Search This Blog

Sunday, September 18, 2011

பி.எஃப். பென்ஷன் அடிப்படை தகவல்கள்

'ரிட்டயர்ட் ஆனபிறகு எவ்வளவு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்?’ ஒவ்வொரு தனியார் நிறுவன ஊழியரின் மனதிலும் இருக்கும் கேள்வி இது! 'சம்பளம் அதிகமாக வாங்கும் நபர்களுக்கு கூடுதலாகப் குடும்ப ஓய்வூதியத் தொகை கிடைக்குமா? ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா? வாரிசுகளுக்கும் கிடைக்குமா?’ என பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கிறார்கள் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களும் ஊழியர்களும். 

ணியாளர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப் படியில் 12% பிராவிடன்ட் ஃபண்ட்- அதாவது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆக பிடிக்கப்படுகிறது. நாம் வேலை பார்க்கும் நிறுவனம் தனது பங்களிப்பாக 12 சதவிகித பணத்தைக் கட்டுகின்றது. இதில் 3.67% பி.எஃப்.-க்கும் மீதமுள்ள 8.33% குடும்ப ஓய்வூதியத்திற்கும் செல்கிறது (அதிக பட்சமாக 541 ரூபாய்).

பென்ஷன் எப்போது கிடைக்கும்?    

பத்து வருடங்கள் பி.எஃப். பிடிக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த பென்ஷன் கிடைக்கும். அப்படி பத்து வருடங்களுக்கு குறைவாக கட்டியிருந்தால் குடும்ப ஓய்வூதியக் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையைக் குறிப்பிட்ட விகிதத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஓய்வூதியம் பெறும் நபர் இறந்துவிட்டால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பென்ஷன் தொகை கிடைக்கும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு மூப்பு அடிப்படையில் பென்ஷன் கிடைக்கும். அதாவது, முதல் இரண்டு குழந்தை களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும். முதல் குழந்தைக்கு 25 வயது பூர்த்தியான பிறகு அந்த தொகை மூன்றாவது குழந்தைக்கு கிடைக்க ஆரம்பித்து, அதன் வயது 25  பூர்த்தி ஆவது வரை கிடைக்கும்.
சம்பளம் அதிகமிருந்தால்..? 

ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏ.வைப் பொறுத்து பி.எஃப். தொகை பிடிக்கப்படுகிறது. சம்பளம் அதிகமாக அதிகமாக பி.எஃப். தொகையும் அதிகமாகப் பிடிக்கப்படும். ஆனால், அதிகமாக சம்பளம் கிடைப்பதாலேயே அதிக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.நாம் வேலை பார்க்கும் நிறுவனம் அளிக்கும் தொகையில் 8.33%, இன்னும் சொல்லப்போனால் அதிகபட்சம் 541 ரூபாய் மட்டுமே குடும்ப ஓய்வூதியத்திற்குச் செல்லும். சம்பளம் எவ்வளவு உயர்ந்தாலும் அதிகபட்சம் 541 ரூபாய் மட்டுமே ஓய்வூதியத் திற்குச் செல்லும் என்பதை மறந்துவிட வேண்டாம். 

எப்படி கணக்கிடப்படுகிறது?

பணியாளரின் சர்வீஸ் மற்றும் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைக் கொண்டு பென்ஷன் வழங்கப்படுகிறது.

15.11.1995-க்குப் பிறகு உள்ள பணிக்காலத்திற்கேற்ப ஓய்வூதியத்தை கணக்கிடும் ஃபார்முலா கீழே தரப்பட்டுள்ளது.(ஓய்வூதியத்திற்கான ஊதியம் என்றால் தொழிலாளி வேலையிலிருந்து ஓய்வுபெறும் காலத்திற்கு முன்னதாக 12 மாதங்களில் பெறப்பட்ட ஊதியம்.)

தொடர்ந்து பத்து வருடங்கள் பி.எஃப். கட்டி வந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். பத்து வருடங்களுக்கு குறைவாக கட்டியிருந்தால் அந்தப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியுமே ஒழிய, பென்ஷன் கிடைக்காது. முன்பெல்லாம் ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறினால், புதிதாகத்தான் பி.எஃப். கணக்கைத் தொடங்குவார்கள். இப்போது நிறுவனம் மாறினாலும் பழைய நிறுவனத்தில் இருந்த கணக்கிலேயே பி.எஃப். கணக்கு தொடங்கும் வசதியும் வந்துவிட்டது.

எனினும், நிறுவனம் விட்டு நிறுவனம் செல்லும்போது,  பழைய நிறுவனத்திடமிருந்து பி.எஃப். கணக்கிற்கான 'ஸ்கீம் சர்டிஃபிகேட்’டை கையோடு வாங்கிக் கொள்வது நல்லது.பிற்காலத்தில் பிரச்னை யில்லாமல் பென்ஷன் பெற உங்களுக்கு உதவியாக இருக்கும்.


விகடன் 



  

1 comment:

  1. அருமையான பயனுள்ள பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete