ஜே.பி.எல். மைக்ரோ ஒயர்லெஸ்
விலை: 2,590

மொபைல் போன்களுடன் இணைத்துக்கொள்ளும் போர்ட்டபிள்
ஸ்பீக்கர்ஸ்தான் இப்போது டிரெண்ட் ஹிட். வெளியூர் அல்லது
வெளியிடங்களுக்குச் செல்லும்போது இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் மூலம்
பார்ட்டி மூடு கொண்டுவந்துவிடலாம். 3,000 ரூபாய்க்குள் நிறைய போர்ட்டபிள்
ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் ஜே.பி.எல் நிறுவனத்தின் மைக்ரோ ஒயர்லெஸ்
ஸ்பீக்கர் மிகத் துல்லியமான ஒலித் தரத்துடன் இருக்கிறது. புளூடூத்
கனெக்ட்டிவிட்டி. ஆனால், ஐந்து மணி நேரம் மட்டுமே பேட்டரி தாங்குகிறது
என்பது மட்டுமே மைனஸ்!
அவசிய ஆப்!
ஐபோன், ஐபேட், மேக் புக் உள்ளிட்ட ஆப்பிள் ஆசாமிகளுக்கு
செமத்தியான அப்ளிகேஷன் இந்த 'ஃபைன்ட் மை ஐபோன்’ ஆப். உங்கள் போனோ, ஐபேடோ
தொலைந்துவிட்டால் அதில் இருக்கும் பர்சனல் வீடியோக்கள், புகைப்படங்கள்
தவறாகக் கையாளப்பட்டுவிடுமோ எனப் பதற்றப்பட வேண்டியது இல்லை. இந்த
அப்ளிகேஷன் மூலம் உங்கள் சாதனம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க
முடியும். போன் எந்த இடத்தில் இருந்தாலும், நீங்கள் இருந்த இடத்தில்
இருந்தபடியே
போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோ, கான்டாக்ட்ஸ் போன்றவற்றை அழிக்கவும்
முடியும். இந்த அப்ளிகேஷனை ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கி இன்ஸ்டால்
செய்துவிட்டு, ஐக்ளவுடுடன் இணைத்துவிட்டால் போதும். பயம் உதறி நிம்மதியாக
இருக்கலாம்!

மார்க்கெட் ஹிட்!
மொபைல் மார்க்கெட்டில் டாக் ஆஃப் தி டவுன்-
மோட்டோரோலாவின் மோட்டோ இ. விலை குறைவு, வசதிகள் அதிகம் என்பதே இதன்
ஹிட்டுக்குக் காரணம். 1 ஜிபி ரேம், 4.3 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெச்டி
டிஸ்ப்ளே, கிட்காட் 4.4 ஆண்ட்ராய்டு வெர்ஷன், 5 மெகா பிக்சல் கேமரா என இந்த
விலைக்கு அசாத்திய வசதிகள்கொண்ட மொபைல். கொரில்லா கிளாஸ் என்பதால்,
அவ்வளவு சீக்கிரம் கீறல்கள் விழாது. 32 ஜிபி வரையிலான மெமரி கார்டு. அதோடு
இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக்கொள்ளலாம். முன்பக்க கேமரா இல்லை,
குறிப்பிட்ட வலைதளத்தில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது என்பதே இதன்
மிகச் சில குறைகள்!
சைபர்
கிரிமினல்கள் உங்கள் கணினியை ஹேக் செய்வது போலவே, மொபைலையும் ஹேக் செய்ய
முடியும். நீங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய அதிஅவசிய பாது காப்பு
வழிமுறைகள் இங்கே...




No comments:
Post a Comment