Search This Blog

Monday, April 18, 2011

ஜிம்பாப்வேக்கு ஒரு சல்யுட்

ப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த ஜிம்பாப்வே நாட்டின் நிலைமை மூன்று வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் படுமோசமாக இருந்தது. காரணம் பணவீக்கம். ஆனால், இன்று அங்கே ஓர் அற்புதம் நடந்திருக்கிறது. 

நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அதாவது 231 மில்லியன் சதவிகிதமாக(!) இருந்த பணவீக்கத்தை வெறும் மூன்றே மூன்று சதவிகிதமாக ஆக்கிக் காட்டியிருக்கிறது ஜிம்பாப்வே! அதாவது அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளைக் காட்டிலும் மிகக் குறைந்த பணவீக்கம்தான் இப்போது அங்கே!

1980-ம் ஆண்டு ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்றபோது அந்நாட்டு டாலரின் மதிப்பு 1.25 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்துள்ளது. அதன்பிறகுதான் பணவீக்கம் எகிறத் தொடங்கியுள்ளது. அதற்கு காரணம்  வெள்ளை இன விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பிடுங்கிய அரசின் கொள்கைகள்தான். அதன்பிறகு விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு, வரி இழப்பு, கடனை சமாளிக்க சகட்டு மேனிக்கு ஜிம்பாப்வே டாலர் அச்சடித்தது, தொடர் பஞ்சம்  மற்றும் அரசியல் சீர்கேடுகளால் பணவீக்கம் அதிகரித்து அதிகரித்து, 231 மில்லியன் சதவிகிதத்தை எட்டிவிட்டது! இதனைச் சமாளிக்க அந்நாட்டின் ரிசர்வ் வங்கி மில்லியன், பில்லியன் மதிப்பிலான டாலர் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட்டது. ஒருகட்டத்தில் பத்து டிரில்லியன் டாலர் நோட்டைக் கூட அச்சடித்தது! (30 அமெரிக்க டாலர், 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலருக்குச் சமம்) ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை.


பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரவில்லையெனில் நாடு திவாலாகிவிடும் என்பதை உணர்ந்த ஜிம்பாப்வே அரசு, 2009-ல் ஜிம்பாப்வே டாலரின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு, அமெரிக்க டாலர் மற்றும் தென் ஆப்ரிக்காவின் ரேன்ட் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த உத்தரவிட்டது. ஜிம்பாப்வே டாலர் களை அச்சடிப்பதையும் நிறுத்தியது. இதனையடுத்து படிப்படியாக பணவீக்கம் குறைய ஆரம்பித்து, தற்போது 3% ஆக குறைந்துள்ளது.தற்போது ஜிம்பாப்வே மக்கள் தங்களின் வருமானத்தில் செலவுகள் போக,  சேமிப்புக்கும் நிதி ஒதுக்குகிறார்களாம். 


No comments:

Post a Comment