக்குகளைப்போல் இல்லாமல், கேடிஎம் பைக்குளைப் போல 'ஆன்/ஆஃப்’ ரோடு பைக்காக வெளிவந்திருக்கிறது. முன் பக்கம் டிஸ்க், பின் பக்கம் டிரம் பிரேக்குகளைக் கொண்ட இந்த பைக்கில், பின் பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. நவீன டிஜிட்டல் மீட்டரில் சர்வீஸ் இடைவெளி குறித்த எச்சரிக்கை இண்டிகேட்டரும் உண்டு. இது பிரேசில் நாட்டுக்காக ஹோண்டா தயாரித்த என்.எக்ஸ்.ஆர் - 150 பைக்கின் மறு உருவம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹீரோ மேஸ்ட்ரோ 
 
ஹோண்டா ஆக்டிவாவில் இருக்கும் 110 சிசி இன்ஜின்தான் ஹீரோ மேஸ்ட்ரோவில் இடம் பிடித்திருக்கிறது. டிஜிட்டல் மீட்டர், மைக்ரோ ப்ராஸர் இக்னீஷியன், டஃப் அப் ட்யூப்ஸ் என பல நவீன வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது ஹீரோ.
 
புதிய மோட்டார் சைக்கிள்கள் எப்போது வெளிவரும், அதன் விலை எவ்வளவு என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், போட்டி நிறுவனங்களான பஜாஜ் மற்றும் டிவிஎஸ், ஹோண்டாவைவிட இரண்டு மடங்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்யும் ஹீரோ நிறுவனம், மார்க்கெட்டை இழக்காமல் இருக்க... புதிய மோட்டார் சைக்கிள்களின் விலையை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கலாம்!  

Wednesday, September 14, 2011

அண்டார்க்டிகா!


மிக அருகில் உள்ள நகரம் என்பதே ஆயிரம் மைல்களுக்கு அப்பால்தான். அந்த அளவுக்கு மக்கள் வசிக்குமிடத்திலிருந்து மிகவும் தள்ளியிருக்கும் பகுதி அண்டார்க்டிகா. உலகின் மிகக் குறைவான வெப்பம் இங்குதான். அண்டார்க்டிகாவில் கோடை எப்படி இருக்கும்? இதற்காக அங்கு கோடையில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்து இருந்ததாம். மனநலமும் தாற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.


தனிமை, எந்தவிதப் பொழுதுபோக்குக்கும் இடமில்லாதது ஆகியவற்றினால் அங்கு வசிப்பவர்களுக்கு மன இறுக்கம் விரைவிலேயே ஏற்பட்டு விடுகிறது.மிகக் கடுமையான ஒரு பயணத்தில் பங்குகொள்ளத் தயாரா? பல மாதங்கள் கடுமையான குளிரில் தாக்குப் பிடிக்க வேண்டும். குறைவான ஊதியம்தான். திரும்பி வருவது சந்தேகம்தான்!” இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்டார் அண்டார்க்டிகாவில் ஒரு குழுவாக ஆராய்ச்சி செய்ய விரும்பிய பேராசிரியர் ஒருவர்.


அண்டார்க்டிகா ஒரு தனி நாடும் அல்ல; அதே சமயம், எந்த நாட்டுக்கும் சொந்தமானதும் அல்ல. எந்த நாடு வேண்டுமானாலும் அங்கு சென்று தடையின்றி ஆராய்ச்சி செய்ய முடியும். 




Tuesday, September 13, 2011

அறியா மற்றும் அறிந்த தகவல்கள்


* விலங்குகளில், ஒட்டகச்சிவிங்கியால் சாதாரண ஒலியைக் கூட எழுப்ப முடியாது.


* இரண்டு தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.

* உலகிலேயே மிக மெதுவாக ஊர்ந்து செல்வது கடல் ஆமைதான். 0.17 மைல் வேகத்தில்தான் கடல் ஆமை செல்லும். 

* உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம், கல்லினன் வைரம் (Cullinan Diamond). இது தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியாவில் உள்ள ப்ரிமியர் வைரச் சுரங்கத்தில் கிடைத்தது.

* அல்லாமுத்து (Pearl of Allah) என்பது ஒன்பதரை அங்குல நீளமும், ஐந்தரை அங்குல குறுக்களவும் கொண்டது. இது பிலிப்பைன்ஸ் கடலில் கிடைத்தது.

* மிகவும் சக்தி வாய்ந்த உயிரினம் எறும்புதான். அது, தன்னைப் போல் 7 மடங்கு அதிக எடையுள்ள பொருளை இழுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தது.  

* பறவைகள் எல்லா மரத்திலும் கூடு கட்டி வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் கூடு கட்டாது.  

* சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜுனா விருது முதன்முதலில் 1961ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர், தத்துவ மேதை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள். 

* ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, அதன் உடலில் இருந்து மிகச் சரியாக அறுத்து அகற்றிவிட்டால், பல வாரங்கள் அது தலையில்லாமலேயே உயிர் வாழும். இறப்பது, உணவு உட்கொள்ள முடியாததால்தான்.

* ஆண் பட்டுப்பூச்சி ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள பெண் பட்டுப் பூச்சியை மோப்பத்தாலேயே அறிந்து கொள்ளும்.

* கிரீன்லாந்தின் குண்டுராவில் உள்ள ‘வில்லோடு’ மரங்களே உலகிலேயே குட்டையான மரங்கள். எத்தனை வயதானாலும் இவை இரண்டு அங்குல உயரத்துக்கு மேல் வளர்வதே இல்லை.
* உலகில் உள்ள முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகவும் சிறியது பிக்மியா எனப்படும் மீன். பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே காணப்படும் இம்மீனின் நீளம் கால் அங்குலம்தான்.

* புழு பூச்சிகளை உண்ணும் சிறு பாலுண்ணி இனத்தைச் சேர்ந்த துன்னெலி(Mole Rat), ஒரே இரவில் பூமியில் நூறு அடி நீளத்துக்கு குழி பறிக்கும் ஆற்றல் உள்ளது.

* குளவி, பருவம் அடையும்போது கூடு கட்டும். கூட்டின் ஒரு பக்கத்தில் முட்டையிடும். பின்பு புழு ஒன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கும். அப்பொழுது தன் கொடுக்கினால் அப்புழுவைக் கொட்டிவிடும். இதனால் புழு இறக்காது. உணர்வு அற்றுவிடும். புழு கூட்டை விட்டு ஓடி விடாமல் இருக்க குளவி அவ்வாறு செய்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வந்ததும் அதற்கு உணவு வேண்டும் அல்லவா? அதற்காக இந்த ஏற்பாடு! 


* இந்தியாவில் மணி ஆர்டர் சேவை முதன் முதலில் 1886ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

* தமிழகத்துக்குள் முதன்முதலில் நுழைந்த வெள்ளைக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 

* தண்ணீர் குடிக்காமல் நீண்ட நாள் உயிர் வாழக்கூடிய உயிரினம்: எலி.