Search This Blog

Monday, December 27, 2010

வெங்காயம்!

ந்த ஆண்டு சுமார் 95 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இந்தியாவில் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் அதிகம். இந்தியாவில் குஜராத், மகாராஷ்ட்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமாக வெங்காயம் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், பல்லடம், தாராபுரம், தென்காசி போன்ற இடங்களில் உற்பத்தி ஆகிறது.

''கடந்த சில மாதங்களாக வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பருவம் தவறி மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி கடும் பாதிப்பு அடைந்தது. 'காரீப்’ என்று சொல்லப்படுகிற குளிர்காலச் சாகுபடியில் மட்டும் குஜராத்தில் 50 சதவிகிதம், மகாராஷ்ட்டிரத்தில் 35 சதவிகிதம், ராஜஸ்தானில் 25 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 20 சதவிகிதம் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, 'ரபி’ என்று சொல்லப்படுகிற கோடைகாலச் சாகுபடியில் 15 முதல் 25 சதவிகிதம் வரை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. எனவே, விலை இப்போதைக்கு இறங்கினாலும், அதன் தாக்கம் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும்''என எதிர் பார்க்க படுகிறது.

''இந்த விலை உயர்வுக்கு புயலும் மழையும் ஒரு சாக்குதானே ஒழிய, அதனால்தான் விலை உயர்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. சில மொத்த வியாபாரிகள் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கியதே இந்த கடும் விலை யேற்றத்துக்கு காரணம்'' 

''பெல்லாரி வெங்காயத்தை ஈரம் படாமல் வைத்திருந்தால் மூன்று, நான்கு மாதங்கள் கெடாது. குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் போது பெருமளவில் வாங்கி, பதுக்குகின்றனர் சிலர். பிறகு டிமாண்டுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகின்றனர். இதில் கொழுத்த லாபம் கிடைக்கிறது அவர்களுக்கு. பாகிஸ்தானில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தவுடன் பயந்து போன இந்த பதுக்கல் பேர்வழிகள், பதுக்கி வைத்ததை வெளியேவிட ஆரம்பித்திருக்கிறார்கள்' .

மத்திய அரசின் தவறான ஏற்றுமதிக் கொள்கையும் இந்த தறிகெட்ட விலை உயர்வுக்கு காரணம் ''இந்த ஆண்டில் பாகிஸ்தானில் கடும் மழை. இதனால் அங்கு விவசாய உற்பத்தி பெரும் பாதிப்படைந்தது. அப்போது நம்மூரில் வெங்காய விளைச்சல் அதிகம் இருந்தது. எனவே சொற்ப விலைக்கே பாகிஸ்தான் உள்பட பல நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்தோம். ஆனால், நமக்கு இப்போது தேவைப்படுகிறபோது நாம் விற்ற விலையைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிகப் பணம் கொடுத்து வாங்குகிறோம். இதனால் அரசுக்கும் நஷ்டம்; மக்களுக்கும் கஷ்டம். உணவு தானியங்களை பாதுகாக்கும் குடோன் வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்க மறுக்கிறது. அந்த வசதி வருகிற வரை உணவுப் பொருட்களின் விலை விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவுவதை சகஜமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்'' 

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் டெல்லியில் ஆட்சியை இழந்தது பா.ஜ.க. இப்போதோ 110 ரூபாயைத் தொட்டிருக்கிறது.
இதன் பாதிப்பு வரும் தேர்தலில்தான் தெரியும்.

தவிர, அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கப் போவதால் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?


1 comment:

  1. யாருக்குத் தெரியும்...இலவச வெங்காய திட்டம் வந்தாலும் வரும்.

    please remove word verification.

    ReplyDelete