நாம் எப்போது மாறப் போகிறோம் ..??
கிரிக்கெட் world cup இறுதிப் போட்டியில் வென்றாகி விட்டது..முடிந்த வரை சாலையில் சத்தம் போட்டாகி விட்டது .போதாக்குறைக்கு மூன்று நண்பர்களைப் பின்னால் உட்கார வைத்து அதிவேகமாய் bike ஓட்டியாகி விட்டது...
10000-wala சரவெடி போட்டு தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்களையும், குழந்தைகளையும் எழுப்பி விட்டு விட்டோம்...இறுதியில் ரெண்டு beer குடித்து விட்டு உறக்கம்...
மறுநாள் ..??? மற்றொரு கொண்டாட்டத்திற்கு காத் திருக்கத் தொடங்கிவிடுவோம் ???
நாம் உருவாக்கி இருப்பது உண்மையிலேயே ஒரு ஆரோக்கியமான சமுதாயம் தானா..???
கிரிக்கெட்-ல் இருந்த ஒரே ஒரு ஒற்றுமையைக் குலைக்கக் கூட இதோ IPL வந்துவிட்டது..இது வரை பாகிஸ்தானை எதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்த நாம் இனி பெங்களுருவையும், பஞ்சாபையும், கல்கத்தாவையும் எதிரியாகப் பார் க்கத் தொடங்கிவிடுவோம்..நம் ஒற் றுமை, சந்தோசம் எல்லாம் கிரிக்கெட்டை கொண்டாடு வதிலும், புத்தாண்டைக் கொண்டாடுவதிலும் தான் இருக்கிறது (முடிந்த வரை மற்றவருக்கு தொல் லை கொடுத்து விட்டு..)
கங்குலி ஒரு விளையாட்டில் சரியா க ஆடவில்லை என்று கல்லெறிகிற கூ ட்டம் என்றாவது சுரேஷ் கல்மாடியின் வீட்டிலோ, spectrum ஊழலுக்கு உடந்தையாக இருந்த ராஜா -வின் வீட்டிலோ கல்லெறிந்திருக் கிறதா??? இல்லை NDTV-யில் Nehra-வுக்கு கடைசி over கொடுத்து விட்டார் Dhoni என்று கொதித்துப் பேசும் அளவிற் குக் கூட யாரும் கோபம் அடைவதில்லை..ஒரு கிரிக்கெட் வீரரின் வீட்டில் கல்லெறியும் நாம், நமக்கோ நம் உடமைக்கோ பாதிப்பு வரும் என்று கருதி நமக்கு எதற்கு அரசியல் என்று ஒதுங்கி விட்டோம்..நமக்கு எப்போது தான் ரோசம் வருமோ...
அதற்காக நான் ஒன்றும் வீதியில் இறங்கிப் போராட சொல்லவில்லை .. நமக்கு நாமே உண்மையாக இருக்கிறோமா என் று தான் நினைக்கிறன். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க விடுப்பு எடுக்கும் நாம் தேர்தல் நாளன்று ஓட்டுப் போடப் போவதில்லை.
அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் செய்கிறார் கள் என்று சொல்லும் நம்மில் எத் தானை பேர் ஒழுங்காக இருக்கிறோம் .. எத்தனை தடவை சாலை விதிகளை மீறி இருக்கிறோம், சரியான தேதியில் வாகனக் காப்பீடு விண்ணப்பித்து இருக்கி றோமா? சமயத்தில் வாகனக் காப்பீடு இல்லாமல் போலீஸ்-க்கு லஞ்சம் கொடுத்து வருகிறோம்..நம்மில் இங்கு எத் தனை பேருக்கு இரு சக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் எடுக்கும் விதிமுறைகள் தெரியும்?? பெரும்பாலானோர் ஓட்டுனர் பயிற் சி நிறுவனத்தின் ஏஜெண்டுக்கு பணம் கொடுத்து தான் லைசென்ஸ் வாங்குகிறோம்.. எத்தனை பேர் உண்மையான விலைக்கு நிலத்தையோ/வீ ட்டையோ பதிவு செய்கிறோம்..?? எப்போது முழுமையான நேர்மையுடன் இருக்கப் போகிறோம். ?? நாம் மாறும் வரை, கேள்வி கேட்க தொடங்கும் வரை அனை த்து அலட்சியங்களும், லஞ்சங்களும் இருக்கும், முன்பை விட அதிகமாய் இருக்கும். .ஆனால் எப்போது மாறப் போகிறோம்.??
மகாத்மா காந்தி சொன்னது.: "Be the change what you want to see"
"மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும்"
தமிழ் மணம்.இன்ட்லி இவைகளில் சமர்ப்பிக்கவும். ஒட்டு போட வசதியாய் இருக்கும்.
ReplyDeleteநல்ல பதிவு. இந்த கேள்விகளுக்கு பதில் நம்மிடம் இருக்காது. மௌனம்தான் பதில்.
ஏனெனனில் நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குற்றவாளிகள்தான்.நேர்மை அற்றவர்கள் பிறரை மட்டும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்க முடியாது.
Thiruttu DVD-la Anniyan padam paarthingala??
ReplyDelete