Search This Blog

Tuesday, April 12, 2011

மல்டி ப்ளெக்ஸ் கலாச்சாரம் - திருட்டு VCD-இன் மூலகாரணம்.!!

மல்டி ப்ளெக்ஸ்   கலாச்சாரம் - திருட்டு VCD-இன் மூலகாரணம்.!!

சிறு வயதில் சினிமா பார்க்கச் செல்வதே ஒரு இனிமையான அனுபவம்..
காலாண்டு , அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் அம்மா  தான் வழக்கமாக சினிமா பார்க்க கூட்டிச் செல்வார்கள்.. உடன் பக்கத்து  
வீட்டு அதையும், என் வயதை ஒத்த அவர்களது பிள்ளைகளும் வருவார்கள். வீட்டில் இருந்தே சில சமயம் தின்பண்டங்கள் எடுத்துச் செல்வதுண்டு.. பெரும்பாலும் இடைவேளையின் போது அம்மா வாங்கித் தரும் ஐஸ்கிரீம் சாப்பிடவே சினிமா செல்வதுண்டு..டிக்கெட்  வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருப்பதே ஒரு ஆவலான தருணம்..அப்போது ஏற்பட்டவை எல்லாம் இனிமையான அனுபவங்கள்..
ஆனால் இன்று..?!?!
online-ல்  டிக்கெட் இரண்டே நிமிடங்களில் கிடைத்து விடுகிறது.. ஆனால் டிக்கெட் விலை மிகவும் அதிகம்.. அதுவும் வார நாட்களில் ஒரு விலையும், சனி மற்றும் ஞாயிறு அதிக விலையும் நிர்ணயிக்கிறார்கள் .. சரி A/C theatre, DTS sound இருக்கு 100 ரூபா கொடுத்து போனாலும் படம் நல்ல படம்னா ஒரு சின்ன திருப்தி இருக்கும்..ஆனால் theatre கான்டீன் பொருட்களின் விலை தான் முகம் சுழிக்க வைக்கின்றது.
இதில் theatre-க்குள் நுழையும் போதே அவர்களின் அடாவடி ஆரம்பம் ஆகிறது.. சமீபத்தில் சென்னையில் உள்ள சங்கம்திரை அரங்கில் 'பயணம்' திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன் .. உள்ளே நுழையும் போதே ஏதோ விமான நிலையத்தில் சோதனை செய்வது போல் செய்கிறார்கள்..
என்  பை-ஐ திறந்து  துலாவுகிறான். ஒருவன்.இன்னொருத்தன் என் சட்டை  மற்றும் பான்ட் பை-ஐத் துலாவுகிறான். யாராவது சாப்பிடும் பொருள் கொண்டு  வந்தால்  உடனே  அதைப்  பிடுங்கி  வைத்துக்  கொள்கிறார்கள் .. நாம்  உள்ளே  சென்று  அவர்கள்  விற்பதைத்  தான்  சாப்பிட  வேண்டுமாம் ..நாம் என்ன  சாப்பிட  வேண்டும்  என்று  யாரோ  ஒருவன்  தீர்மானிக்கிறான் ..அப்போதே  நம்மாட்களின்  புத்தி  தெரிந்து  விடுகிறது .
சரி  உள்ளே  அவர்கள்  விற்பனையாவது  நியாயமாக  இருக்கிறதா  என்றல் ?? நிச்சயமாக  இல்லை ... அரை  லிட்டர்  தண்ணீர் பாட்டிலின் விலை வெளியே  10 ருபாய்  தான் ..அனால்  theatre-குள்  அது  20 ருபாய் ..இரு  மடங்கு  விலை ..கோயம்பேடு  பஸ்ஸ்டாண்ட்-ல்  கூட  இரண்டு அல்லது  மூன்று ருபாய்  அதிகமாய்  விற்கிறார்கள் .. அனால்  இவர்கள்  பகல்  கொள்ளையர்கள் ..முழுதாய்  பத்து ருபாய்  உயர்த்தி  விற்கிறார்கள் ..நான் ஏன்  இரு மடங்கு  விலை  என்று  கேட்டதற்கு 'இங்க  இப்படித்தான் " என்று  பதில்  வந்தது ..வேறு  வழி  இன்றி  வாங்க  வேண்டியதாய்  இருந்தது ..இதைக்  கேட்க  யாரும்  இல்லையா  என்று  கோபமும் , வருத்தமும்  ஏற்பட்டது .. 
இப்போது  தான்  தெரிகிறது  ஏன்  திருட்டு  VCD நம்  நாட்டில்  சக்கை  போடு  போடுகிறது .. நானும்  பேசாமல்  திருட்டு  VCD ரசிகனாக  மாறி  
விடலாம்  போலிருக்கிறது .. கொஞ்ச நாள்  காத்திருந்தால்  நல்ல  print கிடைத்து  விடும் .!! 
உண்மை... ஒரு  டிக்கெட்டின் விலை  85 ருபாய்  ஒரு  நபருக்கு .. சராசரியாக  5 நபர்கள்  உள்ள  ஒரு  குடும்பம்  படம்  பார்க்க  மொத்த 
கட்டணம்  - 5*85 = 425/- இடைவேளை  செலவு 150 ருபாய்  என்று  எடுத்துக்  கொண்டாலும்  மொத்தம்  575 ரூபாய்..இதற்கு  திருட்டு  VCD மிஞ்சிப் போனால் வெறும் 50 ருபாய்  தான்  ஆகும். குடும்பத்துடன்  வீட்டில்  அமர்ந்து  கொண்டு  அம்மா  செய்யும்  பலகாரங்கள்  சாப்பிட்டுக்  கொண்டு  விடுமுறை  நாட்களை  சந்தோசமாய்  கழிக்கலாம் .
திருட்டு  VCD ஒழிக்க வேண்டும்  என்று  கோஷம்  போடும்  திரைத்துறையினர்  உண்மையில்  போராட்டம்  நடத்த  வேண்டியது  இந்த  theatre 
உரிமையாளர்களிடம்  தான் .. இதில்  நமது  அரசாங்கமும்  மிகவும்  கண்டிப்பாய்  நடந்து  கொள்ள  வேண்டும் .. ஏனென்றால்  பணம்  படைத்தவர்கள்  வீட்டிலேயே  home-theatre வைத்துப்  படம்  பார்பவர்கள் , இல்லை  என்றால்  சிபாரிசு  மூலம்  preview show பார்த்து  விடுவார்கள் ... 
என்னைப்  போல்  நடுத்தர  வர்க்கத்திற்கு  theatre-க்கு  போய்  படம்  பார்த்தல்  தான்  திருப்தி .. ஒரு  நியாயமான  டிக்கெட்  விலையும் , உள்ளே  விற்கும்  பண்டங்களின்  விலையும்  நியாயமாக  இருந்தால் மட்டுமே  இந்த  திருட்டு  VCD-ஐ  ஒழிக்க  முடியும் .. சினிமா  பார்ப்பது  என்பதும்  மறுபடியும்  ஒரு  இனிமையான  அனுபவமாக  மாறும்.!!


மணிகண்டன் 

No comments:

Post a Comment