Search This Blog

Wednesday, April 13, 2011

தமிழா உன்னை விற்காதே!


இன்று 14-வது சட்டப்பேரவைக்கான வேட்பாளர்களைத் தமிழகம் தேர்ந்தெடுக்க இருக்கும் நாள். 234 சட்டப்பேரவைக்கான இடங்களுக்கு 2,748 பேர் களமிறங்கி இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களில் 136 பேர்தான் பெண்கள் என்பது வருத்தத்தையும், 240 பேர் அதிகாரப்பூர்வமாகத் தங்களைக் கோடீஸ்வரர்கள் என்று அறிவித்துக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியையும் அளிக்கிறது.

பணக்காரர்கள் தேர்தலில் போட்டிபோடக் கூடாதா, கோடீஸ்வரர்கள் களமிறங்கக் கூடாதா என்று கேட்கலாம். ஒன்றிரண்டு பேர் களமிறங்கினால் பரவாயில்லை. அதிக அளவில் களமிறங்கி இருக்கிறார்களே, இவர்கள் வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கும் ஏழை விவசாயியை, தினக்கூலித் தொழிலாளியை, வரவுக்கும் செலவுக்குமான இடைவெளியை இழுத்துப் பிடித்து அவஸ்தைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவார்களா, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிப்பார்களா என்று யோசித்துப் பார்க்கும்போது, அதிர்ச்சியுடன் அச்சமுமல்லவா மேலோங்குகிறது.


காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என்று எல்லா ஆறுகளும் மணல் கொள்ளையால் வறண்டு போய்க் கிடக்கின்றன. பல கிராமங்களிலும், நகரங்களிலும் குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஆனால், தமிழகம் முழுவதும் கோடீஸ்வர வேட்பாளர்களின் உபயத்தால் பணம் மட்டும் தண்ணீராகச் செலவழிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தமாகத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பணம் 53 கோடி ரூபாய் என்றால் அதில் வேட்பாளர்கள் விநியோகம் செய்ய இருந்த பணம் தமிழகத்தில் மட்டும் 41 கோடி ரூபாய். களமிறங்கி இருப்பவர்களில் பலர் கோடீஸ்வரர்களாயிற்றே, பிறகு பணம் புரளாமலா இருக்கும்?  பணப் பட்டுவாடா என்றால் இது சாதாரணப் பட்டுவாடாவாக இல்லை. கார்ப்பரேட் கலாசாரம் பரவிவிட்டிருப்பதன் அடையாளமாகத் திட்டமிட்டு ஏதோ ரேஷன் விநியோகம் செய்வதுபோல பல இடங்களில் பணப் பட்டுவாடா நடைபெற்றிருக்கிறது. நூறு வாக்காளர்களுக்கு ஒருவர் என்று அடையாளம் காணப்பட்டு, அவருக்கு உதவியாக மூன்று பேர் நியமிக்கப்பட்டும் பணம் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது.


அரசியல் கட்சிகள் கொள்கையற்றவையாகி விட்டன. சாதனை என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இல்லை. ஐந்து ஆண்டுகளில் காவிரிப் பிரச்னை தீரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவில்லை, மின்வெட்டுத் தொடர்கிறது, நெசவாளர்கள் நலிந்துபோய்க் கிடக்கிறார்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோகிறது, சிறு தொழில்கள் நலிந்து வருகின்றன, விவசாயிகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். இந்த நிலையில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்குக் கேட்பது?

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஊர்ஊராகப் போய் என்ன பேசியிருக்க வேண்டும்? மத்திய ஜவுளித்துறை அமைச்சரான பிறகு தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை முன்னேற என்னென்ன திட்டங்கள் வகுத்தேன், ஒன்றன்பின் ஒன்றாக மூடிக்கொண்டு வரும் நூற்பாலைகள் மீண்டும் புத்துயிர் பெற்றுச் செயல்பட நான் உதவினேன் என்றல்லவா சொல்லி வாக்குக் கேட்க வேண்டும்? "ஜெயலலிதா பத்து ஆண்டு ஆட்சி செய்தாரே, உங்களுக்கு இலவசமாக ஏதாவது தந்திருக்கிறாரா? ஒரு குன்றுமணி, ஒரு கொண்டை ஊசி தந்திருக்கிறாரா? நாங்கள் இலவசமாகத் தருகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்க அவருக்கு வெட்கமாக இல்லை? 


திருவாரூர் முத்துவேலர் மகன் கருணாநிதியாக, பராசக்தி, மனோகரா போன்ற திரைப்படங்களுக்கு அனல் தெறிக்கும் வசனங்களை எழுதிய மு. கருணாநிதியாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் கருணாநிதியாக 1962-ல் தஞ்சாவூரின் பெரும் தனவந்தர் பரிசுத்த நாடாரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது அவருடைய உயரமென்ன, வெற்றியின் மகத்துவம் என்ன? 

இன்று, ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு, ஐந்து முறை முதல்வராக இருந்தவர், 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர், தனது சொந்த ஊரில் வெற்றி பெறத் தனது மகனையும், மகளையும் தெருத்தெருவாக அலையவிட்டு வாக்குச் சேகரிக்கிறார் என்றால், தானே 5 நாள்கள் கிராமம் கிராமமாகத் தள்ளாத 87 வயதில் "இதோ மண்ணின் மைந்தன் வந்திருக்கிறேன்' எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்' என்று வாக்காளர்களிடம் கெஞ்சுகிறார் என்றால், முதல்வர் கருணாநிதியின் இன்றைய உயரம் என்ன? அவரது மரியாதைதான் என்ன? 

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே... 

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே...

ஐந்து முறை முதல்வராக இருந்த தலைவருக்கு நடிகை குஷ்புவின் கவர்ச்சியும், சிரிப்பு நடிகர் வடிவேலுவின் பிரசாரமும் தேர்தல் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. நிஜமோ, பொய்யோ தெரியவில்லை, முதல்வரின் தொகுதியிலும் பணப் பட்டுவாடா நடக்கிறது என்கிறார்கள். ஐந்து முறை முதல்வர், ஐந்தாண்டு நல்லாட்சி நடத்தியவர் என்றால், வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெறுவானேன்? அதைவிடத் தேர்தலில் நிற்காமலேயே இருக்கலாமே, மரியாதையாவது மிஞ்சுமே...


நல்லவர்கள் யாரும் போட்டி போடவில்லையே, களத்தில் இருக்கும் இரண்டு பேருமே நல்லவர்கள் இல்லையே, இதற்கு அது மாற்று, அதற்கு இது மாற்று என்று நாங்கள் வாக்களித்து ஓய்ந்ததுதானே மிச்சம்... என்று 13 சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் வாக்களித்து ஏமாந்து சலித்தபடி 14வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது.

நல்ல தலைவர்களை உருவாக்குவதும், நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதும், நல்லவர்களுக்குத்தான் வாக்களிப்பது என்று தீர்மானிப்பதும் வாக்காளர்களின் கையில்தானே இருக்கிறது? தோல்வி அடைவார் என்று கருதப்படும் நல்லவர், வல்லவராக இல்லாவிட்டாலும் வெற்றியடையச் செய்யும் சக்தி உங்களது வாக்குச் சீட்டுக்கு உண்டே, அதை ஏன் மறந்துவிடுகிறீர்கள்?

மாற்றி மாற்றி வாக்களித்து எதைக் கண்டோம் என்று சலிப்படையத் தேவையில்லை. தேர்தல் என்பது மத்தால் தயிர் கடைவதற்கு ஒப்பானது. மத்தால் தயிர் கடையும்போது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மாற்றி மாற்றி கயிற்றை இழுத்துக்கொண்டே இருந்தால், உள்ளே ஒளிந்துகொண்டு இருக்கும் வெண்ணெய் திரண்டு வருவதுபோல, தேர்தலுக்குத் தேர்தல் கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்தாலும், மக்களாட்சி முறை தோல்வி அடைந்துவிடாமல் பார்த்துக் கொண்டால், நல்லதொரு தலைமை, நல்லதொரு மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இன்றைய தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பணத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் வெற்றியை நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்கிற அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் நம்பிக்கையைத் தகர்க்க முடியும். அடுத்த தேர்தலில், எந்த வேட்பாளரும் பணத்தை வாரி இறைத்து ஏமாற மாட்டார்கள்.

வாக்களிக்கத் தவறாதீர்கள். எனது வாக்கு விற்பனைக்கல்ல என்பதையும், வாக்குச் சீட்டின் வலிமையால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற உண்மையையும் அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைத் தயவுசெய்து தவறவிட்டு விடாதீர்கள்!   



தினமணி      

 

1 comment: