Search This Blog

Tuesday, September 13, 2011

அறியா மற்றும் அறிந்த தகவல்கள்


* விலங்குகளில், ஒட்டகச்சிவிங்கியால் சாதாரண ஒலியைக் கூட எழுப்ப முடியாது.


* இரண்டு தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.

* உலகிலேயே மிக மெதுவாக ஊர்ந்து செல்வது கடல் ஆமைதான். 0.17 மைல் வேகத்தில்தான் கடல் ஆமை செல்லும். 

* உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம், கல்லினன் வைரம் (Cullinan Diamond). இது தென் ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியாவில் உள்ள ப்ரிமியர் வைரச் சுரங்கத்தில் கிடைத்தது.

* அல்லாமுத்து (Pearl of Allah) என்பது ஒன்பதரை அங்குல நீளமும், ஐந்தரை அங்குல குறுக்களவும் கொண்டது. இது பிலிப்பைன்ஸ் கடலில் கிடைத்தது.

* மிகவும் சக்தி வாய்ந்த உயிரினம் எறும்புதான். அது, தன்னைப் போல் 7 மடங்கு அதிக எடையுள்ள பொருளை இழுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தது.  

* பறவைகள் எல்லா மரத்திலும் கூடு கட்டி வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் கூடு கட்டாது.  

* சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜுனா விருது முதன்முதலில் 1961ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர், தத்துவ மேதை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள். 

* ஒரு கரப்பான் பூச்சியின் தலையை, அதன் உடலில் இருந்து மிகச் சரியாக அறுத்து அகற்றிவிட்டால், பல வாரங்கள் அது தலையில்லாமலேயே உயிர் வாழும். இறப்பது, உணவு உட்கொள்ள முடியாததால்தான்.

* ஆண் பட்டுப்பூச்சி ஆறு மைல்களுக்கு அப்பால் உள்ள பெண் பட்டுப் பூச்சியை மோப்பத்தாலேயே அறிந்து கொள்ளும்.

* கிரீன்லாந்தின் குண்டுராவில் உள்ள ‘வில்லோடு’ மரங்களே உலகிலேயே குட்டையான மரங்கள். எத்தனை வயதானாலும் இவை இரண்டு அங்குல உயரத்துக்கு மேல் வளர்வதே இல்லை.
* உலகில் உள்ள முதுகெலும்புள்ள பிராணிகளில் மிகவும் சிறியது பிக்மியா எனப்படும் மீன். பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே காணப்படும் இம்மீனின் நீளம் கால் அங்குலம்தான்.

* புழு பூச்சிகளை உண்ணும் சிறு பாலுண்ணி இனத்தைச் சேர்ந்த துன்னெலி(Mole Rat), ஒரே இரவில் பூமியில் நூறு அடி நீளத்துக்கு குழி பறிக்கும் ஆற்றல் உள்ளது.

* குளவி, பருவம் அடையும்போது கூடு கட்டும். கூட்டின் ஒரு பக்கத்தில் முட்டையிடும். பின்பு புழு ஒன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கும். அப்பொழுது தன் கொடுக்கினால் அப்புழுவைக் கொட்டிவிடும். இதனால் புழு இறக்காது. உணர்வு அற்றுவிடும். புழு கூட்டை விட்டு ஓடி விடாமல் இருக்க குளவி அவ்வாறு செய்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு வந்ததும் அதற்கு உணவு வேண்டும் அல்லவா? அதற்காக இந்த ஏற்பாடு! 


* இந்தியாவில் மணி ஆர்டர் சேவை முதன் முதலில் 1886ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

* தமிழகத்துக்குள் முதன்முதலில் நுழைந்த வெள்ளைக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 

* தண்ணீர் குடிக்காமல் நீண்ட நாள் உயிர் வாழக்கூடிய உயிரினம்: எலி.

 

No comments:

Post a Comment