Search This Blog

Thursday, June 12, 2014

ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரில் என்ன ஸ்பெஷல்?



கடந்த காலத்தில் ஐபோன், ஐபேட் என தொழில்நுட்ப சாதனங்களில் கவனம் செலுத்திய ஆப்பிள், இந்த ஆண்டு சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் விரைவில் வெளிவர இருக்கும் ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேர்.

ஆண்ட்ராய்ட்டில் இருந்து சிலவற்றையும், ஆண்ட்ராய்டை மிஞ்சும் சில தொழில்நுட்பங்களையும் புதிதாக இணைத்து ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள்.

நோட்டிஃபிகேஷன்: தற்போதைய ஆப்பிள் ஐஓஎஸ்-படி நீங்கள் போனில் எதாவது படித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது என்றால், நீங்கள் அந்த நோட்டிஃபிகேஷனை அழுத்தி மெசேஜுக்கு சென்றுதான் ரிப்ளை செய்ய முடியும். நீங்கள் மீண்டும் மேனுவலாக பழைய அப்ளிகேஷனுக்கு வரவேண்டும். இனி அந்தத் தொல்லை இல்லை. நேரடியாகவே நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைக்கு எந்த இடையூறும் இல்லாமல் நோட்டிஃபிகேஷன் வரும்போதே அங்கேயே ரிப்ளை அனுப்பிவிட்டு நீங்கள் வேலையைத் தொடர முடியும். ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் வழியாகவே நண்பர்களின் கமென்ட்டுக்கோ, படத்துக்கோ லைக் பட்டனையும் தட்ட முடியும்.

கீ போர்டு: இப்போது ஆப்பிள் கீபோர்டைத் தவிர வேறு கீ-போர்டை ஐபோன், ஐபேடுகளில் பயன்படுத்த முடியாது. இனி நீங்கள் விரும்பும் கீபேடை ஐட்யூன்ஸில் டவுண்லோடு செய்து உங்கள் போன்களில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹோம் குரூப்: இந்த வசதி மூலம், உங்கள் வீட்டில் மூன்று ஐபோன்கள் இருந்தால் மூன்றையும் ஒன்றாக ஒரே அக்கவுன்ட்டில் இணைத்துகொள்ள முடியும். ஒரு கணக்கு மூலம் வாங்கிய அப்ளிகேஷனை உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற ஐபோன், ஐபேடுகளுடன் இலவசமாகவே டவுண்லோடு செய்துகொள்ளவும் முடியும்.

ஐமெசேஜ்: புதிய ஐஓஎஸ் 8 மென்பொருளில் ஆப்பிள் சாதனங்களுக்குள் மெசேஜ், படங்கள், வீடியோ அனுப்பவதற்கான வசதியான ஐமெசேஜில் புதிய பல வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் அப்ளிகேஷனைவிட மிக வேகமாக சில மைக்ரோ விநாடிகளில் போட்டோ மற்றும் வாய்ஸ் ஃபைல்களை இதன் மூலம் அனுப்ப முடியும் என்கிறது ஆப்பிள். புதிய ஐஓஎஸ் 8-ல் 3டி கேம்ஸும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

கேமரா: கேமராவில் பல புதிய அப்ளிகேஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது செல்ஃபிகளின் காலம் என்பதால், கேமரா டைமர் வசதியை அறிமுகப்படுத்தி யிருக்கிறார்கள். இதன்படி நீங்கள் செல்ஃபிகளை எடுக்க டைம் செட் செய்துவிட்டு கூலாக நின்றால் போதும். அது 10-15 விநாடிகள் கழித்து க்ளிக் அடிக்கும்.


ஃபேஸ்டைம்: ஃபேஸ்டைம் அப்ளிகேஷனில் வீடியோ மூலம் பேசும்போது, கால் வெயிட்டிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது ஆப்பிள்.

ஐஓஎஸ் 8, செப்டம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் னால், இந்தப் புதிய சாஃப்ட்வேர் ஐபோன் 3, ஐபோன் 4 பயன்படுத்துபவர்களுக்குக் கிடைக்காது. 4எஸ், 5, 5சி மற்றும் 5எஸ் போன்களில் மட்டுமே ஐஒஎஸ் 8 இயங்கும்!
 
3டி போனுடன் வருகிறதா அமேஸான்?

அமேஸான் நிறுவனம் ரகசியமாக 3டி போன்  தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது என்பது டெக் உலகின் கிசுகிசு. அமேஸான் சமீபத்தில் யு-டியூபில் வெளியிட்டிருக்கும் டீஸர் வீடியோதான் எல்லா யூகங்களுக்கும் காரணம்.
டீஸர் வீடியோ லிங்க்: www.youtube.com/watch?v=erUZQ9GK0sE
 

1 comment:

  1. வணக்கம்
    அறியமுடியாத தகவலை அறிந்தேன் தேடலுக்கு பாராட்டுக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete