சென்னை...
உலகின் மிக நீளமான இரண்டாவது கடற்கரை!தலைநகரத்தில் அனைவருக்கும் பிடித்த தலம்... மெரினா.காற்று வாங்கி, காலார நடந்து, கடலை போட்டு, காதல் செய்து, கடலோடு விளையாடி, ஜாலியாக அலையாடி, மணல் வீடு, தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் ருசித்து, உறவுகள், நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி என நீளும் சந்தோஷங்கள் இனி இருக்குமா என்பது சந்தேகம். காரணம், 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் 'எலிவேட்டட் எக்ஸ்பிரஸ் வே’, அதாவது உயர் மட்டப் பாலங்கள் அமைக்கும் திட்டம் பரபரப்பாக நடக்கின்றது. 'போக்குவரத்தைச் சீர்படுத்த’ என்பது இந்தப் பாலங்கள் கட்டப்படு வதற்கான காரணம். ஆனால், அதன் பாதகப் பின் விளைவுகள் உணர்ந்தும், அதை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது அதிகார வர்க்கம். இந்த உயர் மட்டப் பாலங்கள் திட்டத்தில் அதிக அளவு பாதிப்புகளைத் தரக் கூடியவை என மூன்றினை அடையாளம் காட்டுகிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
அவை - மெரினா முதல் கொட்டிவாக்கம் வரை செல்லும் பாலம், துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்லும் பாலம் மற்றும் அடையாறு அதிவேக வெளி வட்டப் பாலம் ஆகியவை.
இந்தத் திட்டத்தால், அதிக அளவில் பாதிக் கப்படுவது மெரினா முதல் கொட்டிவாக்கம் வரையுள்ள பாலம் அமைக்கும் திட்டம்தான். 10 வருடங்களுக்கு முந்தைய ஆய்வு ஒன்று, மனிதர்களின் பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் தினமும் புதிதாக சாலை யைத் தொடும் வாகனங் களின் எண்ணிக்கை ஆறு சதவிகிதம் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தது. இந்த 10 வருடங்களில் அந்த நிலைமை இன்னும் ஏகத் துக்கும் அதிகரித்து இருக்கும். ஆக, பிரச்னையின் ஆணிவேர், அதிகரிக்கும் வாகனப் போக்குவரத்துதான்.
எலியைக் கொல்ல வீட்டை எரித்த கதையாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர் மட்டப் பாலங்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்!'சென்னையின் ஆணிவேரையே அசைக் கும் இந்தத் திட்டத்தின் விபரீதம் குறித்து இப்போதாவது அரசு உணருமா?
விகடன்
No comments:
Post a Comment