Search This Blog

Sunday, December 05, 2010

"பலூன்'' சுற்றுலா !

சுற்றுலா போகாத வர்களே இருக்க முடி யாது. கார், பஸ், ரயில், விமானம், கப்பல் ஆகியவற்றின் மூலமாக  சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், பலூனில் பறந்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பது புதிய அனுபவமாக இருக்கும். பலூனில் பறந்து செல்வது என்பது மிகப் பழமையான ஒரு தொழில் நுட்பம். தற்போதுள்ள, "ஹாட் ஏர்' பலூன்கள் அதிக உயரத்தில் கூட பறக்கும் திறன் கொண்டவை.

வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாகி இருந்த பலூன் சவாரி, தற்போது இந்தியாவிலும் பல இடங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. காற்று வீசும் திசைக்கேற்பவே பலூன்கள் பறக்கும் என்றாலும், பலூனுக்குள் அடைக்கப்பட்டுள்ள காற்றை சூடுபடுத்தும் போது, தேவைப்படும் திசைக்கும் மாற்றிக் கொள்ள முடியும்.  

கண்ணைக் கவரும் பல சுற்றுலா தலங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், தற்போது பலூன்கள் மூலமான சுற்றுலா திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. "ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது இந்த பலூன் சுற்றுலா திட்டத்தின் மூலம் வானில் பறந்து, இயற்கை அழகை ரசிக்க வேண்டியது அவசியம்...' என்கின்றனர் பலூன் சுற்றுலாவில் பங்கு கொண்ட சுற்றுலா பயணிகள். ராஜஸ்தானில், வானிலையை பொறுத்து பலூன் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆறு முதல் அறுபது வயது உள்ள யாரும் பலூனில் பறக்கலாம்.

சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பலூனில் பறந்தபடியே பார்ப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அனுபவம். பல்வேறு அளவுகளில் பலூன்கள் இருக்கின்றன. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து, பெரிய, சிறிய பலூன்கள் சுற்றுலாவிற்கு பயன்படுத்தப் படுகின்றன. 

ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப் பழமையான நகரான புஷ்கர், ரத்தம்பூர் தேசிய பூங்கா ஆகியவற்றை பலூன்கள் மூலம் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள வனவிலங்கு களை, பறவைகளைப் போல பறந்தபடியே பார்க்க முடியும். புஷ்கரில் நடக்கும் ஒட்டகத் திருவிழாவை ரசிக்க முடியும். அருகில் உள்ள மலைகளையும், அவற்றில் உள்ள விண் முட்டும் சிகரங்களையும் பறந்தபடி, குடும்பத்துடன் ரசிக்கலாம்.  பல தனியார் நிறுவனங்கள் பலூன் சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

வெளிநாடுகளைச் சேர்ந்த, அனுபவம் மிக்க பைலட்டுகளை கொண்டு இந்த நிறுவனங்கள் பலூன் சேவையை நடத்துகின்றன. புதுடில்லியில்  உள்ள பலூன் கிளப் ஆப் இந்தியா என்ற நிறுவனமும் பலூன் சுற்றுலா திட்டத்தை நடத்துகிறது. பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளன. விரும்புபவர்களுக்கு, பலூனிலேயே  திருமணத்தை நடத்தித் தரும் திட்டமும் உள்ளது.

மற்ற சுற்றுலா திட்டங்கள் போல் அல்லாது பலூன் சுற்றுலா திட்டத்திற்கு கட்டணம் அதிகம். ஒரு மணி நேரம் பலூனில் பறக்க, ஒரு நபருக்கு 15 ஆயிரம் ரூபாய். பொதுவாக, செப்டம்பர் மத்தியில் இருந்து மார்ச் மாதம் இறுதிவரை பலூன் சுற்றுலா பயணம் நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தான் வானிலை சீராகவும், பயணத்திற்கு ஏற்றதா கவும் இருக்கும்.  

அதிகாலை துவங்கி, மாலை வரை தொடர்ந்து பலூன் பயணங்கள் உள்ளன. பலூன் சுற்றுலாவிற்கு,  சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஓட்டல்களிலேயே வந்து தனியார் நிறுவனங்கள், "பிக்-அப்' செய்து கொள்கின்றன. "பறவைகள் போல் வானில் பறந்தபடியே, ராஜஸ்தானின் இயற்கை அழகையும், வானுயர்ந்து நிற்கும் அக்கால அரண்மனைகளையும், பிரமாண்ட நீர் நிலைகளையும் காண்பது புதிய அனுபவமாக இருக்கும்.

2 comments:

  1. அருமை.. அருமை.. எனக்கும் பறக்க ஆசையா இருக்கு..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    நனைவோமா ?

    ReplyDelete
  2. "பறவைகள் போல் வானில் பறந்தபடியே, ராஜஸ்தானின் இயற்கை அழகையும், வானுயர்ந்து நிற்கும் அக்கால அரண்மனைகளையும், பிரமாண்ட நீர் நிலைகளையும் காண்பது புதிய அனுபவமாக இருக்கும்"....கண்களில் காட்சி விரியும் வர்ணனை! நல்ல பதிவு!

    ReplyDelete